இடுகைகள்

புத்தகம் புதுசு - சாபம் கொண்ட வைரத்தின் கதை

படம்
  தி கிங் ஹூ டர்ன்டு இன்டு எ செர்பன்ட் அண்ட் அதர் திரில்லிங் டேல்ஸ்  ஆஃப் ராயல்டி ஃபிரம் இண்டியன் மித்தாலஜி சுதா மாதவன் ஹாசெட் 399 நூலில் மொத்தம் 15 ஆர்வமூட்டும் கதைகள் உள்ளன. நூலில் உள்ள ஓவியங்கள் அழகாக உள்ளன. இதில் வரலாற்றில் உள்ள மன்னர்கள் இடம்பெற்றுள்ளனர்.  லேடிஸ் டெய்லர் பிரியா ஹஜேலா ஹார்ப்பர் கோலின்ஸ்  399 பெண்களுக்கான உடைகளை உருவாக்கி தைப்பவர் குருதேவ். பிரிவினைக்கு பிறகான காலத்தில் நடைபெறும் கதை. அப்போது, குருதேவ் பாகிஸ்தானின் கிழக்குப்புறம் பிழைக்க செல்கிறார். அங்கு சென்று தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதே இந்த நாவலின் கதை.  தி டெத் ஆஃப் கீர்த்தி கடக்கியா மீட்டி ஷெராப் ஷா ப்ளூம்ஸ்பரி இந்தியா 499 இது ஒரு மர்ம நாவல். ரதி ஜாவேரியின் தோழி சஞ்சனா. இவள் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறாள். சஞ்சனா அப்போதுதான் தனது தந்தையை இழந்திருக்கிற நேரமும் அதுதான். சஞ்சனாவை பயமுறுத்தும் விஷயங்களை நடைபெற, அவளுக்கு உதவியாக ரதி வந்து மர்மங்களை கண்டறிகிறாள். இதுதான் கதை.  ஆஸ்மா ஐ நூர் - தி கர்ஸ்டு ஜூவல் சுதிப்தா சென் குப்தா ரூபா 395 ஆஸ்மா ஐ நூர் என்பது பிரிட்டிஷ் கால இந்தியாவி

புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

படம்
  பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது.  ஜஹாங்கீர்புரி இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார். இதற்கு ம

இந்தியாவின் காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்கள் ஆச்சரியம் தருகின்றன! - அலைன் டுகாசி, சமையல் கலைஞர்

படம்
  அலைன் டுகாசி சமையல் கலைஞர் உலகளவில் மிச்செலின் ஸ்டார் பெறுவது கடினம். அலைன் இந்த வகையில் 17 ஸ்டார்களைப் பெற்றுள்ள சமையல் கலைஞர். தனது தொழில்முறை வாழ்க்கையில் 21 ஸ்டார்களைப் பெற்றுள்ளார். இப்போது சூழல் நிலைத்தன்மை கொண்ட  தாவர உணவுகளை சமைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். குர்கானில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் இகோல் டுகாசி எனும் தனது வளாகத்தை உருவாக்குவதாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம்.  இந்தியா சார்ந்து உங்களுக்கு பிடித்த உணவு வகை என்ன? இப்படி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரெஞ்சு உணவு வகைகளில் பிடித்த உணவு என்றாலும் கூட கூறமுடியாது. பிரெஞ்சு நாட்டில் நான் நீண்டகாலமாக வசித்தாலும இப்படித்தான் இதற்கு பதில் கூற முடியும். இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயம், மக்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள். அப்புறமாக பருப்புகள். இவற்றை எப்படி பயன்படுத்துவது சமைப்பது என ஓராண்டாக கற்று வருகிறேன்.  மிச்செலின் ஸ்டார்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் போராடி வருகிறீர்களா? எங்களது உணவகம் மூன்று மிச்செலின் ஸ்டார்களைப் பெற்றுள்ளது. நாங்கள் நடத்தும் உணவகம் பல்வேறு வகைப்பட்டத

ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இனவெறி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்! - லிண்டா வில்லாரோஸா

படம்
  லிண்டா வில்லாரோசா எழுத்தாளர் பல ஆண்டுகளா கருப்பின மக்களின் உடல், மன ஆரோக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பெண்மணி. அண்மையில் அண்டர் தி ஸ்கின் - தி ஹைடன் டோல் ஆஃப் ரேசிசம் ஆன் அமெரிக்கன் லைவ்ஸ் அண்ட் ஆன் தி ஹெல்த் ஆஃப் அவர் நேஷன் என்ற நூலை எழுதியுள்ளார்.  இனவெறி என்பது கருப்பின மக்கள் கடந்த எப்படி நாட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உருவாகியுள்ளது என நினைக்கிறீர்கள்? அமெரிக்காவின் நிலையை நீங்கள் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதோடு, மக்களின் ஆயுளும் குறைந்து வருகிறது. கர்ப்பிணிகளின் இறப்பும் கூடி வருகிறது. இதனை பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுத்தான் கூறுகிறேன். இப்படி நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கருப்பின மக்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. நாடு முழுக்க இந்த பிரச்னை உள்ளது.  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு உடல் மனரீதியான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் குழந்தை பெறுவதே சிக்கலானது என கூறுவது ஏன்? பெருந்தொற்று காலத்தில் பிறரை விட அதாவது வெள்ளையரை விட பத்து வயது இளமையானவர்கள் கூட இறந்துபோனார்கள். கோவிட் காலத்தில் ஏராளமான கருப்ப

ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

படம்
  இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.  படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான்.  அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோசிக்கும் வகையில் நி

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

செம குறட்டை சாரே!

படம்
  எஸ்ஏபி தனது நூலில், உதவி ஆசிரியர் புனிதன் ஹோட்டல் அறையில் குறட்டை விட்டு தூங்கியதை தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி கிண்டல் செய்திருப்பதை எழுதியிருக்கிறார். பார்க்க குறட்டைதானே ப்ரோ என தோன்றினாலும், இரவில் எழும் குறட்டை பீதி எழுப்பும். எனது அலுவலகத்தில் கூட பேசிப் பேசியே களைப்பான அலுவலக சகாக்கள் சட்டென குட்டித்தூக்கம் போடும்போது எழும் குறட்டை ஜெனரல் ஏசியை விட அதிக சத்தம் எழுப்புகிறது. நமக்கும் கூட ஆவ்வ....வ்வ.. பாருங்க சொல்லும்போதே கொட்டாவி வந்துவிட்டது. அடுத்து தூக்கம், அதன் பின்னே குறட்டைதான்.  இப்போது குறட்டை தொடர்பான சமாச்சாரங்களைப் பார்ப்போம்.  உலகில் வாழும்  45 சதவீதம் பேருக்கு குறட்டை விடும் பிரச்னை உள்ளது. அதாவது வயது வந்தவர்களுக்குத்தான் சொல்கிறேன். நான்கு நபர்களில் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம். என்பது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.  க்யூப் தொழில்நுட்பத்தில் உருவாகும் குர் முதல் ப்ர்... வரையிலான ஒலி கொண்ட குறட்டைகள் நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள், மதுபானம் அருந்துவது, உடல் பருமன் ஆகியவை காரணமாக உருவாகிறது. ஒலியின் தொனி, லயம், ஸ்ருதிக்கு மூக்கிலுள்ள தசைகளே காரணம்.