இடுகைகள்

அயர்லாந்தில் வரி பித்தலாட்டம்!

படம்
வரியற்ற சொர்க்கம் ! பனாமா தீவு , மொரிஷியஸ் , சிங்கப்பூர் என பலரும் லிஸ்டில் அடுக்குவார்கள் . ஆனால் அயர்லாந்து நாட்டை பலரும் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள் .   டப்ளின் நகரை தலைநகராக கொண்ட அயர்லாந்தின் மக்கள்தொகை 47 லட்சத்து 61 ஆயிரத்து 657. தனிநபர் வருமானம் 72 ஆயிரத்து 632 டாலர்களைக் கொண்ட இந்நாடு அமெரிக்க கம்பெனிகள் வரியற்ற லாபம் பெற சட்டப்பூர்வமாகவே உதவுகிறது என பெர்க்லி , கலிஃபோர்னியா , டென்மார்க் பல்கலைக்கழக பொருளாதார அறிஞர்கள் அறிக்கை (The Missing Profits of Nations) வெளியிட்டுள்ளனர் . 2015 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் (12.5% வரி ) 106 பில்லியன் டாலர்கள் , கரீபியன் தீவுகள் 97 பில்லியன் , சிங்கப்பூர் 70 பில்லியன் , நெதர்லாந்து 57 பில்லியன் என பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பார்த்துள்ளனர் . " அதிக வர்த்தக செயல்பாடுகளின்றி பெரும் லாபம் என்றால் அதனைக் கவனிப்பது அவசியம் " எனும் பொருளாதாரவியலாளர் தாமஸ் தோர்ஸ்லோவ் . இவரது குழு வெளிநாட்டு நிறுவனங்களின் வணிகநடவடிக்கைகளை கண்காணித்து மேற்கண்ட லாப சதவிகிதத்தை கணக்கிட்டுள்ளனர் . ஆல்பபெட் , ஹெச்பி , ஆப்பிள

ட்வின்ஸ், குளோன்ஸ் என்ன வித்தியாசம்?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? ட்வின்ஸ்களுக்கும் குளோன்களுக்கும் என்ன வித்தியாசம் ? தாயின் ஒரே கருமுட்டையில் வளரும் இரட்டையர்கள் ஒரே டிஎன்ஏவை பெற்றிருந்தாலும் அவர்களின் பெற்றோர்களின் டிஎன்ஏக்கள் மாறுபடும் . குளோனிங்கைப் பொறுத்தவரை ஒரே ஒருவரின் டிஎன்ஏக்களை பெற்று உருவாக்கப்படுகிறது . அதேசமயம் டிஎன்ஏ அளிப்பவரின் அச்சு அசல் பிரதியாக குளோனிங் இருப்பதில்லை . இரட்டையர்கள் கருவில் வளரும் போது ஹார்மோன்கள் , சத்துக்களை தனித்தனியே பெற்று வளர்கிறார்கள் .

விமானங்களுக்கு வெள்ளை நிறம் ஏன்?

படம்
விமானங்களுக்கு வெள்ளைநிறம் ! கார் , பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு உள்ள வெப்பவிதிகள் அப்படியே விமானத்திற்கும் பொருந்தும் . பிற நிறங்களைவிட வெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு சுற்று குறையும் . விமானத்தின் அலுமினிய உடல் சூரியனால் ஏகத்துக்கும் சூடாவதால் அதனைக் குறைக்க பெரும்பாலும் வெள்ளை நிற பெயிண்டை தேர்ந்தெடுக்கின்றனர் . அதிக உயரத்தில் பயணிக்கும்போது சூரிய வெப்பத்திலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் அளவையும் பெருமளவு வெள்ளைநிறம் தடுக்கிறது .

உடல்நலத்தை மீன் மாத்திரைகள் காப்பாற்றுமா?

படம்
மீன் மாத்திரைகள் பாதிப்பு ! இதயநோய் மேம்பாட்டிற்கென சாப்பிடும் மீன் எண்ணெய்யை உள்ளடக்கிய ஒமேகா 3 சப்ளிமெண்டுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்லை என்று வெளியான ஆய்வு 15 பில்லியன் டாலர் சந்தையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . ஒமேகா 3 மிகுந்துள்ள ஒரு லட்சம் உணவு மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செய்த ஆய்வில் இதயநோயை மேம்படுத்துவதில் பெரியளவு உதவுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது . 1970 ஆம் ஆண்டு க்ரீன்லாந்தில் மீன் உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு இதயநோய்கள் குறைவாக ஏற்படுகிறது என வல்லுநர்கள் கருதினர் . பல்வேறு நிறுவனங்கள் மீன் எண்ணெயை உள்ளடக்கிய உணவுகளை , மாத்திரைகளை தயாரித்து விற்கத்தொடங்கினர் . இத்தேவைக்காக Forage வகை மீன் ஆண்டுக்கு 27 டன்கள் வரை பிடிக்கப்படுகிறது . இது கடல் மீன் இனங்களில் சமச்சீரின்மையை ஏற்படுத்துகிறது .   சாலமன் உள்ளிட்ட மீன்களை நேரடியாக உண்பது தனியாக மாத்திரைகளை சாப்பிடுவதை விட சிறந்தது .

ஜூனியர் கேப்டன் ரெடி!- பிரித்விஷா

படம்
ஜூனியர் தலைவன் பிரித்விஷா!  இந்தியாவின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட(U-19) அணியின் கேப்டனாக அதிரடி காட்டும் பிரித்விஷாவை இளம்புயல் என்றுதான் சொல்லவேண்டும். பார்க்க பக்கத்துவீட்டுப் பையன் போல தோற்றம். களமிறங்கினால் பவுலர்களின் பந்துகளை ஃபோர், சிக்ஸ் என வெளுத்துக்கட்டும் ரன்மெஷின். 2013 ஆம் ஆண்டு மும்பையின் ஆசாத் மைதானத்தில் பிரித்விஷா ரிஷ்வி ஸ்பிரிங்ஃபீல்ட் பள்ளி சார்பாக களமிறங்கி, செயின்ட் ஃபிரான்சிஸ் டி அசிசி போரிவலி அணிக்கு எதிராக 546 ரன்கள்(330 பந்துகள்) அடித்து இந்தியாவையே யார் இவன்? என உற்றுப்பார்க்க வைத்தார். 85 ஃபோர்கள், 5 சிக்ஸ் என பிரித்விஷா காட்டிய அதிரடிக்கு பின்னால் அவரது தந்தை பங்கஜின் ரத்தம் சதையுமான உழைப்பும் கலந்திருக்கிறது. ஃப்ளாஷ்பேக் ரகளை! மும்பை ரஞ்சி அணியில் மினி சுட்டியாய் வலம் வரும் பிரித்விஷாவுக்கு சோட்டு என்று பெயர். அக்.2017-18 போட்டியில் காலிறுதியில் கர்நாடகாவோடு மோதிய மும்பை தோற்றுப்போனது. "நாங்கள் தோற்றாலும் அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்தோம். தனிப்பட்டரீதியில் என்னை ஒவ்வொரு மேட்சிலும் மேம்படுத்த கடு

எழுந்து நின்று கைதட்டும் பழக்கம் வந்தது எப்போது?

படம்
எழுந்து நின்று கைதட்டுவோம் ! மறக்கமுடியாத , லெஜண்ட் சாதனைகளுக்கு , மனிதர்களுக்கு வரலாற்றில் மக்கள் எழுந்து நின்று கைதட்டும் ( standing ovation ) கௌரவம் கிடைத்துள்ளது . இந்த கலாசாரத்தின் தோற்றம் ரோம் நகரில் போர் வென்று திரும்பும் தளபதியை மக்கள் வரவேற்று உச்சிமுகர்ந்து பாராட்டும் பழக்கத்தில் தொடங்கியது . நான் மகிழ்ச்சியடைகிறேன் எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானதே ovation வார்த்தை . 1972 ஆம் ஆண்டு சார்லி சாப்ளினுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டபோது பனிரெண்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களின் உயரிய அங்கீகாரத்தை அவருக்கு தெரிவித்தனர் . 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று , பேஸ்பால் விளையாட்டு அரங்கில் கல் ரிப்கென் ஜூனியர் செய்த சாதனைகளுக்கான பார்வையாளர்கள் தொடர்ச்சியாக 22 நிமிடங்கள் கைதட்டியது அவரை ஆச்சரியப்படுத்தியது . " விளையாண்டுகொண்டிருக்கும் நிலையில் நிற்காத கைதட்டுகளின் நீண்டநேர ஓசை என்னை மிரட்டிவிட்டது . முதலில் விளையாடுவோம் , பிறகு கொண்டாட்டத்தை வைத்துக்கொள்வோம் " என கூறியிருக்கிறார் ரிப்கென் .

பருமனைக் குறைக்குமா பலூன் தெரபி?

படம்
பருமனைத்தீர்க்க பலூன் தெரபி ! சாலட் , பிரெஞ்சு ஃபிரை , சீஸ் என நொறுங்க தின்றதின் விளைவாக உலகெங்கும் 1.9 பில்லியன் இளைஞர்கள் உடல்பருமன் பிரச்னையால் தவித்துவருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2016 ஆம் ஆண்டு அறிக்கை தகவல் கூறுகிறது . ஆபரேஷன் இன்றி உடல்பருமனை தீர்க்க மருத்துவர் சாந்தனு கௌர் எலிப்ஸ் தெரபி எனும் சிகிச்சையை உருவாக்கியுள்ளார் . இச்சிகிச்சை தொழில்நுட்பத்தின் மூலம் சாந்தனுவின் அல்லுரியன் டெக்னாலஜிஸ் 27 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது . எப்டிஏ அங்கீகாரம் பெற்ற இச்சிகிச்சையில் உடல்பருமன் நோயாளிகளுக்கு மாத்திரை அளிக்கப்பட்டு ,   வயிற்றில் பலூனாக மாறுகிறது . 14 ஆயிரம் டாலர்களிலிருந்து 23 ஆயிரம் டாலர்கள் வரை உடல்பருமன் கொண்டவர்களுக்கு அறுவைசிகிச்சை செலவு என்பதோடு வயிற்றில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பின்விளைவுகளும் ஏற்படுவது உடல்பருமனுக்கான மாற்றுவழிகளை தேடவைத்துள்ளது . பலூன் தெரபியில் நீர் நிரப்பிய பலூன் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி உணவுசாப்பிடும் ஆசையை கைவிடச் செய்கிறது . " எங்களது ஐடியாவை தவறு , கிறுக்குத்தனம் என சிலர் கூறினாலும் ஆய்வு மூல

இம்ரான் அமைச்சரவைக்குழு!

படம்
இது இம்ரான்கான் கூட்டம்! ஆசாத் உமர் ராவல்பிண்டியில் பிறந்து கராச்சியில் எம்பிஏ பட்டம் வென்று என்க்ரோ நிறுவனத்தின் இயக்குநராக(2004-2012) நினைத்து பார்க்கமுடியாத சம்பளம் பெற்ற மனிதர்.   2012 ஆம் ஆண்டு தெரீக் இ இன்சாஃப் கட்சியில் இணைந்த உமருக்கு நிதி அல்லது வெளியுறவுத்துறை அமைச்சக பதவி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜஹாங்கீர் கான் தரீன் தெரீக் இ இன்சாஃப் கட்சியிலேயே நல்ல வசதியானவர். வங்கதேசத்தில் பிறந்து லாகூர் கிறிஸ்டியன் கல்லூரி, வடக்கு கரோலினா பல்கலையில் படித்த அரசியல்வாதி 2002 ஆம் ஆண்டு முதலாக நாடாளுமன்ற உறுப்பினர். கட்சிக்கூட்டங்கள்,மாநாடு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதில் திறமைசாலி. ஷிரின் மஸாரி வெளியுறவுத்துறை, பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு நியமிக்கப்படும் திறன்கொண்ட பெண்மணி. இந்தியா ,அமெரிக்கா, ஏன் எதிர்க்கட்சிகளை கருத்துக்களால் நொறுக்கும் முன்னாள் பத்திரிகை ஆசிரியர். இவர்களோடு பர்வேஸ் கட்டாக், ஷா மஹ்மூத் குரேஷி உள்ளிட்டோரும் இம்ரான்கானின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான்.

தலித்துகள் விரைவில் அமைதியாவார்கள்!

படம்
முத்தாரம் Mini வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக கிளர்ந்தெழும் தலித்துகளின் கோபத்தின் அரசியல்ரீதியான தாக்கம் என்ன ? 2014 ஆம் ஆண்டைவிட நாங்கள் ஆற்றல் கொண்டவர்களாக மாறியுள்ளோம் . பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எங்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில் பழைய சட்டத்தில் கமா கூட மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை . எதிர்காலத்தில் அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம் நம்புங்கள் . தலித்துகள் முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் நிற்கவில்லையே ? வதந்தி படுகொலைகளுக்கு எதிர்ப்பான குரலை தொடர்ச்சியாக எங்கள் கட்சி எழுப்பி வருகிறது . இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பல்வேறு மாநிலங்களுக்கு அறிக்கை அனுப்பி செயல்படும் விதம் திருப்தியளிக்கிறது . தலித்துகள் , முஸ்லீம்கள் பீகாரில் பிரிவினைக்குட்படவில்லை என கூறமுடியுமா ? என்னுடைய தொகுதியில் முஸ்லீம் , தலித்துகள் , பழங்குடிகள் என அனைவரும் ஒன்றுபோல்தான் . போலிச்செய்திகள் எங்களை எதிராக சித்தரிக்கலாம் . மேற்சொன்ன இனக்குழுக்கள் சாதியால் ஒன்றுபோல பாதிக்கப்பட்டவர்கள் . தலித்துகள் இன்று கோபப்பட்டாலும் பின்னாளில் நிதானமாகிவிடுவார்கள் .   - சிராக்

வங்கி விவரங்களை திரட்டும் ஃபேஸ்புக்!

படம்
ஃபேஸ்புக்கின் பரஸ்பர சகாயம் ! தகவல்கொள்ளைக்கு அடுத்த பரபரப்பாக வங்கிகளிடம் பயனர்களின் வரவு செலவு விவரங்களை ஃபேஸ்புக் கேட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது . ஜேபி மோர்கன் சேஸ் , வெல்ஸ் ஃபார்கோ , சிட்டிகுழுமம் உள்ளிட்ட வங்கி நிறுவனங்களிடம் பயனர்களின் குறைந்தபட்ச இருப்பு முதற்கொண்டு கிரடிட் கார்டு செலவு வரை ஃபேஸ்புக் தகவல்களை கோரியது அம்பலமாகியுள்ளது . பேபால் மற்றும் வெண்மோ நிறுவனங்கள் மொபைல் வணிகவட்டாரத்தில் வலுவாக உள்ளதோடு விரைவில் இவை ஃபேஸ்புக்கோடும் இணைந்து செயல்புரியக்கூடும் . ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் ஆப் பயனர்களுக்கும் வங்கிகளுக்கும் இடைமுகமாக செயல்படும் வாய்ப்பும் , வங்கிகளை விளம்பரப்படுத்தும் பரஸ்பர சகாயமும் இதில் உள்ளது ." வங்கி மற்றும் கிரடிட் கார்டு கம்பெனிகளின் பயனர் பட்டியலை விளம்பரத்திற்காக நாங்கள் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை . வேறுவகையான சிறப்பு உறவுகளும் கடைபிடிக்கவில்லை " என்கிறார் ஃபேஸ்புக்கைச்சேர்ந்த அதிகாரியான எலிசபெத் டயானா .

தொன்மை நாகரிகங்கள்!

படம்
நாகரிகத்தின் தடம் ! Bhirrana, Mehrgarh இரண்டு மில்லியன் ச . கி . மீ ஹரப்பா நாகரிகம் பரவியிருந்த பரப்பு இது . இரண்டாயிரம் இடங்களில் பிராணா , மெஹ்கார் ஸ்பெஷலானவை . இங்கு கற்காலம் தொடங்கி , சிந்துவெளி நாகரிகம் வரையிலான பரிணாம வளர்ச்சி பற்றிய குறிப்புகள் கிடைத்தன .   Mohenjodaro(3000-1900BC) 1920 க்கு பிறகு கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய கலாசார இடம் . சிந்து , பாகிஸ்தான் உள்ளடங்கிய 250 ஹெக்டேர்களை யுனெஸ்கோ 1980 ஆம் ஆண்டில் தொன்மையான இடமாக அறிவிக்கப்பட்டது . Harappa(2800-1300BC) ரவி ஆற்றுப்பகுதி அருகேயுள்ள கிராமத்தின் பெயர் 150 ஏக்கரில் பரந்து விரிந்த சிந்துவெளி நாகரிகத்திற்கு சூட்டப்பட்டது . ஆங்கிலேயரின் ஆட்சியின்போது இவ்விடம் பெருமளவு சிதைவுக்குள்ளானது .   Rakhigarhi(5500-1900 BC) டெல்லியிலிருந்து 156 கி . மீ தொலைவில் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த தொன்மை இடம் இது . கி . மு 5500 ஆண்டு தொன்மையான இந்த இடம் காஹார் ஆற்றிலிருந்து 27 கி . மீ தொலைவில் அமைந்துள்ளது .