இடுகைகள்

தனியிசைப் பாடல்களுக்கான சிறப்பான நேரம் இதுதான்! - பாடகர், இசையமைப்பாளர் கார்த்திக்!

படம்
பாடகர் கார்த்திக் -prudsi  கார்த்திக் பாடகர், இசையமைப்பாளர் பொதுமுடக்க காலம் உங்களைப் பொறுத்தவரை எப்படி இருந்தது? அனைவருக்கும் கிடைத்த இடைவெளி இது. என்னைப் பொறுத்தவரை நமது வாழ்க்கை எவ்வளவு எளிமையானது என்று புரியவைத்துள்ளது. நான் ஆர்கெஸ்ட்ராக்களுக்கு குறிப்புகள் எப்படி எழுவது என்று பழகி வந்தேன். இந்த பயிற்சி எனது புதிய பாடலுக்கு உதவியது. பொதுவாக பாடகர்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு சென்று பாடும் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பொதுமுடக்க காலத்தால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, நான் இசைக்கருவிகளைக் கற்கத் தொடங்கியுள்ளேன். டிரம்ஸை இப்போது இசைக்க பழகிவருகிறேன். நான் இந்த காலத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். மீ டூ இயக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் நீங்களும் குற்றச்சாட்டப்பட்டீர்கள் அல்லவா? நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன். அது அவசியமானது. நீங்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டியவர்கள் நேரடியாக சந்திக்கிறேன் என்று கூறினீர்கள். அவர்கள் குற்றம் உண்மையாக இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கேட்கிறேன் என்று சொன்னீர்கள். உண்மையில் என்

உலகின் சிறந்த கூலிக்கொலைகாரனை கொல்ல முயலும் இளைஞர்கள் குழு! - கில்லிங் கன்தர்

படம்
கில்லிங் கன்தர் 2017 கில்லிங் கன்தர் இயக்கம் தரன் கில்லம் ஒளிப்பதிவு பிளாக் மெக்லர் இசை டினோ மெனகின் ராபர்ட் கன்தர் பெனடிக் என்பவர், புகழ்பெற்ற கூலிக்கொலைகாரர். ஆஸ்லே என்று முன்னாள் கொலைகாரரிடம் வேலைக்கு சேர்ந்து பின்னாளில் தனியாகவே தொழில்புரியத் தொடங்கி ஒட்டுமொத்த கிரைம் உலகில் தனது குற்றத்தடத்தை பதித்தவர். அவல நகைச்சுவை படத்தின் சிறப்பு இவரை கொலை செய்ய பிளாக் என்ற இளம் கூலிக்கொலைகாரனின் தலைமையில் ஒரு டீம் உருவாகிறது. இவர்களில் பலரும் கன்தரின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.  பிளாக், இதற்கான திட்டத்தை வகுத்தாலும், அவனுடைய குழுவினருக்கு இதன் பாதிப்பும், விளைவுகளும் முழுமையாக தெரிவதில்லை. இவர்களின் கோக்குமாக்கு மாக்கு காமெடிகளோடு கூடுதல் காமெடியாக இவர்களின் ஆபரேஷன் கன்தர் என்ற கொலைத்திட்டத்தை பிளாக் வீடியோ குழு மூலம் பதிவு செய்கிறான்.  பிளாக் குழுவின் முக்கியமான பலவீனம், கன்தார் யார், அவன் எப்படியிருப்பான் என்றே அவர்களுக்கு தெரியாது. அடுத்து, அவன் எங்கிருப்பான், எங்கு அவனது கார்ப்பரேட் ஆபீஸ் உள்ளது ஆகிய சமாச்சாரங்களும் அவனுக்கு தெரியாது. இந்த லட்சணத்தில் இந்தக் குழு எப்படி கன்தரை கண

சச்சின் பைலட் பேராசையோடு அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் இறங்கினார் - அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர்

படம்
அசோக் கெலாட் - தினமணி அசோல் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் உங்கள் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று நம்புகிறீர்களா? ஜனநாயக முறையில் எங்களின் பலத்தை நிரூபிக்க நாங்கள் தயங்க மாட்டோம். பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னால் நிச்சயமாக நாங்கள் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அரசு ஏன் திடீரென தடுமாறத்தொடங்கியுள்ளது. நிலையான அரசு போல தெரியவில்லையே? இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள், எங்களது அரசின் செயல்பாடு சார்ந்தவை அல்ல. சச்சின் பைலட்டின் அதீத பேராசை காரணமாகவும், அதை நம்பியுள்ள எம்எல்ஏக்களாலும் ஏற்பட்ட பிரச்னை. இதனை மக்களின் நம்பிக்கையுடன் நாங்கள் வெல்வோம். மக்களின் ஆதரவுடன் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வோம். நீங்கள் சச்சின் பைலட்டின் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது?   அரசு ஏஜென்சிகள் இதுதொடர்பான விசாரணையில் உள்ளன. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வலைத்தளங்களில் அனைவரும் எளிதாக அணுக முடியும். கடந்த ஆறுமாதங்களாக இதுபற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். இந்திய அரசியல் வரலாற்றில் எந்த மாநில அரசும் தனது ஆட்சியில் துணை முதல்வருக்கு எதிராக ஊழல் புகாரை பதிவு ச

கொரோனா காலத்தில் மனவலிமையோடு இருப்பதுதான் கடினம்! - மலைக்கா அரோரா , இந்தி திரைப்பட நடிகை

படம்
மலைக்கா அரோரா - விக்கிப்பீடியா மலைக்கா அரோரா இந்தி திரைப்பட நடிகை கோவிட் -19 பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு சென்றுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது? இந்த கடினமான சூழலில் அனைவரும் அதனை மறக்க வேலைக்கு சென்றுதானே ஆகவேண்டும்? நாங்கள் நடத்திய படப்பிடிப்பில் பார்வையாளர்கள் கிடையாது. முழுக்க பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து படப்பிடிப்பை நடத்தினோம். இப்போது எனது பையில் முக கவசங்கள், சானிடைசர்கள், மருந்துகள்தான் அதிகம் உள்ளன. உங்களை எப்போதும் துரத்தியபடி இருக்கும் பத்திரிகையாளர்கள் இல்லாமல் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள். அதனை சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன். சினிமா மட்டுமல்ல பத்திரிகை துறையும் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைகளும் கூட இனிமேல் முன்பு போல இருக்காது. இந்த உண்மை எனக்கு அவர்கள்மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் தோழிகளை இந்த நேரத்தில் சந்தித்தீர்களா? நான் கரீனா, கரிஷ்மா, அம்ரிதா ஆகியோரை வீடியோகால் மூலம் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் உணவு சமைப்பது பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சாதனை செய்த தலைவர்கள்- சாதனை தலைவர்கள்

படம்
சிதைந்து வரும் காங்கிரஸ் கட்சி - சதீஸ் ஆச்சார்யா காங்கிரசிலிருந்து குதிரைபேரம் மூலம் வெளியே செல்பவர்கள் தவிர்த்து சிலர் தானாகவே மனம் கசந்து, விரக்தியுற்று வெளியேறி தனிக்கட்சி தொடங்கியுள்ளனர். அதில் சிலர் மாநிலத்தின் ஆட்சியையே பிடிக்குமளவு முன்னேறியுள்ளனர். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இன்றுவரை வயதானவர்களுக்கே பதவி தரப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகின்றன. ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் இதில் அண்மைய வரவு. காங்கிரசில் கட்சியில் இருந்து விலகிய அரசியல்வாதிகளில் சிலரைப் பார்ப்போம். சரண்சிங் 1967 உ.பி 1959ஆம் ஆண்டு நேருவின் கொள்கைகளுக்கு எதிராக கொடி பிடித்தார். இதனால் கட்சியில் இருந்து ஒரம்கட்டப்பட்டு விலக்கப்பட்டார். பின்னர், அடுத்தவர்கள் கட்சி எதற்கு என்று யோசித்தார். பிறகு நல்ல ஒரு சுபதினத்தில் பாரதீய கிராந்தி தள் என்ற கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அரசில் துணை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1979ஆம் ஆண்டில் 23 நாட்கள் பிரதமர் பதவியில் நீடித்து சாதனை செய்தார். மொரார்ஜி தேசாய் 1969 மகாராஷ்டிரம் இந்திராகாந்தியின் அரசில் துணை பிரதமராக

மீண்டும் எழுச்சி பெற்று தாக்குதலைத் தொடங்கியுள்ள மாவோயிஸ்ட் அமைப்புகள்! - அதிரடி தாக்குதல்கள் தொடங்கின!

படம்
நக்சலைட்டுகள் - மாலைமலர் தாக்குதலைத் தொடங்கிய மாவோயிஸ்டுகள்   கடந்த ஜூலை 14, 15 தேதிகளில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தெலங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் துப்பாக்கிச்சூடுகளை நடத்தினர். இவர்கள் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்தது முதல் மாவோயிஸ்டுகள் அமைதி காத்து வந்தனர். மத்திய மாநில படைகள் இங்கு ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். தெலங்கானாவில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்பவர் மாவோயிஸ்ட் படையைத் தொடங்கினார். தற்போது புதிய மாவோயிஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 பேர் கொண்ட குழுவில் தெலங்கானாவிலிருந்து பத்து பேரும், ஆந்திரம், மகாராஷ்டிரம், கொல்கத்தாவிலிருந்து தலா இரண்டு பேரும், ஜார்க்கண்ட் நான்கு பேரும், பீகாரிலிருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்தி பலரும் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர் என்கிறது காவல்துறை. ”சத்தீஸ்கரிலுள்ள இந்த அமைப்பின் தலைவர

ராணுவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரபு ஆட்சியாளர்! - மொகமது பின் சையத்

படம்
மொகமது பின் சையத் வில்லியம் பார் the guadian வில்லியம் பார் அமெரிக்க அதிபர் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி. நீதியையும் அதைச்சுற்றிய அரசியலையும் கவனமாக கையாண்டுவருகிறார். விதிகளை கவனமாக கடைபிடிக்கும் புத்திசாலியான வழக்குரைஞர் இவர். 1991-93 ஆண்டுகளில் அட்டர்னி ஜெனராக வில்லியம் நியமிக்கப்பட்டார். அச்சமயங்களில் நாட்டின் பாதுகாப்பு, உணர்ச்சிகரமான பல்வேறு வழக்குகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை மிக சாதுர்யமாக கையாண்டு புகழ்பெற்றார். இதனால் தனியார் துறையில் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. இப்போது மீண்டும் பொதுத்துறைக்கு திரும்பியுள்ளார். அனைத்து ஊழியர்களையும் மதிப்பதோடு சரியான வழிமுறைகளை கடைபிடித்து நீதியை வழங்குவார் என்று அமெரிக்கா இவரை நம்புகிறது. நீதி அனைவருக்குமானதாக வழங்கப்படும், ஜனநாயகம் வில்லியமின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்றே மக்கள் நம்புகின்றனர். மொகமது பின் சையத் ஐக்கிய அரபு நாடுகளை காலித் பின் சையத் ஆளுகிறார். அவருடைய இளைய சகோதரர் மொகமது பின் சையத் அபுதாபியை ஆளுகிறார். இவர் இரானியர்களை வெறுப்பதோடு, கத்தார் மீதும் பகைமை கொண்டிருக்கிறார். இந்த பிரச்னைகளோடு