இடுகைகள்

நேர்காணல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் அரசு!

படம்
நேர்காணல்! “அரசின் தவறை அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்” லெட்டா டெய்லர், ஆராய்ச்சியாளர் தமிழில்: ச.அன்பரசு கிர்கிஸ்தானில் தீவிரவாதம் எப்படிப்பட்ட பிரச்னையாக உள்ளது? பிரச்னை தொடங்கியது 2003 ஆம் ஆண்டுதான். 2,600-5,000 மத்திய ஆசியர்கள்(764 கிர்கிஸ்தானியர்கள்) இராக், சிரியா, ஆஃப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாதக்குழுவில் இணைய சென்றன். பெண்கள், குழந்தைகள், சமையல்காரர்கள், மெக்கானிக்குகள் இதில் அடக்கம். கிர்கிஸ்தானின் தலைநகரான பிஸ்கெக்கில் நடைபெற்ற தாக்குதல் உட்பட ஏழு தாக்குதல்களில் இவர்களின் பங்குள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தாக்குதல்களிலிருந்து மக்களை காக்க அரசு என்ன செய்துள்ளது? அரசு, இணையத்தில் வீடியோ பார்ப்பவர்களையும் நூல்களை படிப்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலுள்ள தீவிரவாத சட்டங்களைப் போல   கிர்கிஸ்தானில் வலுவான சட்டங்கள் இல்லை. சமூகவலைதளத்தில் நண்பர்களுடன் தீவிரவாதம் பற்றி பேசும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் என்ன பிரயோஜனம்? மனித உரிமை கண்காணிப்பகம் இதுகுறித்து அரசிடம் மனு அனுப்பியுள்ள

தாய்நாட்டிற்கு ஏதும் நிகரல்ல! - காலெட் ஹூசைனி

படம்
 நேர்காணல் “சொர்க்கம் கூட தாய்நாட்டிலுள்ள வீட்டிற்கு நிகராகாது” காலெட் ஹூசைனி, ஆஃப்கன் எழுத்தாளர். ் பதினொரு வயதிலேயே ஆஃப்கானிஸ்தானை விட்டு பிரிந்துவிட்ட உங்களுக்கு கனவாக இருந்த வீடு, பிரிவு எழுதுவதற்கான தூண்டுதலா? நான் எழுதியுள்ள நான்கு புத்தகங்களிலும் வீடு, தாய்நிலத்தை பிரிவது என்பதுதான் மையம். தாய்நிலத்தை பிரிவது எனக்கு மட்டுமல்ல மத்திம வயதிலிருந்து என் குடும்பத்திற்கே அதிர்ச்சிதான். வேர்களை இழந்து அமெரிக்காவில் மீண்டும் வாழ்வை தொடங்குவது எளிதானதாக இல்லை. புதிய நூலான சீ பிரேயரை நாவலாக அல்லானல் நெடுங்கவிதையாக எழுதியது ஏன்? கடந்தாண்டு அகதிகளுக்கான நன்கொடை விழாவில் சீ பிரேயர் சிந்தனை தோன்றியது. 2015 ஆம் ஆண்டு இறந்த ஆலன் குர்தி என்ற சிரிய சிறுவனே இந்நூலின் கரு. எளியமக்களின் வாழ்வில் போர் திணிக்கப்பட கடத்தல்காரர்களின் அகப்பட்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் தந்தைகளின் கதை என்னை நெடுங்கவிதையாக இந்நூலை எழுத தூண்டியது. சோவியத் ஆக்கிரப்பின்போது ஆஃப்கனிலேயே தங்கியிருந்தால் என்னவாகியிருப்பேன் என யோசித்ததுண்டா? ராணுவ வீரர் (அ) அகதி ஆகியிருப்

"ட்ரம்பை கிண்டல் செய்வதுதான் ஒரே லட்சியம்" - மேட் போனர்

படம்
முத்தாரம் நேர்காணல் “ட்ரம்பை கிண்டல் செய்வதுதான் எங்கள் ஒரே லட்சியம்” மேட் போனர், கிராஃபிக் டிசைனர். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பறக்கவிடப்பட்ட ட்ரம்ப் பேபி உலகிலுள்ள அனைவரையும் ஈர்த்த ஒன்று. பல்வேறு போராட்டங்களுக்கும் ஏன் பிரிட்டிஷ் மற்றும் லண்டன் அருங்காட்சியகங்களே எங்களுக்கும் ட்ரம்ப் பேபி தயாரித்து கொடுங்களேன் என கேட்குமளவு வைரல் புகழ்பெற்றது ஆரஞ்சு ட்ரம்ப்   மகிமை. இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் லண்டனில் ட்ரம்ப் பேபியை பறக்கவிட்டு செய்த தங்களின் முயற்சிக்கு வரவேற்பு எப்படி? பாசிட்டிவ்வான பாராட்டுகள் அதிகம். ட்ரம்ப் பேபியை தொடரவேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டனர். எங்களது எட்டுபேர் கொண்ட குழுவினர் வெவ்வேறு துறைகளில் பணிகளிருப்பவர்கள். ட்ரம்ப் பேபியை நிறுவும்போதுதான் பலூனை எப்படி கையாளுவது என்பதை கற்றுக்கொண்டோம். அடுத்து என்ன செய்வது என திட்டமிட்டு வருகிறோம். ட்ரம்ப் பேபியை எப்படி உருவாக்கினீர்கள். உங்கள் பின்புலம் பற்றி கூறுங்கள். கிராஃபிக் டிசைன் படித்திருக்கிறேன். தன்னார்வ தொண்டு நிற

"தற்போது நமக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள்தான்"

படம்
நேர்காணல் ! "தற்போது நமக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள்தான்" நோம் சாம்ஸ்கி , எம்ஐடி , அரிசோனா பேராசிரியர் . தமிழில் : ச . அன்பரசு நவீனகாலத்தின் தவிர்க்கமுடியாத அறிவுஜீவிகளில் ஒருவரான நோம்சாம்ஸ்கிக்கு வயது 89. உலகின் அமைதிக்கு பாடுபடும் சாம்ஸ்கி , முதலாளித்துவத்தை தீவிரமாக எதிர்க்கும் தாராள சோசியலிஸ்டுகளில் ஒருவர் . அமெரிக்க தேர்தலின்போது ட்ரம்ப் அதிபரானால் உலகம் தவிக்கப்போகிறது என எச்சரித்தீர்கள் . தற்போது ட்ரம்ப் அமெரிக்க அதிபர் . முந்தைய அதிபர்களைவிட ட்ரம்ப் எவ்வகையில் வேறுபடுகிறார் ? சூழல் ஒப்பந்தம் குறித்த நடவடிக்கை ஒன்றே ட்ரம்பைப் பற்றி சொல்லிவிடுமே ! குடியரசுக்கட்சியினரின் எழுச்சி அமெரிக்காவை பேரழிவின் பாதையில் அழைத்துச்செல்கிறது . பலரும் இதன்மீது கவனம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர் . இஸ் ‌ ரேல் - பாலஸ்தீனப் பிரச்னையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ் ‌ ரேல் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் அமைதி முயற்சி நின்றுபோனதோடு இதில் அவர் என்ன கூறவருகிறார் ? அமெரிக்கா இம்முடிவை எடுக்காதபோதும் , இஸ் ‌ ரேல் - பாலஸ்தீனத்

"இணையம் திறமையான எழுத்தாளர்களுக்கான களம்" நேர்காணல்!

படம்
முத்தாரம் நேர்காணல் அனுபமா கிருஷ்ணகுமார் , வாணி விஸ்வநாதன் , ஸ்பார்க் இதழ் . தமிழில் : ச . அன்பரசு அனுபமா , வாணி ஆகிய இருவரும் இணையத்தில் தொடங்கிய ஸ்பார்க் இதழ் , நூறு இதழ்களை எட்டியுள்ளது . விளம்பரம் , சந்தா இன்றி இயங்கும் ஸ்பார்க் இதழ் நூறு இதழ்களை எட்டுவது சாதனைதானே . இதழ் பற்றி உரையாடுகிறார்கள் அனுபமாவும் , வாணியும் . இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஸ்பார்க் இதழில் நூறாவது இதழைக் கொண்டு வந்துவிட்டீர்கள் . எப்படி ? மிகச்சிறப்பான ஸ்பெஷல் தருணம் இது . 2010 ஆம் ஆண்டு ஸ்பார்க் இதழைத் தொடங்கும்போது இதனை நினைத்தே பார்க்கவில்லை . எழுத்தாளர்கள் , வாசகர்கள் ஆகியோரின் பங்களிப்பினால் இது சாத்தியமானது . சிறந்த எழுத்தை மக்களுக்கு சுவையான முறையில் அளிக்கவேண்டும் என்ற முயற்சி சிறிதேனும் ஈடேறியிருப்பதில் எங்களுக்கு பெருமைதான் . வணிக ஆதாயமற்ற இலக்கிய இதழை உங்களின் தனிப்பட்ட வேலைகளைக் கடந்து உருவாக்கியிருக்கிறீர்களே ? அனுபமா : நானும் வாணியும் பணிகளை பிரித்துக்கொண்டு செய்ததால் ஸ்பா