இடுகைகள்

விசாரணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரண தண்டனை கைதிகளுக்கு உதவும் வழக்குரைஞர்! அனுப் சுரேந்திரநாத்

படம்
  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் இந்தியா போன்ற பல்வேறு கலாசாரம், பண்பாடு கொண்ட நாட்டை ஒழுங்குபடுத்துவது சாதாரண காரியமல்ல. இதைத்தான் பல்வேறு முன்மாதிரிகளை கொண்டு பி ஆர் அம்பேத்கர் சாத்தியப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார். இதன் வழியாகவே எது குற்றம் என்பதையும், உரிமைகள் என்னென்ன என்பதையும் அறிய முடிகிறது.  மாநில, மத்திய அரசுகளைப் பொறுத்தவரை சட்டம், வழக்கு என்பதெல்லாம் மக்களுக்குத்தான். தங்களுக்கும் தங்கள் அதிகாரத்திற்கும் அல்ல என்ற முடிவுக்கு வந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் செல்வாக்கு, அதிகாரம் கொண்டவர்களை நீதிமன்றத்தால் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரமுடிவதில்லை.  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் அனுப் சுரேந்திரநாத் சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் சட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் போதுமான  வேகத்தில் செயல்படுவது இல்லை. இதற்கு பல்வேறு அரசியல், சூழல் காரணங்கள் உண்டு. இதன் நேரடி பாதிப்பாக, சிறையில் 70 சதவீத த்திற்கும் அதிகமான கைதிகள் விசாரணை கைதிகளாகவே சிறைபட்டுள்ளனர். இவர்களை வெளியே கொண்டு வர வழக்கு முடிவ

சிறந்த தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு! - நூல் அறிமுகம்

படம்
  புத்தகம் புதுசு! தி கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரிஸ்  எவர் டோல்டு தொகுப்பு சுஜாதா விஜயராகவன் மினி கிருஷ்ணன் ஆலெப் 699 கடந்த நூற்றாண்டில் தொடங்கி நடப்பு ஆண்டு வரையிலான சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார், சா.கந்தசாமி, பாமா, பெருமாள் முருகன், பூமணி ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன.  பெட்டர் ஆப் டெட்  லீ சைல்ட் - ஆண்ட்ரூ சைல்ட் பாந்தம் பிரஸ் 699 ஜேக் ரீச்சரை மையமாக கொண்ட சாகச நாவல். இதில் அரிசோனாவில் விபத்துக்குள்ளான காரிலிருந்து எழும் ரீச்சர், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து சூழும் பிரச்னைகளிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே கதை. கூடவே ஃஎப்பிஐ ஏஜெண்ட் மிச்செலா ஃபென்டன் தனது சகோதரியை தேடிக்கொண்டிருக்கிறார்.  தி ஷாடோஸ் ஆப் மென் ஆபிர் முகர்ஜி ஹார்வில் செக்கர்  699 1923ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெறும் கதை. ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இந்து தத்துவவாதி ஒருவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரைக் கொன்றது யார் என மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஊரில் உருவாகிறது. அதனை தடுக்க குற்றவாளியை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் கதை.   இந்தியா அண்ட் தி பங்களாதேஷ் லிபரேஷன

குற்றங்களை ஃபேன்டசி கலந்து சொன்னால் எப்படியிருக்கும்?

படம்
  குற்றங்களின் விவரிப்பு கொலைகளை செய்தவர்களை கூட்டிச்சென்று எப்படி செய்தார்கள் சென்று செய்துகாட்ட வைப்பது காவல்துறையின் முக்கியமான பணி. குழப்பமான கொலை வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த முறையை அனைத்து கொலைகாரர்களிடம் செயல்படுத்த முடியாது. சீரியல் கொலைகாரர்கள், கொலைகளை பற்றி சொல்லுவார்கள். உண்மைதான். ஆனால் தங்களது மனதிலுள்ள ஃபேன்டசி விஷயங்களையும் சேர்த்து சொல்லுவார்கள். இதனால் அது உண்மையா, கனவா என்று கூட குழப்பமாகும் அபாயம் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது. கொலைகளை பலமுறை தங்கள் மனதிலேயே அவர்கள் செய்து பார்த்து ரெடியாகிறார்கள். இதனால் நேரடியாக அதனை செய்யும்போதுகூட இல்லாத தகவல்களை விசாரணையில் கூறுவார்கள்.  ஸ்டான்லி குப்ரிக்கின் கிளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் வரும் அலெக்ஸ் எனும் சைக்கோபாத் பாத்திரம் முக்கியமானது. அதனை சரிவர பலரும் புரிந்துகொள்ளாமல் இதேபோல வன்முறை அதிகமாக இருக்கிறது. இயல்பாக பாத்திரம் அமையவில்லை என்றார்கள். சரிதான். நாம் பார்ப்பது அந்த பாத்திரம் சொல்லும் தனது கோணத்திலான கதையை என்பதை மறந்துவிடக்கூடாது.  விசாரணையில் சீரியல் கொலைகார ர்கள் பேசுவதுதான் அவர்களது

ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா

படம்
            குனீத் மோங்கா இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர் . இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன . வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும் , புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர் . எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது . அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன் . எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே , அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான் . நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன் . அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன் . பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம் . இப்படித்தான் பெட்லர்ஸ் , ஹராம்கோர் , லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின . இதில் தோல்விகளும் உண்டு . எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது . உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா ? மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன ச

பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் மிஸ்டர் ரோனி பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை. இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார். 1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள