இடுகைகள்

தூக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்பிரஸ்ஸோ காபி குடித்திருக்கிறீர்களா? - தெரிஞ்சுக்கோ டேட்டா

படம்
giphy தெரிஞ்சுக்கோ! எஸ்பிரஸ்ஸோ காபியை பனகல் பார்க் அருகிலுள்ள ஸ்டார் பக்ஸில் கூட நீங்கள் அருந்தியிருக்கலாம். அக்காபி பற்றி மேலதிகமாக நமக்கு என்ன தெரியும்? காபியின் விலை பற்றி புகார் சொல்லாதீர்கள். அதைத்தவிர வேறுவிஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம். ஒரு அவுன்ஸ் எஸ்பிரஸ்ஸோ காபி குடித்தால், அதேயளவு  திராட்சையில் உள்ள 2.66 கலோரி சக்தி கிடைக்கும்.  30 மி.லி. காபியில் உள்ள காபீன் 5.7 மணிநேரம் வயது வந்தோருக்கு ஊக்கமூட்டியாக உள்ளது. எஸ்பிரஸ்ஸோ காபியை 20 முதல் 30 நொடிகளில் தயாரித்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.  இக்காபியில் ஒரு ஷாட் என்பது 30 மி.லி., இரண்டு ஷாட் என்பது 60 மி.லி. இந்த இரண்டு விதங்களில் காபியை கடைகளில் வழங்குகிறார்கள்.  30 மி.லி காபியில் 1500 வேதிப்பொருட்கள் உள்ளன.  இத்தாலியர்கள் ஆண்டுக்கு 14 பில்லியன் கப்புகள் காபியை குடிக்கிறார்கள். வயது வந்தோருக்கு தலைக்கு தலா 275 கப்புகள் காபி என்பது தோராய அளவு.  தொடக்கத்தில் காபி மெஷின்கள் மணிக்கு ஆயிரம் கப்புகள் காபியை தயாரித்து வழங்கின.  ஜென்னாரோ பெலிசியா என்ற காபியின் சுவையை தரம் பிரிப்பவர், தன் நாக்கை 10 ம

காபியை குடித்துவிட்டு தூங்கினால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபி குடித்து தூங்கினால் என்ன விளைவு ஏற்படும்? நீங்கள் கடுமையான உழைப்பாளி. வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். தூங்க கூட நேரமில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? டீயை விட காபியை இப்போது தேர்வு செய்யலாம். இதன் விளைவுகள் என்ன? பொதுவாக மிகவும் சோர்வாக இருக்கிறது. உடனே காபியை குடிக்கத் தோன்றுகிறது. உடல் சோர்வாக தூக்கம் வருவது போன்று இருந்தால் 30 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. காபி குடித்தால் இதே தூக்க நேரத்தை பத்து நிமிடங்களாக மாற்றிக்கொள்ளலாம். இது ஆழமான தூக்கத்தை ஒத்த நல்ல பயன்களைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில் டீ, காபி குடித்தால் உங்களுக்கு தூக்கம் வராது. அப்படி தூங்கி எழுந்தாலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எப்படி? காபி குடித்தவுடன் அதன் மூலக்கூறுகள் சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கிருந்து அதிலுள்ள அடென்சின் மூலக்கூறுகள் மூளையில் உள்ள செல்களுக்கு செல்கிறது. காபீனின் தன்மையால் மூளை சோர்விலிருந்து விழிக்கிறது. இந்த மாற்றங்கள் காபி குடித்த 20 நிமிடங்களிலிருந்து தொடங்கிவிடுகிறது. இதனால் காபி குடித்து எழும் நேரம் குறைகிறது. எழும்போத

ஆளுமையை மாற்றும் தூங்கும் நிலைகள்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி தூங்கும் பொசிஷன்கள், நமது ஆளுமையை மாற்றுமா? தூங்குவது, சாப்பிடுவது தவிர்த்து நாம் என்ன செய்கிறோமோ அதை வைத்துதான் இவர் இப்படி, அவர் இப்படி என அனுமானம் செய்கிறார்கள். வரையறுக்கிறார்கள். இந்த விஷயத்தை 2012ஆம் ஆண்டு வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனால் ஆளுமைக்கும் தூங்குவதற்கும் பெரிய தொடர்பில்லை என நினைக்கலாம். ஆனால் 2014ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பேரா.ரிச்சர்ட் வைஸ்மன் தூங்கும் நிலைகளுக்கும் ஒருவரின் ஆளுமைக்கும் தொடர்புண்டு என சொல்லியிருக்கிறார். இடதுபக்கம் சாய்ந்து படுப்பவர்கள் கிரியேட்டிவிட்டி பொங்கும் ஆட்கள் எனவும், அருகில் உள்ள மனைவிக்கு நெருக்கமாக படுத்து தூங்கும் ஆட்கள் ஜோவியலான ஆட்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். குப்புறப்படுத்து தூங்கும் என்னைப்போன்றவர்களை சுயநம்பிக்கை இல்லாதவர்கள் என்று வேறு கூறியிருக்கிறார். உண்மையா இல்லையா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். நன்றி - பிபிசி

தூக்கம் வரலையா? இந்த டெக் ஐட்டங்களைப் பயன்படுத்துங்க!

படம்
பொதுவாக எங்கள் பக்கத்து வீட்டில் மனைவி, அதிகாலையில் எழாவிட்டால் தண்ணீர் பிடித்து வரும் கணவர் அடியே மூதேவி என்று அலறி மனைவியை எழுப்புவார். ரெஸ்ட் எடுத்தா தப்பாங்க என்பார் அவரின் மனைவி. வேலைதான் முக்கியம். ரெஸ்ட் அப்புறம் என்பார் மனைவி. இது நம்ம ஊரூ அலாரம் என நினைத்துக்கொள்ளுங்கள். விஷயம் இதுதான். இதெல்லாம் விட ஸ்மார்ட்டான ஆப், பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சில... காஸ்பர் லைட் 108 பௌண்டுகள் விலை கொண்ட லைட். வாங்கலாமா வேண்டாமா என்பது நிச்சயம் உங்கள் முடிவுதான். இதில் காலையில் எழும்போது உற்சாகமாக இருப்பதற்கான விஷயங்கள் கிடையாது. அதாவது, அதனை செட் செய்யும் மனதில்தான் உள்ளது. எனவே லைட்டை டிம்மாக வைப்பதாக, பிரைட்டாக வைப்பதா என முடிவு செய்து ஆப் மூலம் செட் செய்யலாம். அரோமா ஸ்லீப் ஷீப் தூக்கம் வர வைக்க இன்று செக்ஸ் மட்டும் உதவுவதில்லை. சிறிது நறுமணம் கொண்ட சுகந்தமான சூழலும் அவசியம். பல்வேறு வித எண்ணெய்களைக் கொண்ட இந்த பொருள், உங்கள் தூக்கத்திற்கு உத்தரவாதம் தருகிறது. டோடோவ் இந்த கருவியில் உள்ள நீலநிற ஒளி உங்கள் மூச்சின் வேகத்தை நிதானமாக

இன்சோம்னியா ஸ்டேஜ் 1 - தூக்கம் வராமல் தவிப்பதுதான்!

படம்
மிஸ்டர் ரோனி காலையில் நான்கு மணிக்கு எழுகிறேன். பின்னர் தூங்க முயன்றாலும் தூக்கம் வரமாட்டேன்கிறது. என்ன காரணம்? தூக்கம் வரவில்லையென்றால் அடையாளம் பதிப்பகத்தின் நூல்களை எடுத்து படியுங்கள். நூற்றாண்டுக்கான தூக்கம் உங்களை வந்தடையும். அப்படியும் தூக்கம் ஏமாற்றினால் பா.வெங்கடேசனின் நாவல்களை வாசியுங்கள்.இதற்கும் மிஞ்சி தூக்கம் வரவில்லை என்றால் உங்களுக்கு வந்திருப்பது இன்சோம்னியா ஸ்டேஜ் 1. சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக தூக்கம் வரவில்லையென்றால், அரசு உத்தரவுப்படி திறந்துள்ள நள்ளிரவுக் கடைகளில் ஷாப்பிங் செய்யுங்கள். இல்லையெனில் அறைக்குள் நடக்கலாம். மொட்டைமாடியில் நடந்தால், மனைவியுடன் தூங்குபவர்கள் மிரள்வார்கள். எனவே அறைக்குள் தூக்கப் பஞ்சாயத்தை முடித்துக்கொள்ளுங்கள். இதற்கும் மிஞ்சி தூக்கம் பற்றாக்குறையானால் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. நன்றி - பிபிசி

படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லையா?

படம்
giphy.com டாக்டர். எக்ஸ் படுக்கையில் படுக்கப்போகும்வரை தூக்கம் வருவது போலிருக்கிறது. ஆனால் பெட்டில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. ஏன்? காரணம் படுக்கையை நீங்கள் தூங்க மட்டும் பயன்படுத்துவதில்லை என்பதுதான். அதில் உட்கார்ந்து போனை நோண்டுவது, நெட்பிளிக்ஸ் தொடர்களை பார்ப்பது எல்லாம் செய்தால் எப்படி? முடிந்தவரை ஆறுமணிக்கு மேல் காஃபீன் பானங்களை குடிக்காதீர்கள். அவை மூளையிலுள்ள ஏராளமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு நடுராத்திரியிலும் உங்களை கொக்கரக்கோ கோழியாக்கி விடும். நல்ல கம்பெனி படுக்கையைப் பயன்படுத்துங்கள். இது அடிப்படையானது. அதற்குமேல் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் உறுதியாக உளவியலாளரை அணுகியே ஆகவேண்டும். வயதாகும்போது தூக்கம் குறையும் என்பதால் அதற்கேற்ப உணவுப்பழக்கங்களை குடும்ப மருத்துவரை அணுகிப் பெறுவது நல்லது. கார்ல்மார்க்ஸின் நூலைக் கூட படிக்கலாம்.  த த்துவ நூல்களைப் படிக்கும்போது உங்கள் வாழ்நாளில் நீங்கள் தூங்கியிராதது போல அடித்து போட்டது போல தூங்க முடியும்.  ஆசானின் வெண்முரசு போன்ற நூல்களும் உதவும். நன்றி - மென்டல் ஃபிளாஸ்

தூங்கும்போது ஜெர்க் ஏற்படுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தூங்கும்போது திடீரென கீழே விழுவது போல தோன்றுகிறதே ஏன்? உலகிலுள்ள 70 சதவீதம் பேருக்கு நடைபெறும் இக்குறைபாட்டு பிரச்னைக்கு ஹைப்னிக் ஜெர்க் என்று பெயர். என்னுடைய நண்பர் தூங்கும் முதல் பத்து நிமிடம் உடல் மெல்ல துடிக்கத்தொடங்கும். பின் மெல்ல தூக்கத்தில் ஆழ்வார். இதுகுறித்து அவரிடம் விழித்தெழுந்தபின் கேட்டேன். கீழே விழுவது போன்று தோன்றியது என்றார். இதற்கு முக்கியக்காரணம், மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு சரியான வித த்தில் இல்லாத தே. இதனால் மூளை சோர்ந்துபோய் விட்டுர்ரா ங்கொய்யால எனும்போது உடல் நோ நோ நாளைக்கு நிறைய வேலை இருக்கு என உடல் இழுத்துப் பிடித்தால் அன்று இரவு தூக்கம் உங்களுக்கு சரியாக வராது. அளவுக்கு அதிகமான காஃபீன் பொருட்கள் மற்றும் அட்டரால், ரிடாலின் ஆகிய மருந்துகளைச் சாப்பிட்டாலும் இதுபோல தூங்கும்போது ஜெர்க் வரும் . இதனைக் குறைத்துக்கொண்டால் நல்ல தூக்கம் கேரண்டி. நன்றி: க்யூரியாசிட்சி

தூக்க நம்பிக்கைகள் இதோ!

படம்
lamaisonbisoux.wordpress.com தூக்கப் பழக்கங்கள் வளையாத சீனா சீனாவில் தூங்குவதற்கு உறுதியான படுக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். இதுவே முதுகெலும்புகளை சரியானமுறையில் பராமரிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை. இம்முறையில் ஆழமான தூக்கம் கிடைப்பதாக ஆசிய இனக்குழுவினர் சிலரும் கூறியுள்ளனர். உடனே தூங்கு! பலியில் சிலர் எவ்வளவு அலுப்பான சூழலிலும் உடனடியாகத் தூங்குவதற்கான பயிற்சி எடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் மன அழுத்தம் ஏற்படாமல் உடனே தூங்க முடிகிறதாம். பெட்பிராணிகளோடு தூக்கம் அமெரிக்கர்களில் 71 சதவீதம் பேர், தங்கள் செல்லப்பிராணிகளைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்குகிறார்கள். வைக்கோல் படுக்கை ஜப்பானில் டட்டாமி பெட் எனும் வைக்கோல் மற்றும் குறிப்பிட்ட இழைகளால் ஆன மெல்லிய படுக்கையைத் தூங்கப் பயன்படுத்துகின்றனர். இதுவே உடலை தூக்கத்தில் நெகிழ்த்த உதவுவதாக கூறுகிறார்கள் ஜப்பான்வாசிகள். சாப்பிட்டவுடன் தூக்கம் விவசாய வேலைகள் செய்பவர்கள் சாப்பிட்டவுடன் இருபது நிமிடம் கண்ணசருவார்களே அதேதான். அப்படியே இன்றுவரை ஸ்பெயினில் தொடருகிறது. ஆனால் ஆபீசில் இப்படி தூங்க முடியு

தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா?

படம்
Pinterest/we heart it ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா? ஆர்க்கிமிடிஸ் யுரேகா என்று கத்தியதை மனதில் வைத்து இப்படியொரு கேள்வி வந்திருக்கலாம். நாம் எதை மனதில் தீவிரமாக யோசிக்கொண்டு இருக்கிறோமோ அதற்கான தீர்வு நமக்கு கிடைக்கும். அது எப்படி கிடைக்கிறது என்பதுதான் மேஜிக். தூங்கும்போது பாடலைக்கேட்டுக்கொண்டே தூங்குகிறார் ஒருவர் என்றால் நம்மால் அதனை பதிவு செய்ய முடியாது. தூங்கும்போது மூளை ஓய்வெடுக்கிறது என்பது உண்மை. தூக்கத்தில் கற்பதை ஹிப்னோபீடியா என்று கூறுகின்றனர். இதற்கு மருத்துவரீதியாக வரலாறும் உண்டு. 1914 ஆம் ஆண்டு ஜெர்மன் உளவியலாளர் ரோசா ஹெய்ன் என்பவர் இதுகுறித்த ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒருநாளில் தினசரி கற்பதைவிட மாலைநேரத்தில் நாம் கற்பது அதிகம் என்பது இவரின் ஆய்வு முடிவு. தூக்கம்தான் நமது அன்றைய நிகழ்ச்சி நினைவுகளை மாற்றி அமைத்து சேமிக்க வேண்டும் என்றால் சேமித்தும் இல்லையென்றால் அதனை அழித்து நம் மனதில் உணர்ச்சி சமநிலையை ஏற்படுத்துகிறது. 1950 ஆம்ஆண்டு செய்த ஆய்வுகளில் தூக்கத்தில் கற்பது என்பது உடான்ஸ் ப்ரோ

போதைக்கு பயன்படும் தூக்க குறைபாடு மருந்து!

படம்
it's D Pharmacy இன்சோம்னியா மருந்து போதைக்கு பயன்படுகிறதா? நைட்ராஸெபாம்(Nitrazepam) எனும் மருந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. காரணம், இதனை போதைக்காக மது, கஞ்சா உள்ளிட்ட பிற போதைப்பொருட்களும் பயன்படுத்தி அதிக போதையைப் பெற்று வருகின்றனர். பிற பெயர்கள் பட்டன், படையப்பா, நைட்ரஸ் நைட்ராஸெபாம் தூக்க குறைபாடு, பதற்றம் ஆகிய பிரச்னைகளுக்காக மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பக்கவிளைவுகள் என்ன? மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். மனநிலை மாற்றங்களைத் தரும். குறிப்பாக கோபம், குழப்பம், பதற்றம், சோர்வான மனநிலை, நினைவுத்திறன் இழப்பு, அரைத்தூக்க நிலை, உணர்ச்சியற்ற நிலை. கர்ப்பிணிகள் சாப்பிட்டால் குழந்தையின் உடல்நலனுக்கு பாதிப்பைத் தரும் என மருத்துவர் சி.ஜே. ஜான்  எச்சரிக்கிறார். நன்றி: TOI

தியானம் செய்யும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தியானம் செய்யும்போது உடலுக்கு என்னாகிறது? கண்களை மூடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதனால், நான் தியானம் செய்வதில்லை. உண்மையிலேயே ஆழ்ந்து தியானம் செய்யும்போது மூளையில் பல்வேறு மாறுதல் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மூளையிலுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான அமிக்டலா(amygdala), மெல்ல ஓய்வு பெறுவது தியானம் செய்யும்போதுதான். இதனால்தான் தியானம் செய்தபின் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள்.  உடலில் காயம்பட்டிருந்தால் அல்லது திருப்பால் பூசியும் தீராத எரிச்சல்கள் மெல்ல ஓய்கின்றன. அதாவது, பாதிப்பு குறைவதோடு அவை குணமாகும் வாய்ப்பும் உருவாகிறது.  பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால் கூட பச்சைப் பிள்ளையாய் சிரிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதும் தியானத்தில்தான். இதனால் இதயம் நல்லெண்ணெய் பயன்படுத்தாமலேயே இதயம் ரிலாக்ஸ் ஆகிறது.  சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையவும், முதுகுவலி தீரவும் வாய்ப்புள்ளது. அதற்காக தியானம் என்பதை சர்வரோக நிவாரணியாக நினைக்காதீர்கள். மனதிற்கு நிம்மதி தருவது. இதன் பின்னர் விஷயங்