இடுகைகள்

ஆதாம் ஆப்பிள் பெரிதாக இருப்பது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி என்னுடைய தொண்டையில் ஆதாம் ஆப்பிள் பெரிதாக உள்ளது? இதனை சரி செய்ய முடியுமா? எடுத்து நாயுடு ஹோட்டல் வறுகறிக்கு கொடுத்துவிடப்போகிறீர்களா என்ன? ஆண்டவன் கொடுத்ததை அப்படியெல்லாம் எதையும் மாற்றமுடியாது. தைராய்டு அமைப்புக்கு அருகில் உள்ளது ஆதாம் ஆப்பிள். குரல் அமைப்பை பாதுகாக்க ஒன்பது அமைப்புகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் தைராய்டு அமைப்பின் மீதாக பெரிதாக இருக்கிறது. ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும்போது, தொண்டை அமைப்பு பெரிதாகிறது. குறிப்பாக குரல் மாறுபடுவதோடு அதன் மீதுள்ள ஆதாம் ஆப்பிளின் அளவு பெரிதாகிறது. இந்த அளவு மரபணு சார்ந்தது. இதை மாற்றுவது என்பது கடினம். ஆண்களுக்கு இந்த அமைப்பு பெண்களை விட தெளிவாக தெரியும். நன்றி - பிபிசி

கிஃப்ட் வாங்குவதில் என்ன குழப்பம்?

படம்
மிஸ்டர் ரோனி கிறிஸ்துமஸ், பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போது என்ன பரிசு பிறருக்கு கொடுப்பது என்று குழப்பம் ஏற்படுகிறது என்ன செய்வது? யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு என்ன உதவும் என்று பார்த்து பரிசு கொடுங்கள். அதற்கு என்று ஜட்டி, பனியன் வாங்கி தரக்கூடாது. அதெல்லாம் அவரே பார்த்து வாங்கிக்கொள்வார். இன்று பெரும்பாலும் அமேசான், ஃபிளிப்கார்ட்டில் விஷ் லிஸ்டை தயாரித்து வைத்துவிடுகின்றனர். பிறந்தநாளின்போது, அதைப்பார்த்து அதில் ஒன்றை வாங்கிக்கொடுங்கள் என்கிறார்கள். கல்யாணத்திற்கு கூட மொய் எழுதுவதை விட வீட்டுக்கு தேவையான பொருட்களாக கொடுக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆபீஸ் சார்பில் கொடுத்துவிடலாம். வேறு எதுவுமே மண்டையில் தோன்றவில்லையா? இரண்டு ரூபாய்க்கு மொய் கவர் வாங்கி அதில் காசை வைத்து கொடுத்துவிடலாம். யாருக்கு கொடுக்கிறோமே அவருக்கு நம்முடைய விருப்பம், ஆசை, ஈடுபாடு சார்ந்தும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம். அதேசமயம் அவர்களுக்கு பயன்படும்படு இருக்கவேண்டியது முக்கியம். இதற்கெல்லாமா கவலைப்படுவது? பட்ஜெட் போடுங்கள் அப்புறம் அதற்கேற்ப கிஃப்ட் தேடுங்கள்

கற்பழித்து, முதுகெலும்பில் கத்தியை பாய்ச்சி... - சுற்றுலா கொலைகாரர்

படம்
அசுரகுலம் இவான் ராபர்ட் மிலாட் சுற்றுலா வரும் பெண்களை கடுமையாக தாக்கி வல்லுறவு செய்துவிட்டு அதை மறைப்பது மிலாட்டின் ஸ்டைல். ஆனால் அவரின் கத்தியை அவரால் மறைக்க முடியவில்லை. பெண்களை கண்டதும் முதுகை துளைத்து இறங்கும் கத்தி முதுகெலும்பை நொறுக்கி இருப்பது அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இச்சம்பவத்தில் பெண்கள் பிழைப்பது கடினம். பிழைத்தாலும் வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலிதான். கொலை அடையாளங்களை ஆராய்ந்த ராட் மில்டன் என்ற தடய அறிவியலாளர், கொலைகாரர் சீரியல் கொலைகாரர் இல்லை என்று கூறினார். அதேபோல கொலைகாரரின் வயது முப்பது இருக்கலாம் என்றும் கூறினார்.   அதேபோல முதலில் சில சடலங்கள் கிடைத்ததோடு கொலைப்பயணம் தொடரவில்லை. பின்னர், ஓராண்டு கழித்து பிணங்கள் கிடைக்கத் தொடங்கின. 1993ஆம் ஆண்டு இருபிணங்களை போலீசார் பொறுக்கி எடுத்தனர். ஆய்வுகளை சோதித்ததில், இருவரும் 1989ஆம் ஆண்டே காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இருவரின் வயதும் பதினைந்துதான். நான்கு ஆண்டுகள் கழித்து ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அவர்கள் அந்த நேரத்தில் எங்கிருந்தார்கள் என்று போலீஸ் யோசித்தது. எனவே, கொலை நடந்த காடு,

மாமா மாப்பிள்ளை பாச கிளிஷே காவியம் - வெங்கி மாமா!

படம்
வெங்கி மாமா - தெலுங்கு இயக்கம் - கே.எஸ். ரவீந்திரா கதை - ஜனார்த்தன் மகரிஷி ஒளிப்பதிவு - பிரசாத் முரல்லா இசை - தமன் எஸ்எஸ் ஆஹா... வெங்கடேஷ்தான் பளபளக்கிறார். படத்தின் முதல் காட்சி தொடங்கி கண்ணீர் மல்க தான் வளர்த்த மாப்பிள்ளை மீதே புகார் சொல்வதை பார்ப்பது என மனதில் நிற்பது இவர்தான். நாக சைதன்யா கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. குடும்பமாக இருக்கும் ஆட்கள். பாசம், மாமா, மாப்பிள்ளை என பேசுவது இதுதான் படத்திற்கான ஈர்ப்பாக உள்ளது. மற்றபடி கதையில் உறுதியான எந்த விஷயமும் இல்லை. தமனின் இசையில் ரெட்ரோ பாடல்கள் ஈர்க்கின்றன. ஐயய்யோ கதை, திரைக்கதை எல்லாமும்தான். ராசி கண்னா ட்ராக் பொறுமையை சோதிப்பது போல உள்ளது. படத்தில் ஜாதகம்தான் சிக்கல் என்றால் அதனையே முதன்மையாக வைத்து இருக்கலாம். ஜாதகம் அறிமுகமாவதற்கு முன்னாடியே ராவ் ரமேஷ் வில்லனாக புரமோஷன் வாங்கிவிடுகிறார். அப்புறம் ஜாதகம் என்ன செய்யப்போகிறது? பயிற்சி பெற்ற வீர ர்களை சாதிக்க முடியாததை, மாப்பிள்ளை மீது பாசம் கொண்ட வெங்கடேஷ் எப்படி சாதிக்கிறார்? இதெல்லாம் கேட்டால் அங்கு பனிமலை முகடுகளில் ... என பேசுவார்கள். பாச

துரோகியை கண்டறியும் ஜாக்கி சான் - ஸ்பிரிச்சுவல் குங்பூ

படம்
ஸ்பிரிச்சுவல் குங்பூ இயக்கம், தயாரிப்பு  - லோ வெய் எழுத்து - பான் லெய் இசை - ஃபிராங்கி சான் ஒளிப்பதிவு - சான் விங் சூ 1978இல் வந்த படம். பொதுவாக இந்த படங்களின் கதை ஒன்றுதான். போட்டி தற்காப்புக்கலை பள்ளி, குறிப்பிட்ட பள்ளியை மூட வைக்க தகிடு த த்தங்களை செய்வார்கள். முடிந்தால் அப்பள்ளி தலைவரை போட்டுத்தள்ளுவார்கள். இங்கும் அதேபோல்தான். ஆனால் அந்த துரோகத்தை பள்ளியைச் சேர்ந்தவரே செய்கிறார். தனது சுயநலத்திற்காக, தலைவர் பதவிக்கு வரும் தகுதி கொண்டவர்களை கொல்கிறார்.  அவர் யார் என்று பள்ளி கண்டுபிடித்ததா, அவர்கள் ஜாக்கி வென்றாரா, இறந்தவர்களுக்காக எதிரியை பழிக்குப்பழி வாங்கினார்களா என்பதுதான் கதை. பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. ஜாக்கிசான் மட்டுமே நம்மை காப்பாற்றுகிறார். கதை என்று உறுதியாக ஒன்றுமில்லை. பள்ளியில் இருந்து தற்காப்புக்கலை சார்ந்த சுவடி காணாமல் போகிறது. அதன்பின்னர், அப்பள்ளியில் உள்ள குருமார்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் அடித்து கொல்லப்படுகிறார்கள். நெஞ்சில் கைக்கட்சி சின்னம் இருக்கிறது. சீனாவில் எதற்கு காங்கிரஸ் கட்சி பிரசாரம்? அந்த வலுவான ஆளை தடுக்க

மேகம் திரண்டால் பூமி கூலிங் ஆகுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பருவநிலை மாற்றத்தால் மழை அதிகமாக பூமிக்கு கிடைக்கிறது. அதேசமயம் இப்படி திரளும் மேகங்களால் பூமியின் வெப்பம் குறையுமா? இப்படியெல்லாம் பாசிட்டிவ்வாக யோசிப்பதால் நீங்கள் விக்ரமன் பட ரசிகராக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மேகங்களை நீங்கள் கூறுவதுபோல முடிவு செய்ய முடியாது. இதனால் அவை பூமியின் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைக்கும் என்று எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது. பருவநிலை மாற்றத்தால் பெய்யும் மழை என்பது மேக உடைப்பு போல ஒரு மணிநேரத்தில் அந்த சீசனுக்கான ஒட்டுமொத்த மழையும் பெய்யும். இதனை நீங்கள் எப்படி நேர்மறையாக பார்க்க முடியும்? ஆய்வாளர்களும் மேகங்களை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது. காரணம் நிலையின்றி பயணிக்கும் அதன் தன்மைதான். நன்றி - பிபிசி

சிறிய நாய்களுக்கு ஆக்ரோஷம் ஏற்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி பெரிய நாய்களை விட சிறிய நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஏன்? அக்கறைதான். நாய்களும் ஓர் உயிர் என்று நினைத்தால் பரவாயில்லை. அதனை ஒரு பொருளாக, தொந்தரவாக உரிமையாளர்கள் நினைத்தால் அதனை நாய்கள் உடனே உணர்ந்துகொள்ளும். இதனால்தான் கவனத்தை ஏற்படுத்த சைக்கிளில் வருபவரை கடிக்கப்போவது, வீட்டுக்கார ஆட்களை பிறர் தொட்டால் கூட மேலே விழுந்து பிறாண்டுவது, எப்போதும் ஷோல்டரை தூக்கிக்கொண்டு சண்டைக்கோழி விஷால் மாதிரியே திரிவது என இருக்கும். இதற்கு மரபணு ஒரு காரணம் என்றாலும், நாய்களின் குணம் இப்படி மாற்றுவழியில் போனால் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த பேண்ட் எய்ட் உங்களுக்குத்தான். நன்றி - பிபிசி