இடுகைகள்

மக்கள்தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!

படம்
      காணாமல் போன குளோனிங் முறை ! நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன . ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும் , ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை . இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம் . 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது . இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது . அதைத் தொடர்ந்து முயல் , எலி , குதிரை , நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன . குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன . ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது . தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை , மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை . தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த

ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டக்காரர்கள்!

படம்
இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு கட்சிகள் பின்னாளில் ஆதரவு கொடுத்தாலும், பெரிய தலைவர்களின் முன்னணி இன்றியே இப்போராட்டங்கள் கச்சிதமாக உதவுகின்றன. அனைத்துக்கும் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உதவி வருகின்றன. இவர்களில் முக்கியமான சில போராட்டக்கார ர்களைப் பற்றி பார்ப்போம்.  சரித்தர் பார்தி - 27 சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் 2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்தே அரசு அமைப்புகள், கொள்கைகள் அனைத்தும் வேறுபடத்தொடங்கின. அவர்கள் தம் கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைக்கத் தொடங்கினர். இது ஆபத்தானது என்று எனக்குத் தோன்றியது என்கிறார். இதன் விளைவாக இந்தியாவில் போராட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். இதனை இவர் மற்றொரு மாணவர்களின் போராட்டமாக கருதவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டமாக கருதுகிறார்.  ஷால்மொலி ஹால்டர், 26 மேம்பாட்டு ஆலோசகர் அரசு மக்களின் மதிப்புகளுக்கு உணர்ச்சிகளுக்கு இடமளிக்கவில்லை என்கிறார் ஹால்டர். இவர், அரசு மதம், குடியுரிம

பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா? - என்ஆர்சியில் மாட்டும் குழந்தைகள்!

படம்
reddit என்ஆர்சி திட்டத்தில் உங்களை இந்தியர் என நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை என இந்திய அரசு கூறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிறப்புச்சான்றிதழை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் இன்னொரு பிரச்னை உள்ளது. அதாவது படிக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அதனை காட்டித்தானே பள்ளியில் வயதை சொல்லி சேர்ப்பார்கள். ஆனால் பழங்குடி, பட்டியலின மக்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. அவர்களிடம் எப்படி மேற்சொன்ன அரசு ஆவணங்கள் இருக்கும். 2005க்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழை வைத்திருப்பார்கள். காரணம், அந்தளவு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய காலத்தவர்கள் பிறப்பு சான்றிதழை பார்த்திருப்பது கடினம். அது முக்கியமான ஆவணமாக முதல் வகுப்பு சேரும்போது இருந்திருக்கும். அதற்குப்பிறகு பள்ளியில் கொடுக்கும் ஆவணங்களை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று 63 வயதாகும் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ்கள் தேவை, அவர்களின் பெற்றோர் வயதாகி இருந்தாலும் அவர்களுக்கும் பிறப்ப

ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடலாமா?

படம்
மிஸ்டர் ரோனி ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? தாராளமாக. பெண்களே அம்மாத்திரைகளை சாப்பிட நேர்ந்துகொண்டவர்கள் என ஏன் நினைக்கவேண்டும். ஆண்கள் புரோஜெஸ்டிரான் மாத்திரைகளை குறிப்பிட்ட கால அளவு சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். நிரந்தரமாக குறைந்துவிடாது. குறிப்பிட கால அளவில் மட்டும் குறையும். பாலினம் மாறுபவர்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அது உடலில் பெண்தன்மையை அதிகரிக்கும். அதேசமயம் இயற்கைக்கு மாறாக ஹார்மோன் ஊசி, மருந்துகளை சாப்பிடும்போது பல்வேறு பக்கவிளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும். எனவே, பெண்களுக்கான கருத்தடை பற்றி கவலைப்படாமல் ஆண்களும் இந்த சமாச்சாரத்தில் பெண்களுக்கு உதவலாம். மருத்துவரின் ஆலோசனைப்படிதான் இம்மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்பதை மறக்காதீர்கள். மேலும் இன்று ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், ஜெல்கள் என நிறைய உள்ளன. எனவே பயப்பட வேண்டாம். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு! பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது. பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்