இடுகைகள்

பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்

    பயணிகள்  பேருந்தில்  பாலச்சந்திரனோடு    ஒரு பயணம்                                                                                                 ஏகாங்கி சென்னையில் இருந்த வேலையைவிட்டு வந்து ஒரு வாரமாகியிருந்தது . மனம் முழுவதும்   அந்த வேலையின் கசப்பை ஆழமாக இறங்கிட மெல்ல கனமாகிகொண்டிருந்தது . இலக்கியவாதியாக இருந்து பின் சிறந்த வியாபாரியாகி பல தொலைக்காட்சி நேர்காணல்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தி மேதாவித்தனத்தை செவ்வனே உரக்க தலையாட்டி அறைகூவுபவர் நான் வேலை செய்த இதழின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் .! நான் வேலைக்கு சேரும் இடங்களிலெல்லாம் இந்த இருவேட நாடகங்களை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை . இனி வேறு ஏதாவது வேலை தேடவேண்டும் என்ற நினைத்து   மெல்ல   இமைகளை திறந்தபோது , வெளிச்சம் அதிகமாகிக்கொண்டிருந்தது வானில் . ஏறுவெயில் மெல்ல தன்பரப்பை சுவற்றில் அதிகரித்தபடி இருந்தது . தென்னந்தோப்பில் காக்கைகள் குரலெழுப்பி ஊருக்கே இவைதான் அலாரமோ என நினைக்க வைத்துக்கொண்டிருந்தன . எழுவதற்கே மிகச் சோம்பலாக இருந்தது . ஈரோட்டில்

தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்

      தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம் ·         அன்பரசு சண்முகம் இன்றைய சமகாலத்தில் வடமொழி, மூத்ததது என்று அதன்மேல் பற்றுகொண்டவர்கள் அந்த அதனை பரப்ப, பரவலாக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட மேல்அடுக்கு மக்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று கூறி கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் மொழி என்ற தகுதியை இழந்ததால் சமஸ்கிருதம் தன்னை தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை என்ற உண்மையை இவர்கள் பேசாமல் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களிடம் தொடர்ந்து புழங்கும் மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும் என்பது யதார்த்த உண்மை. தமிழ் பழங்குடி மக்களின் மொழியான தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் தோன்றியது  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கணவிலக்கியமும் தோன்றியது  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும்,  தேவநேயப்பாவாணர் தமிழ் வரலாறு நூலில் தெளிவுற கூறியுள்ளார். தமிழ்மொழி தேய்வதற்கு முக்கியகாரணமாக வடமொழிச்சொற்களைப் பேச்சில் கலப்பது, தெய்வ வழிபாட்டில் அர்ச்சனைகள் வடமொழியில் செய்வது, தமிழர்களின் பெயர்களில் வடமொழி கலப்பு என இவையே நம்மிடம் உள்ள குறைபாடுகளாக கூறலாம். இன்னொன்ற