இடுகைகள்

உளவியல் மருந்து ஆராய்ச்சியாளர்!

உளவியலுக்கான முன்முயற்சி ! " நான் அமேசான் காடுகளின் மீது பறந்து எனது பதற்றம் மற்றும் கற்பனையை ஜெயிக்கப்போகிறேன் " என தோழி கூறியதை உளவியல் வல்லுநரான ரோஸலிந்த் வாட்ஸ் மறுத்துவிட்டார் . மரபான உளவியல் சிகிச்சைகள் இதற்கு எவ்வித பயனையும் தராது என்பது வாட்ஸ் அறிவார் . இங்கிலாந்திலுள்ள நேஷ்னல் ஹெல்த் சர்வீஸில் பணிபுரியும் வாட்ஸ் நவீன உளவியலாளர்களின் முக்கியமானவர் . மனஅழுத்தப் பிரச்னைகளில் சிக்கிய நோயாளிகளுக்கு நிவாரணி மருந்துகளைப் பெற்றுதர முயற்சித்துவருகிறார் . psilocybin எனும் போதைமருந்தை மனஅழுத்த மருந்தாக பயன்படுத்த முடியுமா ? என்று ஒன்றரை ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார் வாட்ஸ் . " மக்கள் தம் மனங்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதன் வெளிப்பாடே மாயத்தோற்றங்கள் " என்கிறார் வாட்ஸ் . வழக்குரைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் அங்கு சந்தித்த மக்களின் உளவியல் பிரச்னைகளால் ஈர்க்கப்பட்டு உளவியல் மருத்துவரானார் . " எதிர்காலத்தில் உளவியல் தெரபி தேவைப்படுபவர்களு சட்டப்பூர்வமாக நிம்மதி கிடைக்கச்செய்யும் மருத்துவமனையை உருவாக்குவதே லட்சியம் " என்று தீர்க்கமாக

போராட்டத்தை ஒடுககும் சீனாவின் ஆயுதம்!

அப்டேட் லேசர் துப்பாக்கி ! சீனா புதியரக லேசர் துப்பாக்கியைக் கண்டுபிடித்துள்ளது . எரிபொருள் வண்டிகளை தீப்பற்றச்செய்யும் , மனிதர்களின் முடி , தோலை எரிச்சலுறச்செய்யும் தன்மை கொண்ட இந்த லேசர் துப்பாக்கியின் எடை 3 கி . கி , ரேஞ்ச் 800 மீ . ZKZM லேசர் கம்பெனியின் தயாரிப்பான இத்துப்பாக்கி , ஏகே -47 துப்பாக்கியின் சைஸை ஒத்தது .   ZKZM -500 துப்பாக்கியின் லேசர் கதிர்கள் ஒருவர் மீது குவிந்தால் உடையே தீப்பற்றும் அபாயம் உண்டு . துப்பாக்கியிலுள்ள லித்தியம் பேட்டரி மூலம் ஆயிரம் முறை கதிர்களை பீய்ச்சியடிக்க முடியும் . 15 ஆயிரம் டாலர்கள் விலைகொண்ட இத்துப்பாக்கி சீன ஆயுதப்படைக்கு முதல்கட்டமாக விற்கப்படவிருக்கிறது . லேசர்கதிர்களை பாய்ச்ச லித்தியம் பேட்டரியைவிட நைட்ரோகிளிசரின் போன்ற பொருட்களின் தேவை இதற்கு உதவும் . 

மேட்ரிமோனிக்கும் ஆதார் அவசியமாம்!

ஆதார் செக்கிங் அவசியம் ! அரசு நிறுவனங்களைப்போலவே பிரபல திருமணப்பொருத்த தளங்களிலும் ஆதார் எண்களை கேட்கத்தொடங்கியுள்ளனர் . என்ன காரணம் ? டூப்ளிகேட் புகைப்படங்கள் , போலி விவரங்கள் உள்ளிட்டவற்றை அப்டேட்டி நடக்கும் கல்யாணங்கள் பின்னாளில் உண்மை தெரிந்து களேபரமாவதுதான் காரணம் . 91 சதவிகித பெண்கள் மேரேஜ் மாப்பிள்ளைகளின் புரோஃபைல் பொய்களை நம்புவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . பிராண்ட் இமேஜை காப்பாற்ற பிரபல மேட்ரிமோனி தளங்கள் ஆதார் எண்களை கட்டாயமாக்கியுள்ளன . " ஒருநாளில் கோடிக்கணக்கான வரன்களின் தகவல்கள் பார்க்கப்பட்டு வருவதால் தகவல்களின் உறுதித்தன்மையை சரிபார்க்கும் அவசியத்திற்காகவே இம்முயற்சி . இதன்மூலம் தகவல்களை தவறாக பயன்படுத்தும் செயல்பாடுகளை குறைக்கமுடியும் என நம்புகிறோம் " என்கிறார் பிரபல திருமணப்பொருத்த நிறுவன இயக்குநரான கௌரவ் ரக்‌ஷித் . முன்னதாக பான்கார்டு மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இணைப்பதோடு இனி ஆதாரும் கட்டாயமாவது நம்பிக்கைக்கு கேரண்டி தருகிறது .   

இஸ்‌ரோ தேடும் விண்வெளி வீரர் யார்?

விண்வெளியில் இஸ்‌ரோ இந்தியர் அண்மையில் விண்வெளிக்கு வீரர்களை கொண்டு சென்று திரும்ப வரும் ஹியூமன் கேப்சூல் டெக்னிக்கை  ஹரிகோட்டா மையத்தில் இஸ்‌ரோ சோதித்துள்ளது . மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த சோதனை , விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக கேப்சூல் மூலமாக மீட்கும் Pad Abort Test(PAT) ஆகும் . விண்கலங்களை திரும்ப பயன்படுத்தும் RLV-TD சோதனையை இஸ்‌ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில் அடுத்த முக்கிய சோதனையாக சந்திரயான் 2 உள்ளது . அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படவிருக்கும் சந்திரயான் 2 வின் திட்ட மதிப்பு 800 கோடி . ரீயூஸபிள் விண்கல தொழில்நுட்பத்தை இந்தியா கண்டறிந்தாலும் இன்னும் மேலதிக முன்னேற்றம் தேவையாகவுள்ளது . " அடுத்த பத்தாண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கல தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம் பிடிப்பதோடு , பத்தில் ஒருபகுதி மட்டுமே இதற்கு செலவாகும் " என்கிறார் இஸ்‌ரோவின் முன்னாள் தலைவரான கிரண்குமார் . இஸ்‌ரோ பயன்படுத்தும் TSTO தொழில்நுட்பம் விண்வெளிக்கு வீரர்கள் செல்லும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என இஸ்‌ரோ கூறியுள்ளது .

அரிய ஒட்டகச்சிவிங்கியோடு செல்ஃபி!

ஒட்டகச்சிவிங்கி வேட்டை ! தென் ஆப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி பெருமையுடன் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த அமெரிக்கா பெண்மணி  டெஸ் தாம்சன் , ஒரே புகைப்படத்தில் டாப் செலிபிரிட்டியாகியுள்ளார் . " கறுப்பு ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுவது என் வாழ்நாள் கனவு . என் கனவு நிஜமாகியிருக்கிறது " சமூக வலைதளத்தில் பெருமையுடன் பகிர , " அரிய விலங்கை வேட்டையாடி பெருமையா ?" என நெட்டிசன்கள் வறுத்தெடுத்த உடனே அப்பதிவை நீக்கிவிட்டார் டெஸ் தாம்சன் . ஆனால் புகைப்படம் அதற்குள் ஆயிரக்கணக்கான பயனர்களிடம்  பகிரப்பட்டுவிட்டது . 1985 ஆம் ஆண்டு முதலாக கருப்புநிற ஒட்டகச்சிவிங்கி அரிய உயிரினமாக பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது . உலகில் வாழும் இவ்வகை ஒட்டகச்சிவிங்கியின் எண்ணிக்கை 40 சதவிகிதம் . தென் ஆப்பிரிக்காவில் வேட்டையாடுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு . இதன் மூலம் ஆண்டுவருமானம் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் அரசுக்கு கிடைக்கிறது . 2011 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன்கள் டொனால்ட் ஜூனியர் , எரிக் ஆகியோர் சிறுத்தையை வேட்டையாடியதும் , 2015 ஆம் ஆண்டு அ

வீக்எண்ட் பிட்ஸ்!- செக்ஸூக்கு எக்சேஞ்ச் ஆஃபர்!

எக்சேஞ்ச் ஆஃபரில் செக்ஸ் ! வால்மார்ட்டோ அமேசானோ கூட இப்படி ஒரு ஆஃபரை அறிவிக்கவில்லை . அமெரிக்காவைச் சேர்ந்த கணித ஆசிரியர் டீனேஜ் பெண்ணை கனியவைக்க ஐபோன் தருகிறேன் என்று கூறி சிக்கியுள்ளார் . அமெரிக்காவின் லாங் ஐலேண்டைச் சேர்ந்த எழுபது வயது கணித ஆசிரியர் ஜெய்ரோ இன்ஸ்வாஸ்திதான் டீனேஜ் பெண்ணுக்கு ரூட் போட்ட ரோமியோ . சென்ட்ரல் ஐஸ்லிப் பள்ளியில் பணியாற்றும் ஜெய்ரோ தன் வகுப்பறையிலுள்ள இரு மாணவிகளை நைச்சியமாக அணுகி அவர்களின் நிர்வாண படங்களுக்கு பணமும் , செக்ஸூக்கு ஒத்துழைத்தால் ஐபோனும் தருவதாக ஆசைகாட்டியுள்ளது என்கொயரியில் தெரியவந்துள்ளது . மாணவி போலீசில் புகார் செய்ய , பள்ளி உடனே ஆசிரியர் ஜெய்ரோவை சஸ்பெண்ட் செய்துள்ளது . " ஜெய்ரோ மாணவிகளின் பிகினி போட்டோவுக்கு தலா 5 டாலர்களும் , நிர்வாண போட்டோக்களுக்கு 150 டாலர்களும் அளிப்பதாக பேரம் பேசியுள்ளார் " என பேட்டியளித்துள்ளார் காவல்துறை கமிஷனர் ஜெரால்டைன் ஹார்ட் . எழுபது வயதில் இவ்வளவு எனர்ஜியா ? ஆடிட்டர் திருடர் ! ஆடிட்டராக நடித்து இந்தியாவிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களில் பணத்தை கொள்ளையடித்து வந்த அமேசி

இந்து உணவுகள் ரிடர்ன்!

 இந்து உணவுகள்  ரிடர்ன் !   துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்து உணவுகளை மீண்டும் தன் பயணிகளுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது . " வாடிக்கையாளர்களின் எதிர்வினைகளை ஆராய்ந்து இந்து உணவுகளை மீண்டும் கஸ்டமர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் " என எமிரேட்ஸ் இந்தியா நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது . இந்தியாவிலுள்ள பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சைவ உணவு , ஜெயின் உணவு , கோசர் உணவு , மாட்டிறைச்சி இல்லாத அசைவ உணவு என மெனு ஆப்ஷன்களை எமிரேட்ஸ் உருவாக்கி பரிமாறி வருகிறது .  முன்பு இந்து மீல்ஸ் ஆப்ஷன்களை நிறுத்தி வைத்த எமிரேட்ஸ் , குவிந்த வாடிக்கையாளர்களின் புகார்களால் தற்போது யூடர்ன் அடித்து இந்து உணவுகளை மீண்டும் வழங்கத்தொடங்கியுள்ளது . வெளிநாட்டு சேவைகளை வழங்கும் பன்னாட்டு விமானநிறுவனமான எமிரேட்ஸ் இந்தியா ,  சென்னை , ஹைதராபாத் , கொச்சி , கொல்கத்தா , டெல்லி , மும்பை , திருவனந்தபுரம் ஆகிய இடங்களை கவர் செய்து இயங்கி வருகிறது .