இடுகைகள்

காற்றிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்

காற்றிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்                                                                 ஆங்கிலத்தில் : ரோஹிணி நாயர்                                                                 தமிழில் : ஜோ ஃபாக்ஸ்                 நம் வாழ்வில் அனைவரும் மருத்துவரின் ஆலோசனையைப்பெற ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் காத்திருந்திருப்போம் . அப்போது நாம் ஒரு மாத இதழைப்புரட்டியபடி ( அ ) மற்றவர்கள் பேசுவதைக்கேட்டுக் கொண்டோ ( அ ) நம் உறவினர்கள் நோயினால் துன்பப்படுவதை பார்த்துக்கொண்டோ குழப்பமான நிலையில் அமர்ந்திருப்போம் .                 ஆனால் ஹரியானா , பானிபட் பகுதியைச்சேர்ந்த அர்ஸ்ஷா தில்பாகி (16), மருத்துவருக்காக காத்திருந்த ஒரு நாளின் நேரத்தை மிகவும் பயன்பாடான கருவி ஒன்றினை உருவாக்குவதற்கான அடித்தளம் ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டார் .                 “ பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு பேசும் திறன் இழந்த நோயாளி ஒருவர் அழுதுகொண்டிருப்பதை கவனித்தேன் ” என்று கூறுகிற அர்ஸ் பானிபட்டில் டிஏவி பள்ளியில் பனிரெண்டாம்

நேர்காணல்: ஜோக்கின் அற்புதம்

நேர்காணல் : ஜோக்கின் அற்புதம்                                                 ஆங்கிலத்தில் : ஓமர் ரஷீத்                                                 தமிழில் : கார்த்திக் வால்மீகி                                                                      ஷாம்பவி மித்ரா திறந்த வெளியில் அமர்ந்து மலம் கழிப்பதை யாரும் ரசித்து செய்வார்களா என்ன ?                 இவரின் நாட்கள் தொடங்குவதும் , நிறைவடைவதும் கழிப்பறை தொடர்பான பணிகளில்தான் . 68 வயதாகும் ஜோக்கின் அற்புதம் தனது நாற்பது ஆண்டுகால குடிசைப்பகுதி மக்களுக்கான வாழிடம் மற்றும் சுகாதார வசதிகளுக்கான போராட்டத்திற்காக மகசேசே விருது , பத்ம விருது போன்றவையும் பெற்றுள்ளார் . மும்பை தாராவி , உலகிலேயே பெரிய குடிசைப்பகுதி ஆகும் . அப்பகுதியைச் சேர்ந்தவரான அற்புதம் , அந்தப்பகுதி மக்களுக்கு உதவுவதை தன்னியல்பாக பெற்றிருக்கிறார் . தேசிய குடிசை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார் . அச்சங்கம் இந்த ஆண்டு நோபல் அமைதிப்பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது . கழிவறைகளை கட்டு