இடுகைகள்

பெருந்தொற்று காலத்தில் கற்றுக்கொண்ட நிர்வாக விஷயங்கள்!

          80-20 ரூல் வருண் பெர்ரி , தலைவர் , பிரிட்டானியா இன்றுள்ள கடினமான சூழ்நிலையை யாரும் யோசித்தே பார்த்திருக்கமுடியாது . வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு , பொருட்களை வாங்கிக்கொண்டு இருப்பதை எந்த நிறுவனங்களுமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . ஆனால் சூழ்நிலை அப்படி இருக்கிறது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு அதன் போக்கில் வியாபாரத்தை அமைத்துக்கொள்வது நல்லது . இம்முறையில் நாங்கள் மெல்ல உற்பத்திதிறனை கட்டமைத்து வருகிறோம் . அலுவலகத்தில்தான் வேலை என்ற நிலை இன்று பெருமளவு மாறியுள்ளது . பெருந்தொற்று காலம் பல்வேறு புதிய உற்பத்திமுறைகளை கண்டுபிடிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இன்று மார்க்கெட்டிங் குழுக்களை அதிக தொலைவுக்கு அனுப்ப முடியாது . அதேசமயம் பொருட்களை சரியானபடி விற்பனையாளர்களுக்கு அனுப்ப முடியாத சூழலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு செயல்பட்டுவருகிறோம் . எங்களுக்கு 80 சதவீத வருமானம் குட்டே , மில்க் பிக்கிஸ் , மாரி , நியூட்ரிசாய்ஸ் பிஸ்கெட்டுகளிலிருந்து கிடைக்கிறது . 2 அலுவலகத்தில் வேலை செய்வது கலாசாரத்தை , கண்டுபிடிப்பை உருவாக்க உதவுகிறது .

டாப் 5 ஸ்டார்ட் அப்கள்- மத்திய கிழக்கு நாடுகளில் அதிக முதலீடு பெற்ற ஸ்டார்ட்அப்கள் இவை!

      டாப் 5 ஸ்டார்ட்அப்கள் ப்யூர் ஹார்வெஸ்ட் ஸ்மார்ட் ஃபார்ம்ஸ் நிறுவனர் மஹ்மூத் அதி , ராபர்ட் குப்ஸ்டாஸ் , ஸ்கை கர்ட்ஸ் பெற்ற முதலீடு 135.8 மில்லியன் தலைமையகம் அரபு அமீரகம் தொடக்கம் 2016 பசுமை இல்ல வாயுக்கள் பிரச்னையில்லாத காய்கறிகள் , பழங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது . தற்போது இருபதிற்கும் மேலான வகைகளில் தக்காளி , ஆறு வித ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்து வருகிறது . ராபர்ட் , ஸ்கை ஆகியோர் ஸ்டான்போர்டு மாணவர்கள் . 2016 ஆம் ஆண்டு இவர்களுடன் மஹ்மூத் அதி இணைந்தார் . அபிதாபியில் 2018 ஆம் ஆண்டு ஹைடெக் பசுமை இல்லம் ஒன்றை கட்டினர் . தற்போது 110 மில்லியன் டாலர்கள் நிதியுதவி கிடைக்க குவைத்திலும் தங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவுள்ளனர் . ஸ்வெல் நிறுவனர் முஸ்தபா கண்டில் , அஹ்மத் சபா முதலீடு 92 மில்லியன் டாலர்கள் தலைமையகம் அரபு அமீரகம் தொடக்கம் 2017 ஸ்வெல் என்பது போக்குவரத்து சேவை நிறுவனம் . கெய்ரோ , அலெக்ஸாண்ட்ரியா ஆகிய தடங்களில் 600 க்கும் மேற்பட்ட போக்குவரத்து சேவைகளை இயக்கி வருகிறது . தற்போது கென்யா , பாகிஸ்தான் ஆகிய

மன்னருக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மக்களின் போராட்டம் !

    தாய்லாந்து போராட்டம் தாய்லாந்தில் பல்வேறு மாதங்களாக ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர் . அவரை்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் . அண்மையில் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் தாய்லாந்து போராட்டம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது . பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடு தாய்லாந்து . 70 மில்லியன் (1 மில்லியன் -10 லட்சம் ) மக்கள் இம்மதம் தழுவியவர்கள் . 1932 முதல் அரசியலமைப்புச்சட்டம் இங்கு அமலில் இருக்கிறது . ஆனால் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்திற்கு பிறகு ராணுவத்தின் ஆட்சிதான் பெருமளவு அங்கு நடந்து வந்தது . 2001 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன . அதுவரை பிரதமராக இருந்த பாபுலிச தலைவரான தக்‌ஷின் ஷின வத்ரா , ராணுவத்தினால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . இந்த விவகாரம் நடந்த ஆண்டு 2006. இதுபோல ராணுவம் அங்கு நடந்துகொள்வது புதிதல்ல . 1976 ஆம் ஆண்டு அக் .6 அன்று தாய்லாந்திலுள்ள தம்மசத் என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்கியது . இத

நம்பிக்கை மனிதர்கள் 2020 - 50 மகத்தான மனிதர்களைப் பற்றிய சுவாரசிய விளக்கம்

படம்
canva.com   டி . ஜெயகிருஷ்ணன் , அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் கோவிட் -19 நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள , உணவுகளைத் தருவதற்கான ரோபோக்களை உருவாக்கியுள்ளார் . 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் கேரளத்தைத் தாக்கியது . இதன் காரணமாக , செவிலியர்கள் நோயாளிகளை தொடாமல் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது . இதற்கு தீர்வு கண்டுபிடிக்க ஜெயகிருஷ்ணன் முயன்றார் . அப்படி உருவானதுதான் கர்மி பாட் . ‘’’ நீங்கள் எங்கள் பாட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எளிதாக உணவு மற்றும் மருந்துகளை அளிக்க முடியும் . இதன் செயல்பாடுகளை செவிலியர்கள் தங்கள் அறைகளிலிருந்து கண்காணிக்க முடியும் ’’ என்கிறார் டி . ஜெயகிருஷ்ணன் . தற்போது கர்மி பாட் அதிநவீனமான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது . மருந்துகள் , உணவுகள் ஆகியவற்றை நோயாளிகளுக்கு அளிக்கிறது . இதோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் புற ஊதாக்கதிர்கள் மூலம் சுத்தப்படுத்தி எடுத்துக்கொண்டு வருகிறது . மேலும் நோயாளியின் உடல் வெப்பநிலையையும் கணக்கிட முடிகிறது . இதனை மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும் . தேவையெனில் நோயாளியிடம்

கருப்பு பணம் காதலையும் சுமந்து வந்தால்... பிளாக் மணி லவ்(கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர்

படம்
            பிளாக்மணி லவ் (கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர் 2014-2015 164 எபிசோடுகள் துருக்கியின் இஸ்தான் புல்லில் வாழும் அஹ்மது டெனிஸர். தனது மகள் எலி்ப் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஆபீசிற்கு நள்ளிரவில் செல்கிறார். செல்லும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவருடன் அவரது மகள் வயதில் இளம்பெண் ஒருவரும் இருக்கிறாள். இந்த வழக்கை  ஹூசைன் டெமிர் என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அங்கு லீவுக்கு வான் நகரிலிருந்து அவரது தம்பியும், குற்றப்பிரிவு கேப்டனுமான உமர் டெமிர் வந்திருக்கிறார். நாட்டிலேயே ஸ்மார்டான சிறந்த போலீஸ் அதிகாரி அவர். தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ள நேரத்தில் அவரின் பணிக்காக  பாராட்டி விருது வழங்கப்படுவதோடு ஒரு மாத காலம் சம்பளத்தோடு விடுமுறையையும் அரசு வழங்குகிறது. அதில்தான் இஸ்தான்புல்லிலுள்ள தனது அம்மா, அண்ணன் குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார் உமர் டெமிர்.  அஹ்மது டெனிஸர் கொல்லப்பட செய்தி வயர்லெஸில் சொல்லப்பட, அண்ணன் ஆபீசில் ஆர்டா என்ற நண்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார் உமர். ஆர்டா அந்த வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே  கிளம்பும்போது, உமரையும் சரி ந

2020 ஆம் ஆண்டிற்கான மோசமான மால்வேர்கள்! - மால்வேர், ரான்சம்வேர், டிரோஜன் புரோகிராம்கள்

படம்
            மோசமான மால்வேர்கள் 2020 எமோடெட் பெரும்பாலும் இமெயில் மூலம் கணினிகளுக்கு பரவியது . இந்த மால்வேர் கணினியை பாதித்திருக்கிறது என்று கூட ஒருவர் கண்டுபிடிப்பது கடினம் . அடிக்கடி கணினியில் ஆன்டிவைரஸ் அப்டேட் கேட்டால் உஷாராகிவிடுவது உத்தமம் . இந்த மால்வேர் , தகவல்திருட்டுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது . ஒருவரின் கணினியில் பரவினால் அவரின் தொடர்பிலுள்ள அனைவருக்கும் அவரின் பெயரில் இமெயில்கள் பரவலாக செல்லும் . அதை கிளிக் செய்தால் மால்வேர் செயல்படத்தொடங்கும் . டிரைடெக்ஸ் இது ஒரு டிரோஜன் புரோகிராம் . பெரும்பாலும் ஒருவரின் வங்கித் தகவல்கள் , பாஸ்வேர்டுகளை திருடுகிறது . 2014 முதல் கணினிகளை பாதித்து வரும் இந்த புரோகிராம் கணினியின் செயல்பாடுகளை கண்காணித்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து பிற ஆபத்தான புரோகிராம்களை தரவிறக்கம் செய்துகொள்கிறது . பெரும்பாலும் இமெயில் மூலம் பரவுகிறது . எமோடெட் நச்சு நிரல் மூலம் கூடுதலாக கணினிக்கு வருகிறது புரோகிராம் இது . எக்காரணம் கொண்டும் இமெயிலில் வரு்ம் லிங்குகளை திறக்காதீர்கள் . ரியுக் டெத்நோட் எனும் ஜப்பானிய காமிக

உங்கள் போனுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்கள் இதோ......2020

படம்
          சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் ஸ்னாப்சீட் ஆண்ட்ராய்டுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் இது . போட்டோ எப்படி எடுத்தாலும் இதில் உள்ள ஏராளமான டூல்களை பயன்படுத்தி ரவிவர்மாக ஓவியம் போல அழகாக மாற்றமுடியும் . புகைப்படத்தை தவறுதலாக அழித்துவிட்டாலும் கூட அதனைத் திரும்ப பெற முடியும் . கூகுளின் தயாரிப்பு என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆப்பை திறந்தவுடனே பிரிவியூ பேனல் அழகாக விரிகிறது . செய்யும் மாறுதல்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம் . விஸ்கோ இந்த ஆப் தனித்திறமையான புகைப்படக்காரர்களுக்கானது . இதன் சிறப்பம்சம் , ரெசிப்பீஸ் என்ற அம்சம் . எதிர்காலத்தில் புகைப்படத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களுக்காக அதனை சேமித்து வைக்க முடியும் . இலவச ஆப்பில் குறைந்த சமாச்சாரங்களைத்தான் சோதிக்க முடியும் . புகைப்பட எடிட்டிங் ஆப் என்றாலும் , இதனை சமூக வலைத்தளம் போல பயன்படுத்தால் . இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் படங்களைப் பார்க்கலாம் . நண்பர்களுக்கு நீங்கள் செய்த படங்களை பகிரலாம் . இதில் உடனே மாஸ்டர் ஆக முடியாது . அதிக நேரம் செலவழித்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து ப