இடுகைகள்

கடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலிலுள்ள உப்பு குறைந்தால், காணாமல் போனால் என்னாகும்?

படம்
pixabay ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி திடீரென கடலிலுள்ள டன் கணக்கிலான உப்பும் காணாமல் போனால் என்னாகும்? உடனே நடக்கும் ரியாக்ஷன், நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புதான். அடுத்து பிற இடங்களிலுள்ள நீர், கடல் நீரின் அடர்த்திக்குறைவால் சவ்வூடு பரவல் முறையில் உள்ளே வர முயற்சிக்கும். ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் சிறிது உருகும். ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்வி நிஜமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு எந் பிரச்னையும் இல்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

கடலை சுத்தமாக்கி டைவர்கள்!

படம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடலில் அறுநூறுக்கும் மேற்பட்ட டைவர்கள் குதித்து அதனை சுத்தமாக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இதற்கு முன்பு 614 பேர் கடலில் இதுபோல சுத்தம் செய்து சாதனை செய்துள்ளனர். தற்போது 633 பேர் செய்ததால் கின்னஸ் சாதனையாக இடம்பெற்றுள்ளது. சுத்தம் செய்யும் இப்பணி ஆண்டுதோறும் டிக்சி டைவர்ஸ் எனும் அமைப்பினரால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் டீர்ஃபீல்டு பீச் உமன் கிளப் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து டைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் 1,626 பௌண்டுகள் குப்பை நீக்கப்பட்டுள்ளது. இவற்றை மீன்பிடி பகுதியலிருந்து இந்த டைவர்கள் அகற்றியுள்ளது முக்கியமானது. இது மிகச்சிறப்பான நேரம் .. அனைவரும் ஒன்றாக கூடி குப்பைகளை அகற்றி கடலுக்கு நன்மை செய்தோம் என்கிறார் டைவரும் ஒருங்கிணைப்பாளருமான டைலர் பர்கைன். நன்றி: இகோ வாட்ச்

பிளாஸ்டிக்கை என்ன செய்யலாம்?

படம்
கடலில் பெருகியுள்ள பிளாஸ்டிக்குகளை சேகரித்தாலும் அதனை என்னசெய்வது என்ற குழப்பம் அனைவருக்குள்ளும் உள்ளது. தற்போது பிளாஸ்டிக்கை திரும்ப கடலுக்குள்ளே பயன்படுத்தலாம் என மாற்றி யோசித்துள்ளது தேசிய கடல்சார் ஆராய்ச்சியகம்(NCCR).  பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை உருக்கி செயற்கையான பாறை போன்ற பொருட்களாக்க வேண்டும். பின்னர், அதனை நீர்ப்பாசி போன்றவற்றின் வாழிடமாக்கி பயன்படுத்தலாம். இதனால், அழியும் நிலைகளிலுள்ள பவளப்பாறைகளைக் காக்கலாம் என்கிறது ஆராய்ச்சியாளர் கூட்டம். பிளாஸ்டிக்குகளை முழுமையாக மாற்ற முடியாது. ஆனால் ஆராய்ச்சி வழியாக கண்டுபிடித்த சில விஷயங்களை சோதித்து களப்பணியில் இதனைச் செய்யலாம் என்கிறார் மேற்சொன்ன அமைப்பின் இயக்குநர் எம்வி ரமணமூர்த்தி. கடல் ஆராய்ச்சியில் பயன்படும் வலை, கயிறு, ரப்பர் டயர்கள் ஆகியவை நீர்ப்பாசிகளுக்கான வாழிடமாக இருக்க உதவும். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆறு லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கடலில் ஒதுங்குகிறது. 2016 -17 காலகட்டத்தில் மட்டும் பிளாஸ்டிக்குகளால் பவளப்பாறைகள் 16 சதவீதம் அழிந்துள்ளன. பல்வேறு கழிவுப்பொருட்களால் 23 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீன்களைக் காப்பாற்றிய கடல் சூழலியலாளருக்கு அங்கீகாரம்!

படம்
indian women blog கடல் சூழலியலாளருக்கு ஃப்யூச்சர் பார் நேச்சர் விருது! திவ்யா கர்நாட், தன் இணையதளத்தில் மீன் தொடர்பான பல்வேறு உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதோடு சீசனில்  கடலில் கிடைக்கும் மீன்வகைகளை அதி துல்லியமாக பதிவு செய்துள்ள அக்கறைக்குத்தான் அவருக்கு ஃப்யூச்சர் ஃபார் நேச்சர் விருது (2019) கிடைத்துள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், திவ்யா.  சிறுவயதிலிருந்து விலங்குகள் மீதான பிரியம், அவரை சூழலியலாளராக மாற்றியுள்ளது.  currentaffairsadda நான் முதலில் கால்நடை மருத்துவராகவே முயன்றேன். ஆனால் காட்டுயிர் சார்ந்த துறையில் காலூன்றி உள்ளேன் என புன்னகைக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்காக தமிழ்நாடு மற்றும் ஒடிஷாவில் பணியாற்றிவர் இவர். ஆமைகளை மீனவர்கள் அழிப்பது போல காட்சியை ஊடகங்கள் உருவாக்கினாலும் அதனை உண்மையில்லை என்று மறுக்கிறார் திவ்யா. சீசனில்லாத போது, மீன்பிடி தடைக்காலத்திலும அவர்களுக்கு வாழ்வாதாரமாக மாறுவது இந்த ஆமைகள்தான். இவற்றை விற்று வரும் பணத்தை, வாழ்வ