இடுகைகள்

நகைச்சுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டிலேயே எப்படி வேலை பார்ப்பது?

படம்
giphy வீடு என்பதே பலருக்கும் ஓய்வு எடுக்கும் இடமாகத்தான் இருந்து வந்தது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகத்தைப் பார்த்தால் சீனியர் சிட்டிசன்கள் இப்போதே பதற ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை நிறுவனங்கள் வீட்டுக்கு போ பெருசு என சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசை காலியானால் அங்கிள் வரிசை, சித்தப்பா வரிசை அதற்கடுத்து ஜென் இசட் ஆட்கள் வந்துவிடுவார்கள். வீட்டில் வேலை பார்ப்பது சரி, நிறைய நேரம் கிடைக்குமே என்ன செய்யலாம் என யோசித்தோம். சிங்கார சமையல்காரன்! சாம்பாருக்கு வாசத்திற்காக சிக்கன் மசால்பொடி போடுவது, அனைத்திலும் தேங்காயைத் துருவி போட்டு எலைட் லுக் கொண்டுவருவது, எண்ணெய்யை தண்ணீராக ஊற்றி காய்களை ஊறவைப்பது என கணவர்கள் சூப்பர் செஃப்பாக மாறுவது இப்போதுதான். சாம்பாருக்கு சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா என சமையலறையை உருட்டுவது, கடலைப்பருப்பு, குழம்பு மிளகாய் தூள் தேட ரெய்டு நடத்துவது என போர்க்களமாக மாறினாலும் பிரச்னையில்லை. ஏனெனில் அதை சுத்தப்படுத்துவதும் அவர்கள்தானே! சும்மாருப்பா! இப்படி சமையலறையில் அமளி துமளி செய்தால் மனைவி என்ன சொல்லுவார். சும்மாருப்பா என்றுதானே. அதுவும

மக்களை படைப்பாளர்களாக்கியது இணையம்தான்! - புவன்ராம்

படம்
டிஜிட்டல் புரட்சி மக்களை மாற்றியது யூடியூபில் செல்வாக்கான நபராக வலம் வருகிறார் புவன்ராம். 25 வயதில் பத்து லட்சம் நேயர்களைச் சம்பாதித்து விட்டார். இதுபோதாதா அவரிடம் பேச.... நீங்கள் யூடியூபில் எவ்வளவு செல்வாக்கானவராக திகழ்கிறீர்கள்? நான் மக்களை பொருட்களை வாங்க வைப்பவராக என்னை நினைக்கவில்லை. காரணம், எனது வேலை பொழுதுபோக்காளராக,  படைப்புகளை உருவாக்குபவர் என்றுதான் நினைக்கிறேன். வெளிப்படையாகச்சொன்னால், யாரும் இங்கே யாரையும் அடக்கி தன் விருப்பங்களைத் திணிக்க முடியாது. டிஜிட்டல் புரட்சி நிறைய விஷயங்களை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? நிச்சயமாக. இன்று தவறான போலிச்செய்தி வலைத்தளத்தில் பரவுகிறது என்றால் உடனே அதனை யாரும் நம்புவதில்லை. உண்மையான செய்தி என்ன என்று இளைஞர்கள் அவர்களாகவே உணர்ந்துகொள்கிறார்கள். மக்களையும் படைப்பாளர்களாக மாற்றியது டிஜிட்டல் புரட்சிதான். பொருளின் தரத்திற்கு அதனைப் பரிந்துரைக்கும் பிரபலங்கள் முக்கியக் காரணம் என்று சொல்லலாமா?  நான் ஒரு ஷாம்பூவை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால் அதனை நான் பயன்படுத்தி இருக்கவேண்டும். மேலும் ஷாம்பூ என்பது அனைவரின் தலை

அறிவியலில் நகைச்சுவை சாத்தியமா?

படம்
நேர்காணல் எலைன் வான் வெல்டன் பிபிசி நிகழ்ச்சியில் பங்கேற்றவராக உங்களை மக்கள் பார்ப்பது இப்போது தெரியவந்துள்ளது. ஆனால் நீங்கள் ரகசியமான ஆய்வாளராக இருந்திருக்கிறீர்கள்.  ரைட். நான் ரகசியமான ஆய்வாளர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். இது என்னுடைய சிறுவயது கனவு. நான் லண்டனிலுள்ள இம்ப்ரீயல் கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படித்தேன். நான் முனைவர் பட்டம் பெறவில்லை என்றாலும் பிளாஸ்மா பிசிக்ஸ் படித்துள்ளேன். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக நடித்துள்ளேன். என் வாழ்க்கையே பெரும் சோதனைதான். உங்களுடைய இயற்பியல் பின்னணிதான் அறிவியல் பற்றிய வெப் சீரிஸ் செய்யக் காரணமா? நான் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில், நான் காமெடி நடிகராக நடித்து வந்தேன். மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சொல்லித்தரும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன். பிறருக்கு பாடம் சொல்லித்தருவது எனக்கு பிடித்த பணி. கிரேசி சயின்ஸ் தொடரும் அப்படி ஒன்றுதான். உங்கள் மனதிலிருந்து சொல்லுங்கள் நீங்கள் காமெடி நடிகரா அல்லது அறிவியலாளாரா? நான் இரண்டையும் சொல்ல மாட்டேன். நான் ஆணாதிக்கம் கொண்ட இந்த இரண்டு துறைகளிலும் பொருந்திப்போகும

தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?

படம்
தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்? சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம். 1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம். 2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம். 3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம்.  4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறி

வினோத ஆராய்ச்சிகள்! - படித்து ரசியுங்கள்!

படம்
வினோத ஆராய்ச்சிகள்! புற்றுநோய், தைராய்டு என பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்தாலும், இப்படியெல்லாமா ஆராய்ச்சி என நாம் வியக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றில் சில ... பெயரைச் சொன்னால் எக்ஸ்ட்ரா பால்! இங்கிலாந்தில் நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கேத்தரின் டக்ளஸ் மற்றும் பீட்டர் ரௌலின்சன் ஆகியோர் பசுக்களின் பாலை அதிகரிக்க முயற்சித்தனர்.  பத்து மாதங்களில் 7,500 லிட்டர் பாலை பசுக்கள் தந்தது என்றால், இவர்களின் ஆராய்ச்சி மூலமாக 260 லிட்டர்கள் அதிகரித்தன. இதற்கு காரணம், பசுக்களுக்கு பெயர் வைத்து அழைத்ததுதான் என்று சொல்லி, அனைவரையும் அசர வைத்தனர்.  கூட்டமாக மேய்ந்தால் பசுக்களின் பால் அளவு குறையும் என்று சொன்ன ஆய்வு முடிவுகளைப் பார்த்து பசுக்களே சிரித்துவிட்டன. இரவு விழித்திருந்தால்... ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஜோனாசன் புதுமையான ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதிகாலையில் எழுபவர்கள், இரவு தூங்காமல் ஆந்தை போல வாழ்பவர்கள் ஆகியோரின் குணநலன்களை ஆராய்ந்தார். இதில் இரவு தூங்காதவர்கள், சமூகத்திற்கு

காமெடி செய்த திருடர்கள்!

படம்
காமெடி திருடர்கள்! கம்பி எண்ண வைத்த கழுதை! கொலம்பியாவில் நடந்த கூத்து இது. மளிகைக் கடை ஒன்றை திருடர்களை சுழி சுத்தமாக கத்தி கபடாக்களை வைத்து கொள்ளையடித்தனர். அதெல்லாம் பிரச்னையில்லை. கல்லாவில் உள்ள பணத்தைக்கூட துடைத்து எடுத்தாயிற்று. ஆனால், போலீசில் பத்து நிமிடங்களில் மாட்டிக்கொண்டார்கள். உணவு மற்றும் ரம் பாட்டில்களை திருடிய கொள்ளையர்கள் அதனை மோட்டார் வண்டியில் ஏற்றியிருக்கலாம். எகானாமி முக்கியம் என்று நினைத்தார்களோ, மேக் இன் கொலம்பியா திட்டத்தை பின்பற்றலாம் என நினைத்தார்களோ மாட்டிக்கொண்டார்கள். காரணம் , கழுதைதான். ஏராளமாக சுமையை ஏற்ற, அது பச்சாவோ, ஆபத்து, ஐம் இன் டேஞ்சர் என அத்தனை மொழிகளிலும் ஆபத்தை கத்தி கதறி உலகிற்கு சொல்ல, அருகில் நின்ற போலீஸ் உஷாராகி திருடர்களை அடித்து உதைத்து வெளுத்து விட்டனர். முக்கியமான தகவல் அந்த கழுதையின் பெயர் எக்ஸேவி. ரெடியா இருங்க ப்ரோ! நம் நண்பர்களில் சிலர் கூட இப்படித்தான். எங்கு செல்லும்போதும் முன்னேற்பாடுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். பஸ் இருக்குமா, பாத்ரூமில் பக்கெட் வச்சுருப்பாங்களா, சில்லறை வச்சிருக்கியா, வழி தெரியுமா என