இடுகைகள்

பெரிய கேள்விகளை விட சிறிய கேள்விகளுக்கு விடை தேடுங்கள்! - எல். மகாதேவன், ஹார்வர்ட் பேராசிரியர்

படம்
    கரையான் புற்றில் அறிவியல் உள்ளது ! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல் . மகாதேவன் , தினசரி வாழ்க்கையில் பார்க்கும் விஷயங்கள் மூலம் அறிவியலை விளக்கி வருகிறார் . தினசரி வாழ்க்கையில் பார்க்கும் பல்வேறு விஷயங்களுக்கு அறிவியல் காரணங்களை பலரும் கூறுவதில்லை . அப்படி கூறினாலும் அது மாணவர்களுக்கு கொட்டாவியை வரவழைக்கும் . இதிலிருந்து மாறுபட்டு அறிவியலை விளக்குகிறார் ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் எல் . மகாதேவன் . அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் படித்தவரின் மேசையில் உள்ள பல்வேறு கருவிகள் , பொருட்கள் அனைத்துமே தினசரி வாழ்க்கையில் உள்ளவைதான் . அவற்றின்மூலமே எளிதாக அறிவியலை விளக்குவது இவரின் பாணி . சிறிய கேள்விகளுக்கு விடை தேடி அவற்றின் மூலம் நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று சொல்லும் மகாதேவன் சீரியோஸ் விளைவு ( “Cheerios effect” ) என்பதை தினசரி பாலில் கலந்து உண்ணும் உணவு மூலம் விளக்குகிறார் . இயற்பியலையும் , கணிதத்தையும் தினசரி வாழ்க்கையில் கையாளும் பொருட்கள் மூலம் விளக்கும் , மகாதேவன் 300 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார் . 1

உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

படம்
              கொரோனா தொடங்கிய ஏ . ஐ புரட்சி ! தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும் , அதன் பரவலை கோவிட் -19 காலம் வேகப்படுத்தியுள்ளது . பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன . சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து , முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன . உணவு , மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன . ’’ பெருந்தொற்று காலம் , சுகாதாரமாக வாழவும் , மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது . செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக் . நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர் . இதன் வருகையால் , வேலையிழப்பு பாதிப்பும் இப்போது

உடலின் வெப்பநிலை அளவுகள் மாறிவருகின்றன!- பழங்குடிகளிடம் செய்த ஆய்வில் தெரிய வரும் உண்மைகள்!

படம்
      சட்டென மாறுது உடலின் வெப்பநிலை ! சராசரியாக கருதப்பட்ட 37 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலை , தற்போது உலக நாடுகளில் வாழும் மக்களிடையே மாற்றம் காணத் தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் . அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உடல் வெப்பநிலை , மெல்ல 37 டிகிரி செல்சியலிருந்து மாற்றம் கண்டு வருகிறது . பொலிவியா நாட்டில் பழங்குடி மக்களின் உடல்நிலை பற்றிய ஆராய்ச்சி 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . இதுதொடர்பான ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது . இதிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பொருத்திப்பார்த்தால் பொதுமக்களின் உடல்வெப்பநிலை மாறுபடுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியும் . 1851 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் ரெய்ன்கோல்டு ஆகஸ்ட் வொண்டர்லிச் , 25 ஆயிரம் நோயாளிகளை ஆராய்ச்சி செய்து தெர்மாமீட்டருக்கான அளவீட்டை உருவாக்க முயன்றார் . 1868 ஆம் ஆண்டு கார்ல் எழுதி வெளியிட்ட நூலில் , மனிதரின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று உறுதி செய்து கூறினார் . அண்மையில் வெளியான பல்வேறு

ஏழை நாடுகளில் மேற்கு நாடுகள் செய்யும் மாசுபாட்டு யுத்தம்! - பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் அபாயம்

படம்
      பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ! அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன . வல்லரசு நாடுகளான அமெரிக்கா , ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தப்பட்ட அதிக மாசுபடுதல் கொண்ட கார்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்பது அதிகரித்து வருகிறது . இதுதொடர்பான ஐ . நா அமைப்பின் சூழல் திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது . இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக மாசுபாட்டையும் , பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும் . ஐ . நா அறிக்கைப்படி , 2015-2018 காலகட்டத்தில் 1.4 கோடி பயன்படுத்தப்பட்ட கார்கள் வல்லரசு நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . வளர்ந்து வரும் நாடுகளுக்கும் , ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதியாகியுள்ளன . இந்த நாடுகளில் பாதுகாப்பு , மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வலிமையாக இல்லாததால் , பழைய கார்களை எளிதாக விற்க முடிகிறது . அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , ஏழை , மத்த

விவசாய கழிவுகளை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்? பஞ்சாப் அரசு முன்னெடுக்கும் புதிய செயல்முறை

படம்
            வி்வசாயக்கழிவுகள் மூலம் மின் உற்பத்தி ! உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மெல்ல மூடப்பட்டு வருகின்றன . நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகளவு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது . எனவே , உலக நாடுகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை மெல்ல மூடி புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்து வருகின்றன . இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா நகரில் செயல்பட்டு வந்த குருநானக் தேவ் மின்னாலை மூடப்பட்டது . அந்த இடமும் கூட விற்கப்பட்டுவிட்ட செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . இந்திய மின்சார ஆணையம் , ஜப்பானிய நிலக்கரி ஆற்றல் மையம் ஆகிய இரு நிறுவனங்களு்ம் இணைந்து இனி விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன . இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு , கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படும் . 2018 ஆம் ஆண்டு மேற்சொன்ன இரு நிறுவனங்களும் செய்த ஆய்வு அடிப்படையில் , 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக

நாங்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்! - நரேந்திரசிங் தோமர்

படம்
            நரேந்திரசிங் தோமர் விவசாயத்துறை அமைச்சர் பஞ்சாப் விவசாயிகள் குறைந்தபட்ச விலை கொள்முதல் வாக்குறுதியை வலியுறுத்தி வருகிறார்களே ? விவசாயிகள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை . குறைந்தபட்ச கொள்முதல் விலை திட்டம் அப்படியே தொடரும் . இதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி தர தயாராக உள்ளோம் . இதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை . அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை எப்படி அறிவிக்கப்போகிறது ? இன்றுவரை எங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை . அரசு அதனை நிர்வாகரீதியான முடிவாக அறிவிக்கும் . நீங்கள் இப்படி சொன்னாலும் கூட விவசாய சங்கங்களுக்கு உங்கள் அமைச்சரவை ஒரு கடிதத்தைக் கூட அனுப்பவில்லையே ? அப்புறம் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்பீர்கள் ? நாங்கள் இப்போதே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடிதான் இருக்கிறோம் . அவர்களின் பல்வேறு கோரிக்கை அம்சங்களை பரிசீலித்து வருகிறோம் . இதில் எங்களுக்கு தெளிவு கிடைத்தால் அவர்களின் மாற்றங்களை சட்டத்தில் புகுத்தி மாற்றி அவர்களைப் பார்க்க அழைப்பு விடுப்போம் . அரசு

செஸ்ஸை வேகமாக விளையாடினால் சந்தோஷம் கிடைக்காது! - விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டு சாதனையாளர்

படம்
                விஸ்வநாதன் ஆனந்த் செஸ் வீரர் பெருந்தொற்று காலத்தில் நிறைய மக்கள் செஸ் விளையாடி வருகின்றனர் . இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? செஸ் விளையாட நினைத்தவர்கள் கூட முன்னர் நேரமில்லாமல் தவித்தனர் . ஆனால் இந்த ஆண்டில் நிறைய மக்கள் செஸ் விளையாடத் தொடங்கியுள்ளனர் . நிறைய கடைகளில் செஸ் போர்டுகளோடு , அதற்கான கடிகாரங்களும் சிறப்பாக விற்பனையாகிவருகி்ன்றன . எனக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையில் ஆச்சரியம் தருகிறது . முன்னாள் சாம்பியனானா கார்ல்சன் வேகமாக செஸ் ஆடுவது பற்றி பயிற்சி அளிக்கிறார் . அப்படியென்றால் கிளாசிக் செஸ் என்பது எப்படியிருக்கும் ? என்னுடைய தலைமுறையினர் கிளாசிக்கலான செஸ்ஸை விளையாடினர் . ஆனால் அடுத்த தலைமுறை அதில் மாற்றம் ஏற்படுத்த விரும்புகிறது . உண்மையில் இந்த விளையாட்டு வேகமாக மாறினால் அதில் விளையாடும் சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை . கிளாசிக் செஸ்ஸில் மாற்றங்களை ஏற்படுத்தி விளையாடவேண்டும் என்று் கார்ல்சன் கூறியுள்ளார் . அது உண்மையும் கூடத்தான் . ஆனால் வேகமாக செஸ் ஆடத்தொடங்கினால் பின்னாளில் பழைய