இடுகைகள்

நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூஸ் ரூம்: நின்ஜாக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து பட்டம் பெற்ற உலகின் முதல் மாணவர்

படம்
நின்ஜா படிப்பில் முதுகலை பெற்ற முதல் மாணவர் நியூஸ் ரூம் ஆஹா! பழங்குடிகளுக்கான பள்ளி! தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு காட்டுப்பகுதியில் 150 பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் 40 பிள்ளைகளுக்கு, நீலம் தோகு என்ற பெயரில் கல்வி கற்பிக்கும் மையத்தை உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் எஸ்ரம் சந்தோஷ் ஸ்வாரோ என்ற மாணவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்த தொடங்கியுள்ளார். பொதுமுடக்கத்தின்போது, பழங்குடிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கியவர், குழந்தைகள் கல்வி கற்கும் அவசியத்தை உணர்ந்து இப்பள்ளியைத் தொடங்கியுள்ளார். நியூஸ் மினிட்   அடச்சே! மரணதண்டனை பிரான்ஸில் வாழ்ந்து வந்த பத்திரிகையாளர் ரூஹோலாஸாமுக்கு ஈரானிய அரசு மரணதண்டனை விதித்துள்ளது. ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் இவர். 2017-18ஆம் ஆண்டில் ஈரானில் நடைபெற்ற புரட்சி போராட்டங்களை ஊக்கப்படுத்தியதாக இவர் நடத்திய அமாத் நியூஸ் என்ற இணைய செய்தி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஈரான் அரசால் ஸாம் கைதானார். இதனை ஸாம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டார் என நாடுகடந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு விமர்சித்தது.  சிஎன்எ

நியூஸ் ரூம்: ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு உதவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்

படம்
அப்படியா? தேர்வுக்கு எதிர்ப்பு திருச்சி என்ஐடி மாணவர்கள் ஆன்லைன் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமுடக்கத்தால் பலரும் தங்களது கணினிகளை பயிலும் கல்வி மையத்தில் வைத்திருப்பதாலும், தொழில்நுட்ப பிரச்னைகளாலும் தேர்வை எழுவது கடினம் என்று கூறியுள்ளனர். ”ஆன்லைன் தேர்வு எழுதுவதில் பிரச்னைகள் இருப்பவர்கள் கல்லூரி திறந்தபின் தேர்வுகளை எழுதலாம்” என தொழில்நுட்ப கழக இயக்குநர் மினி சாஜி தாமஸ் கூறியுள்ளார். நியூஸ்மினிட் அட வேலைநேரம் குறைவு உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் குறைந்துள்ளதாக உலக தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. தொழிலாளர்களின் வேலை நேரம் சராசரியாக 14 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் 18.3, ஆசியாவில் 13.9 என வேலைநேரம் குறைந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு பற்றி உலக தொழிலாளர் அமைப்பு விர்ச்சுவல் முறையில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறது. யுபிஐ   ஆஹா! புதிய செயற்கைக்கோள் தொழிலதிபர் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. ஏப்ரலில் விண்ணுக்கு அனுப்பவிருந்த GPS III SV03,

நியூஸ் ரூம்: மாணவர்களை கற்க ஊக்கப்படுத்தும் ஜானகி டீச்சர்!

படம்
ஆஹா வெளிப்படைத் தன்மை! கேரள அரசு ஆட்டிசக்குறைபாட்டிற்கு தெரபி சிகிச்சை அளிக்கும் மையங்களுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016 பிரிவு 51இன்படி விதிமுறைகள் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல் படி நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் ஆட்டிசக் குறைபாட்டு சிகிச்சை மையங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தெரபி மையங்களை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் 3 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. நியூஸ்மினிட் அட புது வாத்தியார்! சென்னையைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் அபிஷேக், திருமதி ஜானகி என்ற கற்பனை பாத்திரத்தை உருவாக்கி பிரபலமாகி உள்ளார். இப்பாத்திரம் சென்னையைச் சேர்ந்த ஆசிரியையாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளித்தேர்வுகள் ரத்தான அறிவிப்பையொட்டி ஜூன் 9 அன்று உருவாக்கப்பட்ட திருமதி ஜானகி பேசும் வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் புகழ்பெற்று வலம்வருகின்றன. இதனை உருவாக்கிய அபிஷேக், பொறியியல் பட்டதாரி ஆவார். அப்படியா? சீனாவின் நடவடிக்கை! ஹாங்காங்கில் சீன அரசு, தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இங்கு தேசிய பாதுகாப்

நியூஸ் ரூம்- ஆக்கப்பூர்வமான செய்திகள் ஐந்து !

படம்
ஓஹோ ஸ்மார்ட் லாக்டௌன்! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் ஜூன் 30 வரை உள்ளது. இதற்குப்பிறகு நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் ஸ்மார்ட் லாக்டௌன் அமலாக வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று உள்ள தெருக்களில் தீவிரமாக கண்காணித்து புதிய நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் ஸ்மார்ட் லாக்டௌன். இம்முறையில் திரு.வி.க நகர், கே.கே. நகரில் எம்.ஜிஆர் நகர் ஆகிய பகுதிகள் பாதிப்பிலிருந்து நீங்கியுள்ளன. அடச்சே! ஆப்கனில் பயங்கரம்! ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர், நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். சர்க்கி எனும் பகுதியின் அருகே பயணி ஒருவரின் வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு செயல்பாட்டாளர்களின் இறப்பிற்கு, ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. ஆஹா கொரோனா குழந்தைகள்! கோவிட் -19க்கு எதிராக உலக நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸில் இதனால் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என

நியூஸ் ஜங்க்ஷன் - ஆக்கப்பூர்வமான செய்திகள் ஐந்து

படம்
பத்திரிக்கை  அடப்பாவமே கடன் கடன்தான்! கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி, அமடே லஷ்மிநாராயணா. இவர் தனது கிராமத்திலிருந்து வங்கிக்கு 15கி.மீ. நடந்து சென்று வங்கிக்கடன் கட்டியிருக்கிறார். தொகை 3 ரூபாய் 45 பைசாக்கள். வங்கியில் கணக்குத் தணிக்கை நடப்பதால், இத்தொகையை அவர் கட்டியே ஆகவேண்டும் என வங்கி மேலாளர் கறார் காட்டியிருக்கிறார். இந்த சிறு தொகைக்காக இப்படி அலைய வைத்தார்கள் என நொந்துபோயுள்ளார் நாராயணா. இந்தியா டைம்ஸ் ஆஹா தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ பரிசீலித்து வருகிறது. வானியல் ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களும் இனி அனுமதிக்கப்பட உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2, 300 ஏக்கர் நிலப்பரப்பை தேடிவருவதாக இஸ்ரோ தலைவரும், விண்வெளித்துறை செயலருமான கே.சிவன் தெரிவித்துள்ளார். உலகளவில் இத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு மூன்று சதவீதம் ஆகும்.     ஐயையோ உணவில் ஒட்டுண்ணி! அமெரிக்காவில் உள்ள வால்மார்ட், ஆல்டி ஆகிய சிறப்பங்காடிகளில் விற்ற சாலட் பாக்கெட்டுகளை வாங்கிய 200 பேர் உடல்நலம் குன்றியுள்ளனர். இந்த சாலட்டில் சைக

நியூஸ் பிட்ஸ்! - மும்பையில் இறந்த சேமிப்பு மன்னர்!

படம்
சேமிப்பு மன்னர்! மும்பையில் ரயில் பாதையில் இறந்துகிடந்த பிச்சைக்காரரிடம் 11.5 லட்சம் ரூபாய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைப் பூர்விகமாக கொண்ட பிராடிசந்த் பன்னாராம்ஜி  என்று பெயர் அறியப்பட்டுள்ளார். இவர்,  நாணயங்களாக 1.75 லட்சமும், வைப்புத் தொகையாக 8.77 லட்சரூபாயும், சேமிப்புக்கணக்கில் 96 ஆயிரம் ரூபாயும் சேமித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சூழல் போராட்டம்! உலகமெங்கும் அரசுகளுக்கு எதிரான சூழல் போராட்டம் வெடித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சட்டமறுப்புஇயக்கமாக சூழலியலாளர்கள் தெருக்களில் அமைதியாகக் கூடி போராடி வருகின்றனர். லண்டனில் இருநூறுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மையான கங்கை! 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மையான கங்கை திட்டத்தொகை ஐந்து ஆண்டுகளில் 15 மடங்கு உயர்ந்துள்ளது. மத்தியஅரசு 2015-2020 காலகட்டத்தில் தூய்மைப்பணிக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. தற்போது நமாமி கங்கா திட்டத்தொகை 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார் தூய்மை கங்கை திட்ட இயக்குநரான ராஜீவ் ரஞ்சன் மிஷ்ரா.