இடுகைகள்

நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவைகள் வாசனையை வைத்துதான் உணவு தேடுகிறதா? - அறிவியல் நூல்கள் அறிமுகம்

படம்
  சீக்ரெட் பர்ஃஃப்யூம் ஆப் பேர்ட்ஸ் டேனியல்லா ஜே வொய்டேகர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 2022 பெரும்பாலான பறவை ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கு சுவாசிக்கும் திறன் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் டேனியல்லா தனது ஆராய்ச்சி வழியாக பறவைகளுக்கு வாசனை அறியும் திறன் உண்டு என்று சொல்கிறார். மேலும், உணவுகளை கண்டுபிடிக்கவும், இணை சேரவும் கூட வாசனைகளை பயன்படுத்துவாக சொல்லுகிறார். எனவே ஆர்வம் இருப்பவர்கள் நூலை வாங்கி வாசியுங்கள்.  அனிமல் ரிசொல்யூஷன் ரோன் புரோக்லியோ மின்னசோட்டா பல்கலைக்கழகம் 2022 இதில் ஆங்கில பேராசிரியர் ரோன், விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கட்டுரைகளாக எழுதியுள்ளார்.  ஜர்னி ஆப் தி மைண்ட்  ஹவ் திங்கிங் எமர்ஜெட் ஃப்ரம் சாவோஸ்  ஆகி ஆகாஸ், சாய் கட்டாம் எப்போதும் நமது மூளையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், நியூரான்கள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு உண்டு. இந்த நூலில் பிரக்ஞை பற்றிய கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அறியத் தருகிறார்கள். தவளை, மனிதன், குரங்கு ஆகியவற்றின் மூளைகளை படமாக வரைந்து விளக்கியிருக்கிறார்கள்.  தி கைஜூ பிரசர்வேஷன் சொசைட்டி ஜான் ஸ்கால்ஸி  2022 இது ஒரு நாவல். நாவலுக்கு முன்னா

ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

படம்
  எழுத்தாளர் ஐசக் அசிமோவ் அறிவியல் ஜெகஜால எழுத்தாளர்  ஐசக் அசிமோவ் கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார்.  கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ்.  அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர். மிட்டாய், செய்திதாள், மாத இத

எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்கும் வேதாந்தம்! - மிஸ்டர் வேதாந்தம் 2 - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் 2 தேவன் அல்லயன்ஸ்  மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாவது பாகம்.  முதல் பாகத்தில் வேதாந்தம், தலைமுறையாக பணக்காரனாக இருந்தாலும் மெல்ல குடும்ப நிலையை உணர்கிறான். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போகிறது.  தஞ்சையில் இருந்த அப்பா தேசிகாச்சாரி, பணத்தை கௌரவமாக செலவிட்டு நிறைய கடன்களுக்குள் சிக்கியிருக்கிறார். அதனை பையனுக்கு நேரடியாக சொல்லாமல் தவிர்க்கிறார். படிப்பில் அவன் பட்டம் பெற்றால், தனது வாழ்க்கையைப் பாரத்துக்கொள்வான் என நினைக்கிறார். ஆனால் வேதாந்தத்தின் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எழுதுவதில் திறமை உள்ளது. அதனை வளர்த்துக்கொண்டு வேலையைத் தேடலாம் என நினைக்கிறான்.  தேசிக்காச்சாரியின் உடல்நிலை கெடும்போது, அவனது நிதிநிலை அவனது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு தெரிய வருகிறது. அவருக்கு தேசிகாசாரியின் பணத்தின் மீது ஆசை. தனது பேத்திகளில் ஒருத்திக்கு வேதாந்தத்தை மணம் செய்து கொடுத்தால்,  சொத்து கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் தேசிகாச்சாரிக்கு கடன் மட்டுமே இருக்கிறது என தெரிந்ததும், கடன்காரர்களோடு சேர்ந்து கூடி சொத்தை சூறையாடுகிறார். இதனால் வேதாந்தம் அத்தையோடு தங்கியிருக்கிறான

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று

பெருந்தொற்று காலத்தில் உருவான எழுத்தாளர்கள்- கிருபா ஜி, ஜோதி பாண்டே லவாகரே

படம்
  கிருபா ஜி, எழுத்தாளர் சென்னை பெருந்தொற்று காலம் நிறையப் பேருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை அளித்துள்ளது. சிலர் அதில் சிக்கி பாதிக்கப்பட்டாலும் இன்னும் சிலர் எழுத்து, ஓவியம், படைப்பு, பல்வேறு ஆன்லைன் படிப்பு என மீண்டு வந்துள்ளனர். முன்பை விட இன்னும் சிறப்பான மனிதர்களாக தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.  இந்த பெருந்தொற்று காலத்தில் நிறைய புதிய எழுத்தாளர்கள் வந்துள்ளனர். இதற்கு பின்ஞ், பிரதிலிபி என நிறைய வலைத்தளங்கள் காரணம் என்றாலும் கூட சொந்த முயற்சியும் தளராத உழைப்பும் பின்னணியில் உள்ளதையும் மறுக்க முடியாது. தன்னறம் நூல்வெளியின் காணொலியில் எழுத்தாளர் தேவிபாரதி, புதிய இளம் எழுத்தாளர்களுக்கு தொடர்ச்சியாக எழுதுங்கள். அதன் வழியாக நீங்கள் என்ன கண்டடைய வேண்டுமோ அதனைக் கண்டுபிடிப்பீர்கள் என சொன்னார். பயணம் என்று கிளம்பிவிட்டால் இறுதியாக அனைவரும் வந்தடையும் இடம் ஒன்றுதான். தன்னைத்தானே அறிதல்தானே? அப்படிப்பட்ட சிலரைப் பற்றி பார்ப்போம்.  கிருபா ஜி  வாட் வீ நோ அபவுட் ஹெர் - வெஸ்ட்லேண்ட் புக்ஸ்  சென்னையைச் சேர்ந்த 35 வயதாகும் எழுத்தாளர் இவர். நாவலை எழுத வேண்டும் என்று தோன்றியதும் தனத

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  அன்பரசு  12.12.2021

மொழிச்சோதனைகளை தொடர்ச்சியாக செய்த நாவலாசிரியர்! - ஜேம்ஸ் ஜாய்ஸ்

படம்
  இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ். 1941ஆம் ஆண்டு குடல் புண் காரணமாக மறைந்தார்.  ஐரிஷ் நாட்டு நாவல் ஆசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ், நாவலை வழக்கமான முறையில் அல்லாமல் பல்வேறு பரிசோதனை பயன்படுத்தி எழுதுவதற்கு பிரபலமானவர்.  இவரின் மிகச்சிறந்த படைப்பு உலிசஸ். படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளும்படியான அங்கத நடை கொண்ட படைப்பு இது. ஒருநாளில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்ட கதை. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. 1914ஆம் ஆண்டு டப்ளினர்ஸ் என்ற தலைப்பில்  சிறுகதைகளை எழுதினார்.  1916ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நாவல் உள்ளது. அதன் பெயர், எ போர்ட்ரைட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஏஸ் எ யங் மேன். ஜாய்ஸ் எழுதிய கடைசி நாவல்,  ஃபின்னகென்ஸ் வேக். 1939ஆம் ஆண்டு வெளியான இந்த நூலும் கூட மொழிச்சோதனைகள் நிறைய கொண்டதுதான். எழுதியவருக்கு அல்லது படிப்பவருக்கா யாருக்கு அதிக சோதனைகள் இருக்கும் என்று கேட்க கூடாது.  இப்படி எழுதியவருக்கு தொடக்க கல்வி என்பது சிறப்பாக அமையவில்லை. பொருளாதார பிரச்னைகளால் பத்து வயதில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. கல்லூரிக்கு செல்வதைக் கூட ஓராண்டு ஒத்திவைத்தார்

உறவுகளை சமாளித்து குற்றங்களை துப்புதுலக்கும் சாம்பு! - துப்பறியும் சாம்பு - 2 - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு - 2 தேவன்  அல்லயன்ஸ்  சாம்புடன் எழுத்தாளர் தேவன் - நன்றி - இந்து தமிழ் துப்பறியும் சாம்பு பற்றிய குறிப்பை முன்னதாகவே எழுதியிருக்கிறோம். இதனால் நேரடியாக கதைக்குள் போய்விடலாம். முட்டாள் சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறி நிறைய வழக்குகளை கண்டுபிடிக்கிறார். கூடவே இதன் மூலம் தனக்கான இனத்தில் வேம்பு என்ற பெண்ணையும் கரம் பிடிக்கிறார். அவள் மூலம் ட்ரேட்மார்க் மூக்கு கொண்ட சுந்து என்ற ஆண் பிள்ளை பிறக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் சாம்புவுக்கு சுப்பு என்ற பெண் குழந்தை பிறக்கிறது.  அதுதான் கதையா என அயர்ச்சியாக கூடாது. இம்முறை சாம்பு, இங்கிலாந்து சென்று கோமாளித்தனங்கள் செய்து அடிவாங்கியும் கூட புகழ்பெற்று வருவதோடு கடைசி அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. அதில்தான் செய்தியாக சுப்பு என்ற பெண்பிள்ளை பிறப்பதாக கூறப்படுகிறது. வேம்புவும் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்து சேர்கிறாள்.  இந்த நாவலில் பெரும்பாலும் கதைகள் எப்படி அமையும் என்றால், சாம்பு ஏதேனும் வழக்கை கோபாலன் சொல்லி எடுத்துக்கொள்வார். பிறகு தன் மனம்போக்கில் அதனை ஆராய்ந்து அடிவாங்கி பிறகு கோபாலன் மூலம் அதிலிருந்து மீண்டு வருவ

தனது நாவல் பாத்திரங்களை ஒரே நாவலில் வலம் வரச்செய்த பாலபாரதி! - கடிதங்கள் - த.சீனிவாசன்

படம்
    10 திடீரென நேர்ந்த விபத்து ! 26.2.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? அறிவியல் நேர்காணல்களை எழுதிக் கொண்டு இருக்கிறேன் . இதனை ஓராண்டுக்கு முன்னரே எழுதினேன் . நான் வேலை செய்யும் தினசரிக்காக எழுதினேன் . ஆனால் அங்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது தனி நூலாக மாற்றி வெளியிட நினைத்துள்ளேன் . புத்தக காட்சியில் காமிக்ஸ் நூல்களை தேடிப்பார்க்க வேண்டும் . இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அங்கு செல்வேன் என்று நினைக்கிறேன் . எனது ஆசான் குங்குமம் ஆசிரியர் கே . என் . சிவராமன் அவர்களை சந்திக்க நினைத்தேன் . ஆனால் அவர் ஏதோ விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் இருந்தார் . அவரது அம்மாவின் நலம் பற்றிக் கேட்டபோது அடிபட்ட தகவலை சொன்னார் . வருத்தமாக இருந்தது . டிஸ்கவரி இந்தியா நூலை மெல்லத்தான் படிக்கக முடிகிறது . நடப்பு ஆண்டில் உடல் மனம் உள்ளே போன்ற இயல்பிலான உளவியல் நூலை எழுதி தொகுக்க வேண்டும் . நான் எழுதிய மருத்துவம் சார்ந்த நூல்களில் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றிய நூல் அதுவே . 2021 ஆம் ஆண்டில் நூலை செம்மைப்பட