இடுகைகள்

இனவெறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

படம்
          மயங்க் பைடாவட்கா கூ , சமூக வலைத்தளம் , துணை நிறுவனர் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள் ? இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள் . இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன . போலிசெய்திகள் , வதந்திகள் அதிகம் வருகின்றன . இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது . இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும் .. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு , போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன் . உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா ? இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது . அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது . ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான் , இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவ

தேசத்தந்தையின் உண்மை, வலிமை, மனிதநேயத்தை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்! - ஜவாகர்லால் நேரு

படம்
                நியமன நாள் நமது நியமன நாளை விதி உருவாக்குகிறது . அதை இந்திய மக்களான நாம் சுதந்திரமான நாட்டை உருவாக்கி அதற்காக நிலைநிறுத்தவேண்டும் . இறந்த கால சம்பவங்கள் நாம் இப்போது செய்யவிருக்கும் பல்வேறு செயல்களில் எதிரொலிக்கலாம் . நாம் இந்தியாவில் வாழும் வாழ்க்கையை வரலாறாக பிறர் எழுதுவார்கள் . இதில் திருப்புமுனை என்று முன்னர் கூறப்பட்டவையெல்லாம் இறந்த காலமாக மாறும் . விதி இயற்றப்படும் முக்கியமான தருணம் இது . ஆசியா மற்றும் உலகத்திற்கானது . கிழக்கில் புதிய விண்மீன் உதிக்கிறது . அதன் பின்னணியில் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளது . நமது நம்பிக்கை ஏமாற்றப்படாதபோது , விண்மீன் அஸ்தமிக்கும் நிலை ஏற்படாது . நமது மக்களைச் சுற்றிலும் சோக மேகங்கள் இருந்தாலும் , வேறு பிரச்னைகளால் வாடி நின்றாலும் கூட நாம் பெற்றுள்ள சுதந்திரத்தைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவேண்டும் . நாம் இந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசத்தந்தை , சுதந்திரத்தை வடிவமைத்தவர் , நம்மைச்சுற்றி இருந்த இருளை நீக்கியவரை நினைவுகூரவேண்டும் . நாம் அவரைப் பின்பற்றாத மக்களாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த த

நவீன ஜனநாயக இந்தியாவிற்கான கனவு எளிதாக இருக்கப்போவதில்லை! - ஜவாகர்லால் நேரு

படம்
              விதியுடன் ஒரு போராட்டம் ! பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியா விதியுடனான போராட்டத்தை தொடங்கியது . அதற்கான உறுதிமொழியையும் எடுத்தது . இன்று நாம் அதே நிலையை எட்டியுள்ளோம் . முன்னர் நாம் செய்த உறுதிமொழியைப் போல அல்லாமல் இம்முறை தற்போதைய சூழலுக்கு ஏற்ப போல முடிவெடுக்கலாம் . முழு உலகமும் அமைதியாக உறங்கும் நேரம் இந்தியா தனது சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்காக விழித்திருக்கிறது . இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வந்த மக்கள் பழைய காலம் முடிந்து அனைவரும் புதிய உலகில் நுழைகிறோம் . நாம் இந்தியாவிற்கான சேவைக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதோடு , ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தீர்க்கவும் உறுதிபூணவேண்டும் . இந்தியாவின் வரலாற்றில் நாம் கண்டறிய முடியாத நூற்றாண்டுகளாக வெற்றியும் தோல்வியும் உள்ளன . அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டமான நிகழ்ச்சிகள் நடந்தபோதும் இந்தியா தனது பார்வையை இழக்கவில்லை . அவற்றின் வழியே தன்னை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டது . நாம் இன்று இந்தியாவின் சாதனைக்காக கொண்டாடிக்கொண்டிருந்தாலும் இன்னும் பெரும் சாதனைகள் எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கின்றன . எதிர்காலத்தில

நிகழ்காலத்தின் வாளின் முனையில் நாம் நிற்கிறோம்! - ஜவாகர்லால் நேரு - வின்சென்ட் காபோ

படம்
          குறிக்கோள்களை பின்பற்றுதல் ! மக்களவையில் தீர்மானங்களை பற்றி பேசுவதற்கு நான் முன்னமே ஆறு வாரங்களுக்கு முன்னமே தயாராகத் தொடங்கிவிட்டேன் . இதனை உங்களிடம் பெருமையாக கூறிக்கொள்கிறேன் . இந்த தருணம் தன்னகத்தே தனித்துவத்தையும் எடையையும் ஒரு்ங்கே கொண்டுள்ளது . இந்த தீர்மானத்தின் காரணமாக நான் கூறும் வார்த்தைகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம் . நான் இங்கு மக்களின் முன்னே நிற்பது அவர்களின் எதிர்காலத்தை சரியான முறையில் வடிவமைப்பதற்கான பணி காரணமாகத்தான் . நிகழ்காலத்தின் வாளின் முனை போன்ற முனையில் நாம் நிற்கிறோம் . பல கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன் . நமது முன்னோர்கள் நாம் எதிர்பார்த்து நிற்கும் எதிர்காலத்தை உழைத்து பெறுவதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள் என நம்பலாம் . நான் கூறியுள்ள தீர்மானம் , மாநிலங்களிலுள்ள ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லை என்று புதுமையான் விமர்சனங்களும் , மறுப்புகளும் எழுந்துள்ளன . இதுபோன்ற மறுப்பான கருத்தை மாநில ஆட்சியாளரான ராஜா அல்லது மக்களின் பிரதிநிதிகள் எழுப்பலாம் . இவற்றைப் பற்றி மக்களவையில் கூட விவாதிக்கலாம் .