இடுகைகள்

சுற்றுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலை இழப்பால தவிக்கும் காஷ்மீர்!

படம்
விடுதி மேலாளர் குலாம் ஜிலானி ஆகஸ்ட், 5, 2019 அன்று இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த 135 நாட்கள் இணையம் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தம் பயணத்தை ரத்து செய்தனர். மாநிலம் முழுவதம் ராணுவம் சூழ்ந்து நிற்க, திறந்தவெளி சிறைச்சாலை போன்ற சூழலை அரசு வலிந்து உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. தற்போது நீதிமன்ற தலையீட்டால 2ஜி இணைப்புகள் மட்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இணையதளங்கள் முழுக்க செயல்படத்தொடங்கவில்லை. குறிப்பிட்ட அரசு ஏற்ற பட்டியலில் உள்ள வலைத்தளங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தால் ஏரி அருகில் உள்ள விடுதியில் குலாம் ஜீலானி என்பவர் மேலாளராக உள்ளார். இங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தில் இருந்து அங்கு புக் செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தம் இடங்களை ரத்து செய்துவிட்டனர். தற்போது மூன்று பேர் மட்டுமே அறை எடுத்து உள்ளனர். அதற்கு முன்பு 88 பேர் இங்கு தங்கியிருந்

எரிமலை அருகே மக்கள் வாழ்வது ஏன்?

படம்
குவாத்திமாலா, அகுவா எரிமலை ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலையின் அருகே மக்கள் வாழ்வது எதற்காக? செல்ஃபீ எடுப்பதற்காக அல்ல மக்களே. அங்குதான் விவசாயம், சுற்றுலா என அனைத்து விஷயங்களும் எளிமையாக கிடைக்கிறது. ஜப்பான், இந்தோனேஷியா, ஃபிஜி ஆகிய தீவுகளில் எரிமலையின் பெருமையை நீங்கள் காணலாம். ம எரிமலைக்குழம்பு என்பதை காரம் அதிகமாக வைத்த காரக்குழம்புடன் ஒப்பிட்டு நாம் திகிலாகிறோம். ஆனால் ஐஸ்லாந்து காரர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஹெக்லா எரிமலையை தங்களது பாரம்பரிய பெருமையாக நினைக்கிறார்கள். இன்றும் உலகில் இயங்கி வரும் எரிமலைகள்    Fuji, Vesuvius, Mt. St. Helens, or even Iceland's infamous Eyjafjallajökull   இவைதான். இவை அனைத்தின் அருகிலும் கணிசமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எரிமலைகள்தான் உலகின் நிறைய இடங்களில் புது குடியேற்றங்களை உருவாக்கின என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாகச வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் இதுபோன்ற வாழ்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.  நன்றி: க்யூரியாசிட்டி

செர்னோபில் செல்லலாமா?

படம்
செர்னோபில் அணு உலை கசிவு, அதன் பாதிப்புகள் இன்றையவரைக்கும் உண்டு. மேலும் அங்கு இதற்கான சுற்றுலா திட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மனிதர் 3 மில்லிவெர்ட்ஸ் கதிர்வீச்சு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர் என்று அமெரிக்கன் கதிர்வீச்சு கல்லூரி அறிக்கை தகவல் சொல்லுகிறது. கதிர்வீச்சின் அளவு 1-20 எம்எஸ்விக்கும் குறைவாக மனிதர்கள் செல்கிறது. 50-200 அளவு என்பது மனிதர்களின் மரபணுக்களைப் பாதிக்கிறது. 200-1000 அளவு மாறும்போது, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும். 2000 எனும் அளவுக்கு கதிர்வீச்சு அதிகரிக்கும்போது கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் வரும். 10 ஆயிரம் அளவு என வரும்போது இறப்பு நேருகிறது. செர்னோபில்  அணுஉலையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை ஆராய்ந்தபோது, அவர்களின் உடலில் 8 ஆயிரம் - 16 ஆயிரம் கதிர்வீச்சு அளவு இருந்தது. இதன்படி 134 ஆட்கள் கடுமையான கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது. 2018 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பார்வையாளர்கள் உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு வந்தனர். மேலும், இங்கு வரும் பார்வையாளர்கள் எதையும் தொட, உட்கார, கேமரா பொருட்களைப் பயன்படுத்த தடை உள்ளது.  நன்றி: லிவ்

இந்திய தீவுகளுக்கு ஜாலி டூர்!

படம்
ஜாலி ட்ரிப் செல்ல இந்தியத் தீவுகள் ! - ச . அன்பரசு பனி சூழ்ந்த மலைத்தொடர்கள் , வெப்பமண்டலக் காடுகள் , துறைமுகங்கள் , மாளிகைகள் ஆகிய லொகேஷன்களுக்கு ட்ரிப் அடிக்க பாரீன் தேசங்களுக்கு டிக்கெட் போடவேண்டிய அவசியமில்லை . இந்தியாவிலும் மனதை மயக்கும் மேஜிக் ஸ்பாட்கள் எக்கச்சக்க இடங்கள் உண்டு . அதில் லவ்லி ஸ்பாட்கள் இதோ ! லோக்தக் ஏரி மணிப்பூரிலுள்ள லோக்தக் ஏரியிலுள்ள சர்க்கிள் வடிவிலுள்ள தீவுகளுக்கு பும்திஸ் என்று பெயர் . காலை சூரியனின் ஒளியில் மினுமினுக்கும் தங்கா , சென்ட்ரா என்ற மிதக்கும் தீவுகள் உள்ள ஏரியின் பரப்பு 35 கி . மீ . மிதக்கும் தீவுகளைச் சுற்றி ஏறத்தாழ 4 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . இங்குள்ள தக்மு நகரருகில் அரசு நீர் விளையாட்டுகளுக்கான மையத்தை நடத்தி வருகிறது . இங்கு மீன் பிடிப்பதைக் கடந்து டூரிஸ்டுகளுக்கான கைடுகளும் உண்டு . ஏரியிலுள்ள தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ , 40 ச . கி . மீ பரப்பு கொண்ட உலகின் முதல் மிதக்கும் பூங்கா . செல்வது எப்படி ?     மணிப்பூரின் இம்பாலிலிருந்து 60 கி . மீ தொலைவில் லோக்தக் ஏரி அமைந்துள்ளது . பஸ் அல்லது டாக்சி எ

குளுகுளு சொர்க்கங்கள்!

படம்
குளுகுளு சொர்க்கங்கள் - தனியார் தீவுகள் ஸ்பெஷல் ரவுண்ட் அப் - ச . அன்பரசு வேலை , இன்க்ரிமெண்ட் , அப்ரைசல் என பறக்கும் சீசன் லைஃபில் உண்டுதான் . அதற்காக குளுகுளு பிரதேசங்களில் ஜாலி ட்ரிப் அடித்தால்தான்தானே ஆபீசிலும் நம் கிரியேட்டிவிட்டி ரேட்டிங் மேலேறும் . அதற்குத்தான் நிறைய தனியார் குளுகுளு சொர்க்கங்கள் வாசலைத் திறந்து வைத்து நம்மை பன்னீர் தெளித்து வரவேற்கின்றன . உலகம் முழுக்க மனதை இலவம் பஞ்சாக்கும் பர்சைக் கரைக்காத சூப்பர் ஸ்பாட்கள் இதோ ! பறவைத்தீவு , சிசெல்லோய்ஸ் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சிசெல்லோய்ஸில் 5 கி . மீ நீள அமேஸிங் பீச் உங்கள் மனதை பறவையின் சிறகுகளாக்கும் . மொத்தம் 115 தீவுகளைக் கொண்டுள்ள காம்போ தேசம் இது . அல்டாபிரான் ஆமைகள் , குளங்களிலுள்ள டால்பின்கள் , மண்டாரே மீன்கள் என குஷியாக ஃபேமிலி , நண்பர்களோடு கண்டு ரசித்து , ஆடிப்பாடுவதற்கும் ஏற்ற ஸ்பாட் இது . ஹைலைட்ஸ் : மஹே தீவிலிருந்து 105 கி . மீ தொலைவில் அமைந்துள்ள பறவைத்தீவின் பவளப்பாறைகளின் வயது 1,25,000. சிவப்பு நிற பவளப்பாறைகள் 5 கி . மீ பீச்சில் 25 ஏக்கரில் பரவியுள்ளன . மே - அக