இடுகைகள்

இந்தியா 75 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை! - பதினான்கு உறுப்பினர்கள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை ஜவகர்லால் நேரு பிரதமர் நவ.14, 1889 - மே 27, 1964 சர்தார் வல்லபாய் படேல் உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அக்.31, 1875 - டிச. 15, 1950 ஆர்.கே. சண்முகம் செட்டி நிதித்துறை  அக்.17, 1892 - மே 5, 1953 சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத்துறை  ஜூலை 11, 1902 - ஜூன் 29, 1961 ராஜேந்திர பிரசாத் விவசாயம் மற்றும் உணவு டிச.3, 1884 - பிப்.28, 1963 மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்வித்துறை நவ.11, 1888 - பிப்.22, 1958 ஜான் மத்தாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை ஜன் 10, 1886 - நவ.2, 1959 பி.ஆர். அம்பேத்கர் சட்டம் ஏப்ரல் 14, 1891 - டிச.6, 1956 ஜெகஜீவன்ராம் தொழிலாளர் துறை  ஏப்.5, 19008 - ஜூலை 6, 1986 சிஹெச் பாபா வணிகத்துறை ஜூலை 22, 1910, ஜூலை 29, 1986 ரஃபி அஹ்மத் கித்வால் தகவல்தொடர்பு பிப்.18, 1894 - அக்.24, 1954 ராஜகுமாரி அம்ரித் கௌர் சுகாதாரத்துறை பிப்.2, 1887 - பிப்.6, 1964 சியாம பிரசாத் முகர்ஜி  தொழில்துறை மற்றும் விநியோகம் ஜூலை 6, 1901 - ஜூன் 23, 1953 என்வி காட்கில் மின்சாரம் மற்றும் சுரங்கம் ஜன் 10, 1896 - ஜன் 12, 1966 டைம்ஸ் ஆப் இந்தியா

இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள் இந்தியா 75 டெலிவரிக்கு ரெடி!  உலகம் முழுக்க இன்று இந்தியாவின் சமையல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. இப்போது அந்த பொருட்கள் இல்லாமல் ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.  2020ஆம் ஆண்டு 275. 5 பில்லியன் மதிப்பிலான பொருட்களை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இதில் பெட்ரோல், எண்ணெய், வைரம், அரிசி, மருந்துகள், நகை, கார்கள் ஆகியவை உள்ளடங்கும். அமெரிக்கா, சீனா, அரபு நாடுகள் நமது முக்கியமான வாடிக்கையாளர்கள்.  எல்லோருமே எஞ்சினியர்கள்தான் இப்படி கிண்டல் செய்தாலும் கூட ஆசியாவில் சிறந்த பொறியாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அரசு மானிய விலையில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து இருப்பதுதான். இதற்கான கட்டமைப்பு, நிதி ஆதாரம் எல்லாமே 1940 முதல் 50 களில் திட்டமிடப்பட்டது என்பதை யாரும் மறக்க கூடாது. வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பெருமையை வெள்ளையர்களுக்கு புரிய வைத்து வென்றிருக்கிறார்கள் நமது எஞ்சினியர்கள்.  ஐடி ஆட்கள் ப்ரோ! ஐடி சார்ந்த சேவைகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் செய்துகொடுப்பது இந்தியாதான். 1967ஆம் ஆண்டு த

விண்வெளியில் இந்தியாவின் யுரேகா சாதனைகள் ! இந்தியா 75

படம்
  இந்தியாவின் யுரேகா தருணங்கள்! இந்தியா 75 சிறந்த அண்டைநாடு இதற்கு இந்தியாவைத்தான் அடையாளமாக சொல்லவேண்டும். அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை உருவாக்க பல்வேறு பிரயத்தனங்கள் செய்து முதலீடு செய்து கோட்டை விட்டாலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. இருக்கும். 1971ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு இந்தியா உதவி செய்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வெற்றி பெற்றார். அகதிகள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் செல்வதற்கும் உதவினார். பாகிஸ்தானின் ராணுவ அத்துமீறல்கள் குறித்த உலக நாடுகளின் கருத்துகளையும் கவனப்படுத்தினார். சோவியத்துடன் ஒப்பந்தங்களை செய்தார். மதம் சார்ந்த நாடு என்பதை இந்தியா, தனது செயல்பாடுகளால் மாற்றியது என மேற்சொன்ன சம்பவங்களை வைத்து உறுதி செய்யலாம்.  இறுதியாக ஜெயம்! 1961ஆம் ஆண்டு கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து இந்திய அரசு மீட்டது. இதற்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிட்டனர். இப்போராட்டத்தில் ஏழு ராணுவ வீர ர்கள் பலியானார்கள். இந்த வெற்றியின் மூலம் 450 கால ஐரோப்பியர்களின் காலனி ஆட்சி முழுமையாக முடிவுக்கு வந்தது. 36 ம

இந்தியாவில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்! இந்தியா 75

படம்
  சிறந்த வாழ்க்கை  நகரங்களின் அதிகரிப்பு தந்த வாய்ப்பு இந்திய நகரங்கள் ஏராளமான மாற்றங்களைப் பெற்றன. கடந்த காலத்தில் இருந்த சாதி, குடும்ப பெருமை குறைந்தது வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. பிற மாநிலங்களிலிருந்தும் கூட தென்னிந்தியாவிற்கு ஏராளமான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது, பிற இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்களிலும் வளர்ச்சி கிடைக்கத் தொடங்கியுள்ளது. மக்களின் வருகையால் அரசும் பல்வேறு அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.  அனைவருக்குமே அன்பு பாலின ரீதியாக சிறுபான்மையினருக்கு மதிப்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. 2001ஆம் ஆண்டு நாஷ் பவுண்டேஷன் இதற்கான வழக்கைத் தொடுத்தது. இதில் மாற்றுப்பாலினத்தவர்களை குற்றவாளிகளாக கருதும் காலனிய சட்டமான பிரிவு 377 ஐ நீக்க கோரினர்.  ஆமை வேகத்தில் நடந்த வழக்கு 2009இல் நடைபெற்றபோது உயர்நீதிமன்றம் இந்தபிரிவு வயது வந்தோருக்கு பொருந்தாது என கூறிவிட்டது. ஆனாலும் மீண்டும் சிலர் வழக்குப் போட இப்போது வழக்கு பத்தாண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.  மாற்றுப்பாலினத்தவருக்கு உரிமை சமத்துவம் அனைத்து பாலினத்தவர

கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

படம்
  கலைகளில் சாதனை சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது.  தூர்தர்ஷன் அறிமுகம் இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில்

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம் , மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை த

இந்தியாவின் முக்கியமான தருணங்கள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான தருணங்கள்  இந்தியா 75 அமைதியான மாநிலங்கள்  பிரிவினை நடந்து ரத்த ஆறு ஓடிய பிறகு, இந்திய மாநிலங்களில் நடைபெற்று முக்கியமான மாற்றம், குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் அதிகம் இருந்தால் அதனை தனியாக பிரிக்கலாம் என்று எழுந்த போராட்டம்தான். ஆனால் பிரதமர் நேரு இதனை ஏற்கவில்லை. தீர ஆலோசித்து மொழி சார்ந்து மாநிலங்களை பிரித்து எல்லைகளை அமைத்தார். எல்லை சார்ந்த பிரச்னைகள் மாநிலங்களுக்குள் ஏற்பட்டால் இந்திய ஒன்றியம் உடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்று பிரிவினை வாத சக்திகள் அதிகாரத்தைப் பெற்று தேர்தல் ஆதாயங்களுக்காக மாநிலங்களை உடைத்து பிரிக்க முயன்று வருகின்றனர். ஆனால் அன்று நேரு எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் மக்களையும், நாட்டையும் பற்றி மட்டுமே யோசித்தார். அதனால்தான் நாட்டிலுள்ள மாநிலங்கள் அமைதியாக வளர்ச்சியை நோக்கி திரும்பின.  பால் உற்பத்தியில் புரட்சி! வெண்மை புரட்சி என்றுதான் கூறவேண்டும். வர்கீஸ் குரியனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரு, இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்கள் தந்த ஆதரவு காரணமாக ஆனந்த் நிறுவனம் குஜராத்தில் உருவானது. இந்த கூட்டுறவு நிறுவனத்தினால் அங்கு வறுமையில் வ

இந்தியாவின் பெருமையான சாதனைகள்! India@75

படம்
  இந்தியாவின் பெருமையான சாதனைகள்! இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை இதில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குடிமக்களுக்கு வழங்குகின்றன. அனைத்து மாநிலங்களுக்கான உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு என்பதை அரசியலமைப்புச் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன. இன்று அதனை உடைக்க மதவாத கும்பல் முயன்றாலும், அது உருவாக்கப்பட்ட காலத்திலும் இன்றும் வலிமையான ஒன்றாக எளிய மக்களுக்கும் உதவுகிறதாகவே உள்ளது.  அனைவருக்கும் வாக்குரிமை பாலினம், வகுப்பு, கல்வி, சாதி, மதம்  என எந்த பாகுபாடுமின்றி அனைத்து வயது வந்தோர்களுக்கும் வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. பல்லாண்டுகளாக காலனித்துவ நாடாக இருந்த நாடு இந்தியா. பணக்கார ர்கள் ஏழைகளுக்கான இடைவெளி இன்றும் இருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியது மகத்தான சாதனை.  ராணுவ ஒழுக்கம் இந்தியாவில் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் ராணுவ கலகம் நடந்துள்ளது. இன்றுவரை பாகிஸ்தானில் ராணுவம்தான் மறைமுக ஆட