இடுகைகள்

கோவிட்-19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் செய்த விஷயம் காலத்திற்கும் நிலைத்து நிற்கவே நூல் எழுதினேன்! - சோனு சூட் , இந்தி நடிகர்

படம்
                சோனு சூட் திரைப்படங்களில் நடித்து வில்லனாக பெற்ற புகழை விட மனிதநேய உதவிகளால் உலக நாடுகள் வரை பாராட்டப்படும் ஆளுமை . மும்பையில் இவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரிடமே உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமைச்சர்களே சொல்லத்தொடங்கினர் , ஆனால் மாநில அரசு அவரை பாஜகவின் ஆளாக பார்த்து விமர்சித்தது . பின்னர் சோனுசூட் முதல்வரை சந்தித்த பிறகு நிலைமை மாறியது . அதெல்லாம் விடுங்கள் . ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோனு சூட்டிற்கு மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது . அதேநேரம் ஐயம் நோ மேசியா என தன்னுடைய சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் . இப்படி புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது ?   பேராசிரியராக பணியாற்றி என் அம்மாதான் இதனைச் சொன்னார் . உன்னுடைய வாழ்க்கையை நீ காகித்ததில் எழுதி வைக்கவேண்டும் . அதுதான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றார் . இந்த நூலின் மூலம் கர் பேஜோ திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டவது என பலரும் அறிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன் . இதன்மூலம் பலரது வாழ்க

இந்தியாவில் பாதிக்கும் மேலான பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னை உள்ளது! - யுனிசெப் ஊட்டச்சத்துத்துறை தலைவர் அர்ஜன் டி வக்த்

படம்
      அர்ஜன் டி வக்த்   அர்ஜன் டி வக்த யுனிசெப் ஊட்டச்சத்து துறை தலைவர் ஆந்திரம் , தெலுங்கானாவில் யுனிசெப் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க என்ன வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ? நாங்கள் இந்திய அரசின் போஷான் அபியான் என்ற திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறோம் . தெலங்கானா , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாங்கள் பல்வேறு செவிலியர்கள் நர்ஸ்கள் ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வருகிறோம் . இவர்களோடு இணைந்து குழந்தைகளுக்கு உணவு , தாய்ப்பால் அளிப்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம் . யுனிசெப் அமைப்பு , உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஐசிடிஎஸ் அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது . கர்நாடகம் , ஆந்திரம் , தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பொது விநியோக முறையை மேம்படுத்தி வருகிறோம் . குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைப்பது எப்படி ? குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆப்டிமல் நியூட்ரிஷன் என்று கூறும் வகையில் உணவுகளை வழங்கவேண்டும் . அதுதான் அவர்கள் பிழைத்திருக்கச் செய்யும் . இதோடு தாய்ப்பாலை ஊட்டுவது . இது குழந்தைக்கு பிழைத்திர

இந்தியா கோவிட் -19க்கான மருந்துகளை எப்படி விநியோகம் செய்யவிருக்கிறது?

படம்
      இந்தியாவில் இன்று தடுப்பூசி வழங்குவது முக்கியமான பணியாக மாறியுள்ளது . இந்த வகையில் நாட்டில் 1. 4 பில்லியன் அளவில் தடுப்பூசிகளை நாடு முழுக்க கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ளது . இந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் என்று நிறுவனமே நாட்டில் பெரிய சிரிஞ்ச் தயாரிப்பாளர் . 570 மில்லியன் என்ற தனது தயாரிப்பை அடுத ஆண்டில் ஒரு பில்லியனாக மாற்ற முடிவெடுத்துள்ளது . கண்ணாடி பாட்டில்களை தயாரிப்பது நிறுவனத்திற்கான சவாலாக இருக்கும் . கோவிட் -19 மருந்துகளுக்கு அதிக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இரண்டு . சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , ஸைடஸ் கடிலா . சீரம் நிறுவனம் 2,100 கோடி முதலீட்டில் ஐந்து மருந்துகளை சோதித்து வருகிறது . 500 கோடி முதலீட்டில் கடிலா இரண்டு மருந்துகளை சோதித்து வருகிறது . பணக்கார நாடுகளில் 51 சத்வீத கோவிட் -19 மருந்துகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன . உலக மக்கள்தொகையில் இதன் பங்கு 13 சதவீதம்தான் . உலகில் 3.6 பில்லியன் அளவுக்கு கோவிட் -19 மருந்துகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது . இந்தியாவில் தற்போது சீரம் மூலம் 400 மில்ல

நம்பிக்கை மனிதர்கள் 2020! - நிம்மதியாக மூச்சு விட குறைந்தவிலையில் வெண்டிலேட்டர்கள்!

படம்
              நிம்மதியாக மூச்சு விடுங்கள் ! பெங்களூரூவைச் சேர்ந்த கௌதம் பசுபுலேட்டி , தனது பயோடிசைன் இன்னோவேஷன் லேப் மூலம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை தயாரித்து வருகிறார் . இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் -19 பாதிப்பு அதிகரித்து வருகிறது . குறைவான அறிகுறிகள் கொண்டவர்கள் முதல் தீவிரமான அறிகுறிகள் கொண்டவர்கள் வரை வெண்டிலேட்டர் என்பது அவசியமான வசதியாக இருக்கிறது . ஆனால் இன்று இந்திய மாநிலங்களில் ஏழில் மட்டுமே படுக்கை , வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன . அவை , தமிழ்நாடு , கேரளம் , மகாராஷ்டிரம் , உத்திரப்பிரதேசம் , மேற்கு வங்காளம் , தெலங்கானா , கர்நாடகம் . நோய்தொடர்பான ஆராய்ச்சிப்படி 19 லட்சம் படுக்கைகள் , 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் , 95 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள்தான் இந்தியாவில் உள்ளன . கௌதம் , அரசு மருத்துவமனைகளோடு இணைந்து வெண்டிலேட்டர்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் முயற்சியை செய்துவருகிறார் . ‘’’’ எங்களது நோக்கம் , அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் உயிரை பாதுகாப்பதுதான் . இதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக்கோடு இணைந்

மத்திய அரசு மாநில அரசுகளுக்கான நிதியை உடனே அளிக்க வேண்டும்! - பிரனாப் சென், பொருளாதார நிலைக்குழு புள்ளியலாளர்

படம்
      நேர்காணல் பிரனாப் சென் பொருளாதார புள்ளிவிவர நிலைக்குழு தலைவர் . அரசு மூன்றாவது முறையாக நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது ? இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் உள்ளது . கடந்தாண்டு மட்டும் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது . வரி வருவாயில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது என தோராயமாக மதிப்பிடலாம் . பிற இழப்பு தொழில்துறை , நிறுவனங்கள் சார்ந்த இழப்பாக கூறலாம் . இயல்பு நிலைக்கு திரும்ப இழந்த இழப்புகளை சரி செய்யவேண்டியது அவசியம் . தற்போது மெல்ல நிலை மீண்டு வருகிறது கடந்த மூன்று மாதங்களாக சில்லறை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது . காரணம் , மக்கள் கடந்த சில மாதங்களாக எதையும் செலவு செய்ய அனுமதிக்கப்படவில்லை . திருவிழாக்கள் நடைபெறும் காலம் வேறு . எனவே மெல்ல நிலை மாறி வருகிறது . ஆனால் இதன் பொருள் நாம் முன்னர் இழந்த அத்ததனையும் திரும்ப பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக கூறமுடியாது என்பதுதான் . இரண்டாவது மூன்றாவது காலாண்டில் விற்பனை சரிந்தாலும் கூட அடுத்த காலாண்டில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது .

பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது!

படம்
        பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை டேட்டா மூலம் பார்ப்போம். ஆண்டுதோறும் மாநகராட்சி மூலம் உருவாகும் திடக்கழிவு அளவு 55-65 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு 3.3 மில்லியன் டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 43% தனிநபர் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 11கி.கி. தினசரி இந்தியாவில் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 609 டன்கள் கோவிட் -19 பாதிப்பில் உருவாகும் கூடுதல் மருத்துவக் கழிவு 101 டன்கள்(தினசரி) நாடுதோறும் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 840 டன் (தினசரி)   உலகம் முழுவதும் 1950-2015 வரையில் உருவான பிளாஸ்டிக் உற்பத்தியின் அளவு 8.3 பில்லியன் டன் 1950-2015 காலகட்டத்தில் உருவான பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 6.3 பில்லியன் டன். பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  79 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கழிவாக கொட்டப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா  

மத்திய அரசு உதவாவிட்டாலும் மாநில அரசு மக்களுக்கு உதவும்! - பினராயி விஜயன்

படம்
toi நேர்காணல் பினராயி விஜயன், கேரள முதல்வர் கேரள மாநிலம் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டபோது, இழப்பீட்டுத் தொகை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னதாகவே திட்டங்களை அறிவித்து அனைத்து நாடுகளின் பாராட்டுக்களையும பெற்றார் பினராயி விஜயன். அவரிடம் வேகமாக இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு அவரின்நோய்தடுப்பு திட்டம் பற்றி பேசினோம். கேரள மாநிலம் தங்களின் முன்னோடியான திட்டங்களால் பலரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. எப்படி இந்த சாதனைகள் சாத்தியமானது? எங்களது மாநிலம் முன்னரே அடிப்படையான பொதுசுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு ஆகியவற்றில் முன்னோடியாக விளங்குகிறது. நோய் பாதிப்பு பற்றிய விவகாரத்தில் அரசு அமைப்புகளோடு ஏராளமான தன்னார்வ நிறுவனங்களும் கைகோத்து இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் சீனாவில் கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் இதுபற்றி கவனமாக இருக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டோம். இந்த முன்னெச்சரிக்கைக்கு காரணம் உண்டு. நாங்கள் இதற்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்பை சமாளித்த அனுபவமும் இதற்கு உதவியது. கிராமத்தில் உள்ள

கோவிட் -19 இறப்பைக் கணக்கிடுவதில் ஏன் சிக்கல்?

படம்
pixabay கோவிட் 19 நோயும், இறப்பும்! இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பும் இறப்பும் மக்களை பயமுறுத்தி வருகிறது. நூறுபேரை கொரோனா தாக்கினால் அதில் மூன்று பேருக்கு இறப்பு நிச்சயம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..  இப்போது சோதனையில் குறைவான ஆட்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பரவலான அளவில் சோதனைகள் நடந்தால் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளை கண்டறிய முடியும். உலகளவில் பதினான்கு நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். இருப்பதிலே குறைவான பலிகளைக் கொண்ட நாடு ஜெர்மனிதான். அந்நாட்டில் நூறு பேர்களுக்கு 0.69 பேர் மட்டுமே இறப்பை சந்திக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இத்தாலி நாடு நூறு பேர்களுக்கு 10.69 என்ற எண்ணிக்கையில் இறப்பைச் சந்தித்து வருகிறது. தென்கொரியா இந்த விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து வைரஸ் பரவினாலும் அதனை கட்டுப்படுத்துவதில் அந்நாடே முன்னிலையில் உள்ளது. ஏறத்தாழ பாதிக்கப்பட்டவர்களை பெரும்பாலும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் இதில் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை அதிகளவு இறப்பைச் சந்தித்