நியூஸ் ரூம்: நின்ஜாக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து பட்டம் பெற்ற உலகின் முதல் மாணவர்
நின்ஜா படிப்பில் முதுகலை பெற்ற முதல் மாணவர் |
நியூஸ் ரூம்
ஆஹா!
பழங்குடிகளுக்கான பள்ளி!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு காட்டுப்பகுதியில் 150 பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் 40 பிள்ளைகளுக்கு, நீலம் தோகு என்ற பெயரில் கல்வி கற்பிக்கும் மையத்தை உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் எஸ்ரம் சந்தோஷ் ஸ்வாரோ என்ற மாணவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்த தொடங்கியுள்ளார். பொதுமுடக்கத்தின்போது, பழங்குடிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கியவர், குழந்தைகள் கல்வி கற்கும் அவசியத்தை உணர்ந்து இப்பள்ளியைத் தொடங்கியுள்ளார்.
நியூஸ் மினிட்
அடச்சே!
மரணதண்டனை
பிரான்ஸில் வாழ்ந்து வந்த பத்திரிகையாளர் ரூஹோலாஸாமுக்கு ஈரானிய அரசு மரணதண்டனை விதித்துள்ளது. ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் இவர். 2017-18ஆம் ஆண்டில் ஈரானில் நடைபெற்ற புரட்சி போராட்டங்களை ஊக்கப்படுத்தியதாக இவர் நடத்திய அமாத் நியூஸ் என்ற இணைய செய்தி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஈரான் அரசால் ஸாம் கைதானார். இதனை ஸாம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டார் என நாடுகடந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு விமர்சித்தது.
சிஎன்என்
ஓஹா!
முதல்வன்!
ஜப்பானைச் சேர்ந்த கெனிட்சி மிட்சுபாசி என்பவர் நின்ஜாக்களைப்பற்றி படிப்பில் உலகிலேயே முதல் நபராக முதுகலைப்பட்டம் வென்றிருக்கிறார். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த தற்காப்புக்கலை கற்ற இனக்குழுவினர் நின்ஜாக்கள். மீ பல்கலையில் நின்ஜாக்களின் வரலாறு, வாழ்க்கை முறை தற்காப்புகலை, கொரில்லா தாக்குதல் முறை ஆகியவற்றை படிப்பு மூலம் கற்றிருக்கிறார். மீ பல்கலைகழகத்தில் நின்ஜா படிப்பிற்கென தொடங்கப்பட்ட தனி மையத்தில்தான் கெனிட்சி படித்து சாதித்திருக்கிறார்.
பரிதாபம்
யானைகள் இறப்பு
தென் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350 யானைகள் இறந்துள்ளன. குடிநீர், உணவு, வெப்பம் காரணமாக கடந்த மே, ஜூன் மாதங்களில் முறையே 169, 187 என யானைகளை பலியாகியுள்ளன. அரசு தரப்பு 280 யானைகளின் இறப்பை உறுதி செய்து, யானைகளின் உடலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. சோதனைகளின் முடிவில்தான் யானைகளின் இறப்பிற்கு என்ன காரணம் என்று தெரியும் என வனத்துறை இயக்குநர் சிரில் தாவோலா கூறியுள்ளார்.
Microsoft's New Initiative Aims to Teach 25 Million People Digital Work Skills
The US technology titan said it will back the effort with $20 million (roughly Rs. 151 crores) in cash grants to nonprofit organisations and tap into resources at developer-focused platform GitHub and career-oriented social network LinkedIn."One of the key steps needed to foster a safe and successful economic recovery is expanded access to the digital skills needed to fill new jobs," Microsoft president Brad Smith said in a blog post.
படக்குறிப்பு
பல்கேரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியைக் காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். இவர்கள் யாரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. முக கவசமும் அணியவில்லை. இடம்: வாசில் லெவிஸ்கி தேசிய மைதானம்
கருத்துகள்
கருத்துரையிடுக