நியூஸ் ரூம்: ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு உதவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்
அப்படியா?
தேர்வுக்கு எதிர்ப்பு
திருச்சி என்ஐடி மாணவர்கள் ஆன்லைன் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமுடக்கத்தால் பலரும் தங்களது கணினிகளை பயிலும் கல்வி மையத்தில் வைத்திருப்பதாலும், தொழில்நுட்ப பிரச்னைகளாலும் தேர்வை எழுவது கடினம் என்று கூறியுள்ளனர். ”ஆன்லைன் தேர்வு எழுதுவதில் பிரச்னைகள் இருப்பவர்கள் கல்லூரி திறந்தபின் தேர்வுகளை எழுதலாம்” என தொழில்நுட்ப கழக இயக்குநர் மினி சாஜி தாமஸ் கூறியுள்ளார்.
நியூஸ்மினிட்
அட
வேலைநேரம் குறைவு
உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் குறைந்துள்ளதாக உலக தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. தொழிலாளர்களின் வேலை நேரம் சராசரியாக 14 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் 18.3, ஆசியாவில் 13.9 என வேலைநேரம் குறைந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு பற்றி உலக தொழிலாளர் அமைப்பு விர்ச்சுவல் முறையில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறது.
யுபிஐ
ஆஹா!
புதிய செயற்கைக்கோள்
தொழிலதிபர் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. ஏப்ரலில் விண்ணுக்கு அனுப்பவிருந்த GPS III SV03, என்ற செயற்கைக்கோள் ஃபால்கன் -9 ராக்கெட் மூலம் புளோரிடா மையத்திலிருந்து செலுத்தப்பட்டது. ஏப்ரல் மாதமே செலுத்தப்பட திட்டமிட்டிருந்த இந்த செயற்கைக்கோள், பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
யுபிஐ
அட!
நிதியுதவி!
ஆப்ரோ அமெரிக்கர்களின் நிதி நிறுவனங்களுக்கு இரண்டு சதவீத நிதியுதவியை(10 கோடி ரூபாய்) அளிக்க ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் முன்வந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஆப்ரோ அமெரிக்கர்களின் நிறுவனங்களில் பிற மக்களின் முதலீடு ஒரு சதவீதமாகவே உள்ளது. ஆப்ரோ அமெரிக்க இனக்குழுவினர் புதிய தொழில்களை தொடங்கவும், வீடுகளை வாங்கவும், கல்லூரிக்கான கட்டணங்களை கட்டவும் இந்த தொகை உதவும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிஎன்என்
Researchers develop glove to translate American Sign Language
A team of University of California, Los Angeles, scientists announced they have developed a glove that translates American Sign Language into speech in real time.The UCLA team, who published their research in the journal Nature Electronics, said the glove contains sensors in the digits that identify each word, phrase or letter in American Sign Language and transmits them wirelessly to a smartphone app that translates them at a rate of one word per second.
யுபிஐ
ஆப்பிரிக்க நாடான காங்கோ,
ஜூன் 30, 1960ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது. இடதுபுறம் நிற்கும்
பேட்ரிஸ் லுமும்பா பிரதமராக பதவியேற்று கையெழுத்திடுகிறார். அருகில் குடியரசுத் தலைவரான
ஜோசப் கசாவுபு உள்ளார். காங்கோ நாடு குடியரசு நாடாகி இந்த ஆண்டோடு அறுபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக