இடுகைகள்

இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்! ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் பலர்..

படம்
    abhijeet banerjee raghuram rajan இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல் ஆர்.சி. பார்க்கவா 86 தலைவர், மாருதி சுசுகி அண்மையில் தனது வாழ்க்கை தொழில் அனுபவங்களை கெட்டிங் காம்பெட்டிட்டிவ் ஃபார் இந்தியா என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவை வலிமையாக்குவது பற்றியும் கூறியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பார்க்கவா முப்பதாண்டுகளா மாருதி சுசுகி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகவும், அதிகம் விற்பனையாகும் ஐந்து கார்களில்  நான்கு கார்கள் மாருதிக்கு சொந்தமாக இருக்கவும் பார்க்கவாவின் அயராத உழைப்பே முக்கியமான காரணம். மாருதி அண்மையில் குறிப்பிட்ட தொகைக்கு கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் சந்தா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதுபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, காலமாற்றத்தோடு இணைந்து பயணிக்கும் பார்க்கவாவின் முடிவுகள் மாருதியை எப்போது உயரத்தில் வைத்துள்ளன. வணிக வரலாறு தொடர்பான ஆழமான அறிவு கொண்டவர். மேலும் பொருளாதாரம் வணிகம் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். ஆனந்த் மகிந்திரா ஆனந்த் மகிந்திரா 65 தலைவர், மகிந்திரா குழும

பீகார் அரசியல், சாதியிலிருந்து விலகி மேம்படவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்! - முகேஷ் சாஹ்னி

படம்
          நேர்காணல் முகேஷ் சாஹ்னி விகாஷீல் இன்சான் கட்சி உங்கள் சாதி சார்ந்த சமூகம் பெரிதாக இல்லாத நிலையில் நீங்கள் அதிக சீட்டுகளை கேட்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொதுவான நம்பிக்கையாக குறிப்பிட்ட சாதி சார்ந்த ஆதரவு இருந்தால்தான் ஒருவர் பதவியில் இருக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1990களுக்குப் பிறகுதான் இந்த எண்ணம் அதிகரித்துள்ளது. லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர் இப்படி வென்று வந்தவர்கள்தான்.  என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது விபத்துதான். நிதிஷ்குமார் ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இன்னும் இந்த மாநிலத்திற்கு செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால் பீகார் இன்னும் கீழேதான் உள்ளது. தேஜஸ்வி யாதவை விட நிதிஷ்குமார் தெளிவான திட்டங்களை உடையவர். முதல்வர் பதவிக்கு சரியான தேர்வாகவும் இருப்பார். பீகாருக்கான உங்கள் பார்வை என்ன? 2015ஆம் ஆண்டு நான நிஷாத் என்ற எங்கள் இனம் சார்ந்து குரலை எழுப்பினேன். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், எங்கள் இனம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க முயல்வேன். நீண்டகால நோக்கில்

பெருந்தொற்று காலத்தில் தொழிலதிபர்கள் என்ன நிர்வாகத்திட்டங்களை பின்பற்றினார்கள்? - வணிக மந்திரம் - டாடா, டாபர், நெஸ்லே

படம்
                வணிக மந்திரம் சி.கே. வெங்கட்ராமன் தலைவர், தி டைட்டன் கம்பெனி எனக்கு இப்போதைக்கு இருக்கும் பிரச்னை, மக்கள் பெருந்தொற்று காலத்தில் எப்படி பண்டிகைகளை கொண்டாடுவார்கள். உடைகளை உடுத்துவார்கள் என்பதுதான். எங்களது விற்பனைக்குழு, புதிய வழியில் வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்று உணவகங்களுக்கு செல்வது, திருமண பார்ட்டிகள் ஆகியவை நடைபெறுவது அரிதாகிவிட்டது. இன்று வீட்டில் பணியாற்றும் மக்களுக்கு நாம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு யோசித்து வருகிறோம். அண்மையில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளுக்காக உணவகம் ஒன்றை உரு்வாக்கினர். இதில் மனைவி சர்வராகவும், கணவர் சமையற்கலைஞராகவும் இருந்தனர். ஹோட்டலுக்கு உண்டான அனைத்து விஷயங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. உண்மையில் இதுபோன்ற சூழலை நாம் வீட்டில் உருவாக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.  டிஜிட்டலுக்கு மாறுவோம்! suresh narayanan சுரேஷ் நாராயணன், தலைவர், நெஸ்லே இந்தியா பெருந்தொற்று காலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை பெருமளவு மாற்றியுள்ளது. இன்று மக்கள் நான்கு சு

குறுக்கெழுத்து புதிர்களும், சமூக பிரச்னைகளும் வேறுவிதமானவை! - வெய் ஹூவா ஹூவாங்

படம்
          வெய் ஹூவா ஹூவாங் முன்னாள் கூகுள் பொறியாளர், புகழ்பெற்ற குறுக்கெழுத்து திறனாளர், கணினி விளையாட்டு வடிவமைப்பாளர். புதிதாக கல்வி கற்க கல்லூரி செல்பவர்கள், தொழிலைத் தொடங்குபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நாம் எடுக்கும் சரியான முடிவு என்பது எப்போதும் சரியான விளைவை ஏற்படுத்தும் என்று கூறிவிட முடியாது. விளைவுகள் என்பது அதிர்ஷ்டம், சூழல், அப்போதைய வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. நமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் ஒரு முடிவை எடுப்போம். ஆனால் அதன் விளைவு என்பது நாம் யோசித்தாற்போல அமையாது. விளைவுகள் எப்படி இருந்தாலும் நாம் மனதில் நம்பிய விஷயங்களை பின்தொடர்ந்து செல்வதே சிறப்பானது. இன்று உலகம் நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. இதுபற்றி தங்களது கருத்து என்ன? புதிர்களையும், குறுக்கெழுத்துகளையும் உருவாக்குபவனான நான் இதைப்பற்றி என்ன சொல்லுவது?  புதிர்களை உருவாக்கி அதற்கான விடையை கண்டுபிடிப்பது வேறு. நிஜமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை தேடுவது வேறு. புதிர்கள், குறுக்கெழுத்துகள் என்பது மகிழ்ச்சிக்கானது. சமூக பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பது யாருக்குமே தெரியாது. க

இந்தியாவில் சூப்பர் ஆப்பிற்கான தேவை உள்ளதா? வரிசை கட்டும் டாடா, ஜியோ, பேடிஎம்

படம்
    சூப்பர் ஆப்பின் தேவை இருக்கிறதா? இன்று நம் அனைவரின் போன்களிலும் ஷாப்பிங் தளங்களுக்கான ஆப் குறைந்தபட்சம் ஒன்றேனும் உள்ளது. இதுபோக பிற ஓடிடி தளங்களுக்கான ஆப்கள் தனி. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே ஆப்பில் இணைந்திருந்தால் அதுதான் சூப்பர் ஆப். சூப்பர் ஆப்பில் ஒரு வணிக குழுமத்தின் அனைத்து சேவைகளும், அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். இதன்மூலம் தேவையில்லாமல் தனித்தனியாக பல்வேறு ஆப்களை ஒருவர் தரவிறக்கும் அவசியம் இல்லை. இந்த சூப்பர் ஆப் ஐடியாவை டாடா குழுமமே முன்னதாக யோசித்து அதே வேகத்தில் அறிவித்துவிட்டது. டாடா குழுமம் இந்த சூப்பர் ஆப்பை வால்மார்ட் குழுமத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதற்கான பட்ஜெட்டாக வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃபிளிப்கார்ட் 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உணவு, உடை, வாழ்க்கை முறை, கல்வி, நிதி, பொழுதுபோக்கு என அனைத்து பிரிவுகளும் ஒரே ஆப்பில் உள்ளடங்கிவிடும். இதற்கடுத்த சூப்பர் ஆப் வாய்ப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் உள்ளது. இதன் மை ஜியோ ஆப் சூப்பர் ஆப்பாக மாறினால், கல்வி, மருத்துவமனை, பொழுதுபோக்கு, சில்லற

எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்!

படம்
        எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்! இந்தியா பர்னிங் என்ற படம்தான் 2020ஆம் ஆண்டிற்கான செய்திப்பட தொகுப்பாக சிறப்பு பிரிவில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் இசோபெல் இயுங் என்பவர் இச்செய்திப்படத்திற்காக இந்தியாவில் காஷ்மீர், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று அதனை பதிவு செய்துள்ளார். முக்கியமாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியிடமும் நேர்காணல் பெற்றுள்ளார். இந்த படம் எம்மி விழாவில் விருது பெறவில்லைதான். ஆனால் இதில் இடம்பெற்றது என்பதே பெருமைக்குரியது என்கிறார் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான காஷ்மீரைச் சேர்ந்த அஹ்மத் கான். நாங்கள் விருது பெறவில்லையென்றாலும் இந்த படம் இதயப்பூர்வமாக எடுத்தபடம் என்பதில் சந்தேகமில்லை. இப்பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று கூறுகிறார்.   இப்படத்தில் இவர் அசாம் பகுதி போராட்டங்களை எடுக்க உதவியுள்ளார். அகதிகள் முகாம் அமைக்கும் பணி, அஹ்மத் கானின் அம்மா குடியுரிமை பட்டியலில் விடுபட்டுள்ள சிக்கலை பதினாறு நிமிட படம் பதிவு செய்துள்ளது. சட்டம் அங்கீகார

ஸ்பேம் கால் அழைப்பில் இந்தியாவிற்கு 5 வது இடம்! - இப்பிரச்னையை எப்படி தடுப்பது?

படம்
        ஸ்பேம் கால்ஸ் அண்மையில் ட்ரூகாலர் ஆப், 2019ஆம் ஆண்டிற்கான ஸ்பேம் அழைப்புகளுக்காக தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 30 பில்லியன் அளவுக்கு ஸ்பேம் அழைப்புகளை சந்தித்து உள்ளனர். ட்ரூகாலர் ஆப், 29.7 பில்லியன் அழைப்புகளை கண்டுபிடித்து தடை செய்துள்ளது. இதில் 8.5 பில்லியன் குறுஞ்செய்திகளும் அடக்கம். ட்ரூகாலர் ஆப்பை தற்போது வரை 85 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்பேம் அழைப்பு தொல்லைகளில் இந்தியா ஐந்தாவது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு முந்தைய இடங்களில் பிரேசில், பெரு, இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் உள்ளன. பெருந்தொற்று காலங்களில் குறைந்திருந்த ஸ்பேம் அழைப்புகள் மீண்டும் பேக் டூ பார்மாக களை கட்டத் தொடங்கியுள்ளன. இவற்றைச் சமாளிக்க புதிய வழிகளும் உருவாகியுள்ளன. அவற்றுள் கூகுளின் வெரிஃபைடு கால்ஸ் வசதியும் ஒன்று. பொதுவாக இன்று சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்றாலும் மொபைல் நம்பரை பில் போடும்போது கேட்பார்கள். அங்கு இரண்டு ஆப்சன்கள் மட்டுமே நமக்கு உண்டு. ஒன்று எண்ணைக் கொடுப்பது, அல்லது எண்ணைக் கொடுக்க மறுப்பது. எண்ணைக் கொ