இடுகைகள்

தலித்துகள் கழுதையில் ஏறி வந்தால் உயர்சாதியினர் சந்தோஷப்படுகிறார்கள்! - சந்திரா பான் பிரசாத்

படம்
    சந்திரா பான் பிரசாத் சந்திரா பான் பிரசாத் சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர். ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்படுவதில்லை. அத

ராமர் பாஜக என்ற ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் கிடையாது! - பூபேஷ் பாதல், சத்தீஸ்கர் முதல்வர்

படம்
        பூபேஷ் பாதல் சத்தீஸ்கர் மாநில முதல்வர் கோவிட் -19 வழக்குகள் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்றுவிட்டது. இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் இந்த நிலைமை 21 நாட்களில் கொரானோவை சமாளித்து விடுவோம் என்று சவால் விட்டவர்களின் கன்னத்தில் விழுந்த அறை எனலாம். மகாபாரதம் 18 நாட்களில் எழுதப்பட்டதை இதற்கு உதாரணமாக சொன்னார்கள். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே சிக்கல் தொடங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கு மக்கள் சென்றுவருவதை முன்னமே நாம் தடுத்திருக்க வேண்டு்ம். இதனால்தான் நோய் அதிகமாக மக்களுக்கு பரவியது. சத்தீஸ்கரைப் பொறுத்தவரை குறைவான வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. பொதுமுடக்கம் முடிந்தபோது, மூன்று வழக்குகள்தான் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் இருந்தனர். ஆனால் எங்களைக் கேட்காமல் டஜனுக்கு மேலான ரயில்கள் ஓடத்தொடங்கின. நாங்கள் குஜராத்தில் இருந்து கேட்டது இரண்டு ரயில்களை மட்டும்தான். போக்குவரத்து தொடங்கியதும், அனைத்தும் எங்கள் கைகளைவிட்டு போய்விட்டது. வெளியிலிருந்து மாநிலத்திற்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வேலை செய்துகொண்டுதான் உள்ளனர். எங்களால் முடிந்த

சமூக வலைத்தளங்களின் சக்தியும், வருமானமும்! டேட்டா கார்னர்

படம்
                சமூக வலைத்தளம் டேட்டா கார்னர். இன்று சமூக வலைத்தளம்தான் புதிய புதுமையான செய்தி ஊடகமாக உள்ளது. இதில் வெறுப்பு அரசியல் முதற்கொண்டு  நடைமுறையிலான புதிய செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் மனநிலை பற்றி அறிய சமூக வலைத்தளங்களை பார்த்தாலே போதும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அதற்கேற்ப பல்வேறு நாடுகளில் நடைபெறும் முக்கியமாற பிரச்னைகளை சமூக வலைத்தளங்களில் அலசி பிழியப்படுகின்றன. இதைப்பற்றிய டேட்டாவை இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் செயலூக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்களின் எண்ணிக்கை 3.96 பில்லியன்.  உலக மக்கள்தொகையில் இது 46 சதவீதம். இந்தியாவில் 28 சதவீத மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 376. 1 மில்லியன். இந்தியர்கள் வாரத்திற்கு 17 மணிநேரங்களை சமூக வலைத்தளத்தில் செலவழிக்கிறார்கள். இது அமெரிக்கா, சீனா நாடுகளை விட அதிகம். 2019ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களின் எண்ணிக்கை 28%. இதன் மதிப்பு ரூ.13,683 கோடி. ஃபேஸ்புக்கின் 98 சதவீத வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் கிடைக்கிறது. டிவிட்டரின் வர

இந்திராகாந்தி போல துடிப்பாக செயல்படும் தலைவர் காங்கிரசுக்கு தேவை! - குலாம் நபி ஆசாத்

படம்
      குலாம் நபி ஆசாத்   குலாம் நபி ஆசாத் நீங்கள் நாற்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்துள்ளீர்கள். ஆனால் இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். இதற்கு நீங்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதுதான் காரணமா? நான் கட்சி தலைமையிடம் 2004லிருந்தே என்னை பதவியிலிருந்து விடுவிக்கச்சொல்லி கேட்டுவந்தேன். ராஜீவ்காந்தி தொடங்கி பல்வேறு தலைவர்களுடன் நான் பொது செயலாளராக பணியாற்றியுள்ளேன். இந்த பணியில் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் காங்கி ஸ் கட்சிக்காக பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று எனக்கு வயதாகிறது. குடும்பம் சார்ந்த சில பொறுப்புகளும் உள்ளன.முன்னர் தீவீரமாக உழைத்தது போல இன்று என்னால் உழைக்கமுடியவில்லை. 2016இல் உத்தரப்பிரதேசம், 2019இல் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கட்சி பொது செயலாளராக இருந்துள்ளேன். இதுபற்றித்தான் நான் கடிதம் எழுதி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் என்னை பொறுப்பிலிருந்து விடுவித்தது என் மீதான கருணையாகவே பார்க்கிறேன். பழிவாங்கும் உணர்ச்சியாக அல்ல. சோனியா காந்தியின் குடும்பம் என்மீது மரியாதையுடன்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள் .அந்நிலை இன்றுவரை

அன்புக்கு உரியவர்களிடம் பேசுவதுதான் மனநலன் காக்கும் வழி! - குப்ரா சைத்

படம்
      குப்ரா சைத் வக்காலத்ஃபிரம் ஹோம் படப்பிடிப்பு எப்படிபோகிறது? ஒரு நடிகையாளக இப்படி நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நாம் எப்போதும் வீடுகளை மறக்கமுடியாத மனிதர்களாகவே இருக்கிறோம். இப்படி நடிப்பது உண்மையில் வித்தியாசமாக இருக்கிறது. இந்த முயற்சி எனக்கு தினமும் பல்வேறு விஷயங்களைக் கற்க உதவுகிறது. நீங்கள் கொரானோ காலத்தில் மனநலம் பற்றியும் பேசியுள்ளீர்கள் நமது அன்புக்குரியவர்களை தொடர்புகொண்டு அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பேசுவது முக்கியம். இந்த நேரத்தில் சுசாந்த் சிங்கின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற விவாதம் அர்த்தமில்லாதது. இந்த நேரத்தை நாம் நமக்கும், அன்பிற்கும் உரியவர்களுக்கும் பயன்படுத்தலாம். ரியாவுக்கு ஊடகங்களில் நடந்த அனுபவம் பற்றி சொல்லியிருந்தீர்கள். எனது குடும்பம் நீ நடிகை, போராட்டக்காரி இல்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். ரியாவுக்கு ஊடகங்களில் நடந்த விஷயங்கள் பற்றி எனது அனுபவத்தை நான் பகிர்ந்திருந்தேன். அப்படி நடந்துகொண்டது நீதியல்ல. என் அனுபவத்தை சொல்வது தாண்டி வேறெதுவும் என்னால் கூற முடியாது என்பதே உண்மை. நீங்கள் கதைகளை சொல்லுபவராகவும் உள்ளீர்கள். ஒரு நடிகையாக

வாட்ஸ்அப்பில் ரகசியம் பறிபோகிறதா? - வாட்ஸ்அப் பயனர் ரகசியங்கள்

படம்
        வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? வாட்ஸ்அப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பும் செய்திகள் போன் மெமரியில் இடம்பெற்றிருக்கும். எனவே, செய்திகளை ஆப்பில் அழித்துவிட்டாலும், ஹேக்கர்கள் மூலம் போனிலுள்ள செய்திகளை மீட்டு எடுக்கலாம். தொலைதூரத்தில் கூட இருந்து கூட ஆப்பை இயங்க வைக்கமுடியும். செய்திகளை மீட்டெடுக்க முடியும். போன், நிரந்தரமாக அழிக்கப்பட்டால் தகவல்களைப் பெற முடியாது. வாட்ஸ்அப்பை க்ளவுட் முறையில் ஒருவர் இணைத்து வைத்திருந்தால், அதிலுள்ள தகவல்களை காவல்துறை பெறமுடியும். இம்முறையில் கூகுள் டிரைவ், ஐக்ளவுட் ஆகியவை செயல்படுகின்றன. இந்த வசதியை ஒருவர் பயன்படுத்தினால், சிம்மை புதிய போனில் செயல்படுத்தும்போது, அவர் பதிவு செய்த அனைத்து தொடர்புகளும் அப்படியே புதிய போனில், இன்ஸ்டால் செய்யப்படும் ஆப் மூலம் வந்துவிடும். வாட்ஸ்அப் வழியே அனுப்பப்படும் செய்திகள் ஒருவருக்கு சென்று சேர்ந்தவுடன் அவை வாட்ஸ்அப் நிறுவன சர்வர்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகிறது. செய்தி ஒருவருக்கு சென்று சேராத சூழலில் என்கிரிப்ட் செய்யப்பட்டு 30 நாட்கள் சர்வரில் இருக்கும். வாட்ஸ்அப் வழியாக ஒருவர் செய்யும் அழைப்பு, செய்தி, இணைய முகவரி,

கஞ்சாவை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகள்!

படம்
         பெல்ஜியம்  இங்கு 3 கிராம் அளவுக்கு குறைவாக பயன்படுத்துவது குற்றம் கிடையாது என 2003ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டுவிட்டது.  நெதர்லாந்து கஞ்சாவை காபி கடைகளில் பயன்படுத்துவதற்கான அனுமதி 1976ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டுவிட்டது. தனிநபர் பயன்பாடாக ஐந்து கிராம் அளவில் பயன்படுத்தலாம். வீட்டில் கூட ஐந்து செடிகளுக்கு மிகாமல் வளர்த்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்றலாம்.  போர்ச்சுக்கல்  இங்கு 25 கிராமுக்கு மிகாமல் கஞ்சாவைப் பயன்படுத்தலாம். இதற்கான தடையை அரசு 2001ஆம் ஆண்டு விலக்கிக்கொண்டு விட்டது.  ஸ்பெயின்  இங்கு பொதுஇடத்தில் கஞ்சாவைப் பயன்படுத்த தடை நீடிக்கிறது. மற்றபடி தனிநபராக கஞ்சாவை பயிரிடுவது குற்றமல்ல என 2017ஆம்ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.  இத்தாலி இங்கு மருத்துவம், தொழில்துறை சார்ந்து கஞ்சாவைப் பயன்படுத்த உரிமம் பெறவேண்டும். டிஹெச்சி என்ற அளவு குறைவாக உள்ள செடிகளை வளர்த்த அரசு அனுமதி தேவை இல்லை. நாட்டிலுள்ள மாகாணங்கள் கஞ்சா வளர்ப்பதற்கான விதிகளை தளர்த்த முயன்று வருகின்றன.  மேற்கிந்திய தீவுகள் இங்கு ஐந்து கிராமுக்கும் குறைவாக கஞ்சாவைப் பயன்படுத்தலாம். செடிகளையும் வளர்த்தலாம். ஜமை

காசு, பணம், புகழ், கஞ்சா! - போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்கலாமா?

படம்
    கஞ்சா     உலகில் பல்வேறு நாடுகள் கஞ்சாவை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இதுதொடர்பான குற்றங்கள் குறைவதோடு, அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்களைத்தான் இப்போது நீங்கள் படிக்கப்போகிறீர்கள்..    உலகம் முழுக்க 120 நகரங்களில் கஞ்சா சார்ந்த போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதில் இந்தியாவில் மும்பைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.  2018ஆம் ஆண்டு மட்டும் 3.1 கோடிப்பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். 1. 3 கோடிப்பேர் கஞ்சா மற்றும் ஹாஸ் என்ற பொருளை போதைக்காக பயன்படுத்தினர்.  டில்லியில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை சட்டரீதியாக அங்கீகரித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.725 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.  இந்தியாவில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டம் 1985படி கஞ்சாவை பயன்படுத்துவர்களுக்கும், அதைச் சார்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.  கஞ்சாவில் டெராஹைட்ரோகன்னாபினோல் என்ற பொருள் உள்ளது. இதுவே இதனை உட்கொள்பவர்களுக்கு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கஞ்சாவில் 400க்கும் மேற்பட்ட பகுதிப்பொருட்கள் உண்டு.இதிலுள

நேசிக்கும் அனைவரும் பிரிந்துபோக நாயகன் எடுக்கும் முடிவு! - அவுட் ஆஃப் ஃபர்னாஸ்

படம்
  Out of the Furnace அவுட் ஆஃப் ஃபர்னாஸ் Director: Scott Cooper Produced by: Jennifer Davisson Killoran, Leonardo DiCaprio, Ryan Kavanaugh, Ridley Scott, Michael Costigan Writer(s): Brad Ingelsby, Scott Cooper     எளிமையான கதை. தம்பியை பாசத்தோடு மில்லில் வேலை பார்த்து சூதாட்ட கடன்களைக் கூட அடைத்து காப்பாற்றி வருகிறார் அண்ணன். ஆனால் தம்பியை தெருச்சண்டை விவகாரத்தில் போதைப்பொருள் மாஃபியா தலைவன் ஒருவன் கொன்றுவிடுகிறான். இதனால் அவனை பழிவாங்க அண்ணன் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.    படத்தில் வேகமான சேசிங், பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள் என ஏதும் இல்லை.  அப்பா மில் வேலை பார்த்து நோய் வந்து படுக்கையில் கிடக்கிறார். அவரைப்போலவே மில் வேலைக்கு செல்கிறார் அண்ணன். தம்பி ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வந்து தனக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கிறான். குறுகிய நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான். அப்போதுதான் தெருச்சண்டை போட்டு தோற்றால் அதிக பணம் கிடைக்கும் என தெரிகிறது. அதை நடத்துபவர்கள் பற்றி தெரியாமல் அதில் மாட்டிக்கொள்கிறான்.  படம் பழிக்குப்பழி வாங்குவது பற்றி அ

சிறுமூளை கொண்டவர்கள்தான் வரலாற்றை திருத்தி எழுத முயல்கிறார்கள்! - உ.பி. மகாராஷ்ர பாடநூல்கள் மாற்றம்

படம்
                 பாடத்திட்டங்களை மாற்றினால் உலகம் மாறிவிடுமா? நவீன கால இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம்மை சர்வாதிகாரிகளாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். தாங்கள் மனதில் நினைப்பதை பிறருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் வரலாறாக்க நினைக்கிறார்கள். இதன் பொருட்டுதான் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி பாடங்கள் பாடநூல்களிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால மாணவர்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் தொன்மை இந்தியாவில் என்ன நடந்தது என்று கூட தெரியாமலே படித்து பட்டம் பெறும் ஆபத்து உள்ளது. அரசியல்வாதிகள் தங்களை பிரபலப்படுத்தி, பிரமாண்டப்படுத்திக் காட்டுவதற்காக இதுபோன்ற பாடங்களை நீக்கி, வரலாற்றைத் தூய்மைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள். கடந்த மாதம் மகாராஷ்டிரா அரசு கல்வித்துறை, வரலாற்று நூல்களிலிருந்து இஸ்லாமிய மன்னர்களைப் பற்றிய செய்தியை நீக்கிவிட்டது. உத்தரப்பிரதேச அரசு இதே விஷயத்தை இப்போது செய்துவருகிறது. இப்படி இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி நீக்குவதால், இஸ்லாமியர்களுக்க் எந்த இகழ்ச்சியும் கிடையாது. வரலாற்றைப் படிப்

இரண்டு முறை யோசித்துதான் கருத்தை சொல்லவேண்டியிருக்கிறது! - கொங்கனாசென் சர்மா

படம்
      கொங்கனாசென் சர்மா     கொங்கனாசென் சர்மா உங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் எழுதியிருந்தீர்கள். அது உண்மைதானா? நீங்களே சொல்லுங்கள். நான் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? டாலி என்ற பாத்திரம் எனக்கு அந்த குறையைப் போக்கிவிட்டது. டாலி கிட்டி அர்  வோ சமக்தே என்ற படத்தின் பாத்திரம் அது. ஆலங்கிரிதா ஶ்ரீவஸ்தவா, ஏக்தா கபூர் ஆகியோருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் நடப்பிலுள்ள சினிமாவைப் பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு சரியான சம்பளம் கிடைக்காது. நீங்கள் உங்களை ட்விட் செய்வதில் பாராட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் அரசியல் சார்பு மற்றும் எதைப்பற்றியும் பயப்படாத தன்மை தெரிகிறது? நான் இன்று ஒரு கருத்தைச் சொல்லும்போது இரண்டு முறை யோசித்துதான் சொல்கிறேன். நாட்டில் இன்று அந்தளவு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. ஒருவரின் கருத்தை பலர் ஏற்றுக்கொள்வது குறைந்துவிட்டது. பலரும் தங்கள் கருத்தை வெளியே சொல்லுவதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். எனவே எனக்கு பல்வேறு கருத்துகளை சொல்வதற்கு பதற்றமாக இருக்கிறது. ஆனால் சில கருத்துகளை உண்மையில்