இடுகைகள்

காடுகளின் வளத்திற்கும், பாதுகாப்பிற்கும் எறும்புகள் அவசியம்! -

படம்
மனிதர்களுக்கு எறும்புகள் அவசியத்தேவை! ஆராய்ச்சியாளர் கோரி மொரியு ஆங்கிலத்தில்: ஸ்ரீஜனா மித்ரா தாஸ் நன்றி: டைம்ஸ் எவோக் வெப்பமயமாதல் எறும்புகளின் இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறதா? சாதாரண மனிதர்கள் எறும்புகளை எப்படி பாதுகாப்பது? வெப்பமயமாதல் பாதிப்பு, மனிதர்கள் எறும்புகளின் புற்றை இடிப்பது ஆகிய காரணங்களால் எறும்புகளும் உலகில் மெல்ல அருகி வருகின்றன. தாவரங்கள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் ஆகியவையும் இந்த செயல்முறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகளைக் காப்பதிலும் அதனை வளமுறச்செய்வதிலும் எறும்புகள் முக்கியப்பங்காற்றுகின்றன. எறும்புகளுக்கு என தனித்த பழக்க வழக்கங்கள் குணங்கள் உண்டா? எறும்புகளில் 15, 000 வகைகள் உண்டு. இதில் சில எறும்புகள் பிற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். சில வகை எறும்புகள் தாவரங்களின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வாழும். காலனியாக இவை வீடமைத்து வாழ்கின்றன. மைர்மெகாலஜி எனும் படிப்பு எறும்புகளைப் பற்றியது. சமூக விலங்காக வாழும் எறும்புகளைப் பற்றி படிக்க ஆர்வமிருந்தால் இப்படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மரங்களுக்கும் எறும்புகளுக்குமான உறவை விவரியுங்கள். மரங்களில்

இர்பான்கானுக்கு மாற்றாக வேறு நடிகர் யாரும் இல்லை! - இயக்குநர் சுதீர் மிஸ்ரா

படம்
ity   சுதீர் மிஸ்ரா இந்தி சினிமா இயக்குநர் நன்றி: இந்தியா டுடே ஆங்கிலத்தில்: ஸ்ரீவஸ்தவா நெவாடியா பொதுமுடக்க காலத்தில் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக சீரியஸ் மேன் என்ற படத்தையும். ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ஹோஸ்டேஜ் இரண்டாவது பகுதியையும் எடுத்து முடித்திருக்கிறீர்கள். இதற்காக வேலை செய்வது எப்படியிருக்கிறது? நாங்கள் வேறு காலத்தில் பணிபுரிய நேரிட்டால் சிரமமாகவே இருக்கும். இப்போது எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை. என்னுடைய உதவியாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களை அறிந்தவர்கள். எனவே அனைத்து வேலைகளையும் எளிதாக முடித்துவிட முடிகிறது. விரைவில் ஹோஸ்டேஜஸ் தொடரை நீங்கள் இணையம் வழியாக பார்ப்பீர்கள். கோவிட் -19 காலம் சினிமாவை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? நாம் உயிர்வாழ்வதற்கே ஆபத்துள்ள சூழ்நிலையாக வெளியுலகம் மாறியிருக்கிறது. இந்த நிலை தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன். நெருக்கடியான காலம் நம்மை நமக்கே அடையாளம் காட்டியிருக்கிறது. பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. நீங்கள் நடிகர் இர்பான்கானுக்கு நெருக்கமாக இருந்தவர். இப்போது நவாசுதீன் சித்திக்கை வைத்து சீரியஸ் மேன்

கடின உழைப்பு உங்களுக்கு பதற்றத்தையே ஏற்படுத்தும்! - எழுத்தாளர் ஹெட்லி

படம்
கடுமையான உழைப்பு நமக்கு சந்தோஷத்தையும் செல்வத்தையும் வழங்காது. எழுத்தாளர் செலஸ்ட் ஹெட்லி அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ஹெட்லி, சுயமாக உருவாகிய மனிதன், பல்வேறு பணிகளை செய்பவர் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிரிக்கிறார். தொழில்துறையினர் கடுமையான உழைப்பு பற்றி உருவாக்கியிருக்கும் அனைத்து கருத்துகளையும் எளிமையாக புறக்கணிக்கிறார். இதுபற்றி நாம் பொதுமுடக்க காலத்தில் யோசிப்பது நல்லது என்கிறார். இவர் அண்மையில் டூ ந த்திங் ஹவ் டு பிரேக் அவே ஃபிரம் ஓவர் வொர்க்கிங், ஓவர்டூயிங் அண்டஃ அண்டர்லிவ்விங் என்ற நூலை எழுதியுள்ளார். உழைப்பு பற்றி என்ன கருத்துகளை சொல்ல வருகிறார் என்பதை அறிய அவரிடம் பேசினோம். நம் வாழ்க்கையை மாற்றியுள்ள வைரஸ் கிருமிகள் நம்மிடம் சொல்லுவது என்ன? வைரஸ் நம்மிடம் பேசவில்லை. நாம்தான் நம்மிடம் பேசியுள்ளோம். அதற்கான சூழ்நிலையை வைரஸ் உருவாக்கி தந்துள்ளது. ஏன் நம்மால் வீட்டில் அமர்ந்து பணி செய்ய முடியவில்லை. கடுமையாக வெளியில் செல்ல தவிக்கிறோம். வீட்டில் இருந்தால் கூட நம்மால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. வீட்டைக் கூட காப்பகமாகவும், நம்மை அகதியாகவும

படிக்கும் வயதில் தொழிலதிபர்களாக சாதித்த மாணவர்கள்!

படம்
  லட்சங்களைக் குவிக்கும் இளம் தொழிலதிபர்கள் முன்னர் ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜில் படித்துவிட்டு நிறுவனம் தொடங்கி வெற்றி பெறுவது பழங்கதையாகிவிட்டது. தற்போது படிக்கும்போது ஏதாவது நிறுவனம் தொடங்கி கல்லூரி படிக்கும்போது லட்சாதிபதியாக பல மாணவர்கள் மாறி வருகிறார். இதற்கு என்ன காரணம்? படிக்கும்போது பெற்றோர் துணையாக இருப்பார்கள். தொழில்முயற்சி என்றாலும் கூட எப்படியாவது உதவுவார்கள். ஆனால் முப்பது வயதில் உங்களை நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நஷ்டமானாலும் அதனை நீங்களே ஏற்கவேண்டும் என மில்லினிய தத்துவம் சொல்லுகிறார்கள். இவர்கள் தங்களது முன்மாதிரி யாக கொள்வது ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் அகவர்வாலைத்தான். இவர் 17 வயதில் நிறுவனத்தைத் தொடங்கி, 22 வயதில் லட்சாதிபதியாகிவிட்டார். இவர் தந்த ஊக்கத்தினால் நிறைய டீனேஜ் இளைஞர்கள் துணிந்து தொழில்துறையில் காலடி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ரத்தன் டாடா போன்றவர்களும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் தேஷ்பாண்டே. இவர் தனது பெற்றோரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஜெனரிக் மருந்துகளை

பெருந்தொற்றை சாதுரியமாக சமாளித்த பெண் தலைவர்கள்! - கற்றுக்கொள்ளலாம் வாங்க!

படம்
பெருந்தொற்றை சமாளித்த பெண் தலைவர்கள் உலக நாடுகளில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் பெருந்தொற்றை சமாளிப்பதில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளன. அங்கு விரைவில் பொதுமுடக்கம் விலக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை தொடங்கப்பட உள்ளது. பின்லாந்து சன்னா மரின். வயது 34. உலகின் மிக இளம்வயது பெண் பிரதமர்களில் ஒருவர். பிரதமராக பதவியேற்று ஆறுமாதங்கள்தான் ஆகிறது. அப்போதுதான் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நாட்டில் கோவிட்   -19 ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழாயிரம் பேர்களுக்கும் குறைவு. மார்ச் 18 முதல் பொதுமுடக்கம் அறிவித்து ஜூன் 1 முதல் இயல்பு வாழ்க்கை அங்கு தொடங்கவிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கவிருக்கின்றன. திரையரங்குகளில் ஐம்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏஞ்சலா மேர்கல் ஜெர்மனி அதிபர். தன்னுடைய நாட்டு சுகாதாரத்துறையை மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் செய்திகளையும் ஆராய்ந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்றியவர். எழுபது சதவீதத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற உண்மையை அறிந்தவர், அதற்கேற்ப பொது முடக்கத்தை அறி

அளவில்லாத கடன்களை வாங்கி மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசுகள்! - கடன்வரம்பும் உரிமைகளும்

படம்
கடன் பற்றாக்குறை தள்ளாடும் மாநிலங்கள் ஆங்கிலத்தில்: ஆனந் த் அதிகாரி, தீபக் மோண்டல் நன்றி: பிஸினஸ் டுடே பெருந்தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் செலவழிக்க பணமின்றி தடுமாறி வருகின்றன. மாநில அரசுகளுக்கு உள்ள தடை கடன் வரம்பு எல்லையைத் தாண்டி கடன் வாங்க முடியவில்லை என்பதுதான். தற்போது மத்திய அரசு மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்பு எல்லையை 3 முதல் 5 சதவீதமாக உயர்த்தியுள்ளன. 2008ஆம் ஆண்டு மத்திய அரசின் பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருந்தது. மோசமான பல்வேறு நிதிக்கொள்கைகள் காரணமாக தற்போது, 4 சதவீதம் எனும் அளவிற்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் கோவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க தற்போது 4.28 லட்சம் கோடி ரூபாயை கடன் பெறமுடியும். கடன் பெற்று அதனை சாமர்த்தியமான முறையில் செலவு செய்வது முக்கியம். இல்லையெனில் எந்த பயனும் கிடைக்காது. அடிப்படையில் மாநில அரசுகள் 3.5 சதவீதம் மட்டுமே கடனைப் பெறமுடியும். அதாவது, 7.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வெளியில் கடன்களைத் திரட்ட முடியும். இதனை அதிக நிபந்தனைகள் இன்றி பெற்றாலும், குறிப்பிட்ட வரம்புக்கு மீறி கடன்களை பெற நினைதால், பல்வேறு விதிகளை பின்பற்றிய

வாழ்க்கையில் நளபாகத்தை சமைத்து பரிமாறியவனின் கதை - நளபாகம் - தி.ஜானகிராமன்

படம்
பனுவல் கணையாழியில் தொடர்கதையாக வந்து இப்போது நாவலாகி உள்ளது. அடிப்படையாக ஜானகிராமனின் கதைகள் அனைத்தும் மனம், உடல் விதித்துள்ள விதிகளை மீறுவதுதான். இதிலும் அதே விஷயங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை நேரடியாக நடைபெறுவதில்லை. நம்பிக்கை. வீண்பழி, வதந்தி, கிசுகிசு ஆகியவை இந்த நாவலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.  நாயுடு என்ற சுற்றுலா அழைத்துச் செல்பவரிடம் தலைமை சமையல்காரராக காமேஷ்ச்வரன் இருக்கிறார். அங்கு சுற்றுலா வரும் ரங்கமணிக்கு அவரது வம்சம் தழைக்காத சோகம் உடலிலும் உள்ளத்திலும் இருக்கிறது. அவருக்கு, சமையக்காரரைப் பார்த்ததும் அவர் மூலமாக தன் வம்சத்தை மீள கொண்டு வந்துவிட முடியும் என கணக்கு போடுகிறார். இதற்காக அவரை தனது வீட்டுக்கு வேலைக்கு வந்துவிட அழைக்கிறார். இவரின் மனக்கணக்கை புரிந்துகொள்ளாத காமேஷ், இப்படி பாசமாக அழைக்கிறாரே என்று கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூரிலுள்ள நல்லூருக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை. தி.ஜாவுக்கு பழமையான விஷயங்கள், காவிரி ஆறு, கொல்லைப்புறம், மரங்கள், உணவு என என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் வாசகர்களுக்காக பரிமாறியிருக்கிறார். நூலை வாசிக்

கொரோனா தோல்வியை அரசு மறைக்க முயல்கிறது!

படம்
ஆத்மா நிர்மா பாரத் தோல்வியை மறைக்கும் முயற்சி!   இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளைப் பாருங்கள். வங்கதேசம், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நாற்பது நாட்களுக்களுக்குள்ளாகவே கோவிட் -19 நோய்த்தொற்றை எதிர்கொண்டு மக்களை அதிலிருந்து மீட்டுவிட்டனர். இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது நோய்த்தொற்றுக்கான சிகிச்சை, தனிமைப்படுத்தல், மருந்துகள் ஆகியவற்றை விட யார் மூலம் நோய் அதிகம் பரவியது என்பது பற்றிய விவகாரங்களே இன்னும் தீரவில்லை. இந்துவா, முஸ்லீமா எந்த மத நம்பிக்கையாளர் இதனை பரப்பினார் என வெறுப்புடன் பேசிவருகிறார்கள். பொதுமுடக்க காலம் 67 நாட்களை எட்டிவிட்டது. இன்னுமே கூட நாம் மாதத்திற்கு ஏதாவது நாளை தேர்ந்தெடுத்து மாடிக்கு வந்து தட்டுகளை தட்டுவது, சங்கு ஊதுவது, மெழுகுவர்த்தி கொளுத்துவது, விளக்கேற்றுவது, குப்பைகளை கூட்டிக்கொண்டிருப்பவர்கள் மீது பூக்களை தூவுவது என பல்வேறு சிறுபிள்ளைத் தனங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். இதன்மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தெருக்களை சுத்தம் செய்பவர்களுக்கு என்ன கிடைத்துவிடும்? மருத்துவ உபகரணங்களுக்காக அரசை மன்றாடி வரும் அரசு மருத்துவர்களுக்கு மனநிம்மத

போருக்கு தயாராகுங்கள் என்று ராணுவத்திற்கு அழைப்பு விடுப்பது இயல்பானதுதான்! - டெய்லர் ஃபிராவல்

படம்
போருக்கு தயாராகுங்கள் என்று சீனா சொன்னது இயல்பானதுதான் எம்.டெய்லர் ஃபிராவல் எம்ஐடி பாதுகாப்பு ஆராய்ச்சி, அரசியல் அறிவியல் பேராசிரியர் சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவத்திடம் போருக்கு தயாராகுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே? அவர் கூறிய வார்த்தை ஒன்றும் புதிதல்ல கடந்த ஆண்டும் இதேபோலத்தான் கூறினார். மக்கள் விடுதலை நாளிதழில் இத்தகையை குறிப்புகள் 2018 இல் 1,300 முறையும், 2019 இல் 1,100 முறையும் கூறப்பட்டுள்ளன. ராணுவம் தனது இலக்குகளை நோக்கி முன்னேறச் செய்ய அதன் தலைவர் இப்படி ஊக்கமூட்டுவது வழக்கம்தான். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இதுபோல பேசப்பட்டுள்ளது. சீனா டோக்லம் பகுதி முன்னேற்றத்தின்போது அமைதியாகவே இருந்தது. இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? Add caption 2017  ஆம் ஆண்டு முதலே டோக்லம் பகுதியில் எல்லைப்ப்பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இதில் இந்தியா, சீனாவின் எல்லை மீறலுக்கு பதிலடியாக சீனா, பூடான் எல்லைப்பகுதியில் தன் படைகளை உள்ளே அனுப்பியது. இதனை சீனா தனது இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதியது. அதேசமயம் இந்தியா பூடான் நாட்

தற்போது யூடியூப் போன்ற காட்சி ஊடகங்கள்தான் வலிமையாக உள்ளன! - பாடகி ஆஷா போஸ்லே

படம்
webneel ஆஷா போஸ்லே, இந்தி பாடகி உங்களுக்கு 86 வயதாகிறது. இந்த வயதில் திடீரென யூடியூபில் கணக்கு தொடங்கவேண்டுமென்று எப்படி தோன்றியது? பொதுமுடக்க காலத்தில் எனது பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட நேர்ந்தது. எனது பேத்தி யூடியூபில் தனக்கென தனி சேனல் தொடங்கி அதில் பாடல்களைப் பாடி எடிட் செய்து பதிவிட்டு வந்தாள். அதைப்பார்த்துத்தான் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. உங்களது வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் நூலாக எழுதாமல் யூடியூபில் சொல்லிவருகிறீர்கள். இதற்கென ஏதாவது காரணம் உண்டா? யூடியூப் போன்ற காட்சி ஊடகத்தை எளிதாக பயன்படுத்த முடிகிறது. அனைவரும் இதனை எளிதாக பார்க்க முடியும். காட்சி ஊடகம்தான் இன்று வலிமையானதாகவும் உள்ளது. அனைவரிடமும் சென்று சேர்வதாக உள்ளது என்பதால் இதனை நான் தேர்ந்தெடுத்தேன். புதிய இசை, புதிய பாடல் வரிகள் மற்றும் ரீமிக்ஸ் பற்றி கருத்து என்ன? நாம் ஒரு பாடலை கிளாசிக் என்று சொல்ல காரணம், அதன் பாடல் வரிகள் மற்றும் இசைதான். இப்போது அதனை மாற்றி, பாடல்வரிகளை போட்டு மறு உருவாக்கம் செய்வதால் அதன் இயல்பு கெடுகிறது. கிளாசிக் என்று பாடல்களை சொல்லும் பொருளே இதன் காரணமாக மாறிவிடுகிறது. பொதுமு

வெப்பமயமாதல் காரணமாக புயல்களை அடையாளம் காண்பது கடினமாக மாறியுள்ளது. - மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா

படம்
pixabay மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா, வானியல்துறை இயக்குநர் வானியல் மாற்றங்களை அளவிடுவதற்கு கடல் முக்கிய பங்கு ஆற்றுகிறதா? கடல் நீரின் வெப்பநிலையை அளவிடவேண்டுமா? கடல்நீரின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுவது புயல் உருவாகுமா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும். இதன் வழியாக நம் நாட்டிற்கு பருவகாலங்களில் கிடைக்கும் மழைநீர் அளவையும் நம்மால் யூகித்து உணர முடியும். இந்த பிரச்னைகளால் பருவகாலங்களில் மழையின் அளவு குறைவதையும் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும். இவற்றை எதிர்கொள்வதில் நிறைய சவால்கள் உள்ளனவா? பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் அளவை அளவிடுவதில் வெப்பமயமாதல் முக்கிய பங்கை வகிக்கிறது. இதன் காரணமாக நாங்கள் காலம்தோறும் பல்வேறு முறைகளைக் கையாண்டு வானிலையை கணித்து வருகிறோம். ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் புயலால் அடிக்கடி பாதிக்கப்படுகிறதே? தேசிய புயல் பாதுகாப்பு திட்ட அடிப்படையில் ஒடிஷா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அடிக்கடி புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை புயலால் பாதிக்கப்படும் இடங்கள் என தேசிய பேரிடர் மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்காள விரிகுடாவில்