இடுகைகள்

மக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்தான் நகரமயமாதல் வேகம்பிடிக்கும்! - அனு ராமசாமி பொறியாளர்

படம்
              பொறியாளர் அனு ராமசாமி நகரமயமாதல் மக்கள்தொகைக்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் . இதுபற்றிய தங்களது கருத்து ? பலரும் நகரங்கள் உருவாவதை எதிர்மறையாகவே கருதுகிறார்கள் . இப்படி நகரங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதை நான் வளர்ச்சியின் அடையாளமாகவே கருதுகிறேன் . உலகில் தொண்ணூறு சதவீத செல்வம் நகரங்களிலிருந்துதான் கிடைக்கிறது . இப்படி பெறப்படும் செல்வம் விநியோகிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று கூறலாம் . நகரங்களில் இன்னும் சில பிரச்னைகள் உள்ளன . குற்றச்செயல்கள் கூடுவது , காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம் . எனவே இப்போது நீங்கள் கேள்வியை நகரமயமாக்கல் தவறு என்று கேட்க கூடாது . அதனை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் செய்வது ? அங்கு வாழும் மக்கள் நலமுடன் வாழ என்ன செய்யலாம் என்பதாகவே இருக்கவேண்டும் .    சூழலுக்கு உகந்த நகரமயமாக்கல் என்று கூறுகிறீர்கள் . இதைப்பற்றி விளக்குங்களேன் . மனிதர்கள் கட்டும் கட்டிடங்களில் எந்தளவு ஆற்றல் செலவாகிறது , அதனைக் கட்ட எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறோம் , மக்களின் விருப்பம் , அரசின் கொள்கைகள்

ஒடிஷாவில் அழிவைச் சந்தித்து வரும் கடலோர கிராமங்கள்! - கடல்மண் அரிப்பால் நேரும் பரிதாபம்!

படம்
                  ஒடிஷாவில் அழியும் கிராமங்கள் ஒடிஷாவில் உள்ள கேந்திர பாரா மாவட்டத்தில் கடற்புற பகுதியில் ஏழு கிராமங்கள் உள்ளன . இதில் மொத்தம் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர் . இங்கு மெல்ல கடல் மணல் உள்ளே புகுந்து வருவதால் , அங்குள்ள மக்கள் வேறிடம் நோக்கி நகர்ந்து வருகி்ன்றனர் . மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் அடிபம்பு கூட அரைப்பகுதி மணலால் மூடப்பட்டுவிட்டது . இங்குள்ள கால்நடை கொட்டில் , கோவிலைக் கூட கைவிட்டு மக்கள் வெளியேறத்தொடங்கிவிட்டனர் . மக்கள் கைவிட்ட அந்த கோவிலுக்கு வந்து போகும் ஒரே பார்வையாளர் பக்தர் பிரபுல்ல லெங்கா என்பவர்தான் . கடல்மண்ணில் ஏற்பட்ட அரிப்பால் , ஏழு கிராமங்களும் ஒடிஷா மாநில வரைபடத்தில் இருந்து விரைவில் காணாமல் போகவிருக்கிறது . 571 குடும்பங்களுக்கு வேறு இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது . பிஜூ புக்கா கர் யோஜனா எனும் திட்டத்தின்படி மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது . இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கேரளா , தமிழ்நாடு , கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களுக்கு கூலித்தொழிலாளிகளாக சென்று வேலை ச

இந்த தேர்தலில் நாங்கள் வெல்ல விரும்புகிறோம்! - கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

படம்
                  கமல்ஹாசன் மக்கள்நீதிமய்யம் தலைவர் நீங்கள் கடந்த மக்களவை தேர்தலில் 3.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றீர்கள் . இப்போது எந்தளவு வாகுகளைப் பெறுவீர்கள் என்று ஏதேனும் திட்டமிடல் உள்ளதா ? நான் எந்த ஆய்வுகளையும் நம்புவதில்லை . மக்களை மட்டுமே நம்புகிறேன் . மக்களுக்கு எங்கள் மீது ஆர்வம் உள்ளது . அதை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் . 2019 ஆம் ஆண்டிலிருந்து என்ன விஷயங்கள் கற்றுக்கொண்டீர்கள் ? அந்த ஆண்டில்தான் அரசியல்வாதியாக நாங்கள் களம் கண்டோம் . நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்துகொண்டிருக்கிறோம் . நாங்கள் மூன்றிலக்க எண்ணிக்கையை மனதில் கொண்டிருக்கிறோம் . நாங்கள் பத்து சதவீத த்தை கடக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொன்னால் அதுவே எங்கள் வெற்றி . நாங்ங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்பதை விட விளையாட்டை மாற்றுவோம் என்று சொல்ல விரும்புகிறேன் . உங்கள் நம்பிக்கை சரிதான் . உண்மையை புரிந்துகொள்ளவேண்டுமே ? நாங்கள் இத்தேர்தலில் வெல்லப்போகிறோம் என்று கூறவில்லை . நாங்கள் வெல்ல விரும்புகிறோம் என்றுதான் கூறுகிறேன் . வெற்றி , தோல்வி என எது நடந்தாலும

மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி

படம்
  தீதி மம்தா பானர்ஜி சுடாபா பால் பெங்குவின் வெளியீடு மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.  மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக  மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.  மம்தா பா

க்ரவுட் ஃபண்டிங் மூலம் தேர்தலில் ஊழல் குறையுமா?

படம்
  மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா? தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது.  தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.  கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றனர். டெல்லி ஆம்

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்டம் விவாதிக்கப்பட்டது . இதில் பிரேசில்

சுற்றிலும் உறவுகள், நடுவில் நாம் இருக்கவேண்டும் என்று நினைப்பவனால் அப்படி வாழ முடிந்ததா? - நெலா டிக்கெட் - ரவி தேஜா

படம்
                      நெலா டிக்கெட் சுட்டு ஜனம் மத்தியில் மனம் என வாழத் தலைப்படும் நாயகன் . அவன் தந்தை போல மதித்து பாசம் காட்டிய ஆதரவற்றோர் இல்லப்புரவலர் திடீரென இறந்துபோகிறார் . அந்த இறப்பிற்கு காரணமானவர்களை அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படம் . ரவிதேஜாவுக்காகத்தான் படம் பார்க்கவேண்டும் . வேறு ஆட்கள் யாரும் நடிக்க வாய்ப்பில்லை . கதையில் நடிக்கவும் ஏதுமில்லை . மாளவிகா சர்மாவுக்கு படத்தில் பாட்டுக்கு ஆட மட்டுமே வாய்ப்பு தந்திருக்கிறார்கள் . லூசுப் பெண் பாத்திரம்தான் . படத்தின் நோக்கம் , ஆதரவற்றோர் இல்லம் கட்ட நினைத்தவரை அவரது தத்துபிள்ளை வஞ்சித்து கொன்றுவிட அவரை எப்படி ரவிதேஜா பழிவாங்குகிறார் என்பதுதான் . ஆனால் இடையில் வரும் காதல் காட்சிகள் படத்தின் போக்கை திசைமாற்றுகிறது . எரிச்சலூட்டுகிறது . உள்துறை அமைச்சராக இருப்பவரை எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் எப்படி எதிர்க்க முடியும் ? நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லி வாழ்பவர் , மருத்துவர் என்று சொல்லி மருத்துவக் கல்லூரிக்கு சென்று காதல் செய்கிறார் . உள்துறை அமைச்சரின் பணத்தை கடத்துகிறார் என இயல்பாக வந்திருக

நண்பர்கள் இறப்பைக் கண்ணில் பார்த்தும் கடமையில் தவறாமல் கடிதங்களை, மருந்துகளை வீடுகளுக்கு விநியோகித்த தபால்காரர்!

படம்
            அஞ்சல் வழியாக நம்பிக்கை ! பிரதீப் சாகு அஞ்சல்துறை ஊழியர் , மும்பை அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர் . 54 வயதாகும் சாகு , இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார் . திலக் நகர் , செம்பூர் , கோவண்டி , கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார் . அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு . ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது . மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார் . அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல் . இந்தியா போஸ்ட் நிறுவனம் , கிராம ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு . மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன . அரசின் நிதியுதவி , பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு

பெருந்தொற்று காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றமுடியும்? ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர்

படம்
                    ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் கடந்த ஓராண்டாக உங்கள் அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள் . என்ன சவால்களை சந்தித்தீர்கள் . வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை மாநிலத்திற்கு அழைத்துக்கொண்ட மாநிலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் . கோவிட் -19 தொற்றை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுள்ளோம் . சிறப்பாக செயல்பட்டு நோய்த்தொற்றை குறைத்த மாநிலங்களில் நாங்களும் முக்கியமான மாநிலம் . தினமும் பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றிகரமாக அதற்கு தீர்வு கண்டு வருகிறோ்ம் . எதிர்க்கட்சிகள் கடந்த ஓராண்டாக உங்கள் அரசு ஏதும் செய்யவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறார்களே ? பெண்கள் , சமூகப் பாதுகாப்பு , சுகாதாரம் , கல்வித்துறைக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம் . மேலும் கோவிட் -19 சமாளிப்பதற்கான உதவிகளை வழங்கியுள்ளது . நிதித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை மாற்றியுள்ளோம் . சுற்றுலா , விளையாட்டு தொடர்பான புதிய விஷயங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் .   ஜிஎஸ்டி வருவாய் வழங்குவது தொடங்கி மத்திய அரசுடன் பல்வேறு