இடுகைகள்

மரபணு மாட்டின் இறைச்சி நல்லது!

படம்
மரபணு உணவுகள் ! ஆஸ்திரேலியா பண்ணைகளில் கொம்புள்ள மாடுகளை உரிமையாளர்கள் விரும்புவதில்லை . அதனை அறுத்து எடுப்பது சிரமமாக பசுக்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து கொம்புகளற்ற பசுக்களை உருவாக்கி வருகிறார் மரபணு வல்லுநர் அலிசன் வான் எனன்னாம் . ஆறு பசுக்கன்றுகளை CRISPR முறையைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார் . தற்போது தொடக்கநிலையிலுள்ள இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பல்வேறு பருவசூழலில் வளருமாறு பயிர்களை திருத்த உதவக்கூடும் . கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான அலிசன் உயிரித்தொழில்நுட்பம் மூலம் விலங்குகளை விவசாயத்திற்கேற்ப மேம்படுத்தி வருகிறார் . The Dr. Oz Show  நிகழ்ச்சியில் மரபணு மாற்றப்படுவது குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதிலளித்தது இவரின் அறிவியல் நேர்மைக்கு சான்று ." அறிவியலின் தொழில்நுட்பத்தை அனுகூலமாக பார்க்கும் பார்வை முக்கியம் " என்பவரின் மரபணு ஆராய்ச்சிக்கு அமெரிக்க விவசாயத்துறை நிதியுதவி அளிக்கிறது . மரபணுவை திருத்தி பசு இறைச்சியையும் அதிகரிக்க முடியும் . SRY எனும் மரபணுவை பசுக்களின் உடலில் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்

குடிநீரில் கலக்கும் கதிரியக்க யுரேனியம்!

படம்
யுரேனியம் கலப்படம் ! இந்தியாவிலுள்ள பதினாறு மாநிலங்களின் நிலத்தடி நீரில் யுரேனியம் உள்ளதாக அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . குடிநீரில் யுரேனியத்தின் அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவைவிட அதிகம் என்பது நம் கவலைப்படவேண்டிய விஷயம் . ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலுள்ள 324 கிணறுகள் மற்றும் பதினாறு மாநிலங்களிலுள்ள குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரித்துள்ளது . 30 மைக்ரோகிராம் என்பதே உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க சூழல் அமைப்பு ஆகியவை அங்கீகரித்த யுரேனியத்தின் அளவு . நீரில் கலப்படமாகும் பொருட்களின் பட்டியலில் இந்தியா யுரேனியத்தை இன்னும் சேர்க்கவேயில்லை . மனிதர்கள் நைட்ரேட் பயன்பாட்டினால் பூமியின் பாறைகளிலுள்ள யுரேனியம் மெல்ல நீரில் கரைந்து அதனை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது . மூளை , இதயம் , சிறுநீரகம் , தைராய்டு ஆகிய பகுதிகளை பாதிக்கும் யுரேனியம் , ஈறுகளில் ரத்தம் வடிதல் , சிறுநீரக நோய்கள் , மலட்டுத்தன்மை , ஆஸ்டியோபோரோசிஸ் , நோய்எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது .    

வெள்ளியில் ஓரு போராட்டம்!

படம்
வெள்ளியில் ஓரு போராட்டம் ! வெள்ளி , பூமிக்கு மாற்றாக வாழக்கூடிய கோள் அல்ல . இக்கோளில் முழுக்க சல்ப்யூரிக் அமிலத்தைக் கொண்ட மேகங்களும் ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் உண்டு . இதனை சமாளித்தால் , ஆராய்ச்சியாளர்கள் இங்குள்ள நூறுமடங்கு அழுத்தத்திற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் . இக்கோளைப்பற்றி நிறைய கேள்விகள் இருக்கும்போது சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி ? உடனே நாசா ரெடி செய்த பிளான்தான் HAVOC( High Altitude Venus Operational Concept ) இக்கோளில் ஆராய்ச்சி செய்துவிட்டு உயிர்பிழைத்து வரும் தொழில்நுட்பத்தை இன்னும் நாசா கண்டறியவில்லை . அமில மேகங்களுக்கு ஐம்பது கி . மீ தள்ளி அமையும் விதத்தில் ஆராய்ச்சி நிலையத்தை வானில் அமைக்கவிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . முப்பது நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்யும் திட்டம் முடிவாகியுள்ளது . பூமிக்கு அருகில் இருப்பதால் செவ்வாய்க்கு செல்வது போன்ற காலதாமதம் இதில் ஏற்படாது . மிதக்கும் விண்கலத்தில் இருந்து ஆராய்ச்சி செல்வதற்கு மட்டும் ராக்கெட் பயன்படுத்த உள்ளனர் . பின்னர் இந்த ராக்கெட் விண்கலத்தில் இணைக்கப்பட்டு பூமிக்கு திரும்ப முடியும் .

செவ்வாயில் தாவரங்கள்!

படம்
செவ்வாயில் தாவரங்கள் உண்மையா ? பூமிக்கு மாற்றான உலகம் தேடும் முயற்சியில் செவ்வாயை நாசா இன்றும் விட்டுக்கொடுப்பதாக இல்லை . அண்மையில் செய்த ஆராய்ச்சியில் பருவச்சூழல்களுக்கேற்ப மாறும் மீத்தேன் அளவையும் , பாறைகளிலுள்ள தாவர இனங்களைக் குறித்த தகவல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . 2012 ஆகஸ்டில் செவ்வாயை ஆய்வு செய்த க்யூரியோசிட்டி ரோவர் மூலம் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் . உயிரியல் பொருட்களில் நீக்கமற நிறைந்துள்ள மீத்தேன் (2015 கண்டுபிடிப்பு ) செவ்வாயின் உயிர்கள் உள்ளன என்கிற நம்பிக்கையை தருகிறது . ஆண்டுதோறும் உயர்வதும் தாழ்வதுமான மீத்தேன் அளவும் எங்கிருந்து உருவாகிறது என்பதற்கான பதிலை ஆய்வாளர்கள் தேடினர் . உறைந்த பனிக்கட்டிகள் உருகும்போது மீத்தேன் பெருமளவு உருவாவது கண்டறியப்பட்டுள்ளது . செவ்வாய் குறித்த ஆராய்ச்சியாளர்களின் சிறுசிறு கேள்விகளுக்கு மெல்ல விடைகிடைத்து வருவது நம்பிக்கை தரும் செயல்பாடு . > 

சாட்டிலைட் வரைபடங்களை உண்மையைக் கூறுகிறதா?

படம்
சாட்டிலைட்டை நம்பலாமா ? 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 17 செயற்கைக்கோள் எடுத்த பூமியின் ப்ளூ மார்பிள் படம் இன்றுவரை புகழ் மங்காதிருக்கிறது . ஆனால் செயற்கைக்கோள் படங்களை முழுக்க நம்பலாமா ? 1973 ஆம் ஆண்டிலிருந்து பூமியின் பருவநிலை மாறுபாடுகளையும் காடுகளையும் கண்காணிக்கவும் செர்னோபில் கதிர்வீச்சு பாதிப்புகள் , எரிமலை பாதிப்பு ஆகியவற்றை அறியவும் செயற்கைக்கோள் படங்கள் உதவி வருகின்றன . செயற்கைக்கோள்கள் ரிமோட் சென்சார் தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன . கூகுள் எர்த் மற்றும் எர்த் எக்ஸ்ப்ளோரர் உள்ளிட்ட சேவைகளை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் . இதில் பல்வேறு நாடுகளின் ரகசியமான ஆயுதக்கூடங்கள் , ஆராய்ச்சிகளையும் பிற நாடுகள் அறிந்துகொள்வது கடுமையான பூசல்களை ஏற்படுத்தக்கூடும் . வரைபடங்களில் உள்ள தெளிவு சாட்டிலைட் படங்களில் இருக்காது . எ . கா : தெருவின் பெயர் , கட்டிடங்களின் பயன்பாடு , நாட்டின் எல்லைக்கோடு போன்றவை .   

தவிக்கும் 9 லட்ச அகதிகள்!

படம்
அப்டேட்டாகும் ஐஐடி ! இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடிகளும் தன் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன . தற்போது செயல்பட்டு வரும் 23 ஐஐடிக்கள் பாடத்திட்டத்தை வெறும் தொழில்நுட்பம் என மட்டும் அமைக்காமல் கலை , சமூகம் , மனிதநேயம் தொடர்பான விஷயங்களை உட்புகுத்த முடிவுசெய்துள்ளதாக ஐஐடி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது . " பொறியாளர்களை புதுமைத்திறன் கொண்டவர்களாக உருவாக்க இப்புதிய மாற்றங்கள் உதவும் " என்கிறார் டெல்லி ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் . ஐஐடி இசை , இசைக்கருவிகள் தொடர்பான பாடங்களை உருவாக்க தொடங்கியுள்ளது . இதற்கு முக்கியக்காரணம் , பிற பட்டதாரிகளைப் போலவே ஐஐடியன்களுக்கும் வேலையின்றி தவித்ததுதான் காரணம் . பொருளாதார அறிவியல் , உளவியல் , தத்துவம் ஆகியவையும் தனிபடிப்புகளாக ஐஐடிகளில் விரைவில் இடம்பெறும் .  2 தாய்மண்ணை இழந்த ஒன்பது லட்சம் அகதிகள் ! சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக இவ்வாண்டில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் . கடந்த ஏழாண்டுகளில் இடம்பெயர்ந்த அகதிகளில் இந்த எண்ணிக்கையே அதிக

நெருப்பில் கருகிய காசு!

படம்
நெருப்பில் கருகிய காசு ! ராஜஸ்தானிலுள்ள ஆஜ்மீர் நகரிலுள்ள  பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் நடைபெற்ற தில்லான திருட்டில் , திருடர்களின் எக்ஸ்பீரியன்ஸ் போதாமையால் கரன்சி மொத்தமும் கரியானது . அதிகாலை 3 மணிக்கு பர்பெக்ட்டாக காரில் வந்த திருடர்கள் கேஸ் கட்டருடன் ஏடிஎம் புகுந்தனர் . எஸ்பிஐ ஏடிஎம் அருகே நின்ற செக்யூரிட்டியை அடித்து சாய்த்துவிட்டு கேஸ் கட்டரின் மூலம் ஏடிஎம்மை அறுத்தனர் . ஆனால் பணப்பெட்டியின் இடத்தை சரியான கெஸ் செய்யாததால் நெருப்பு பட்டு 4 லட்சரூபாய் கரன்சியும் தீப்பிடித்து விட்டது . உடனே திருடர்கள் ஸ்பாட்டை விட்டு கிளம்பவும் ஏடிஎம் நெருப்பு அலாரம் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது . உடனே உஷாரான போலீஸ் அங்கு வந்து சேரும்போது சிசிடிவி வீடியோவும் , கரன்சி சாம்பலும் மட்டுமே மிச்சமிருந்தது . தற்போது சிசிடிவி வீடியோவின் மூலம் திருடர்களை பிடிக்க வலைவீசி வருகிறது போலீஸ் .