இடுகைகள்

என் கையை விட்டுவிடு: மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
Pexels.com மயிலாப்பூர் டைம்ஸ் என் கையை விட்டுவிடு ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவேன்.  நேற்று சாலையை நானும் சகாவுமான பாரதியும் கடந்தோம். மை ஹோட்டலுக்கு மினி டிபன் சாப்பிட பாரதி அழைத்தார் என வந்தேன். பாரதி, ஏதோ மஃப்டி போலீஸ் போல வெள்ளைச் சட்டையும், காக்கி பேண்டும் போட்டு ராட்சஷ உடம்பில் பயமுறுத்தினார். பேசினால்தானே தெரியும் பாஸ் எப்படின்னு. நான் புதுசா வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டபிள் ஏட்டய்யாவை சுற்றுவது போல அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து இல்லை ஓடிக்கொண்டு இருந்தேன். சாலை கடக்கும்போது முன்னால் வேகமாக போக, நான் அவரின் அட்டாச்மென்டாக பின்னால் நடந்தேன். ஆனால் அந்த வேகம் போதாமல் அவரின் கையைப் பிடித்து டோ போட முயற்சித்தேன். சட்டென திரும்பியவர், அயோக்கியப் பயலே கையை இழுக்கறியே, கையை விடு எப்படி ரோட்டை கிராஸ் பண்ணுவேன் என மூர்க்கமானார். பயப்படாதீர், தைரியமாக இரும்.  எனக்கு என்னடா இது. ஏதோ பொண்ணு கையப்பிடுச்சு இழுத்தமாதிரியில்ல டென்ஷன் ஆகறாருன்னு அப்படியே நின்றேன். அதில்லடா தம்பி. திடீர்னு கைய பேக்குல இழு

லவ் இன்ஃபினிட்டி: காதலும் லட்சியமும் ஒன்றாக பயணிக்குமா?

படம்
www.pexels.com எங்கே விட்டோம்... காதல்னா எனக்கு புரியல என்பதில்தானே... இந்த பூபதி வேற Ladies Kho Kho Match அன்னிக்கு வந்தான். நான் கண்டுக்கலை. அவனும் சும்மாதான் இருந்தான். இந்த பூங்கொடி(White) அவனுக்கு கேட்கிற மாதிரி என்னை கூப்பிட்டுட்டே இருந்தா. அது எனக்கு பிடிக்கவேயில்லை. அவன் மட்டும் எனக்கு Future இல் என் husband என்றால் நிச்சயம் ஏற்கமாட்டேன்.  சரி,சரி இனிமே Future பத்தி ஏதும் பேச மாட்டேன். நடப்பது நடக்கட்டும்னு எல்லா விஷயத்திலும் இருக்க கூடாது. படிப்பு, மதிப்பு, பணம் எல்லாத்திலயும். தாமரை எழுதிய சவிதா வயது பதினொன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ரெண்டும் Super. சவிதா கதை படிக்கையில் உண்மையிலேயே அழுதுட்டேன். தேவையில்லாம அடிக்கடி கண்ணீர் வருது. சின்ன சின்ன ஏமாற்றங்களைத் தாங்க முடியலைன்னா? ஆனா நீங்கல்லாம் எப்படி கட்டுப்படுத்திக்கிறீங்களோ? Revathy Mam என்கிட்ட சொல்லியிருக்காங்க. நீ என்னதான் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது Love பண்ண நினைச்சாலும் அப்பக்கூட நல்லவங்க Lover - ஆ அமைவாங்கன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க. நீ சொன்ன “வயது ஆக ஆக வாழ்க்கை புரியும் ”ங்கிற வார்

நேரத்தை மாற்றினால் இந்தியாவுக்கு 29 ஆயிரம் கோடி லாபம்!

படம்
இந்தியாவுக்கு நஷ்டம் 29 ஆயிரம் கோடி! மாலிக் ஜக்னானி செய்தி: இந்தியாவில் ஒரே காலநேர அட்டவணையைப் பின்பற்றுவதால் ஆண்டுதோறும் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கார்னெல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தகவல் கூறியுள்ளது. கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி தனது (PoorSleep: Sunset Time and Human Capital Production) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே இந்திய காலநேர அட்டவணையால் ஆண்டுதோறும் பெருமளவு நிதியிழப்பு ஏற்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தினசரி மாலைவேளையில் மேற்குப்புற இந்தியாவை விட கிழக்குப்புற இந்தியாவில் 90 நிமிடங்களுக்குப் பிறகே சூரியன் மறைகிறது. ஒரே காலநேரத்தைப் பின்பற்றும்போது கிழக்குப்புற மக்களுக்கு 90 நிமிடங்கள் தூக்க இழப்பு ஏற்படுகிறது. ”உள்நாட்டு உற்பத்தியில்(GDP) இதன் அளவு 0.2 சதவீதம். மொத்தமாக வீணாகும் மனிதவளத்தின் மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் ” என திகைக்க வைக்கிறார் ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி. காலநேர அட்டவணை ரயில்வே மற்றும் விமான சேவைகளுக்காக உலகமெங்கும் 24 காலநேர அட்டவணைகள் செயல்பாட்டில் உள்

மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!

படம்
மாற்றுத் திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  59 எமோஜிக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. எழுத்தை விட படமாக பார்த்துப் புரிந்துகொள்வது எளிது. குறுஞ்செய்திகளை பயன்பாட்டை எமோஜிகள் அறிமுகமாகி முடித்து வைத்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும்படி 59 புதிய எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜப்பான் மொழியில் எமோஜி என்ற சொல்லில் ’இ’(E) என்பதற்கு படம் என்றும், மோஜி(Moji) என்பதற்கு கதாபாத்திரம் என்றும் பொருள். இப்புகழ்பெற்ற வார்த்தை 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலும் சேர்க்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி ஆப்பிள், கூகுள் மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் எமோஜிக்களை யுனிக்கோட் கான்சார்டியம் (The Unicode Consortium) என்ற அமைப்பு, தர நிர்ணயம் செய்து வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐகான்களை அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டே யுனிக்கோட் கான்சார்டியத்திடம் கோரியது. புதிய எமோஜிக்களைத் தயாரிக்க ஆப்பிள் பார்வையற்றோர் கௌன்சில், செரிபெரல் பால்சி பவுண்டேஷன், காதுகேளாதோர் சங்கம் ஆகிய அமைப்புகளின் உதவிகளைக் கோரி பயன்படுத்த

புற்றுநோய் ஆராய்ச்சியின் உண்மை என்ன தெரியுமா?

படம்
மீடியம்.காம் புற்றுநோய்க்கு தீர்வு கிடையாதா? அடிக்கடி அறிவியல் தளங்களில் நாம் பார்க்கும் செய்திதான். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு: இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை. சிகிச்சை வந்துவிட்டது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் என்பதெல்லாம் படித்து சலித்திருப்பீர்கள். முடியாது என்பது கிடையாது. ஆனால் முயற்சிகள் போதாது. நியூயார்க் போஸ்ட் முதல் ஃப்யூச்சரிசம் வரை புற்றுநோய்க்கு மருந்து என்றாலும் இது சாதாரணமாக முடியாது. உலகில் ஐந்தில் இரண்டுபேரும், நூறில் 40 சதவீதம் பேரும் புற்றுநோய் அபாயத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த கம்பெனியான AEBi புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவும் விளம்பரத்திற்காக உண்மையில் ஏதேனும் சிகிச்சையில் மாற்றம் உள்ளதா? மூத்திரச்சந்தில் விரைவீக்கம், விந்து முந்துதல்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் போல புற்றுநோய் மருத்துவர்கள் மாறி வருகின்றனர். என்ன மஞ்சள் நோட்டீஸ் கிடையாது. முழுப்பக்க டைம்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்கள். பின்னே அந்தஸ்து முக்கியம் அல்லவா? இஸ்ரேல் கம்பெனியும்

லவ் இன்ஃபினிட்டி: இது காதலா? நட்பா?

படம்
pexels.com கல்லூரியில் ஒரு சின்ன நொடி நேரம் கூட நீங்கள் காதல் வயப்பட்டிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. நாள்பூராவும் புத்தகத்தை இல்லை லைப்ரரியை கட்டி அழுதிருப்பீர்கள் என்றால் கல்லூரியை வீணடித்திருக்கிறீர்கள் என உறுதியாக சொல்வேன்.  இங்கு கூறப்படும் கடிதமும் அப்படித்தான். இதிலுள்ள உணர்ச்சிகரமான குழப்பங்கள், பிரச்னைகள் வேறுவிதமானவை. நீங்களே வாசியுங்கள்.  லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், சேதுமாதவ் பாலாஜி Pexels.com Dearest Friend,  நீ எப்படித்தான் இப்படியெல்லாம் இலக்கியமாய் எழுதறயோ? அப்புறம் நான் ரொம்ப பெருமைப்படற விஷயம் ஒண்ணு நடந்தது. இந்த Note ஐ நான் Bus -ல் படிச்சிட்டு வந்தேன். என் பக்கத்தில் 1st year பொண்ணு இருந்தா. எங்க கூட படிச்ச பெண். 1 Year late Join  பண்ணியிருக்கா. நீ கொடுத்த புத்தகங்கள் படிக்கையில் உன்னைப் பற்றி சொல்லியிருக்கேன். இன்னிக்கு லெட்டரைப் படிக்கும்போது, அவள் இருந்தா. அவ படிக்க மாட்டா, பார்க்க மாட்டான் நினைச்சேன். ஆனா 'Love' ங்கற word  அவ கண்ணில் பட்டிருச்சு. உடனே என்னிடம், 'தப்பா நினைக்காதே

தடுப்பூசிகள் நம்மை நோயிலிருந்து காக்கிறதா?

படம்
goodreads Vaccine Science Revisited: Are Childhood Immunizations As Safe As Claimed? (The Underground Knowledge Series #8) by   James Morcan   (Goodreads Author) ,   Lance Morcan   (Goodreads Author) ,  Elisabet Norris   (Foreword) நீங்கள் கல்வியாளரோ, பத்திரிகை ஆசிரியரோ, டாக்டரோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் தடுப்பூசி பற்றிய இந்நூல் அதுகுறித்த கவனத்தை உங்களிடம் ஏற்படுத்தும். தடுப்பூசிகளின் தயாரிப்பு, அது அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவையும் இதில் பேசப்படுகின்றன. புலனாய்வு முறையில் தடுப்பூசிகள் எப்படி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதை ஆசிரியர்  வி ளக்கி அதிர்ச்சியை தருகிறார்.  Goodreads The Electric War: Edison, Tesla, Westinghouse, and the Race to Light the World (Gilded Age #1) by   Mike Winchell   (Goodreads Author) மின்சாரத்தை யார் கண்டுபிடித்தது என்றால் என்ன பதிலைக் கூறுவீர்கள்? ஆனால் அக்காலத்தில் அப்போட்டியில் தாமஸ் எடிசன், நிக்கோலா டெஸ்லா, ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்

சர்வம் தாளமயம்- தோல் உரித்த விரல்கள் மிருதங்கம் இசைக்குமா?

படம்
WORLDHAB சர்வம் தாளமயம் ராஜீவ்மேனன் ஏ.ஆர். ரஹ்மான் கதையே தலைப்பில் சொல்லிவிட்டார்கள். கீழ் சாதியைச்சேர்ந்தவர் இசை கற்க முயல, சமூக ரீதியாக சாதி ரீதியாக என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே கதை. ஜி.வி.பியிடம் நாம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அவரால் முடிந்ததை செய்து விடுகிறார். விஜய் ரசிகராக வேறு நடித்திருக்கிறார். நாம் என்ன சொல்ல? சொல்ல வந்த கான்செஃப்ட்டை ஓரளவு நேர்த்தியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன். அனைத்து காட்சிகளுக்கும் ஒத்துழைக்கிறது ஏ.ஆரின் இசை. அப்புறமென்ன. மனதில் மழையாய் பொழியும் பாடல்களைக் கேட்டபடி படத்தை பார்க்கவேண்டியதுதான். வேம்பு ஐயரிடம் மிருதங்கம் செய்து கொடுக்கும் பீட்டர், அதை வாசிக்க வாய்ப்பு கேட்கிறார். அவரின் தீவிர ஆர்வத்தை பார்த்து வேம்பு ஐயர் மனமிரங்கி பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அதைப் பிடிக்க முதன்மை சீடர் செய்யும் துரோகம், நண்பனின் பழிவாங்கல் ஆகியவை பீட்டரை நடுத்தெருவில் நிறுத்துகிறது. பீட்டர் என்ன செய்தார். பழிவாங்கினாரா, சுயமுன்னேற்ற பாடல்களை இயற்றினாரா, என்பதே கதை. செக்சையும் மோட்டிவேஷனலாக இயக்குநர் மாற

சூப்பர் ஜீரோ ஹீரோவான கதை!

படம்
studioflicks ஜீரோ ஆனந்த் எல் ராய் மனு ஆனந்த் அஜய் - அதுல் தனிஷ்க் பக்ஷி Steemit சூப்பர் ஜீரோவாக இருப்பவர் எப்படி பலருக்கும் இன்ஸ்பிரேஷன் மனிதராக மாறுகிறார், சூழல்கள் எப்படி அவரை மாற்றுகின்றன என்பதுதான் ஜீரோவின் கதை. மீரட்டில் வாழும்  ஜெகஜால குள்ள மனிதர். தன் அப்பாவின் தவறினால் மரபணு பிரச்னை ஏற்பட்டுவிட்டது என புகார் சொல்லி அப்பாவிடம் அடிவாங்குவதில் தொடங்குகிறது ஷாருக்கானின் நடிப்பு. சூப்பர் ஸ்டார் அண்டர்வேரோடு தெருவில் ஓடுவதை நினைத்துப் பாருங்கள். அசரவேயில்லை. அப்படியே ஷாருக்கான் செய்கிறார். அவருக்கு உயரம் கூட பிரச்னையில்லை. தனக்கு காதலி தேவை, குறிப்பாக மனைவி என தேடுதலில் இருக்கும்போது வானியலாளர் ஆஃபியா பிந்தரை சந்திக்கிறார். செரிபெரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை நடனம், இயல்பான பேச்சு என பேசி படுக்கை வரை வந்துவிடுகிறார். ஆனால் அப்போது பபிதா குமாரி மீதான காதல் தலைதூக்க, கல்யாணத்தைக் கூட தூக்கிப்போட்டுவிட்டு  பபிதாகுமாரியிடம் வந்துவிடுகிறார். அவர், தன் காதலனை இழந்த கோபதாபத்தில் இருக்கிறார். இருவரும் உண்மையான அன்பு என்றால் என்ன என விவாதம் நடத்துகின்றனர்.

சிட்ரிக் அமிலம் உடலுக்கு நன்மை தருமா?

நன்மை தருமா? இயற்கையாக எலுமிச்சை,  ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றிலிருந்து சிட்ரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்போது அதில் வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக இருக்கும். 1784 ஆம் ஆண்டு ஸ்வீடனில் எலுமிச்சையிலிருந்து தூய வடிவில் சிட்ரிக் அமிலம் இருப்பது கண்டறியப்பட்டது. சீஸ், ஒயின், பிரெட் ஆகியவற்றில் இயல்பாகவே சிட்ரிக் அமிலம் உருவாகிறது. இயற்கையில் நிறைய கிடைத்தாலும் பல்வேறு பதப்படுத்தல் பணிகளுக்காக சிட்ரிக் அமிலம் தொழிற்சாலைகளிலும் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக உணவில் நறுமணம், சுவை, கெட்டுப்போகாமல் இருக்க சிட்ரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. குளோஸ்ட்ரியன்ம பாட்லினம் என்ற பாக்டீரியாவை எதிர்த்து செயல்படுவதால் உணவுப்பொருட்களில் பயன்படுகிறது. குளிர்பானங்கள், உணவுகளுக்காக 70 சதவீதம் சிட்ரிக் அமிலம் பயன்படுகிறது. பிற உபயோகங்களுக்கான(அழகுசாதனங்கள், பால்பண்ணை) எஞ்சியவை பயன்படுகின்றன. பயன்கள் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, சிறுநீரக கற்களை அகற்றவென பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. நன்றி: ஹெல்த்லைன்

புஷ்அப் எடுத்தால் இதயம் வலுவாகுமா?

படம்
livescience நாற்பது புஷ்அப் ஆரோக்கியம் பிப்.15 இல் வெளியான ஆராய்ச்சி தகவல். நாற்பது புஷ் அப் எடுப்பது ஓகே. அதற்காக உடம்பில் ஓவர்டோஸ் எனர்ஜி வேணுமே என்பவர்கள் இந்த ஆராய்ச்சியை என்போலவே தாராளமாக புறக்கணித்துவிடலாம். முழு உடல் எடையையும் இருகைகளில் தாங்கி நெற்றி நிலம்பட வீழ்ந்து எழுவது அவ்வளவு எளிதா என்ன? புஷ்அப் எடுத்தால் இதயம் நெடுநாட்கள் வலுவாக இருக்குமாம். எதற்கு புஷ்அப், நல்லெண்ணெய்யை பத்து ரூபாய்க்கு வாங்கினால் போதுமே என லேட்டரலாக யோசிப்பவர்கள் தயவு செய்து இந்த கட்டுரையை வாசித்து என்னை நோகடிக்காதீர்கள். ஹார்வர்டு பொது உடல்நல பள்ளியைச்சேர்ந்த ஆய்வாளர் ஜஸ்டின் யாங் சொல்வதை மட்டுமே தமிழில் நான் கூறினேன். இதயத்தின் ரத்த ஓட்டம் தடைபடாமல் இயங்க என்ன செய்வீர்கள்? அல்லது டாக்டர்கள் என்ன காலம் காலமாக சொல்லி வந்தார்கள்? வாக்கிங் அல்லது ஜாக்கிங். தொட்டதற்கு எல்லாம் வண்டி சைக்கிள் தேடாமல் நடந்து செல்லுங்கள். லிப்ட் தேடாமல் படிக்கட்டில் மனம் வையுங்கள். அப்புறம் பாருங்கள். இதயம் ஜம்மென எப்படி இயங்குகிறது என. நன்றி: லிவ் சயின்ஸ்