இடுகைகள்

வலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலியில்லாத அழகு சிகிச்சை வருகிறது!- மூலக்கூறு சிகிச்சை முறை!

படம்
வலியில்லாத அழகு சிகிச்சை! கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வலியற்ற முக அழகு சிகிச்சை முறையான மூலக்கூறு சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கு இணையாக மக்கள் அறுவை சிகிச்சைக்கு பயப்படுகின்றனர். காரணம், இதிலுள்ள வலி, ரத்தப்போக்கு, தையல் ஆகியவைதான்.  தற்போது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வலியற்ற அழகு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். இதற்கு மோலிக்குலர் சர்ஜரி (molecular Surgery) என்று பெயர். உடலிலுள்ள திசுக்களின் வடிவத்தை மாற்றிச்செய்யும் இச்சிகிச்சை, அழகு சார்ந்த விஷயங்களுக்கானது. ”எளிமையாக அனஸ்தீசியா கொடுத்து ஐந்து  நிமிடங்களில் இந்த மூலக்கூறு சிகிச்சையைச் செய்து முடிக்கலாம். இதன் செலவும் மிக குறைவானது” என்கிறார் மருத்துவர் மைக்கேல் ஹில். இம்முறையில் காது, மூக்கு ஆகியவற்றை சீர் செய்யலாம். சிறிய ஊசிகள், மின்சாரம், 3டி வடிவ பொருட்களை இதில் பயன்படுத்துகின்றனர். இதில் முகத்திலுள்ள குருத்தெலும்பில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலுத்தி வளையும் தன்மைக்கு மாற்றுகின்றனர். பின்னர், அதனைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். திசுக்களை அழிக்காமல் குருத்தெலும்பை வளைக

தினசரி எக்சர்சைஸ் செய்ய மலைப்பாக இருக்கிறதா?

படம்
டாக்டர் எக்ஸ் திடீரென வார் படம் பார்த்து காலித், கபீர் போல உடம்பை ஏற்றுகிறேன். ஹிரித்திக் ரோஷனுக்கு சர்வதேச அளவில் டஃப் கொடுக்கிறேன் என நினைப்போம். அது மனப்பிராந்தி என்பது கேட் தாழ்ப்பாளை விலக்க அம்மாவை கூப்பிடும்போதே தெரிந்துவிடும். ஒருநாள் எக்சர்சைஸ் ஒன்பது நாள் ரெஸ்ட் என்பதுதான் நமக்கான விதி. ஏன் இப்படி நடக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? உடம்பில் சரியான அளவு நீர்ச்சத்து இல்லை. எலக்ட்ரோலைட்ஸ் இல்லை என ஓசோன் தண்ணீர் பாட்டில் விற்கிற கதைக்கு ஆதாரம் கிடையாது. என்ன செய்யலாம்? நடைமுறையில் வலிக்கும் தசைக்கு மெல்ல கைகளால் நீவி ஒத்தடம் போல கொடுத்தீர்கள் என்றால் அன்றும் சுகம் கிடைக்கும். அடுத்தநாள் வலியை நினைக்காமல் தொப்பை குறைய வாக்கிங் செல்லவும் முடியும். வாக்கிங்தான் போவீர்கள். ஆனால் உடலில் வயிறு, மார்பு, கால்கள் என சில இடங்களில் கடும் எரிச்சல் உருவாகும். இதற்கு காரணம் ரத்த ஓட்ட மாறுபாடுகள்தான். இதனால் உடல் கொடுக்கும் சிக்னலை அப்படியே ஏற்று மூளை கொடுக்கும் அலார எச்சரிக்கைத்தான் எரிச்சல். இதோடு நிறுத்திக்க என்று அதனை நினைக்கத் தேவையில்லை. கவனமாக நிதானமாக பயிற்சிகளைச் செய்தால