இடுகைகள்

முத்தாரம் நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்"

படம்
" நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் " நேர்காணல் : ஜெயன் பெருமாள் , நிலநடுக்க ஆய்வாளர் தமிழில் : ச . அன்பரசு ஜெயன் பெருமாள் டேராடூனின் வாடியா புவியியல் ஆய்வை மையத்தில் பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர் . இமாலயத்தில் ஏற்படும் புவியியல் மாறுதல்களை செயற்கைக்கோள் , ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து வருகிறார் . சென்னை பிரசிடென்சி கல்லூரியில் புவியியல் முதுகலைப்பட்டம் பெற்ற பெருமாள் , முனைவர் பட்டம் பெற்றபின் 4 ஆண்டுகள் சுரங்க புவியியலாளராக பணியாற்றியவர் , 2002 ஆம் ஆண்டிலிருந்து வாடியா ஆய்வுமையத்தில் பணி . தற்போது அமெரிக்க குழுக்களோடு இணைந்து ஆய்வுப்பணி செய்யும் பெருமாளோடு உரையாடினோம் . நிலநடுக்க ஆய்வு என்பது எந்தவகையில் முக்கியமானது ? இமாலயத்தின் நிலத்தட்டு இந்தியாவில் மிக வேகமாக மாறும் தட்டுகள் என்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது . மக்களின் அடர்த்தியும் , விவசாயமும் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதும் , திட்டமிடப்படாத கட்டிட அமைப்பும் நிலநடுக்க அபாயத்தை அதிகரிக்

இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட பணமதிப்புநீக்க நடவடிக்கை வெற்றி பெறவில்லை"

படம்
"இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட  பணமதிப்புநீக்க நடவடிக்கை வெற்றி  பெறவில்லை" நேர்காணல் : ரகுராம்ராஜன் , முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் தமிழில் : ச . அன்பரசு இந்தியாவின் 23 ஆவது ரிசர்வ் வங்கி ஆளுநராக (2013-16) பணியாற்றிய ரகுராம்ராஜன் , தற்போது சிகாகோ பிஸினஸ் பள்ளியின் நிதித்துறை பேராசிரியர் . IMF இன் முன்னாள் பொருளாதார தலைவரான ரகுராம் ராஜன் , I Do What I Do: On Reforms,Rhetoric and Resolve  என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார் . இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் ? நம்பிக்கை அளிக்கிறது . ஜிஎஸ்டி சீரமைப்பை அரசியல் தடைகளை தாண்டி அமல்படுத்தியதால் வரி ஏய்ப்பு குறைந்து நாட்டினை ஒரே சந்தையாக அமைப்பது பெரிய விஷயம் . ரியல்எஸ்டேட் மசோதா , ஜிஎஸ்டி , தொழில்முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்பு , தனியார் முதலீடு ஆகியவை அதிகரிக்கும் . ஆனால் இவை சரிவர நிகழவில்லை . வங்கிகளின் பிரச்னைகளை விரைவில் தீர்த்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம் . இந்தியாவின் பிரச்னையே