இடுகைகள்

ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வது மிக கடினமான ஒன்று!

படம்
ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வது மிக கடினமான ஒன்று ! நேர்காணல் : டாக்டர் . தேவி பிரசாத் ஷெட்டி தமிழில் : ச . அன்பரசு அண்மையில் இந்திய மருத்துவக்கழகம் (MCI), மருத்துவர்கள் அனைவரும் இனி நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க அறிவுறுத்தியுள்ளது . இந்திய அரசு , மருந்துகள் மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தில் ஜெனரிக் மருந்து விதியை இணைக்க முடிவு செய்துள்ளது . இது குறித்து நம்மோடு உரையாடுகிறார் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையின் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி . தரமான விலைகுறைந்த மருந்துகள் மக்களுக்கு கிடைக்கச்செய்யும் இந்திய அரசின் இந்த உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . ஆனால் மத்திய அரசின் நோக்கத்திற்கும் , இந்திய மருத்துவக்கழகத்தின் விதிகளுக்கும் நிறைய முரண்பாடு உள்ளதே ? அரசு ஜெனரிக் மருந்துகளைப் பயன்படுத்த எடுத்த முடிவை வரவேற்கிறேன் . இதனை அரசு முன்னமே செயல்படுத்தியிருக்கவேண்டும் . ஆனால் இதனை செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன . 30 ஆயிரம் நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்து டன் கணக்கில் தள்ளுகின்றன . நோயாளிக்கு பொதுவாக ஜெனரிக் மரு

நீர் பயன்படுத்துவதில் அடுத்த நூறாண்டிற்கான திட்டமிடுதல் தேவை

படம்
நீர் பயன்படுத்துவதில் அடுத்த நூறாண்டிற்கான திட்டமிடுதல் தேவை   நேர்காணல்: பேராசிரியர் டபிள்யூ . ஜி . பிரசன்ன குமார் தமிழில்: ச.அன்பரசு நதிநீர் இணைப்பு என்பது புதிய ஐடியாவெல்லாம் இல்லை . 19 ஆம் நூற்றாண்டில் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் நதிநீர் இணைப்பு சிந்தனை இந்தியாவில் ஊன்றப்பட்டது . நீராதாரத்துறை செயலரான ராமஸ்வாமி ஐயரால் இது பேரழிவு தரும் முயற்சி என தொடர்ந்து மறுக்கப்பட்டும் வந்தது . ஹைதராபாத்தின் டாக்டர் மர்ரி சன்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு மையத்தின் சூழல் பேரழிவு மேலாண்மை பேராசியருமான பிரசன்னகுமாரிடம் உரையாடினோம் . அடிப்படையிலிருந்தே தொடங்குவோம் . நதிநீர் இணைப்பு என்றால் என்ன ? வானிலிருந்து பெறும் மழைநீர் சேகரிப்பு படுகைகள் பலவும் இணைந்துதான் ஆற்றுப்படுகை உருவாகிறது . ஒவ்வொரு ஆற்றுக்கும் பாயும் பகுதி , அதற்கான நிலப்பரப்பு , பன்மைச்சூழல் பரப்பு என அனைத்துமே உண்டு . மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்கள் , விலங்குகள் , பூச்சிகள் , பறவைகள் என அனைத்துக்குமான கருவறைதான் ஆறு . ஆறு முடியும் இடத்

சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்!

படம்
சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் ! நேர்காணல் : முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரா தமிழில் : ச . அன்பரசு இந்தியாவுக்கு விசா நெருக்கடி தந்ததிலிருந்து பாரீஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியதுவரையிலான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு பற்றி என்ன கூறுகிறீர்கள் ? இதில் ஆச்சரியம் ஏதுமில்லை . ஏனெனில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இதற்கு முன்பும் இதுபோல ஏராளமான மூர்க்கத்தன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் . நாம் நம்முடைய முந்தைய வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் செயல்படுவதுதான் நல்லது . இந்தியா தன் வெளியுறவுக்கொள்கை தோல்வி என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டது . சரி ,  இந்தியா தன் இத்தனை ஆண்டுகளாக கையாண்ட வெளியுறவுக்கொள்கையில் சாதித்தது என்ன ? இந்தியா - அமெரிக்க உறவு என்பது விரிவானது என்பதோடு விளக்குவதும் கடினம் . ஐடி வேலைவாய்ப்புகளில் ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லையென்றாலும் , பாதுகாப்பு ஆயுதங்கள் , தீவிரவாத எதிர்ப்பு , தொழில்நுட்ப கூட்டுறவு போன்றவற்றில் அமெரிக்க உதவி வருவது உண்மை . தலாய்லாமா , அருணாச்சல பிர

சூழல் போராளிகளுக்கு மரியாதை! -முத்தாரம் கட்டுரை

படம்
சூழல் போராளிகளுக்கு மரியாதை ! - ச . அன்பரசு அமெரிக்காவில் நடைபெற்ற 2017 ஆண்டிற்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசை இந்தியாவின் பிரஃபுல்லா சமன்தாரா உட்பட ஆறுபேர் பெற்றுள்ளனர் . உரோ மெக்கர்ல் , ஐரோப்பா ஸ்லோவேனியாவைச் சேர்ந்த இயற்கை விவசாயியான மெக்கர்ல் , தன் நிலத்திற்கு அருகில் அமையவிருந்த சிமெண்ட் ஆலையை எதிராக மக்களை திரட்டி போராடி சூழல் காத்து காற்று , நீர் , மண் மூன்றின் அவசியத்தை பலருக்கும் உணர்த்தியுள்ளார் . பிரஃபுல்லா சமன்தாரா , ஆசியா ஒடிஷாவில் டோங்கிரியா கொந்த் பழங்குடிகளின் வாழ்விடமான நியமகிரி மலையை மாசுபடுத்திய அலுமினிய ஆலைக்கு எதிராக 12 ஆண்டுகள் சட்டத்தின் வழியில் போராடியவர் பிரஃபுல்லா சமன்தாரா . மார்க் லோபஸ் , அமெரிக்கா அமெரிக்காவில் EYCEJ என்ற அமைப்பின் மூலம் அங்கு பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகிய வேதிப்பொருட்கள் நீர்நிலைகளில் கலப்பதை எதிர்த்து   துணிச்சலான போராட்டக்காரர் மார்க் லோபஸ் . ரோட்ரிகோ டாட் , தெற்கு , மத்திய அமெரிக்கா குவாத்திமாலாவின் அக்வா கலைன்டே என்ற இனக்குழுவின் தலைவராக உள்ள ரோட்ரிகோ , அங்கு சூழலுக்கு கேடு