இடுகைகள்

கற்பழிப்புகளை தடுத்தும் நிறுத்தும் ஒரே சக்தி!

படம்
ராமனாலும் முடியாது ! உன்னாவோ கற்பழிப்பு வழக்கில் சிக்கிய குல்தீப்சிங் செங்காரை காப்பாற்ற முயற்சித்த பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங் , " ராமனாலும் வல்லுறவுகளை தடுக்க முடியாது " என பேசி சர்ச்சைத் திரியைக் கிள்ளியுள்ளார் . உத்தரப்பிரதேசத்தின் பைரியா பஸ்தி தொகுதி எம்எல்ஏவான சுரேந்திராசிங் , " சமூகத்தில் ஏற்படும் தடம்புரள்வான நிகழ்வுகளால் கற்பழிப்புகள் நிகழ்கின்றன . கடவுளான ராமனே வந்தாலும் இதனை தடுக்க முடியாது . இது மக்களின் குணங்களைப் பொறுத்தது . அரசுக்கு தொடர்பில்லை " என பேட்டியளித்து பிரபலமாகியுள்ளார் . உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வல்லுறவு தொடர்பான புகார்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன . சுரேந்திராசிங் இதற்கு முன்பும் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்றும் , காங்கிரஸை கௌரவர்கள் என்றும் , நரேந்திரமோடியை அர்ஜூனன் என்றும் புகழ்ந்து பேசிய ஆளுமை என்பதை இந்திய ஊடகங்கள் இன்னும் மறக்கவில்லை .  

குப்பைகளால் ஒரு பூங்கா!- டெல்லியில் சாதனை

ரீசைக்கிள் பூங்கா ! டெல்லியில் தேங்கும் அபரிமித கழிவுகளை என்ன செய்வதென குழப்பத்தில் கார்ப்பரேஷன் நிர்வாகம் தடுமாறி வருகிறது . டெல்லியில் தினசரி உருவாகும் திடக்கழிவு 10 ஆயிரம் டன்கள் , எலக்ட்ரானிக் கழிவுகள் 30 டன்கள் , உயிரியல் கழிவுகள் 70 டன்கள் , கட்டிடக்கழிவுகள் 4 ஆயிரம் டன்கள் , பிளாஸ்டிக் கழிவுகள் 800 டன்கள் என குவிந்து வருகிறது . இவை அனைத்தையும் மறுசுழற்சி செய்வது மிக கடினமான ஒன்று . டெல்லி மெட்ரோரயில் நிர்வாகம் இதற்கு வழி கண்டுபிடித்துள்ளது . கிழக்கு டெல்லியில் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் சாஸ்திரி பார்க் என்ற பெயரில் ரீசைக்கிள் பூங்காவை நிர்மாணித்துள்ளது . திறந்தவெளி அரங்கு , யோகா ஸ்பாட் உள்ளிட்டவற்றை கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கியுள்ளது பசுமை டச் . 42 ஆயிரம் ச . அடி கொண்ட இந்த பூங்காவில் செயற்கை ஏரி , பனிரெண்டு இரும்பிலான சிற்பங்கள் , மருத்துவ தாவரங்கள் , சோலார் விளக்குகள் ஆகியவையோடு இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் , மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளும் உண்டு . 

சம்பளம் தர மறுத்த அமெரிக்க அதிபர்!

படம்
சம்பளம் தராத அமெரிக்க அதிபர் ! அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 25 ஆண்டுகால கார் ட்ரைவர் , ட்ரம்ப் தனக்கு சம்பளம் தரவில்லை என நியூயார்க் கோர்ட் படியேறியுள்ளார் . கார் ஓட்டுநரான சஃபியர் நோயல் சின்ட்ரோன் , தான் வேலைசெய்த கூடுதல் 3,300 மணிநேரத்திற்கு ட்ரம்ப் சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டார் என நீதிமன்றத்தில் புகார் பதிந்துள்ளார் . " உழைப்பவர்களை சாம்பியன் என்று வர்ணிக்கும் ட்ரம்ப் தான் பேசும் வார்த்தைக்கு உண்மையாக இல்லை " என்கிறார் நோயலின் வழக்குரைஞரான லாரி ஹட்ச்சர் . வாரத்திற்கு 55 மணிநேரம் பணிபுரிந்த நோயல் , இதற்கு ஊதியமாக 2003 ஆம் ஆண்டு 62, 700 டாலர்களும் 2006 ஆம் ஆண்டு 68 ஆயிரம் டாலர்களையும் ஊதியமாக பெற்றுள்ளார் . நோயல் ட்ரம்பின் ஓட்டுநராக , கார் பராமரிப்பாளராக 2016 ஆம் ஆண்டுவரை பணிபுரிந்துள்ளார் .  சம்பளம் தராததால் தற்கொலை ! பெங்களூருவைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்  ஆறு மாதமாக சம்பளம் தராமல் அரசு இழுத்தடித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் . பெங்களூருவைச் சேர்ந்த சுப்பிரமணி ப்ரூஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) அமைப்பி

ரயிலில் ராமாயண டூர்!

படம்
ராமாயணா டூர்! ஆன்மிகச்சுற்றுலாவுக்கு மக்களை ஈர்க்க  இந்திய ரயில்வே அதிரடியாக முடிவு செய்து  ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை வரும் நவம்பர் மாதத்திலிருந்து இயக்கவுள்ளது . பதினாறு நாட்கள் கொண்ட ஆன்மிக பயணத்தில் செழிப்பான மக்கள் பங்கேற்று பயணிக்கலாம் . டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தியா , ஹனுமான் கார்கி , ராம்கோட் , கனக் பவான் கோவில் , நந்திகிராம் , சீதாமர்கி , ஜானக்பூர் , நாசிக் , ஹம்பி , ராமேஸ்வரம் வரை செல்லவிருக்கிறது . 800 பேர் பயணிக்கும் இந்த ரயிலில் நபர் ஒருவருக்கு தலா ரூ . 15, ஆயிரத்து 120 கட்டணம் வசூலிக்கப்படும் . இலங்கையில் ராமன் தொடர்பான இடங்களை பயணிகள் சுற்றிப்பார்க்கவும் இந்திய ரயில்வே 47 ஆயிரத்து 600 விலையில் (5 இரவு /6 பகல் ) சுற்றுலா பேக்கேஜூகளை வைத்துள்ளது .

சட்டப்படி மரணம் சாத்தியமே!

ஆராய்ச்சியாளர்களுக்கு விசா ! ஆராய்ச்சிபடிப்புதான் உங்கள் லட்சியமா ? உடனே கிளம்புங்கள் . இங்கிலாந்து உங்களுக்கு விசா தர காத்திருக்கிறது . நாட்டின் ஆராய்ச்சித்துறையை செழிப்பாக்க இங்கிலாந்து முடிவு செய்து விசா முறைகளை எளிமை செய்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்குவதற்கு வசதிகளை செய்துதரவுள்ளது . " இங்கிலாந்து ஆராய்ச்சித்துறையில் முன்னணி வகிக்கும் நாடு . உலகளவிலான ஆராய்ச்சியாளர்கள் இங்கு பயிற்சி பெறவும் பணிபுரியும் நாங்கள் வசதிகளை செய்துதரவுள்ளோம் " என்கிறார் குடியுரிமை அமைச்சர் கரோலின் நோக்ஸ் . UKRI எனும் அமைப்பு , நாட்டின் ஏழு ஆராய்ச்சி கவுன்சில்களை ஒருங்கிணைத்து ஆராய்ச்சிப்பணிகளை செய்யவிருக்கிறது . நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் அமைப்பில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் விசா கெடுபிடிகள் நீக்கப்படுவது மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த மாணவர்களை அப்பணிகளுக்கு ஈர்க்கும் வாய்ப்புள்ளது .  2 பசி பரிதாபம் ! நாக்பூரிலுள்ள டடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தலை நுழைத்து சிக்கிக்கொண்ட ஓநாயை விலங்குநல ஆர்வலர்கள் காப்பாற்றி

அமெரிக்காவுக்கு சரி நிகர் மாநிலம் எது தெரியுமா?

படம்
மத்தியப்பிரதேசம் கிரேட் அகெய்ன் ! இன்னும் ஐந்தே ஆண்டுகளில் மத்தியப்பிரதேச நகரங்கள் அமெரிக்க நகரங்களின் வளர்ச்சியையும் மிஞ்சிவிடும் என பேசியுள்ளார் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான் . ஆனால் வரும் நவம்பர் - டிசம்பரில் ம . பி தேர்தல் தொடங்கவிருக்கிறதே என்பதுதான் மக்களின் கேள்வி . மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் அரசு விழாவில் பேசிய சௌகான் , " அமெரிக்க நகரங்களைப்போலவே சுத்தமாகவும் அழகாகவும் அட்வான்சாகவும் ம . பி மாநில நகரங்களை மாற்றி ஏழைகளுக்கு உதவுவதே கடவுளுக்கு செய்யும் சேவை " என நெகிழ்ச்சியடைந்துள்ளார் முதல்வர் . கடந்தாண்டு அக்டோபரில் இந்திய வணிக கூட்டமைப்பு அழைப்பின்பேரில் அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு சௌகான் சென்றார் . அங்குள்ள 92 சதவிகித சாலைகள் படுமோசம் என்றவர் , ம . பி சாலைகள் இதைவிட சூப்பர் என துணிச்சலாக பேசி அமெரிக்காவையே அயரவைத்தவர்தான் நமது சௌகான் . முதல்வரின் க்ளீன் நகரங்கள் ஆசையால் ம . பியின் நகரமேலாண்மைக்கான பட்ஜெட் 807 கோடியிலிருந்து 11 ஆயிரத்து 559 கோடியாக எகிறியுள்ளது .  

பூஞ்சை நோயை தவளை பரப்புகிறது!

படம்
தவளை அபாயம் ! தவளை மூலம் பரவிவரும் chytridiomycosis எனும் பூஞ்சைநோய் உலகை அச்சுறுத்தி வருகிறது . இப்பூஞ்சை நோய் உடலிலுள்ள நீர் அளவை குறைத்து எலக்ட்ரோலைட்டுகளையும் பங்கம் செய்வதால் இதயம் செயலிழந்து மரணம் நிகழும் . உலகிலுள்ள 38 அறிவியல் அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பூஞ்சை குறித்த 234 டிஎன்ஏ மாதிரிகளை ஆராய்ந்து வருகின்றனர் . இதில் நான்கு  முக்கிய மரபணுக்களில் மூன்று ஏற்கனவே பரவத்தொடங்கிவிடது . எனவே தவளைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் சற்று யோசிப்பது நல்லது . " இப்பூஞ்சை குறித்து துல்லியமான செய்திகளை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை . கிழக்கு ஆசியாவில் பாதிப்பு ஏற்படுத்தும் பூஞ்சை குறித்த விஷயங்களை விரைவில் கண்டுபிடிப்போம் " என தகவல் கூறுகிறார் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் சைமன் ஓ ஹனோலன் .

பழைய சம்பவங்கள் மறந்துபோவதன் காரணம் தெரியுமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி பழைய சம்பவங்கள் காலப்போக்கில் மறந்துபோவதன் காரணம் என்ன ? அக்கா திட்டியது , வாத்தியார் பிரம்பில் வெளுத்தது , குட்டிமீனாவுக்கு தெரியாத ஆங்கிலத்தில் லவ் லெட்டர் எழுதியது என அத்தனையும் துல்லியமாக துலக்கமாக நினைவில் வைத்து என்ன ப்ரோ செய்யப் போகிறோம் ? நினைவுகள் அத்தனையும் மூளையில் பதிந்து வைக்க முடியாமல் காலப்போக்கில் மறப்பது இயல்பு என்பதோடு இதற்கான காரணத்தை உயிரியல்ரீதியாக ஆய்வில் கண்டறிய முடியாத சிக்கல் உள்ளது . பழைய நினைவுகள் அழியும் இடத்தில் புதிய நினைவுகள் பதிவாகின்றன என்பதும் நினைவக தியரியே ஒழிய அறிவியல் நிஜமல்ல . இறந்தகாலத்தில் நின்றுகொண்டிருந்தால் நிகழ்காலத்தில் வாழ்வதுதான் எப்போது ? வருத்தங்களை மறந்து சந்்தோஷத்தை உடுத்துவோம் வாருங்கள் !

குழந்தை கடத்தல் படுகொலைகள்!

படம்
குழந்தை கடத்தல் படுகொலைகள் ! அசாமின் திமா ஹசாவோ , கர்நாடகாவின் மங்களூருவில் நடந்த படுகொலை தாக்குதல்கள் ஆகியவை சேர்ந்து இந்த ஆண்டில் 61 போலி குழந்தை கடத்தல் தாக்குதல்களாக பதிவாகியுள்ளன . இவ்வகையில் 24 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . கடந்தாண்டோடு (2017 7 கொலைகள் ) ஒப்பிடும்போது வன்முறை 4.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது . 2017 ஜன .1 - 2018 ஜூலை 5 காலகட்டத்தில் மட்டும் 69 நிகழ்வுகளில் 33 பேர் கொல்லப்பட்டும் 99 பேர் படுகாயமுற்றும் உள்ளனர் . இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் மட்டும் போலி குழந்தை கடத்தல் தொடர்பாக ஒன்பது தாக்குதல்கள் நடந்துள்ளதாக காவல்துறை அறிக்கை தகவல் தெரிவிக்கிறது . வாட்ஸ்அப் வதந்திகள் இதற்கு முக்கியக்காரணம் . இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் 21 வழக்குகளில் 181 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது . 

வானிலை மாற முகம் மாறுதோ!- மெலானியா ட்ரம்ப் ரியாக்‌ஷன்

படம்
பிட்ஸ் ! மாறிய முகம் ! புடினுடன் பின்லாந்தில் நடைபெற்ற வரலாற்று சந்திப்பில் ட்ரம்ப் பேசிய ரஷ்ய ஆதரவு பேச்சினால் அமெரிக்கர்களின் கோபத்திற்கு வறுகடலையானார் . அதைவிட புடினை வரவேற்ற ட்ரம்பின் மனைவி மெலானியாவின் மலர்ச்சியான முகம் சட்டென மிரட்சியாகும் முகமாற்றத்தை சொல்லும் 6 நொடி வீடியோதான் தற்போது இணையத்தில் வைரல் ஹிட்டாகிவருகிறது . மரண பயத்தை காட்டிட்டான் பரமா ! விதை இன்விடேஷன் ! கேரளாவின் சுயேச்சை எம்எல்ஏ வி . அப்துரஹிமான் தன் மகள் ரிஸ்வானாவுக்கு மறுசுழற்சி காகிதம் , காய்கறிவிதைகளை பதித்து செய்த அழைப்பிதழ் மக்களை வசீகரித்துள்ளது .  " பூக்கள் மற்றும் விதைகளிலான அழைப்பிதழை மண்ணில் புதைத்து நீரூற்றினால் வெண்டைக்காய் , தக்காளி ஆகியவை விளையும் . அழைப்பிதழை மக்கள் தூக்கியெறியாமல் பயன்படுத்தவே விதை இன்விடேஷனை நண்பரின் ஆலோசனையைப் பெற்று ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் டிசைன் செய்தோம் ." என்கிறார் எம்எல்ஏ வி . அப்துரஹிமான் .  பேஷன்ஷோவில் தாய்ப்பால் ! அமெரிக்காவின் மியாமி நகரில் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட் இதழின் சார்பாக நீச்சலுடை தீமில் அழகிகளின் பேஷன்ஷோ நட

அண்ட்ராயர்தான் மாஸ்க்! - காமெடி திருடர்

படம்
பிட்ஸ் ! அமைதிக்கான சந்திப்பு ! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் புடின் சந்திப்பு  பின்லாந்தின் ஹெலின்ஸ்கி நகரில் நடைபெற்றது . இச்சந்திப்பையொட்டி ஆம்னெஸ்டி , க்ரீன்பீஸ் , பத்திரிகைகள் உள்ளிட்ட அமைப்புகள் நகரெங்கும்  வைத்துள்ள பில்போர்டுகள் உலகை வசீகரித்துள்ளன . ட்ரம்பின் பத்திரிகையாளர் எதிர்ப்பு குணத்தை கிண்டல் செய்யும் ஹெல்சிங்கின் சனோமட் என்ற பத்திரிகையின் பில்போர்டுகள் ஸ்பெஷல் . விளம்பர மோகம் ! பெங்களூரு மார்க்க விரைவு ரயில் அது . ரயிலின் ஜன்னல் கம்பியில் தோளில் பேக் சகிதமாக தொங்கியபடி பயணிக்கும் இளைஞர் திடீரென பிடிமானம் தவறி அலறியபடி கீழே விழும் வீடியோ இணையத்தில் திகுதிகு ஹிட் . படம் பிடிப்பதை விட்டு இளைஞரை காப்பாற்றியிருக்கலாமே என பரஸ்பர விவாதங்கள் கிளம்பியுள்ளன . கடந்தாண்டு மும்பையிலும் , சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்திலும் இப்படி விபரீத வீரச்செயலில் இறங்கிய இளைஞர்கள் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது . உள்ளாடை முகமூடி ! அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலுள்ள ஆபீசில் திருடர் ஒருவர் நுட்பமாக நுழைந்தார் . நிதானமே பிரதானமாக திருடியவர் கேமராவி