தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 3 -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
ஆண்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? நிச்சயமாக இல்லை (சிரிக்கிறார்). என்னுடைய முதல் படமான மறுகட்டமைப்பு படத்தினைப் பாருங்கள். பெண்ணின் பார்வையில் கதையினைக் கூறி, மனைவி கணவனை ஏன் கொன்றாள் என்று கதை அவளது பார்வையில் பயணிக்கும். பயணிக்கும் வீரர்கள் படத்தில் தன் முன் உடையைக் கழற்றும் ஆணைப் பார்த்து பெண் சிரிப்பாள். இப்படி காட்சிகளை உருவாக்கியதால் நான் பெண்ணியவாதி என்று அர்த்தம் அல்ல. பாரம்பரியமான கருத்தியல்களுக்கு நான் எதிராக இருக்கிறேன். ஆண், பெண், கருப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் என இவர்களை ஊக்கப்படுத்தி மூளைக்கும் உடலுக்குமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பல திரைப்பட இயக்குநர்கள் தொலைக்காட்சி, காணொளி மற்றும் கணினியின் யுகத்தில் தனிப்பட்ட இயக்குநர்கள் என்பவர்களின் படங்களுக்கான நேரம் இனி இல்லை; அவை முடிந்துவிட்டது; சினிமா என்பதற்கான காலமே இறந்தகாலம் ஆகிவிட்டது என்று சிலர் கூறுகிறார்களே? இல்லை. உலகத்திற்கு சினிமா என்பது எப்போதையும் விட இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது. நாம் வாழும் உலகம் அடையும் சீர்கேட்டிலிருந்து அதனைக் காப்பாற்றுவதற்கான இறுதி பாதுகாப்பு வடிவம் எ