இடுகைகள்

சிறையில் வெளியான கைதிகளுக்கான பத்திரிகை!

படம்
ஜெயில் பத்திரிகை ! ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்ற குற்றவாளிகளால் தொடங்கப்பட்டது பிரிசன் மிரர் என்ற பத்திரிகை . அமெரிக்கா மட்டுமல்லாது மூன்று வெளிநாடுகளுக்கும் சென்றது இதன் சாதனை . சிறையில் 1,200 பிரதிகளும் , சிறைக்கு வெளியே 2 ஆயிரம் பிரதிகளும் விற்கப்பட்டன . ஆண்டு சந்தா 5 டாலர் , ஓராண்டு சந்தா 1 டாலர் விலையில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று பிரிசன் மிரர் வெளியானது . 1876 ஆம் ஆண்டு நார்த்ஃபீல்டு பகுதியிலுள்ள வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியில் தோற்ற ஜெஸ்ஸி ஜேம்ஸ் , கோல்மன் யங்கர் மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் ஆகியோர் 50 டாலர் செலவில் நாளிதழை தொடங்கினர் . டேப்லாய்டு வடிவ நாளிதழின் பதினாறு பக்கங்களுக்கும் கைதிகளே பொறுப்பு . 1985-86 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கா பீனல் பிரஸ் பிரிசன் மிரர் பத்திரிகைக்கு வழங்கப்பட்டுள்ளது . பல்வேறு வார்டன்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிரிசன் மிரர் சிறைச்சாலை பற்றிய செய்திகள் , கடிதங்கள் ஆகியவற்றை தாங்கி வெளியானது . தொடங்கிய காலத்திலிருந்தே கைதிகளின் குரலை , எழுத்தை வலுப்படுத்த உருவான பத்திரிகை என்ற லட்சியத்தை தி பிரிசன் மிரர் விட்டு க

FBI வீழ்ச்சியடைந்தது எப்படி?

படம்
மக்களின் நம்பிக்கையிழந்த FBI! எஃப்பிஐயின் 110 ஆண்டுகால வரலாற்றில் இப்படியொரு களங்கம் இனிமேலும் ஏற்படப்போவதில்லை . நாட்டு அதிபரே காவல் அமைப்பின் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் . 36 ஆயிரம் பேர் பணிபுரியும் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளார் . எந்த விவகாரங்களில் எஃப்பிஐ தடுமாறியுள்ளது ? நெவடா மற்றும் ஓரேகான் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டக்குழுவை அச்சுறுத்தியதாக எஃப்பிஐ அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது . துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொய் கூறிய அதிகாரி மீது கோர்ட் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது . 2015 ஆம் ஆண்டு டெக்ஸாசில் நடந்த தீவிரவாத தாக்குதலில் எஃப்பிஐயைச் சேர்ந்த அதிகாரியும் உள்ளதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது . தீவிரவாத ஒழிப்புக்குழுவிலிருந்த மொழிபெயர்ப்பு பெண் , ஐஎஸ்எஸ் அமைப்பிலிருந்த ஒருவரின் காதலில் ஈடுபட்டு சிரியாவுக்கு அவரை மணக்க சென்றது எஃப்பிஐ அமைப்பை சங்கடப்படுத்திய விவகாரம் . ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லாரி நாசர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் ஓராண்டாக இழுபற

புத்தகம் புதுசு!

படம்
புத்தகம் புதுசு ! Ghost Boys by Jewell Parker Rhodes 192pp Little, Brown Books தன் பொம்மைத்துப்பாக்கியால் போலீஸ் மூலம் சுடப்பட்டு அநியாயமாக ஆவியாகிறான் பனிரெண்டு வயசு ஜெரோம் . அப்போது தன்னைப் போன்ற சூழலில் இறந்த எம்மெட் டில் என்ற சிறுவனை சந்திக்கிறான் ஜெரோம் . இருவரின் வாழ்வு வழியாக அமெரிக்காவில் நிலவிவரும் இனவெறி அவலத்தை விவரிக்கிறார் ஆசிரியர் . The Stone Girl's Story by Sarah Beth Durst 336pp Clarion மலையில் வாழும் சிற்பி , தன் அபூர்வ திறமையால் பாறைகளை விலங்குகளாக வடித்து ஸ்பெஷல் திறமையால் அதற்கு உயிரும் கொடுக்கிறார் . அதில் மாய்கா எனும் பனிரெண்டு வயது சிறுமியும் அடக்கம் . திடீரென சிற்பி இறந்துபோக , பாறைகளின் உடலிலுள்ள வடிவங்களும் காலப்போக்கில் மறைய , உயிருடன் உலாவிய விலங்குகள் இறக்கின்றன . தங்களை மரணத்திலிருநது காக்கும் சிற்பி தேடி சிறுமி மாய்கா செல்லும் பயணமே கதை .  

ஐரோப்பாவில் தொடங்கிய கொடூரநோய்!

படம்
தொழுநோயின் நதிமூலம் எது ? ஐரோப்பாவிலிருந்து தொழுநோய் உலகெங்கும் பரவியுள்ளது என அகழ்வாராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . இதற்கு முன்பு தொழுநோயின் பூர்விகம் ஆசியா என கருதப்பட்டு வந்தது . " பல நூற்றாண்டுகளாக கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து தொழுநோய் பரவியது என்று யூகமாய் நம்பப்பட்டு வந்தது . தொழுநோய் பாக்டீரியத்தின் எச்சங்கள் தென்கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பரவியிருக்கலாம் என்ற தீர்மானத்தை ஏற்படுத்தியுள்ளது " என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெலன் டோனக் . இன்றும் உலகளவில் 2 லட்சம் தொழுநோயாளிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தகவல் தருகின்றன . 90 மண்டை ஓடுகளை அறிவியலாளர்கள் ஆராய்ந்ததில் கி . மு . 400-1400 காலத்திலேயே தொழுநோய் பாக்டீரியம் இருப்பதை கண்டறிந்தனர் . எசெக்ஸிலுள்ள செஸ்டர்ஃபீல்டில் கிடைத்துள்ள லெப்ரே நுண்ணுயிரிக்கு வயது கி . மு .415-545 க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது . தொடரும் ஆராய்ச்சிகள் தொழுநோய் குறித்து துல்லியமான தகவல்களை தரக்கூடும் . 

இஸ்‌ரேல்-இரான் போர்!

படம்
இஸ் ‌ ரேல் - இரான் போர் ! கடந்த பிப்ரவரியில் இஸ் ‌ ரேல் , இரான் நாட்டின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியதிலிருந்து இருநாடுகளுக்குமான பிரச்னை தொடங்கியது . சிரியாவுக்கு ஆதரவாக இரானும் , அரசு படைகளுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ் ‌ ரேலும் ஓரணியில் நின்று போரிட்டு வருகின்றன . இஸ் ‌ ரேல் 20 விமானங்களிலிருந்து 70 ஏவுகணைகளை சிரியா மீது வீசியுள்ளதை ரஷ்யா அரசு உறுதி செய்துள்ளது . தற்காப்புக்காக இஸ் ‌ ரேல் இதனை செய்துள்ளது என அமெரிக்க அரசு கூறியுள்ளது . இஸ் ‌ ரேலின் தாக்குதலில் சிரியா அரசுப்படையைச் சேர்ந்த 23 வீரர்கள் பலியானார்கள் என்கிறது சிரியா மனித உரிமைகள் அமைப்பு .   1973 ஆம் ஆண்டு யோம் கிப்புர் போருக்கு பிறகு இஸ் ‌ ரேல் சிரியா மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ள இரண்டாம் நிகழ்வு இது . இரானும் அமெரிக்காவும் 2015 ஆம் ஆண்டு செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப் . இதன்விளைவாக இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகளை கொண்டு வர அதிக வாய்ப்

இந்தியாவின் முதல் புரட்சி நாயகன்!

படம்
என் தேசம் இந்தியா! பகத்சிங் 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது கருப்புக்கொடி காட்டி இந்தியாவே போராடியது. என்ன காரணம்?, அரசியலமைப்பை திருத்தும் அந்த கமிஷனில் ஒருவர் கூட இந்தியராக இல்லை என்பதால்தான். அக்டோபர் 30 அன்று தேசியவாதியான லாலா லஜபதிராய்  சைமன் கமிஷனுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினார். லாகூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற அப்போராட்டத்தை போலீசார் என்ன வேடிக்கை பார்த்து்க்கொணடிருப்பார்களா? தூத்துக்குடியில் வண்டியைக் கொளுத்தி துப்பாக்கிச்சூட்டை தொடங்கிய போலீசாருக்கு முன்னோடிகள் அவர்கள். எனவே லத்தியை சுழற்ற பலர் அடிபட்டு வீழ்ந்தனர். அதில் போராட்டத்தை முன்னெடுத்த லாலா லஜபதியும் ஒருவர்.  அடித்த அடியில் மருத்துவமனையில் காயங்களுடன்  படுக்கையில் துவண்டு கிடந்த லாலா, நவம்பர் 17 அன்றே  இறந்துபோனார்.  இந்த சம்பவம் பிறருக்கு கோபம் தந்ததோ  இல்லையோ பகத்சிங் என்ற இளைஞனுக்கு தீராத வன்மத்தை ஆங்கிலேயர்கள் மீது ஏற்படுத்தியது. தோழர்கள் சிவராம் ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் சேர்ந்து லத்தி சுழற்ற உத்தரவிட்ட சூப்பரிடெண்ட் ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை கொலை செய்ய திட்டமிட்டனர்.

குழந்தை மனதுள்ளவர்களை ஆச்சரியப்படுத்தும் எழுத்துகள்- ஆண்டர்சன்

படம்
ஆண்டர்சன் கதைகள் தமிழில்:யூமா வாசுகி பாரதி புத்தகாலயம் சீரியசான அரசியல் கட்டுரைகளைப் படித்து மண்டைத்தண்ணீர் வற்றியதுபோல இருந்ததால் குங்குமத்தின் சீனியர் சப் எடிட்டர் த.சக்திவேலின் பரிந்துரையில் அவரது ட்ராயரிலிருந்து சுட்ட புத்தகம்தான் இது. எளிமையான கதைகளும் உண்டு. நீளமான கதைகளும் உண்டு. எனக்கு இத்தொகுப்பில் பிடித்த கதைகள் நான்கு. சக பயணிகள், மணற்குன்றுகளில், தம்ப்லினா, மச்சக்கன்னி இவை வாசிக்கையில் பெரிய நாவலை வாசிப்பது போன்ற தன்மையை மனதில் ஏற்படுத்தியது காரணமாக இருக்கலாம். வெள்ளிநாணயம், ரோஜா செடியும் நத்தையும் போன்றவை எளிதாக வாசிக்கும் வண்ணம் இருக்கின்றன. குழந்தை எழுத்தாளரான ஆண்டர்சன் மொழியின் அறுஞ்சுவையும் உண்டு. உற்சாகத்தை மட்டுமே போலியாக புகட்டாமல் மனதில் இயல்பான போக்கில் செல்பவர்கள் படும் வேதனைகளையும், சுயநலனிற்காக பலியாகாமல் தன்னையே பலியிட்டு பிறரின் உயிர்காப்பது என கதாபாத்திரங்கள் தங்களின் செயல்கள் வழியாக நன்னெறியை போதிக்கிறார்கள். நூலின் சிறப்பும் அதுதான். எனவே தனியாக நீதி என்று எழுத வேண்டியதில்லை பாருங்கள். யூமாவாசுகியின் அர்ப்பணிப்பான மொழிபெயர்ப்பில் கதை

என் முன்னோர்களின் தியாகமே முன்னேற்றத்துக்கு காரணம்! -லெஸ்டர் ஹோல்ட்

படம்
முத்தாரம் Mini மார்ட்டின் லூதர்கிங்கின் 50 நினைவு தினத்தை மெம்பிஸ் சென்று படம்பிடித்திருக்கிறீர்கள் . இன்றைய ஊடகச்சூழலில் கிங் மீண்டும் எழ வாய்ப்புள்ளதா ? இன்று பல்வேறு நிறுவனங்களும் ஊடகங்களை வைத்துள்ளன . கிங்கின் நினைவுதினத்தை பதிவு செய்வது அத்தினத்திற்கான மரியாதை தொடரச்செய்யும் என்று நம்புகிறேன் . அதிபருடன் செய்த நேர்காணலில் ஜேம்ஸ் காமேயை பதவி நீக்கும் விஷயத்தை பேசவைத்தீர்கள் . எப்படி ஸ்கூப் செய்திகளை கண்டுபிடிக்கிறீர்கள் ? நேர்காணல்களை வெளிப்படையாக செய்வது முக்கியம் . பல்வேறு கேள்விகளை மனதில் வைத்துள்ள நேயர்களின் பிரதிநிதியாக நான் செயல்படவேண்டிய பொறுப்பை உணர்ந்துள்ளேன் . பதில்களை தரவில்லையென்றால் மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்பதே என் வேலை . கிங் நினைவுதினத்தை கருப்பின செய்தித்தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் . அது பற்றிக்கூறுங்கள் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலை உயர பலரின் தியாகம் காரணம் . நான் இந்நிலைக்கு பலரின் தோள்களின் மீது ஏறியே வந்துள்ளேன் என்பதை நினைவுப