இடுகைகள்

நீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

படம்
  மார்ஷியல் ரெய்ன்ஸ் மங்கா காமிக்ஸ் 550 (ஆன் கோயிங்) ரீட்எம்.ஆர்க் யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார். தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர். பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு   உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில் தனது ஆன

பெற்றோருக்கு நீதிவேண்டி பெண்களை கொலை செய்யத் தொடங்கிய சீரியல்கில்லர்- ஸ்டானியாக்

படம்
  போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டானியாக், அவரது சிறுவயது வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பெற்றோர், தங்கை ஆகியோர் காரில் சென்றபோது இன்னொரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். குடும்பத்தின் மீது பாசம் வைத்திருந்த ஸ்டானியாக், மனம் உடைந்து போனார். போலந்து நாட்டின் நீதித்துறையும் ஊழலுக்கு அடிபணிந்ததுதான். அங்கேயும் நீதிதேவதையை   பாண்டேஜ் வகையில் ஆதி தொழிலுக்கு அனுப்பிவிட்டார்கள். ஸ்டானியாக்கின் பெற்றோரைக் கொன்ற வாகனத்தை ஓட்டி வந்தவர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் அல்லது தொடர்புகளை வைத்திருந்தவர். விமானப்படை கேப்டன் மனைவி. நீதித்துறை காசுக்கும் செல்வாக்குக்கும் எப்போதும் அடிபணியும் என்ற வாக்கு மீறப்படவில்லை. அவரை குற்றவாளி இல்லை என விடுவித்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டவர், படித்து முடித்து வேலை தேடினார். அரசு அமைப்பில் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. அங்கு சில ஆண்டுகள் வேலை செய்து எப்படி பெற்றோரின் சாவுக்கு நீதியைப் பெறுவது என யோசித்தார். அதற்கு செய்யவேண்டிய முதல் வேலை, அரசு நாளிதழுக்கு

வயிற்றைக் கிழித்து, கால்களை விரித்து, உடைகளைக் கிழித்து.. கண்டறிய முடியாத கொலையாளி

படம்
  அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் மாவட்டம் திரைப்பட நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனால் புகழ்பெற்றது. ராம்போ படத்தில் முதல் பாகம் அங்குதான் எடுக்கப்பட்டது. அதற்கடுத்து புகழ் தேடிக் கொடுத்த விஷயம். குற்றம்.   அங்கு நடைபெற்ற ஏழு கொலைகள். கொலைகளுக்குத் தொடக்கம் 1985ஆம் ஆண்டுதான். ஆகஸ்ட் மாதம், நகர பராமரிப்பு தொழிலாளர்கள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டனர். பெண்ணின் மார்பகம் வெளியே தெரியும்படி இருக்க, அவரது உடலில் இருபது கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.   ஹெலன் பேடன்ட் என்ற அந்த பெண்மணி, பல்வேறு பார்களில் புழங்கி வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்த கொலை நடைபெற்றது. இதில் அறுபத்தெட்டு வயது பெண்மணி அன்னா கரோல் மாட்டிக்கொண்டார். இக்கொலையிலும் அன்னாவின் வயிறு கிழிக்கப்பட்டு மார்பெலும்பு வெளியே தெரிந்தது. உடல் பாதி நிர்வாணமாக கிடந்தது. உடலில் ஆறு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதல் கொலை நடந்த இடத்திலிருந்து அன்னா கரோல் இறந்துபோனது பத்து கி.மீ. தொலைவில்தான். அன்னாவின் வீட்டுக்கதவு, திறந்துகிடக்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களால் நீதி வழங்கும் அதிகாரி- கிறிஸ்டோபர்

படம்
  கிறிஸ்டோபர் - மம்மூட்டி கிறிஸ்டோபர் இயக்கம் - பி உன்னிகிருஷ்ணன் மம்மூட்டி, அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, வினய் ராய் இளம்பெண், அவளது தங்கை இருவரும் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் பதிவாகிறது. புகாரில் காணாமல் போன பெண், வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். அவள் உணவுசேவை வழங்கும் வேலையை செய்து கொண்டு கல்லூரி படித்துகொண்டிருந்த பெண்.இந்த வல்லுறவு சம்பவம், கேரள மாநிலமெங்கும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்த, முதல்வரே கிறிஸ்டோபரை வழக்கு விசாரணைக்கு நியமிக்கிறார். இவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய வழக்குகளுக்கு மட்டும் எடுத்து விசாரிக்கும்   ஐபிஎஸ் அதிகாரி. விசாரணையில் பணக்கார தொழிலதிபரின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து வேனில் வைத்து இளம்பெண்ணை வல்லுறவு செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். அந்த வழக்கு விசாரணையை கிறிஸ்டோபர் அமைதியாக தனியொரு அறையில் அமர்ந்துகேட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு காவலர்கள், குற்றவாளிகளை குற்றம் நடந்த இடத்திற்கு கூட்டிச்சென்று எப்படி குற்றம் செய்தனர் என்பதை நடித்துக் காட்டச் சொல்கின்றனர். அங்கு தப்பிச்செல்லும்படி காவல்துறையினர் கண்சாடை காட்ட பணக்க

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீட்டா