இடுகைகள்

மத்திய அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்தவங்கிகளுக்கு இல்லாத ஒருங்கிணைப்பு - பறிபோகும் உயிர்கள்

படம்
pixabay பொதுவாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகம். டைகர் பிஸ்கெட் பாக்கெட்டிற்காக அல்ல, உண்மையாக நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதம் தமிழர்களுக்கு உண்டு. இதனால் ரத்ததான முகாம் நடக்கும்போது மக்கள் பங்கேற்று ரத்ததானம்  செய்கிறார்கள். ஆனால் இந்த ரத்தம் முறைப்படி மக்களுக்கு வழங்கப்படுகிறா? அனைத்து மருத்துவமனைகளில் ரத்தவங்கி இருக்கின்றன. செயல்படுகின்றன. ஆனால் தேவையானவர்களுக்கு அது பயன்படுவதில்லை. குறிப்பிட்ட ரத்த வகை தேவை எனும்போது நீங்கள் ரத்தம் கொடுத்துவிட்டு அந்த ரத்த வகையை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் தேடும் ரத்த வகை இருக்காது. எனவே பிற மருத்துவமனைகளை நோயாளிகளின் உறவினர்கள் தேடி ஓடுவது நடைபெறுகிறது. இதற்கு காரணம், மருத்துவமனைகளில் சரியான ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு இல்லாததே காரணம். ரத்தத்தை மாடர்ன் பிரெட் போல ஆறுமாதத்திற்கு அப்படியே வைத்திருந்து பயன்படுத்த முடியாத நடைமுறைப் பிரச்னை வேறு இருக்கிறது. 2016-17 ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் யூனிட் ரத்தத்திற்கு தேவை இருக்கிறது. இதனை பற்றாக்குறை என்றும் சொல்லலாம். இத

தடுப்பூசித் திட்டம் வெற்றி அடைந்ததா? இல்லையா?

படம்
pixabay 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்திரதனுஷ் எனும் தடுப்பூசித்திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. 2020க்குள் நூறு சதவீதம் என்பது லட்சியம். இதுபற்றி புள்ளியல் துறை 60 சதவீதம் என கணக்கெடுத்துள்ளது. இல்லை, நாங்கள் 83 சதவீதம் தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்துள்ளோம் என்று சாதிக்கிறது இந்திய அரசு. முழுமையான தடுப்பூசி குழந்தைக்கு போடுவது என்றால் என்ன? ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காசநோய், கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்க அரசு வழங்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதாகும்.  உங்கள் பர்ஸ் பெருசு என்றால் தனியாகவும் இதனை போட்டுக்கொள்ளலாம். இல்லையெனில் அங்கன்வாடி மையம், கிராமங்களில் பால்வாடி சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.  அரசு ஏன் பதற்றமாகிறது என்றால் 2015-16 ஆண்டில் அரசு இதே நிலையில்தான் இருந்தது. அப்போதும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அரசு முழுமையாக அளிக்க முடியவில்லை. அறுபது சதவீதம் என்பது அரசுக்கு நிந்தனையாக மாறியது. இதனால்தான் தற்போது 83 சதவீதம் என்ற எண்ணைக் கூறுகிறது. எங்கு பிரச்னை தொடங்குகிறது? தோராய அளவு என்பதில்த

எதிர்ப்பு போராட்டங்கள்!

படம்
இந்தியாவில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள்! இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே போராட்டங்கள் மூலம்தான் பல்வேறு உரிமைகள் கிடைத்துள்ளன. அரசின் பல்வேறு கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளை தன்னெழுச்சியாக மாணவர்கள் கையிலெடுக்க பின்னர் அது மக்களை ஈர்த்து போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 1940 ஆம் ஆண்டு சென்னை மாணவர் சங்கம், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை இந்த வழியில் தொடங்கியது. சட்டம் 343(2) படி பதினைந்து ஆண்டுகளில் இந்தியை ஆட்சிமொழியாக மாற்றுவதே இந்திய அரசின் நோக்கம். இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசின் நோக்கத்திற்கு குறுக்கே நின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்மொழி மட்டுமல்லாது தனி நாடு என்று கேட்டு போராடினர். அதற்குப்பிறகு இந்தி எதிர்ப்பு பேரலையில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் சீனிவாசன் என்ற மாணவர் போராட்டத்துக்கு தலைமை வகித்தவரிடம் தோற்றுப்போனார். பின்னர் மாணவர்களுக்கான அரசியலை திமுக அனைத்து கல்லூரிகளிலும் தொடங்கியது. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுத்து அவர்களை ஊக்குவித்து, தன்னை வளர்த்துக்கொண்டது. பஸ்டே கொண்டாட்டம் மட்டும் இதன் அடையாளமல்ல. ச