இடுகைகள்

நல்லவர் யார்? கெட்டவர் யார்?- ஆல்ட் நியூஸ் ஆய்வு

படம்
முத்தாரம் Mini உங்களுடைய இணையதளத்தில் குஜராத் உண்மைகள் என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருந்தீர்கள் . இதனை உருவாக்கியதற்கான தூண்டுதல்களை கூறுங்கள் . 2014   ஆம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் அரசு வளர்ச்சி குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் சரியா , தவறா என அறியமுடியாதபடி பரப்பப்பட்டன . சிங்கப்பூர் படத்தை குஜராத் என பலரும் வளர்ச்சி பெயரில் பகிர்ந்தனர் . 2016 செப்டம்பரில் போலித்தகவல்களை கண்டறிய வலைதளத்தை தொடங்கினோம் . போலிச்செய்திகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் ? ஒரு செய்தியை சரியா , தவறா என புரிந்துகொள்ள முடியாமல் போவது முதல்வகை . இரண்டாவது , உண்மை பாதி , பொய் பாதி என இணைந்துள்ளது என தெரிந்தே பரப்பப்படுவது . பர்தா அணியாததால் கொளுத்தப்பட்ட ஹைதராபாத் பெண் என்ற கேப்ஷனோடு காட்டப்படும் புகைப்படம் உண்மை . ஆனால் கேப்ஷன் பொய் . போலிச்செய்திகளை பரப்பும் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது சரியான தீர்வா ? நிச்சயம் இல்லை . தவறு என்றால் அரசு உடனடியாக சட்டத்தை பயன்படுத்தி நிறுவனங்களை மூடுகிறது .   செய்தி பகிர்வு செயலிகள் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகின்றன .

போலிச்செய்தி தளங்கள் தடை!

படம்
இணையதளங்களுக்கு தடை ! கடந்த பதினெட்டு மாதங்களில் 1,662 இணையதளங்களை , சமூகவலைதள பதிவுகளை அரசு தடை செய்துள்ளதாக தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் ( ஆக .3, 2018) தெரிவித்துள்ளார் . ்போலிச்செய்திகளை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப சட்டப்படி (69A,2000) ஃபேஸ்புக் 56%, ட்விட்டர் 25%, யூட்யூப் 9% பதிவுகளை முடக்கியுள்ளன . இந்திய அரசின் ஒருமைப்பாட்டுணர்வை குலைக்கும் விதமாக செயல்படும் இணையதள பதிவுகளுக்கு ஏழாண்டு சிறைதண்டனையோடு கணிசமான அபராத தொகையும் உண்டு . உலகில் 2,190 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 9%. டவிட்டரில் 8%. பிப்ரவரி 2017 வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக (13%) அதிகரித்துள்ளது . ஜூலை 2018 இல் ஃபேஸ்புக் 5 லட்சம் பயனர்களைக் கொண்ட போஸ்ட்கார்டு நியூஸ் பதிவுகளை காப்பிரைட் , போலிச்செய்திகள் புகார்களினால் நீக்கியுள்ளதை பூம் இணையதளம் உறுதிசெய்துள்ளது . இதன் நிறுவனர் மகேஷ் ஹெக்டே அரசால் கைது செய்யப்பட்டுள்ளார் . போலிச்செய்திகள் பரப

பழங்குடிகளை பழிவாங்கும் ஆஸ்திரேலியா!

படம்
நேர்காணல் ! " எம் பழங்குடி மக்களை கொன்றது இனவெறிதான்" உளவியல் பேராசிரியர் பாட் டட்ஜியன் . ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி இன இளைஞர்கள் பெரும்ளவில் தற்கொலையில் ஈடுபட்டு உயிரிழந்து வருகின்றனர் . கிம்பெர்லெய் பகுதியில் நிகழ்ந்த தற்கொலை சம்பவங்களின் விகிதம் தேசிய சராசரியை தாண்டிவிட்டது . பர்டி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாட் டட்ஜியன் இது குறித்து உரையாடுகிறார் . ஆஸ்திரேலியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் உளவியல் பட்டதாரி நீங்கள் . எப்படி இப்பாதையை தேர்ந்தெடுத்தீர்கள் . சமூகரீதியாகவும் , வரலாற்றுரீதியாகவும் எங்கள் பழங்குடி இனம் பட்ட துயரங்களையும் வேதனைகளையும் பார்த்து வளர்ந்தவன் நான் . எனவே அத்துயரங்களை கல்வி மூலம் களைந்து அவர்களுக்கு உதவவே கல்வியை தேர்ந்தெடுத்தேன் . உளவியல் மற்றும் சுகாதார பிரச்னைகளுள்ள மக்களை நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் தேவைக்காக உழைத்து வருகிறேன் . 2012 ஆம் ஆண்டு "Australia's Lost Generation" என்ற ஆவணப்படத்தி

புகைப்படக்காரரை கைது செய்த வங்கதேச அரசு!

படம்
அராஜக கைது ! வங்கதேசத்தின் பிரபல புகைப்படக்கலைஞர் ஷகிதுல் ஆலம் , அரசுக்கு எதிராக அல்ஜஸீரா டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . அறுபத்து மூன்று வயதான புகைப்படக்காரர் ஷகிதுல் ஆலம் , பேட்டி வெளியான மறுநாள் காலை பத்துமணிக்கு டாகாவிலுள்ள வீட்டில் 20 போலீசார் அவரை கைது செய்துள்ளனர் . ஊடகத்தில் அரசின் மீதான ஊழல் கறையை ஏற்படுத்துவதாக வங்கதேச ஐ . டி சட்டப்பிரிவு 57 படி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது . சர்ச்வாரண்ட் இல்லாத மஃப்டி போலீசார் பத்திரிகையாளர்கள் , மனித உரிமையாளர்கள் என பலரையும் மேற்சொன்ன சட்டப்பிரிவில் கைது செய்து சிறையிலடைத்து வருகிறது வங்கதேச அரசு . கைது செய்யப்பட்டு 12 மணிநேரத்திற்கு பிறகு ஆலம் கைதான செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது . கோர்ட் வளாகத்தில் ' போலீஸ் தன்னை லாக்கப்பில் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்தது ' என ஊடகங்களிடம் ஆலம் கூறியது அவரது ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது . போக்குவரத்து விதிகளை சீர்த்திருத்தக்கோரி வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் அங்குள்ள ஊழல் செறிந்த சூழலை உலகுக்கு வெளிச்சமிட்டு காட

பாம்பின் விஷத்திற்கு சவால்!

படம்
பிட்ஸ் ! கொசுக்களின் பறக்கும் வேகம் 1Mph. சிறிய மின்விசிறி ஒன்றே இதனை விரட்டிவிட போதுமானது . இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் , பிரெஞ்சு வீரர்களை விட அதிகம் பலியானது இந்திய வீரர்கள்தான் . அமெரிக்காவில் நடந்த முதல் வங்கிக்கொள்ளையில் பறிபோன தொகை 1,62,821 டாலர்கள் . கொள்ளையர் அதே வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்து மாட்டிக்கொண்டார் . காற்றில் பரவி ஒரு கி . மீ தூரத்திலுள்ள மக்களை வாந்தியெடுக்க வைக்கும் துர்நாற்றம் கொண்ட வேதிப்பொருளின் பெயர் Thioacetone. அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச்சேர்ந்த டிம் ஃப்ரீடே , பதினாறு ஆண்டுகளில் 160 பாம்புகளிடம் கடிவாங்கி , விஷத்திற்கு எதிரான தன்மையை பரிசாக பெற்றுள்ளார் .

தனி இசையமைப்பாளர் சூழல் மாறிவிட்டது!

படம்
 தற்போது வெளிவந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீசை நிரப்பி வரும் கோல்டு படத்தின் இசையமைப்பாளர் இணை சச்சின்-ஜிகார். படங்களுக்கு தனியாக பாடல்களுக்கு இசையமைப்பதோடு பல்வேறு படங்களுக்கு பின்னணி இசையமைத்தும் தம்மை நிரூபித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், பிரிதம் ஆகியோரின் இசைக்குழுவுக்கு ஆர்கனைசராக இருந்து இசையமைப்பாளர்களாக முன்னேறியவர்கள். நீங்கள் உருவாக்கிய பல்வேறு சிறந்த பாடல்களை இயக்குநர்கள் ராஜ் டிகே, ரெமோ டி சூசா ஆகியோரின் கூட்டணியில் உருவாக்கியிருக்கிறீர்கள். எப்படி நடந்தது இந்த மேஜிக்? பாடல்களை சுதந்திரமாக உருவாக்குவதற்கு இவர்கள் இருவரும் எங்களை நம்புகிறார்கள் என்பதே முக்கிய காரணம். ரெமோ நடன இயக்குநர் என்பதால் ஏபிசிடி படத்தில்  பாடல்களை எனர்ஜியுடன் உருவாக்கினோம். சோர் இன் தி சிட்டி படத்திலிருந்து ராஜ் டிகேயுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அப்படியென்றால் பாடல் சிறப்பாக உருவாகி வர இயக்குநரும், இசையமைப்பாளரும் இசைவான மனதை கொண்டிருக்கவேண்டும் இல்லையா? மன்மர்சியான் பட ஆல்பம் நன்றாக வந்திருக்கிறது என்றால் அதற்கு படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் நட்பும்,