இடுகைகள்

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்

டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா?

  டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா ? 2008 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்று வெளியானது . அதில் அட்லஸ் ஜெனடிக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர் , டிஎன்ஏ மூலம் குழந்தைகள் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களாக ஆவார்களா , இல்லையா என்பதை தங்களால் கண்டுபிடித்துச் சொல்லமுடியும் என்று கூறியிருந்தார் . இக்கட்டுரை வெளியானதற்கு பிறகு , உலகமே பரபரப்பானது . அப்படியும் இருக்குமோ என்று பலரும் டிஎன்ஏ எடுத்து ஒரே இரவில் தங்கள் குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக்கி விட துடித்தனர் . குழந்தைகளுக்கு உடனே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சோதித்தால்தான் பள்ளி , கல்லூரி முடியும் முன்னர் நீங்கள் அவர்களை விளையாட்டு வீரர்களாக்க முடியும் என்று அக்கறையும் பயமுறுத்தலும் கூட கட்டுரையில் இருந்தது . 2015 இல் வெளியான ஸ்போர்ட்ஸ் ஜர்னல் மெடிசின் இதழில் , மரபணுக்கள் விளையாட்டு வீரர்களின் திறனில் எந்த பங்கும் வகிப்பதில்லை என்று கூறப்பட்டது . இந்நிறுவனம் ஆக்ட்என் 3 என்ற மரபணு சோதனை மூலம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண முடியும் என கூறியது . விளையாட்டு வீரர்களின் உடலில் 9,900 ஆயிரம் பல்வேறு வ
  இந்தியாவை உயர்த்தும் கிராமப் பொருளாதாரம் ! கொரானோ நோய்த்தொற்று இந்தியாவை தாக்கி ஆறு மாதங்களாகின்றன . மத்திய அரசும் , மாநில அரசுகளும் பொதுமுடக்க தளர்வுகளை மெதுவாக அறிவித்து வருகின்றன . கொரானோ காரணமாக அனைத்து தொழில்துறைகளும் முடங்கிவிட்டன என்பது உண்மைதான் . அதேசமயம் கிராமங்களிலுள்ள வேளாண்மைத்துறை மெல்ல மீண்டெழுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன . கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மட்டும் 111.61 டன் உரம் விற்பனையாகியிருக்கிறது . மேற்குவங்கம் , உத்தரப்பிரதேசம் , பஞ்சாப் , தெலங்கானா , ஹரியாணா , சத்தீஸ்கர் , ஒடிஷா , ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வருமானத்திற்கு நெற்பயிரையே நம்பியுள்ளனர் . நெற்பயிர் பயிரிடும் பரப்பு கூட 17 சதவீதம் ( ஜூன் 24 படி ) அதிகரித்துள்ளது . விவசாயத்திற்கான டிராக்டர் விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகரித்துள்ளது . மத்திய அரசு வழங்கிய கடன் திட்டங்களும் , பருவகால மழையும் , இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதும் கிராம பொருளாதாரத்தை மீட்கும் என வேளாண்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர் . இந்தியாவின் பொருளாதார

நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை!

  நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை ! பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற்றோரின் எண்ணிக்கை 11.17 கோடியாக உள்ளது . இந்த திட்டத்தில் பயன்பெற ஒருவருக்கு விவசாயம் செய்வதற்கான சொந்த நிலம் இருப்பது அவசியம் . விவசாயிக்கான தகுதி இருந்தாலும் சில விதிகளால் அவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறாமல் போவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன . ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை விவசாய கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுகிறது . 2015-16 ஆம்ஆண்டு அறிக்கையில் நிலங்களை உரிமையாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14.6 கோடியாக அதிகரித்துள்ளது . 2010-11 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது . இவர்கள் அனைவருமே நிலங்களை உரிமையாக கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய விவசாயக்கொள்கை (2006) தகவல் தெரிவிக்கிறது . எனவே , இவர்கள் ஒருவரின் நிலத்தில் விவசாயக் கூலியாக பணியாற்றி வந்தாலும் கூட அவர்களையும் விவசாயிகள் பிரிவில்தான் சேர்ப்பார்கள் . நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் , அதில் பணியாற்றுபவர்கள் என பலரையும் ஆய்வு செய்யும் பணிக்கு முதலில் அரசு பெரிய முக்கிய

உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி!

  உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி ! ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை அவர் நடக்கும் நடையை வைத்து கணிக்க முடியுமா என உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் . நடந்துசெல்வது ஆரோக்கியத்தைக் காக்கும் என்று முன்பிருந்தே மக்களுக்கு கூறப்படுகிறது . ஆனால் மனிதர்களின் கையிலுள்ள கைரேகை எப்படி தனித்துவமானதோ அதேபோல ஒருவரின் நடந்துசெல்லும் பாணியும் வேறுபட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . நடக்கும்போது உடலிலுள்ள பலநூறு தசைகள் இயங்குகி்ன்றன . பிரெஞ்சு நாவலாசிரியர் ஹானர் டி பால்சாக் , 1832 ஆம்ஆண்டு எழுதிய தி விகார் ஆப் டூர்ஸ் நாவலில் , பெண்ணுடைய நடைக்கும் அவளது ஆளுமைக்கும் இடையில் உள்ள தொடர்பை எழுதியிருப்பார் . இவரின் தியரி ஆஃப் வாக்கிங் என்ற நூலும் இந்த வகையில் முக்கியமானது . ’’ ஒவ்வொரு மனிதரின் நடைபாணியும் பிறரிடமிருந்து மாறுபட்டது . அவர்களின் கை அசைவு , மூட்டுகளின் நகர்வு ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறோம்’’ என்கிறார் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ஹெய்ன்செல் . சிசிடிவி கேமரா மூலம் ஒருவரின் நடைபாணியை பார்த்து குற்றவாளியைக்