இடுகைகள்

சூரியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

படம்
மிஸ்டர் ரோனி  நீரின் கொதிநிலை மாறுமா? நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது. கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம். வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்? ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் நிறம் மங்குகிறத

கண்களை நீலநிற ஒளி பாதிக்கிறதா?

மிஸ்டர் ரோனி நீல நிற ஒளி தூக்கமின்மைக்கு காரணமா? இன்று போன், கணினி என பல்வேறு டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில்தான் படிக்கிறோம். சிரிக்கிறோம். சம்சாரிக்கிறோம். இதன் பாதிப்புகள் பார்வை இழப்பு, தூக்கமின்மை என்று கூறுகிறார்கள். உண்மையா? நிச்சயம் இல்லை. எலிகளிடம் இதுபற்றி சோதனை நடத்தப்பட்டது. அதிக செறிவிலான நீலநிற ஒளிக்கதிர்கள் அவற்றின் பார்வைத்திறனை பாதித்த து உண்மைதான். ஆனால் மனிதர்களின் விஷயத்தில் இது மாறுபட்டது. உண்மையில் சூரியனிலிருந்து வெளிவரும் நீலநிற ஒளி என்பது மிக அதிகம். அதை எப்போதேனும் பார்த்திருப்பீர்கள். அதைவிட கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் ஆகியவை குறைவான ஒளியைக் கொண்டவை.அவை எப்படி உங்கள் பார்வையைப் பாதிக்கும்? இதன் பொருள் அவை பாதிக்காது என்பதல்ல. அதன் அலைநீளம் இதில் முக்கியமானது. கண்களிலுள்ள அமைப்பு இயல்பாகவே நீலநிறத்தை தடுக்கும் திறன் கொண்டது. குளிர்கண்ணாடிகள் கண்களின் பாதிப்பைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். கண்களிலுள்ள ஆர்பிசிசி எனும் செல்கள் கணினியிலுள்ள நீலநிற ஒளியைப் பார்த்து விழித்திருக்கலாம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால்தான

விட்டமின் டி உடலுக்கு அவசியத் தேவையா?

படம்
giphy.com இன்று இங்கிலாந்தில் பாதிக்கும் மேலான மக்கள் விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகள் உடலின் இயக்கத்திற்கு உதவுமா? என பல கேள்விகள் சாப்பிடுபவர்களுக்கும் உண்டு. அதனைப் பார்ப்பவர்களுக்கும் உண்டு. ஊட்டச்சத்து சந்தை என்பது 2015 இல் இங்கிலாந்தில் 414 மில்லியன் பௌண்டுகளாக வளர்ந்திருந்தது. கடந்த ஆண்டு உணவு ஏஜென்சி செய்த ஆய்வில் 48 சதவீத வயது வந்தோர் தினசரி விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அரசு அமைப்பான என்ஹெச்எஸ், மக்கள் பனிக்காலத்தில் விட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்  என்று கூறியது. ஆனாலும் கார்டியன் பத்திரிகை விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுவது உடலில் பெரியளவு மாற்றங்களை உருவாக்கவில்லை என்று கூறியது. இங்கிலாந்தில் நாற்பது சதவீதம் பேர் விட்டமின் டி பற்றாக்குறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். விட்டமின் டியை சூரிய ஒளி மூலமே நாம் பெறுகிறோம். இச்சத்து உடலில் உணவின் மூலம் பெறும் கால்சியம் சத்தை சரியான முறையில் பெற உதவுகிறது. இச்சத்து அதிகளவில் உடலில் இருந்தால், கால்கேமியா எனும் ரத்தத

சூரியன் உதயமாகும் நாட்டின் கதை! - ஜப்பான்!

படம்
ஜப்பான் எல்எல்வி மூர்த்தி கிழக்கு ஜப்பான் இன்று எலக்ட்ரானிக் சந்தையில் காணாமல் போய்விட்ட நிறுவனம். காரணம், தொலைநோக்கான தலைவர்கள், சிந்தனைகள் எல்லாம் குறைந்துவிட்டதுதான். ஆனால் எரிமலைகள் வெடிப்பு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, அணுகுண்டு வெடிப்பு, புகுஷிமா அணுஉலை கசிவு என அத்தனையும் தாங்கி வளரும் வல்லரசு நாடு. சிறிய தீவு நாடு எப்படி, தொழில், கல்வி, இலக்கியம், அறிவியல் என அனைத்திலும் முன்னேறியது என்று அறிபவர்களுக்கான நூல் இது. மூர்த்தி பிரமாதமாக ஏராளமான நூல்களைப் படித்து ஜப்பான் என்ற சிறிய நூலை எழுதியுள்ளார். 139 பக்கங்கள்தான். ஜப்பான் எப்படி போர்களால் சிரமப்பட்டு முன்னேறியது, மெய்ஜி மன்னரின் காலத்தில் பல்வேறு கொள்கைகளைத் தீட்டி முன்னேறியது. வர்ணாசிரம முறைகளால் சமூக முன்னேற்றம் எப்படி தடைபட்டது என்பதை ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார். ஜப்பான் இன்று சந்திக்கும் பொருளாதாரப் பிரச்னைகளை, முதியோர்கள் சதவீதம் அதிகமாவது, கண்டுபிடிப்புகளில் தேக்கம் ஆகியவற்றை விளக்கமாக ஆசிரியர் எழுதியுள்ளார். அதேசமயம் மோசமான ஆட்சியாளர் அரசு சேவைகளைப் பெற லஞ்சத்தை ஆயுதமாக்கும்போது ஏற்படும சீர

சூரிய வெப்பத்தால் உடலின் கொழுப்பு கரையுமா?

படம்
pixabay.com மிஸ்டர் ரோனி சூரிய வெப்பத்திலிருந்து க்ரீம்கள் நம்மைக் காக்குமா? எஸ்பிஎஃப் 30 என அச்சிடப்பட்ட க்ரீம்கள் ஓரளவு உங்கள் தோலை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். காக்கும் என்பதன் பொருள் அதிலுள்ள புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து... ஆனால் க்ரீம்களிலேயே மைக்ரோ பிளாஸ்டிகள் இன்னொரு வகை பிரச்னை வந்தால் கஷ்டம் சால கஷ்டம்தான். இந்தப் பிரச்னைகளை நீங்களே யோசித்துக்கொண்டு க்ரீம்களைப் பூசுங்கள். சூரிய வெப்பம் உடல் கொழுப்பைக் குறைக்குமா? சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும் விட்டமின் டி, உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆனால் அதற்காக வெயிலில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் எந்த பிரயோஜனமும் நிகழப்போவதில்லை. உடலில் நீர்ச்சத்து கீழிறங்குவது தவிர வேறெதுவும் நடக்காது. நன்றி - பிபிசி