இடுகைகள்

குங்குமம் விநோதரச மஞ்சரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்

படம்
விநோதரச மஞ்சரி- ரோனி பைக்கை மீட்க 1 கி . மீ சேசிங் !  சரக்கு அடித்துவிட்டு படுத்துவிடும் அப்பிராணிகளை விடுங்கள் . ஆனால் தொண்டை வரை குடித்துவிட்டு அப்படியே  சாலையில் இறங்கி ஊருக்கே பீதிதரும் பிரகஸ்பதிகள் பற்றி கதை உலகெங்கும் உண்டுதானே ! கர்நாடகாவின் குடிமகன் ஒருவர் கூட செமபோதையானார் . ஆனால் பரவசத்தில் என்ன செய்தார் தெரியுமா ? கர்நாடகாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் , மூக்குமுட்ட குடித்து பரவசம் தளும்ப தள்ளாடி வந்தவர் , ட்ராஃபிக் போலீசின் பைக்கைப் பார்த்ததும் சிறிது கூட யோசிக்கவில்லை . உடனே சாவி போட்டு எஞ்சின் உசுப்பி கிளப்பிவிட்டார் ; அதுவும் பைக்கின் மீதிருந்து போலீசின் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு . உடனே குடிமகனை சேஸ் பண்ணிப்போனால் , ஏறத்தாழ 1 கி . மீ போய் வளைத்துத்தான் பைக்கை மீட்டிருக்கிறார் பரிதாப போலீஸ்காரர் . ஆனால் குடிபோதை பரவசத்தில் கர்நாடக மனிதர் சிரிப்பதை நிறுத்தவேயில்லை . அதுதான் ஊரே சிரிச்சிருச்சே !   மகள்களே இனி மாடுகள் ! இந்தியாவில் மாநில அரசின் கடன் தள்ளுபடி அனுசரணையைத் கடந்து , விவசாயம் செய்வது இடியாப்ப சிக்கலாகி வருகிறது என்பதற்கு மத்தியப்

விநோதரச மஞ்சரி தொகுப்பு 2: ரோனி ப்ரௌன்

படம்
விநோதரச மஞ்சரி   தொகுப்பு: ரோனி ப்ரௌன் சோலார் பாண்டா ! குங்க்பூ பாண்டாவின் ரசிகர்கள் உலகெங்கும் இருப்பதில் என்ன தவறிருக்கிறது ? சீனாவில் மெகா பாண்டா உருவத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் மையம் அனைவரையும் கவர்ந்து வருகிறது .  சீனாவின் தாடோங் பகுதியில் பாண்டா க்ரீன் எனர்ஜி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களை விமானத்திலிருந்து பார்த்தால் மெகா பாண்டாவின் உருவம் வசீகரமாக ஈர்க்கிறது . ஐ . நா சபையின் க்ளீன் எனர்ஜி திட்டத்தின்படி அமைக்கப்பட்ட இந்த சோலார் பேனல் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் . அடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஃபிஜி ஆகிய இடங்களில் 100 க்கும் மேற்பட்ட பாண்டா டிசைனிலான சோலார் பேனல்கள் உருவாக்கப்படுமாம் . பாண்டா தேசம் !   நேபாளத்தின் பெயரற்ற சிறுமி ! பைக்கில் நிற்கும் ட்ராஃபிக்கில் பிச்சை எடுக்கும் சிறுமி , டீக்கடையினருகில் கந்தலான சிக்குப்பிடித்த உடையில் அமர்ந்துள்ள மனிதர்களுக்கும் ஒரு கதை இருக்கும்தானே ! மும்பையின் பவுன்சி மேத்தா நேபாளத்தில் சந்தித்த சிறுமியின் கதையும் அப்படித்தான் . சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில

விநோதரச மஞ்சரி தொகுப்பு 1: ரோனி ப்ரௌன்

படம்
விநோதரச மஞ்சரி  தொகுப்பு: ரோனி ப்ரௌன் ஐன்ஸ்டீனை முந்திய ஐக்யூ சிறுவன் ! முக்கு கடை அண்ணாச்சி கடையில் வாங்கிய பால் , ரஸ்குக்கான காசு போக பேலன்ஸ் எவ்வளவுப்பா தரணும் ? என்றாலே பேப்பரும் பேனாவையும் நீ எங்கே என் அன்பே ! என தேடும் நம் ஐக்யூவை வைத்து அண்ணாச்சியையே ஜெயிக்க முடியாது . இந்த லட்சணத்தில் ஐன்ஸ்டீனை எல்லாம் நினைத்து பார்க்கலாமா ? ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் இறந்தகால , சமகால ஜீனியஸ்களையும் சிம்பிளாக தன் ஐக்யூவால் அதிரடியாக ஓவர்டேக் செய்திருக்கிறான் . இங்கிலாந்தைச் சேர்ந்த அர்னாவ் சர்மாதான் அந்த ஐக்யூ அறிவாளி . ஐக்யூ டெஸ்ட் நடத்தும் மென்சா என்பது 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அமைப்பு . இதில் கலந்துகொண்ட இந்தியப் பூர்வீகச் சிறுவனான அர்னாவ் சர்மா . தேர்வு மதிப்பெண் , ரீசனிங் திறன் மூலம் ஐன்ஸ்டீன் , ஸ்டீபன் ஹாக்கிங் என இருவரின்  ஐக்யூ பாய்ண்ட்களையும் எளிதாக ஹைஜம்ப் செய்து சாதித்திருக்கிறார் . பெற்றோர்கள் பதற்றமாக இருந்தாலும் இரண்டரை மணிநேர ஐக்யூ டெஸ்ட்டை பிரிப்பரேஷனே இல்லாமல் அசால்டாக எழுதி முடித்து அர்னாப் பெற்ற ஐக்யூ பாய்ண்ட்