இடுகைகள்

கிரிப்டோகரன்சி பற்றிய அறிமுகம்!

படம்
  கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் அதில் தொழில் செய்பவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் வரி 30 சதவீதம் என ஒன்றிய அரசு லேட்டரல் திங்கிங் முறையில் யோசித்துள்ளது. முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்பதைப் பார்ப்போம்.  ரூபாயை எப்படி டாலருடன் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்துகிறோமோ அதே முறையில்தான் கிரிப்டோகரன்சியும் செயல்படுகிறது. ரூபாய், டாலர் என்பதை நாம் கண்ணால் பார்த்து கையில் தொட முடியும், ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் முறையில்தான் பார்க்க முடியும். இதனை வியாபார பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். என்கோடிங் முறையில் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடைபெறும். இவை மின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  உலகளவில் 11 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உண்டு. ஆனால் அதில் பிரபலமாக புழங்கத்தக்க வகையில் இருப்பது மிகச்சிலவே. அதில் பிட்காயினும், எத்ரியமும் உண்டு.   கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நடப்பது தனியார் நிறுவனத்தின் சர்வர்களுக்குள்தான். சாதாரண வியாபாரத்தில் வங்கி இடைமுகமாக இருக்கும். இங்கு தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு

மனது சொன்னதைக் கேட்டால் தொழிலில் வெற்றிபெறலாம்! - சித்திரம் பேசுதடி - ரஷ்மி பன்சால்

படம்
  சித்திரம் பேசுதடி ரஷ்மி பன்சால் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் எழுத்தாளர் ரஷ்மி பன்சால் இந்த நூலில் மொத்தம் இருபது தொழில்முனைவோர் உள்ளனர். இவர்கள் யாரும் எம்பிஏ படிக்கவில்லை. அனைவருமே மனதிலுள்ள வேட்கை காரணமாகவே தங்களது தொழில்துறையில் வெற்றியை சந்தித்துள்ளனர்.  இதில் நிறைய சவால்களும் உண்டு. ஆனாலும் அதனை எதிர்கொண்டு சாதித்துள்ளனர். வணிக நூலை சுவாரசியமாக எழுதுவது கடினம். ஆனால் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் லஷ்மி விஷ்வநாதன்.  நூலில் மொத்தம் இருபது தொழில் முனைவோர் உள்ளனர். இவர்களுக்கு பொதுவாக உள்ள விஷயம். முறைப்படியான வணிக நிர்வாக படிப்பை இவர்கள் படிக்கவில்லை. தொழிலில் கடைப்பிடித்த அனைத்து விஷயங்களையும் தன்னார்வமாக கற்றுக்கொண்டனர். மேலும், அனுபவ பூர்வமாக கற்ற விஷயங்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை சரிவர அமைத்துக்கொண்டனர். பிறகு சமூகத்திற்கும் அதனை வழங்கியுள்ளனர்.  மேலோரோ கீழோரோ எல்லாம் அவர்களின் செயல்களில் உள்ளது மேலோரிடம் கீழ்மையும், கீழோரிடம் மேன்மையும் கூட காணக்கிடைக்கும் என்பார்கள்.  அதுபோல இந்த நூலில் உள்ள தொழில் முனைவோர் அனைவரிடம் உள்ள சாதிக்கும் வே

ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

படம்
  எழுத்தாளர் ஐசக் அசிமோவ் அறிவியல் ஜெகஜால எழுத்தாளர்  ஐசக் அசிமோவ் கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார்.  கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ்.  அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர். மிட்டாய், செய்திதாள், மாத இத

குழந்தைகளின் இறப்பை மறைத்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன! - மருத்துவர் காஃபீல் கான்

படம்
  மருத்துவர் காஃபீல் கான் மருத்துவர் காஃபீல் கான் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரிந்த மருத்துவர். ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறிய குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக சிலிண்டர்களையும் சொந்தசெலவில் ஏற்பாடு செய்தார். இதனால் மக்களின் நாயகன் ஆனார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளினார். இவரது குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டத் தொடங்கியது. தற்போது சிறைவாசம் மீண்டு வந்தவர், சம்பவம் பற்றிய நூலை எழுதியுள்ளார்.  கோரக்பூர் சம்பவம் எப்படி நடந்தது? ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அங்கு குழந்தைகள் இறந்துகொண்டே இருப்பது இயல்பானது என்கிறார்களே? புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம், முதல்வர், செயலாளர் ஆகியோருக்கு பதினான்கு கடிதங்களை எழுதியது. ஆனால் அவர்கள் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. பணத்தை சரியான நேரத்திற்கு கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்னை வந்திருக்காது.  2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் பணம் பட்டுவாடா ஆனது. அதே ஆண்டில்தான் உ.பி மாநில அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடை 50 சதவீதமாக குறைத்தது.  குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகிறார்கள் என்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க ம

பல்வேறு மொழிகளில் பாடலைப் பாடுவது கடினமானது! - பாடகி உஷா உதூப்

படம்
  பாடகி உஷா உதூப் உஷா உதூப்  பாடகி அண்மையில் இவரின் தி குயின் ஆப் இந்தியன் பாப் என்ற சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது.  நீங்கள் பதினேழு இந்திய மொழிகளிலும் நான்கு வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்கள். தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடுவது கடினமானதா? இப்படி பல்வேறு மொழிகளில் பாடுவது கடினமானதுதான். எனக்கு தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடும்போது பாடலை நான் எனக்காக மூன்றுமுறை எழுதி வைத்துக்கொள்வேன். குறிப்பிட்ட வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இந்த முறை பயன்படுகிறது.  பாடலைப் பாட எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்? பணம் கிடைக்கிறது என்பது முக்கியமான காரணம். அதற்கு முன்னதாக நமக்கு ரசிகர்கள் வேண்டுமே? பாடலின் தரமும், அந்த பாடல் நமக்கு கிடைப்பதும் முக்கியமானது. ரசிகர்களின் எண்ணிக்கையை விட பாடலின் தரம் முக்கியமானது.  நீங்கள் 53 ஆண்டுகள் பாடகியாக இருந்துள்ளீர்கள். இதனை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது? இது கனவுப்பயணம் போலத்தான் இருக்கிறது. என்னுடைய வேலையின் முக்கியமான சாதனைகள் அனைத்துமே கடுமையான சவாலாகத்தான் இருந்துள்ளது. நான் திரைப்பட பாடகியாக மாறுவதற்கு முன்னர் நேரடியாக மேடைகளில் பாடிக்கொண்டிருந்தேன

ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

படம்
  தி பவர் - வித்யுத் ஜாம்வால் தி பவர் மகேஷ் மஞ்ரேக்கர் காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை.  சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன.  கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது.  காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேரா போட்டு அவரது இடத்திற்க

ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

படம்
  ஹர்பால்சிங் சீமா ஹர்பால் சிங் சீமா ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள்.  ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே? இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள்