இடுகைகள்

நூல்விமர்சனம்!-தாம்பூலம் முதல் திருமணம் வரை-யுவகிருஷ்ணா

படம்
தாம்பூலம் முதல் திருமணம் வரை... யுவகிருஷ்ணா சூரியன் பதிப்பகம் பொதுவாக தமது ஜாதியில் நடைபெறும் திருமண சடங்குகளின் காரண காரியங்கள் எத்தனை பேர்களுக்கு தெரியும்? பிற இனக்குழுக்களின் சடங்குகளுக்கும் திருதிருவெனத்தான் விழிப்போம். தமிழ்நாட்டின் பல்வேறு இனக்குழுக்களின் திருமணவிழா, அதற்கான சடங்குகள், எதற்கு அந்த சடங்குகள் என்பதை துல்லியமான தகவல்களோடு எழுதியிருக்கிறார் யுவகிருஷ்ணா செல்லச் சுருக்கமாக லக்கி.  விவரங்கள் டேட்டாக்கள் என கண்சோர வைக்காமல புன்னகையுடன் படிக்க வைக்கும் யுவகிருஷ்ணாவின் மொழி ஆச்சரியமானது. கவுண்டர், செட்டியார்,நாடார்,அய்யாவழி திருமணம் என பல்வேறு திருமணங்களை பட்டியலிட்டவர் சுயமரியாதை திருமணம், இஸ்லாம்.கிறிஸ்துவ திருமணங்களுக்கும் இட ஒதுக்கீடு தந்திருக்கிறார். அதோடு  நம் தலைமுறைக்கு முக்கியத் தகவலாக எப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வது, ஜாதகத்தில் குரு பெயிலானால், ராகு கபடி விளையாடினால் என்ன பரிகாரம் என்பது வரையிலான தகவல்கள் அட்டகாசம்.  தாலியின் டிசைன், நாடார் திருமணங்களில் பிராமணர்களுக்கு தடை ஏன்? என பல நுட்ப நுணுக்க காரணகாரியங்களை அலசி ஆராய்ந்து உதவி

நூல் விமர்சனம் -சிவந்தமண்(கே.என்.சிவராமன்)

படம்
சிவந்தமண் கே.என்.சிவராமன் சூரியன் பதிப்பகம் விலை ரூ.400 மக்கள் புரட்சி என்பதற்கு இந்தியாவில் 1857 சிப்பாய் கலகம் அடையாளம் காட்டுவது இந்திய வழக்கம். ஆனால் உண்மையான மக்கள் புரட்சியின் வெற்றி என்பதற்கு இன்றும் ரஷ்யாவையும் முதல் அதிபரான லெனினையும் அடையாளம் காட்ட முடியும். காம்ரேட் சிவராமன் மக்கள் புரட்சி எப்படி ஏற்பட்டது, அதற்கான காரணங்கள்,லெனின் வாழ்க்கை, சீனாவில் மக்கள் புரட்சி, மாவோவின் வாழ்க்கை ஆகியவற்றோடு கம்யூனிச கொள்கைகளையும் விளக்கமாக எழுதியுள்ள நூல் சிவந்தமண்.  ஏறத்தாழ 670 பக்கங்களில் ரஷ்யா,சீனா என மிகப்பெரும் தேசங்களான இருநாடுகளிலும் மக்கள் புரட்சி எப்படி ஏற்பட்டது, அதற்கான பின்புல காரணங்கள் ஆகியவற்றை துல்லியமாக விளக்கி வெற்றி்க்கொடி நாட்டியிருக்கிறார் ஆசிரியர். வெறும் உணர்ச்சிகரமான வாழ்க்கை என்பதோடு இடதுசாரிகளின் தத்துவங்களையும் பெட்டிச்செய்தியாகவே வாசகர்களுக்கு தந்திருப்பது ஆசிரியரின் தளராத தன்னம்பிக்கைக்கு சான்று.  இந்த தொடர் தினகரன் வசந்தம் இதழில் ஞாயிறுதோறும் தொடராக வந்தது என்பதை பலராலும் நம்பவே முடியாது. அந்தரங்கம்,நடிகைகளின் கிசுகிசு என்ற போ

நூல் விமர்சனம்! -கோமாளிமேடை டீம்

படம்
இந்தியா- சீனா போர் நெக்ஸ் மாக்ஸ்வெல் தமிழில்:ஜனனி ரமேஷ் கிழக்கு நவீன தாராளமய உலகில் நண்பன்,பகைவன் என்ற டேக்குகளுக்கு வேலையில்லை. எனது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக மூலாதாரம் தந்தால் நட்புநாடு இல்லையா எதிரி என கட்டம் கட்டிவிடுவது வல்லரசு நாடுகளின் வழக்கம். இ்ந்தியா- சீனா போரும் இது போன்ற எண்ணத்தில் தீவிரமாகி நாட்டை அவமானத்துக்குள்ளாக்கியதோடு நேருவின் அரசியல் வாழ்வையும் சுபமாக முடித்து வைத்துவிட்டது.  1950 களிலிருந்தே இந்திய சீனாவுக்கான எல்லைப்போர் வார்த்தை அளவில் தொடங்கிவிட்டது. பின்னர் இதை அரசியல் லாபத்துக்காக காங்கிரசும், வலதுசாரி கட்சிகளும்  பிற உதிரிகளும் ஊதிப்பெரிதாக்கின. அனைத்துக்கும் முக்கிய காரணம், இங்கிலாந்து வகுத்த தோராயமான அளவீடுகளால் உருவான மக்மோகன் எல்லைக்கோடுதான்.  1962 ஆம் ஆண்டு போரைத் தடுக்க சீனாவின் சூ என் லாய்  எவ்வளவோ முயன்றும் நேரு சம்மதிக்காமல் போனதற்கு சூழல் ஒரு  காரணம் என்றாலும் தன் ஆளுமை அடிப்படையில் வெளியுறவு கொள்கையை உருவாக்கிய பலவீனமும் முக்கிய காரணம். அன்றைய சூழல்களை இன்றைய காலகட்டத்தில் நின்று பார்ப்பது நேர்மையல்ல என்றபோதும், அமைதி

உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு! -ச.அன்பரசு

படம்
மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு ! - ச . அன்பரசு கர்நாடகாவின் காகல் கிராமம் . கடந்தாண்டு மே மாதம் 16 ஆம் தேதி கடற்கரையில் சிலிகா மணல் தொழிற்சாலையை சிலர் உருவாக்கி , மணல் அள்ளத்தொடங்கினார் . முதலில் குறைவாகவும் பின்னர் டன் கணக்கிலும் அள்ளத்தொடங்கினர் . சும்மாயிருக்குமா கடல் ? , மெல்ல ஊருக்குள் தலைகாட்டத் தொடங்கியது . கடலையொட்டி வாழ்ந்து வந்த துர்க்கி நாயக் என்ற பெண்மணி உட்பட ஆறு குடியிருப்புவாசிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை . அப்போதுதான் உதவிக்கு வந்தார் நமதி சூழல் சட்ட அமைப்பைச் சேர்ந்த வினோத் பட்கர் . பரபரவென சட்டவிரோத மணல் நிறுவனத்தைப் பற்றி ஆதாரங்களை திரட்டி நகர கமிஷனருக்கு அனுப்ப , கள விசாரணை நடந்ததோடு ஏற்படுத்திய சூழல் கேட்டிற்கான அபராதம் 6.3 லட்சம் அபராதம் கட்ட உத்தரவானது . " கிராமத்து மக்களின் ஒத்துழைப்பினால் பாதிப்பை கண்டறிந்து தடுக்க முடிந்தது " என மலர்ச்சியாகப் பேசுகிறார் சட்ட ஆலோசகர் வினோத் . தற்போது மணல் அள்ளப்பட்ட பகுதிகளி