இடுகைகள்

வயதாகும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
Illustration -tanga balamurugan   வயதாகும்போது என்ன ஆகிறது? பொதுவாக சிறுமிகள், ஆன்டி, அங்கிள் எனும்போதுதான் பேசிக்ஸ் ஷர்ட்டை ஆபரில் வாங்கி போட்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் சுர்ரென வலிக்கும். ஆகா, வயசாச்சே என கண்ணாடியைப் பார்த்தால், வடிவேலு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து குரங்கு பொம்மை என சொல்லுவது போல இருக்கும்.  அந்தளவு குடும்ப சுமை, அலுவலகம் என அனைத்தையும் செய்துவிட்டு வந்தால் வயசாச்சு ப்ரோ, பூமர் அங்கிள் என உலகமே சொல்லிவிட்டு எளிதாக கடந்துபோய்க்கொண்டிருக்கும். டிப்பம் டிப்பம் டிப்பர டிப்பர என ஃபோக் மார்லியின் பாடலைக் கேட்டாலும் கூட உடலுக்குள் வயதாவதால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.  பொதுவாக ஒருவருக்கு வயதாகிறது என்றால் கண்ணில் தெரிவது தோல் சுருக்கமும், நரைமுடியும், உடலில் தளர்ச்சியும் வெளிப்படையாக தெரிவதுதான். இதெல்லாம் தாண்டி உள்ளுக்குள் என்ன நடக்கிறது? உறுப்புகளின் செயல்திறன் குறைந்துகொண்டே வரும். ஆத்தோ, சவர்மா சாப்பிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் ஐபிஎஸ் அல்லது ஃபேட்டி லிவர் என மருத்துவர பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து மருந்து வாங்கிச் சாப்பி

ஆன்மிக உள்ளொளி கொண்ட இந்தியா - நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ

படம்
  நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ படம் - பனுவல் நான் நேசிக்கும் இந்தியா ஓஷோ கண்ணதாசன் பதிப்பகம் ரூ.75 பொதுவாக இந்தியா பற்றி மேற்குல ஆராய்ச்சியாளர்கள் சுற்றுலா பயணிகள் மனதில் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய கருத்துகள் தவறு என்று கூறி அதற்கான பல்வேறு தகவல்களை ஓஷோ முன்வைத்து பேசியுள்ள நூல்தான் நான் நேசிக்கும் இந்தியா.  இந்தியாவை ஒருவர் எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது என பல்வேறு விஷயங்களை  நூலில் எளிமையாக சொல்லிச் செல்கிறார். இதன் தன்மை நாம் ஊழல், ஒழுங்கின்மை, அழுக்கு என்று சொல்லும் தேசத்தின் அடிப்படை என்னவென்று புரிந்துகொள்ள உதவுகிறது.  இதில் நிறைய சிறு குறு கதைகள் உள்ளன. அவற்றில் சுவேதகேது பற்றிய கதை முக்கியமானது. கல்வி என்பது என்ன என்பதை இந்தியாவிலும் மேற்குலகிலும் வேறுமாதிரி பார்க்கின்றனர். எது கல்வி என்பதை அவர் குரு மூலம் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியை அறியும் இடம் அற்புதமானது.  இன்னொரு கதை பலரும் அறிந்ததுதான். அக்பரின் அவையில் இருந்த தான்சேன் என்ற இசைக்கலைஞரைப் பற்றியது. யாருடைய இசை உயர்ந்தது என்று பேசும்போது தான்சேன் எந்த ஆணவமுமில்லாமல், தனது குரு ஹரிதாசரின் இசைதான் உ

மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

படம்
  சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு 1 கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர்.  ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர்.  தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்தது.  1920ஆம் ஆண்டு மெட்ர

இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்

படம்
1 இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.  தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி.  தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர் பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக பிறருடன் தொடர்புகொள்

பேட்ஸ்மேன்களை பயப்படுத்துவேன்! - உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர்

படம்
  உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பந்துவீச்சாளர், சன்ரைஸர்ஸ் அணி உங்களால் வேகமாக பந்துவீச முடியும் என எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்? 2018ஆம் ஆண்டு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும்போதுதான் எனக்கு பந்துவீச்சு வேகமாக வருவது தெரிந்தது. எப்போது பஞ்சாப் அணி, காஷ்மீருக்கு வந்தாலும் என்னை பந்துவீச அழைப்பார்கள். நான் உள்ளூர் அணியில் விளையாடுவேன். இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சோதனை முறையில் இடம் கிடைத்தது.  நான் அப்துல் சமாத் என்ற அண்ணாவுடன் பந்துவீசி வந்தேன். அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். அவர்தான் எனது பந்துவீச்சு வீடியோக்களை சன்ரைஸர் அணி நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தார். இதனால் நெட் பௌலராக வேலை கிடைத்தது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இடம் கிடைத்தது.  வேகமாக பந்து வீசுவது உங்களை ஊக்கப்படுத்துகிறதா? நான் பந்துவீசும்போது ஒருவர் மெதுவாக பந்து வீசுகிறார் என்று  விமர்சனம் எழுந்தது. அதற்குப் பிறகுதான் நான் வேகமாக பந்துவீச முயன்றேன். இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களை ஸ்டம்புகளை சிதறடித்து ஆட்டமிழக்கச்செய்திருக்கிறீர்கள். அந்த

சிறந்த வடிவமைப்பாளர் 2022 - அல்ஃபோன்சோ அல்பைசா - நிஸான்

படம்
  அல்ஃபோன்சோ அல்பைசா, வடிவமைப்பாளர், நிஸான் கார்களின் வடிவமைப்பு துறை என்பது முக்கியமானது. அதில் வடிவமைப்பாளராக சாதனை படைத்து வருபவர், அல்ஃபோன்சோ அல்பைசா. இவர், நிஸான் நிறுவனத்தின் குளோபல் டிசைன் குழுவின் துணை தலைவராக பதவி வகிக்கிறார்.  ஜப்பானின் மா எனும் மினிமலிச வடிவத்தை பின்பற்றி கார்களை வடிவமைத்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடந்த இருபது மாதங்களில் மின்வாகனங்கள் முதல் பிற வாகன மாடல்கள் வரை அனைத்து வாகனங்களின் வடிவமைப்பும் அல்ஃபோன்சாவின் கைவண்ணத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆரியா முதல்  இசட் எனும் கார் வரை இப்படி கூறலாம். தி ரோக், பாத் ஃபைண்டர், ஃபிரண்டியர் ஆகிய கார்களின் வடிவமைப்பும் மேம்பட்டு வருகிறது. இதற்காகத்தான் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்பாளர் அங்கீகாரம் பெற்றுள்ளார்.  இசையில் கைத்தட்டுகளுக்கு இடையில் வரும் மௌனத்தைத்தான் மா என்று குறிப்பிடுவார்கள். இது வெறுமை அல்ல, ஒருவகையான அழுத்தம் எனலாம். இதனை குறிப்பிட்ட இசை அலைகள் என்றும் கூறலாம். நாங்கள் நிசான் கார்களின் வடிவமைப்பை இந்த தன்மையுடன் தான் வடிவமைக்கிறோம். சில குறிப்பிட்ட விஷயங்களை வைத்தே வடிவமைப்பை முழுமையாக

பதப்படுத்தப்பட உணவுகளுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்!

படம்
  இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர், பிரிட்டானியா, அமுல், ஐடிசி, பார்லே ஆகிய நிறுவனங்கள், அவர்களின் உணவுப்பொருட்கள் நன்மையா தீமையான என எளிதாக தெரிந்துகொள்ளமுடியும். இதற்காக இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு எஃப் எஸ்எஸ்ஏஐ, புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.  இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பாக்கெட்டின் மீது ஸ்டார் ரேட்டிங் இருக்கும். இது உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.  அகமதாபாத் ஐஐடி, இதற்கான சோதனை முறையை மக்கள் 20 ஆயிரம் பேரிடம் சோதித்தது. ஸ்டார் ரேட்டிங் முறையை ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் - ஹெச்எஸ்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 5 முறைகளை உருவாக்கி அதில் ஒன்றை உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தேர்ந்தெடுத்தது. அதுதான் ஸ்டார் ரேட்டிங் முறை.  தற்போது, உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணை இடம்பெற்றுள்ளது. இதில், நூறு கிராம் அளவுக்கான சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதோடு ஸ்டார் ரேட்டிங் முறையும் அமலாகும். இப்போதைக்கு இந்த முறையை தானாக முன்வந்து நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இது எந்தளவு