இடுகைகள்

"இந்தியா புதுமையான தேசம்"-எழுத்தாளர் லாரன்ஸ் ஆஸ்பர்ன்

படம்
முத்தாரம் Mini எழுத்தாளர் , பயண எழுத்தாளர் என்ற இரண்டு பதங்களில் எது உங்களுக்கு பிடித்தமானது ? நீங்கள் கூறும் காலாவதியான பதங்கள் இனியும் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை . லண்டன் - இஸ்தான்புல் வரை நடத பேட்ரிக் லெய் ஃபெர்மர் போன்று இன்று யாரும் பயணிக்க முடியாது . எனது பயண அனுபவங்கள் 2005 ஆம் ஆண்டு நியூயார்க்கர் இதழில் வெளியானது . அதன் பின் பயண எழுத்து என்பதைவிட்டு பயணிக்க தொடங்கிவிட்டேன் . நிறையப்பேர் பயணிக்கிறார்கள் . ஆனால் அதனை எழுதுவது சிலர்தான் . எழுத்து என்பது குறிப்பிட்ட திறமை எனலாமா ? எழுத்து என்பது உள்வாங்குவதுதான் . லீவுக்காக ஊர் சுற்றுபவர்களோடு பயணிப்பதில்லை . எனக்குள் நான் தனிமையாக பயணிக்க விரும்புகிறேன் . வெக்கேஷன் என்பது கடந்துசெல்வது , பயணம் என்பது தங்கிச்செல்வது போல என்பது அமெரிக்க இசையமைப்பாளர் எழுத்தாளர் பால் பௌலெஸ் வாக்கு . இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என்னைப்போன்ற ஆங்கில ஆட்களுக்கு இந்தியா புதுமையான தேசம் . தாய்லாந்தைவிட இந்தியாவில் இலக்கி

காரில் மறைந்துபோன டாக்டர்!

படம்
காணாமல் போன டாக்டர் ! 1902 ஆம் ஆண்டு . " நான் நகரில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன் . நிறைய பணம் கிடைக்கும் " அவ்வளவே கடிதத்திலிருந்த செய்தி . டாக்டர் வில்லியம் ஹோராடியோ பேட்ஸ் இப்படியொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவர் பல்லாண்டுகளாகியும் நியூயார்க் திரும்பவில்லை .   அவரது மனைவி அய்டா சீமன் உறவினர்கள் , நட்புகள் , போலீஸ் என அலைந்தும் கணவர் நியூயார்க் வீட்டுக்கு மீளவில்லை . சோகத்திலேயே 1907 ஆம் ஆண்டு இறந்துபோனார் . பின் 1910 ஆம் ஆண்டு வடக்கு டகோடாவில் கண்டுபிடிக்கப்ட்ட டாக்டர் பேட்ஸூக்கு நியூயார்க் நினைவுகள் ஏதுமில்லை . 1917 இல் கண் மருத்துவரான பேட்ஸ் , கண்ணாடி அணியாமல் சூரியனைப் பார்த்தாலே பார்வை தெளிவாகும் என பாஜகவைப் போல் சூப்பராக யோசித்து சொன்ன தியரிகள் அறிவியல் சங்கங்களாலயே கண்டிக்கப்பட்டன . ஆனால் மக்களிடையே அபரிமித வரவேற்பு கிடைத்தது . மறுமணம் செய்து வாழ்ந்த டாக்டர் பேட்ஸ் 1931 ஆம் ஆண்டு இறந்துபோனாலும் அவரின் அம்னீசியா நினைவு சர்ச்சை ஓயவில்லை . 1942 இல் Art of Seeing என டாக்டர் பேட்ஸின் பக்தர் ஆல்டூ ஹக்ஸ்லே கண்சோதனைகளை முன்வைத்து

தன்மான போராளி ராணி லட்சுமிபாய்!

படம்
என் தேசம் இந்தியா! ராணி லட்சுமிபாய் 1858 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் ஆண்டு குவாலியரில் ஆங்கிலேயருக்கு நடந்த போரை அவர்களும் மறக்கமுடியாது. இந்தியர்களும் மறக்கமுடியாது. அப்போரில்தான் மணிகர்ணிகா வீரமாக போரிட்டு தன் ரத்தத்தை இந்தியாவுக்கென அர்ப்பணித்து மரணத்தை தழுவினார். "அழகும் வசீகரமும் பொருந்தி ராணி, புரட்சி தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர்" என ஜெனரல் சர் ஹ்யூ ரோஸ் தன் குறிப்பில் அன்றே எழுதிவைத்திருக்கிறார். அவர் ராணி எனக் குறிப்பிட்டது மணிகர்ணிகா(மனு) என அழைக்கப்பட்ட ராணி லட்சுமி பாயைத்தான். சிறுவயதிலேயே தன்னை யானைமேல் ஏற்றாமல் தன் மகனை ஆண் என்ற ஒரே காரணத்திற்காக மேலேற்றிய பேஷ்வாவின் மகன் நானா சாகிப்பை எதிர்த்து "எதிர்காலத்தில் உன்னிடம் உள்ளதுபோல பத்து யானைகளை வாங்கி அதில் ஏறி பயணிப்பேன்' என சவால் விடும் தளராத தன்மானம் ராணியின் உடலில் ஆயுள் முழுவதும் குறையவில்லை. எத்தனை சாதித்த பெண்களிடமும் கணவருக்கு உங்கள் கையில் செய்த எந்த உணவு பிடிக்கும் என்று இன்றுவரை மைக்குகளை நீட்டும் பத்திரிகையாளர்கள் உண்டு. ராணி லட்சுமிபாய் மரப்பாச்சி பொம்மைகளை விளையாடும் வயதிலே குதி

நேர்காணல்: "பாகிஸ்தானில் ஜனநாய ஆட்சிக்கு வாய்ப்பில்லை"

படம்
முத்தாரம் நேர்காணல் " பாகிஸ்தானில் ஜனநாய ஆட்சிக்கு   வாய்ப்பில்லை " ஹூசைன் ஹக்கானி , முன்னாள் பாகிஸ்தான் தூதர் . தமிழில் : ச . அன்பரசு ஹூசைன் ஹக்கானி அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக (2008-2011), பணியாற்றினார் . In   Reimagining Pakistan: Transforming a Dysfunctional Nuclear State   (Harper Collins, 2018) எனும் இந்நூலில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் , சீனா - பாகிஸ்தான் உறவு , காஷ்மீர் பிரச்னை , இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசுகிறார் . மூன்று மாதங்களில் பாகிஸ்தானில் பொதுதேர்தல் வரவிருக்கிறது . இதன் மூலம் ஜனநாயகம் மலர வாய்ப்புள்ளதா ? பாகிஸ்தானில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவங்களால் ஜனநாயகம் இன்னும் மீளாமல் உள்ளது . பாகிஸ்தானின் ராணுவம் , மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் . இம்முயற்சி நடைபெறாதபோது பாகிஸ்தானில் ஜனநாயக அரசு அமைவது கனவுதான் . பாகிஸ்தானின் பிரச்னைகள் தொடங்கியதாக 1958 ஆம் ஆண்டை குறிப்பிட்டுள்ளீர்களே ? பிரிவினை நிகழ்ந்தபோது ராணுவத்தில் 33 சதவிகிதமும் , வருமான

இணையத்தை நிறுத்துவது சாத்தியமா?

படம்
இணையத்தை நிறுத்தலாமா ? இன்டர்நெட்டால் பல பிரச்னைகள் . உடல்பருமன் , டெக் அடிமைத்தனம் , ஆபாச வீடியோக்கள் என காரணம் தேடுபவர்கள் அதனை நிறுத்திவிட்டால் என்ன என்று கூட யோசிப்பார்கள் . இணையத்தை ஸ்விட்ச் ஆப்செய்து பிளக்கை பிடுங்கி நிறுத்த முடியுமா ? முடியாது . பூமியிலுள்ள ஆறுகளை ஒரு நிமிடம் நிறுத்தி வைக்க முடியுமா ? அதேபோல்தான் இன்டர்நெட்டும் . அரசு மற்றும் தனியார் வசமுள்ள இணையம் என்பது விர்ச்சுவலாக தடுக்க முடியாத ஒன்று . தனிப்பட்ட இணைப்புகளை முடக்கலாம் . மற்றபடி ஒருவழியை அடைத்தால் இன்னொருவழியாக வெளியேற முயற்சிக்கும் நீர் போலவே இணையமும் . விதிவிலக்காக , 2011 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டபோது , அதை செயலிழக்க வைக்க எகிப்து அரசு , தன் நாட்டின் இணையக் கம்பெனிகளை DNS அமைப்பை நிறுத்த உத்தரவிட்டது . அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசும் நெருக்கடி நிலையில் இணையத்தை முடக்கும் சக்தி கொண்டுள்ளது . 

பெருவின் பெண்கள் போராட்டம்!

படம்
பெருவின் பெண்கள் போராட்டம் ! கடந்தாண்டில் மட்டும் பெரு நாட்டில் 2,100 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் . பெண்கள் மீதான வன்முறை என 28 ஆயிரம் வழக்குகள் காவல்துறையில் பதிந்துள்ளதோடு 94 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் .   அண்மையில் பெருவிலுள்ள தலைநகரான லிமாவில் சென்சஸ் பணிக்காக சென்ற பெண்ணை ஒருவர் வல்லுறவு செய்தது நாடெங்கும் கோபத்தைக் கிளற பெண்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர் . கடந்தாண்டு நவ .25 அன்று பாலின வன்முறை , கடத்தல் ஆகியவற்றுக்காக சமூகவலைதளம் ஆகியவற்றில் ஆதரவு திரட்டி பேரணி நடத்தியுள்ளனர் . லத்தீன் அமெரிக்காவில் பெண்கள் இயக்கங்கள் பரவியுள்ளது பெருவில் மட்டும்தான் . இங்கு கருக்கலைப்புக்கு தடையுண்டு . பல்வேறு கலைஞர்கள் ஒன்றிணைந்து Ni Una Menos என்ற திட்டத்தை முன்னெடுத்த பெண்கள் மீதான ்வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை செய்தனர் . லத்தீன் அமெரிக்காவில் வல்லுறவு மூலம் கருவுறுதல் உலகிலேயே அதிகம் . " பெருவில் 15-19 வயது இளம்பெண்கள் கருவுறுதலுக்கான வாய்ப்பு 60 சதவிகிதம் . கவனக்குறைவான அல்லது வல்லுறவு கருக்களை அழிப்பது குற்றம் என்பதுதான் சிக்கல் " என்கிறார் ஆ

விநோத பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் ஓரேகான் நகரை போர்விமானி நொபுவோ ஃப்யூஜிதா தாக்கினார் . பின்னர் தன் செயலுக்கு மன்னிப்பு கோரி 400 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த வாளை அமெரிக்காவுக்கு வழங்கினார் ஃப்யூஜிதா . தனக்கு தினசரி காஃபி வழங்காத கணவரை மனைவி விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் விநோத சட்டம் துருக்கியில் அமுலில் இருந்தது . அமேஸான் தலைவர் ஜெஃப் பெஸோஸ் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று ஐந்து நிமிடங்களில் சம்பாதித்த தொகை 6.24 பில்லியன் டாலர்கள் . அமெரிக்காவிலுள்ள 17-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ராணுவச்சேவைக்கு தகுதிபெறாதவர்களின் சதவிகிதம் 71%. ஆஸ்திரேலியாவில் மினியேச்சராக கங்காரு போல தோன்றும் விலங்கிற்கு Quokkas என்று பெயர் .

தடைபட்டு போன இலக்கிய நோபல் பரிசு!

படம்
இலக்கிய நோபல் சர்ச்சை ! இவ்வாண்டிற்கான நோபல்பரிசு பாலியல் ஊழல் பிரச்னைகளால் அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . 1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த ஆசைப்படி இலக்கிய நோபல் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது .  1901 ஆம் ஆண்டு முதல் இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது . 1914, 1914, 1935, 1940,1941, 1942, 1943 ஆகிய ஆண்டுகளில் படைப்புகள் செறிவாக இல்லை என்பதற்காக பரிசுகள் அறிவிக்கப்படவில்லை . தற்போது பரிசுகளை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமியைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஜீன் கிளாட் அர்னால்ட் பதினெட்டு பெண்களிடம் பாலியல்ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு சர்ச்சைகள் ஆகியுள்ளார் . இவரும் , மனைவி கடாரினாவும் இணைந்து நடத்தும் கலாசார கிளப்புக்கு அகாடமி நிதியளித்து வருகிறது . பல்வேறு புதிய பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்களுக்கு வெளிச்சம் தந்த விருது இலக்கிய நோபல் . எ . கா . ரஷ்ய பத்திரிகையாளர் ஸ்வட்லானா அலெக்ஸிவிட்ச் (2015). ஸ்வீடிஷ் அகாடமி தன்மீதான கறையை துடைத்து உயிர்ப்புடன் மீண்டும் எழவேண்டும் என்பதே கலைஞர்களின் விருப்பம் . 

ரோக் - மசாலா டாக்கீஸ்

படம்
ரோக் பூரிஜெகன்னாத் ஒளிப்பதிவு:முகேஷ் இசை:சுனில் காஷ்யப் முன்கோபமும், காதலும் கொண்ட இளைஞனின் கதை. கிளுகிளுப்பான படமாக இருக்கும் என முதல் பாட்டை பார்த்ததும் பலரும் நினைப்பார்கள். படத்தில் ஆக்ரோஷமும், வன்மமும் கொப்பளிக்கிறது. இஷானை கமிஷனரின் தங்கை அஞ்சலி 1 ஏமாற்றிவிடுகிறார். கல்யாணத்தை தடுக்க நினைத்து இஷான் செய்யும் கலாட்டாவினால் சிறைதண்டனை கிடைக்கிறது. பின் விடுதலை ஆகி வீட்டுக்குப் போனால் தந்தை வெளியே போ என விரட்டுகிறார். காரணம், கல்யாண வீட்டு கலாட்டாவில் மூர்க்கத்தனமாக ஒருவரை டேபிளில் தூக்கி விசிறியதில் இருகால்களும் காவலருக்கு உடைந்துவிடுகிறது. வருமானமின்றி தவிக்கும் அக்குடும்பத்திற்காகவே தன் மகனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் இஷானின் தந்தை. பின்னர் உண்மை புரிந்து காவலரின் வீட்டுக்கு சென்று வட்டிப்பணத்தையும்  கட்டி குடும்பத்தை அய்யனாராக காத்து நிற்கிறார். சீரியசான கதை போல தோன்றலாம். இதில் அலி இருப்பதால் காமெடியும் உண்டு. உடைந்த கால்களைக் கொண்ட காவலருக்கு பாரில் பாட்டுப்பாடும் தங்கை உண்டு. யெஸ் லவ் போர்ஷன்(பாட்டு கம்போஸ் பண்ணி வெச்சிருக்கோமே? பாஸ்)  அஞ்சலி 2 அறிமுக

இந்தியாவின் அணுசக்தி பயணம்!

படம்
அணுசக்தி பயணம் ! இந்தியாவின் அணுசக்தி பயணம் தொடங்கிய ஆண்டு 1944. டாடா ஆராய்ச்சி நிலையத்தில் இதனை தொடங்கியவர் இயற்பியலாளரான ஹோமி ஜே . பாபா . ஆராய்ச்சிகள் தொடங்கிய நான்காவது ஆண்டில் 1948 ஆண்டு , ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான அணுசக்தி ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது . 1968 ஆம் ஆண்டு இங்கிலாந்து , அமெரிக்கா , சீனா , பிரான்ஸ் , ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் (NPT) இந்தியா கையெழுத்திட மறுத்தது . இந்த ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது . 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது . 1998 ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு , ஐந்து அணு ஆயுதச்சோதனைகளை நடத்தியது . இதன் விளைவாக உலகநாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிட்டது .  2001 ஆம் ஆண்டு இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டது . 2005 ஆம் ஆண்டு அமெரிக்கா - இந்தியா அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது