இடுகைகள்

விலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15.அதிக மின்கட்டணத்தை மக்களிடம் வாங்க ஆடிய ஆட்டம்! - மோசடி மன்னன் அதானி

படம்
  தேசத்திற்காக அதானி உழைத்தபோது.. ஊழலைப் பற்றிய விசாரணை... ஊழலைப்பற்றிய காவல்துறை விசாரணை   விசாரணைக்காலம் 2006-2010 2011ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் குறைகேள் அதிகாரி, 466 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுரங்க தொழிலை செய்பவர்கள் எப்படி பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி முறைகேடாக இரும்புத்தாதுவை கடத்துகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. (ப.12) மாநில அரசில் முறைகேடான ஆட்சி நிர்வாகம், ஊழல் ஆகியவற்றை விசாரிப்பதே குறைகேள் அதிகாரியின் வேலை. அவர் தயாரித்த அறிக்கையில், பெலகிரி அருகே உள்ள துறைமுகத்தை வாடகைக்கு எடுத்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமும், கூடவே இன்னொரு நிறுவனமும் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை அகழ்ந்து எடுத்து விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது. பெலகிரி துறைமுகம், ஊழலுக்கான மைய இடத்தைப் பிடித்தது. மோசடியின் மதிப்பு அக்காலகட்டத்தில் 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்துள்ளதோடு, முறையான ஆதாய உரிமைத்தொகைகளையும் வழங்கவில்லை. இதுபற்றி சுரங்க நிறுவனங்கள் எப்படி நுட்பமாக ஏமாற்றினார்கள் என்பதை த

11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

படம்
  எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா? 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.   தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.   ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு   அனுப்பியது.   பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்   ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,   202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.     லிங்க்டுஇன் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதானி என்டர்பிரைசஸ் நிறுவ

8. மோசடி செய்துவிட்டு நிறுவனத்தின் பெயரை மாற்றிய கேட்டன் பரேக் - மோசடி மன்னன் அதானி

படம்
  இந்தியாவில் இயங்கிய பங்குத் தரகர், கேட்டன் பரேக். முறைகேடுகள் பற்றிய தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிய வந்ததும் அவரும், அவரின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளும் தங்களது பங்கு வர்த்தக செயல்பாடுகளை லண்டனுக்கு இடம் மாற்றிக்கொண்டனர். பங்குச்சந்தையைச் சேர்ந்த பங்கு தரகர்கள், கேட்டன் பரேக் தற்போதும் கூட தனது தொழிலை கைவிடாமல் செய்து வருவதாக கூறினர். ‘’கேட்டன் பரேக்கிடம் முன்னர் பங்கு வர்த்தகம் செய்த தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் இப்போதும் அவரிடம் தொடர்பிலுள்ளனர்’’ கேட்டன் பரேக்கிற்கு நெருங்கிய தொடர்பு கொண்ட பங்கு வர்த்தகர் தகவல் கூறினார். இந்திய ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கேட்டன் பரேக் செய்த முறைகேடுகளைப் பற்றி விசாரித்து, இறுதியாக தடை, அபராதம் ஆகியவற்றை விதித்தனர். 2001ஆம் ஆண்டு இந்திய அரசு, கேட்டன் பரேக்கிற்கு தண்டனை விதித்தது. பிறகுதான், வேறுவழியில்லலாத கேட்டன் பரேக் தனது செயல்பாடுகளை இங்கிலாந்திலுள்ள லண்டன் நகருக்கு மாற்றிக் கொண்டார். இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து பெருநிறுவன ஆவணங்களின்படி தெரிய வந்தது. ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு பல்வேறு நபர்கள் மூலம் கிடைத்த தகவல

அலட்டிக்கொள்ளாத ஆழமான பங்கு மோசடி - மோசடி மன்னன் - அதானி - பகுதி 5

படம்
  ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை 1999 – 2001ஆம் ஆண்டு கணக்குத் தணிக்கையாளரான தர்மேஷ் தோஷி, பங்கு முறைகேட்டில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. இந்த முறைகேட்டில் தோஷியுடன் கைகோத்து செயல்பட்டவர் கேட்டன் பரேக். இவர் மீதும் வழக்கு பதிவானது. அமெரிக்காவில் நடைபெற்ற பெர்னி மேடாஃப் ஊழல் போலவே, இந்தியாவில் நடைபெற்ற பங்குச்சந்தை   ஊழலை கேட்டன் பரேக் செய்தார். இது, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே   மிகப்பெரும்   ஊழலாகும்.     இந்த முறைகேட்டின் மூலம் விலை உயர்ந்த பெருநிறுவனப் பங்குகளில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த தகவலை செபி அமைப்பும், நாடாளுமன்ற குழுவின் விசாரணையும் உறுதி செய்துள்ளன. ஊழலில் ஈடுபட்டதற்காக அதானி குழுமத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர். 2002ஆம் ஆண்டு, தர்மேஷ் தோஷி தன்னை சூழும் ஆபத்தைப் புரிந்துகொண்டு காவல்துறை கைது செய்யும் முன்னரே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். 2006ஆம் ஆண்டு, எலாரா கேபிடல் நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவன இயக்குநர் ராஜ் பட், தர்மேஷ் தோஷியுடன் வணிக ஒப்பந்தங்களைச்   செய்துகொண்டார்.   இந்த காலகட்டத்தில் தோ

மோசடி மன்னன் அதானி - ராஜேஷ் அதானி, சமீர் வோரா, வினோத் அதானி செய்த குற்றங்கள்

படம்
  கௌதம் அதானி படம் - இந்தியா டுடே அதானி குழும நிறுவனங்கள், பொதுத்துறை   வங்கிகளில் பெருமளவு கடனைப் பெற்றுள்ளன. மொத்தமாக கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க முதலீட்டாளர்கள் தங்கள் ஈக்விட்டி பங்குகளை கொடுக்கலாம். ஆனால் இந்த பங்குகளை வைத்து கடனை எளிதாக தீர்க்க முடியாது. பங்குகளின் விலை குறைந்துபோனால், கடன் வழங்கியவர் உடனே கடனைத் திருப்பிக்கட்ட கோருவார். இச்சூழ்நிலையை சமாளிக்க நிறுவனம் ஈக்விட்டி பங்குகளை விற்று பணத்தை திரட்டும் நிலை உருவாகும். பங்குகளின் விலை குறைந்த நிலையில் அவற்றை தொடர்ந்து விற்கையில் அதன் விலை மேலும் குறையும். அதானி குழுமத்தில் வெளியே தெரிந்த கடன் அளவைத் தாண்டியும், அதிக கடனைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வாங்குபவர், அதன்   பகுதி உரிமையாளர் போல என புரிந்துகொள்ளலாம். இந்த பங்குதாரர்கள், நிர்வாக குழுவினர் எடுக்கும் தொழில்ரீதியான முடிவுகளுக்கு ஆதரவாக அல்லது   எதிராக வாக்களிக்க முடியும். நிறுவனம் பெறும் வருமானத்தில் ஈக்விட்டி பங்குகளைப் பெறுபவர்களுக்கு பங்குண்டு. அதானி குழுமம், கௌதம் அதானியின் குடும்ப உறுப