இடுகைகள்

டான்ஸூக்கு ஜெயில்!- இப்படியும் ஒரு நாடா?

படம்
பிட்ஸ் ! அன்புத்தொல்லை ! அரசியல் திறனாய்வாளரான பேராசிரியர் ஜெர்சி தர்கால்ஸ்கி தன் வீட்டில் போலந்தின் அரசியல் சீர்குலைவுகளை அடித்து உடைத்து டிவியில் பேசிக்கொண்டிருந்தார் . அனைவரும் சீரியசாக பார்த்த அந்த லைவ் ஷோவில் திடீரென பேராசிரியரின் பூனை லிசியோ அவரின் தலைமீது குதித்து என்ட்ரி கொடுக்க , உலகமே வயிறு குலுங்கச்சிரித்து ரிலாக்ஸானது . டான்ஸூக்கு சிறை ! இரானைச் சேர்ந்த  டீன்ஏஜ் பெண் மேடெஹ் ஹோஜப்ரி டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவிற்காக அரசு அவரைக் கைதுசெய்துள்ளது . மேலும் அரசு டிவியில் அவரது குற்றத்தை ஹோஜப்ரி வாயாலே ஒத்துக்கொள்ள நிர்பந்தித்தது . இதற்கு எதிராக உலகமெங்கும் திரண்ட நெட்டிசன்கள் டான்ஸ் ஆடியதற்கு எதற்கு சிறை ? என அரசைக் கண்டித்து பல்வேறு டான்ஸ் வீடியோக்களை அப்லோடு செய்து வருகின்றனர் . காலை மீட்கும் போராட்டம் ! அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் அவென்யூ ஸ்டேஷனின் மின்ரயிலிலிருந்து பெண் ஒருவர் இறங்கினார் . ஆபீஸ் அவசரத்தில் கால் ட்ரெயினுக்கும் பிளாட்பாரத்திற்கும் மாட்டிக்கொண்டது . கால் அடிபட்டு வலியில் அலறிய பெண்மணியை ட்ரெயினை ஐலசா சொல்லித

லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் - பிட்ஸ்!

படம்
லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ! இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஜாஸ் இசைக்கலைஞர் லூயி ஆர்ம்ஸ்ட்ராங் பற்றிய சில சுவாரசியங்கள் . பிறந்தநாளை கேட்பவர்களுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் தரும் ஒரே பதில் , ஜூலை 4, 1900, ஆனால் நியூ ஆர்லியன்ஸ் சர்ச்சில் லூயிஸின் பிறந்தநாள் 1901 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 என்று பதிவாகியுள்ளது . ராணுவ இசைக்குழுவில் சேர்வதற்காக பொய் கூறியிருக்கலாம் என கிசுகிசுக்கிறது நெருங்கிய வட்டாரம் . இத்தாலிய , சைனீஸ் உணவுகள் பிடிக்கும் என்றாலும் லூயிஸ் மிகவும் விரும்பிய உணவு அரிசியும் பீன்ஸ்களும்தான் . தான் எழுதும் கடிதங்கள் கூட கையெழுத்து போடும் முன்பு Red Beans and Ricely Yours என்று எழுதுவது ஆர்ம்ஸ்ட்ராங் டச் . சிறுவயதில் பல்வேறு வேலைகளை பார்த்து வாழ்க்கையை ஓட்டிய ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு Karnofskys என்ற யூதக்குடும்பம் பண உதவிகளைத் தாண்டி இரவு உணவுகளை அளித்து உதவியதை தன் ஆயுள் இறுதிவரை மறக்காத ஆர்ம்ஸ்ட்ராங் யூதமத சின்னமான நட்சத்திரத்தை அக்குடும்பத்திற்கு நன்றி பாராட்டினார் .   பனிப்போர் காலகட்டமான 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லினில் கான்செர்ட் நடத்தி பாராட்டு பெற்றா

விண்வெளியில் பேனா பெஸ்ட் ஏன்?

படம்
பேனாவா ? பென்சிலா ? - எது பெஸ்ட் ? இரண்டுமே எழுதுவதற்குத்தான் . ஆனால் விண்வெளியில் எந்த ஐடியா ஓகேவாகும் என்பதுதான் கேள்வி . ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் எழுதும் பேனாவைக் கண்டுபிடிக்க அமெரிக்கா கோடிக்கணக்கில் செலவு செய்தது . என்ன காரணம் ? விண்வெளிக்கு பென்சில் பொருந்தாது . மரத்தில் செய்யப்பட்டிருப்பதால் ஆக்சிஜன் நிறைந்த கேப்சூலில் உயர் அழுத்தத்தில் தீப்பற்ற வாய்ப்பு உள்ளதோடு , கிராபைட் உடைந்து ஏற்படும் குப்பை பிரச்னையும் உண்டு . சிறிய விஷயம் என்றாலும் விண்வெளியில் இது தலைபோகிற விஷயம்தான் . 1965 ஆம் ஆண்டு 128 டாலர்கள் விலையில் விண்வெளிக்கென உருவாக்கப்பட்ட பென்சில்கள் பலரையும் ஈர்க்கவில்லை . விண்வெளிக்கான பேனாவை ஃபிஷர் பேனா நிறுவனத்தின் பால்ஃபிஷர் உருவாக்கினார் . ஈர்ப்புவிசையை சாராமல் நைட்ரஜன் அழுத்தத்தில் பேனா எழுதும் . நீரிலும் கூட இதன் மூலம் எழுதலாம் . நாசா மற்றும் சோவியத் இரண்டு நிறுவனங்களும் ஒரு பேனா 2.39 டாலர்கள் என்ற விலையில் ஹோல்சேலில் வாங்கின . 1968 முதல் ஃபிஷர் நிறுவனம் நாசாவுடன் கூட்டணி அமைத்து இன்றுவரை பேனாக்களை தயாரித்து வருகிறது .  

இஸ்‌ரோவின் எஸ்கேப் சிஸ்டம்!

படம்
உங்களில் யார் அடுத்த ராகேஷ் சர்மா ? இஸ்‌ரோ அண்மையில் விண்கலனில் செல்லும் வீரர்களை அவசரநிலையில் காப்பாற்றும் எந்திரத்தை (CES)  ஹரிகோட்டாவிலுள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது . பெங்களூருவிலுள்ள மையத்தில் விண்வெளி வீரர்களுக்கான உணவு , உடைகள் விஷயத்திலும் ஆராய்ச்சிகள் ஆன் தி வே . இதற்காக டிஆர்டிஓவுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன . அடுத்த விஷயம் என்ன ? வீரர்களின் தேர்வுதான் . 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஷ் டி 11 விண்கலத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா பயணித்து முதல் இந்தியர் என சாதனை படைத்துள்ளார் . மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்ட மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் . ஆனால் அரசு முதல்கட்டமாக இஸ்‌ரோவுக்கு அளித்துள்ள தொகை 145 கோடி ரூபாய் மட்டுமே . பத்தாண்டுகளாக இதற்கான ஆராய்ச்சிகளை செய்து வரும் இஸ்‌ரோ , ஜிஎஸ்எல்வி எம்கே -3 எனும் 8 டன் எடையை சுமக்கும் திறன்கொண்ட ராக்கெட்டை இவ்வாண்டின் இறுதியில் சோதிக்கவிருக்கிறது .    

பால்பண்ணையில் செயற்கை நுண்ணறிவு!

படம்
பசு டேட்டா ! அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டில் பண்ணைக்கு 25 பசுக்கள் இருந்தாலே அதிகம் . ஆனால் இன்று பண்ணைக்கு 3 ஆயிரம் பசுக்களுககு அதிகம் உள்ளன . எப்படி கண்காணிப்பது ?   தற்போது தொழில்நுட்பங்கள் மூலம் பசுக்களின் நோய்கள் , பால் சுரப்பு உள்ளிட்ட அனைத்தையும் பட்டியலிடும் அளவு வசதிகள் வந்துவிட்டன . மனிதர்களின் உதவியின்றி பசுக்களிடமிருந்து பாலைக் கறக்கவும் அதனை சுத்தப்படுத்தவும் ரோபாட்டிக் டெக்னாலஜி இதற்கு உதவுகிறது . 55 மாடுகளுக்கு ஒரு ரோபாட்டிக் யூனிட் என பொருத்தப்பட்டு இச்செயல்பாடு நடைபெறுகிறது . 2013 ஆம் ஆண்டு 2,500 என்று பயன்படுத்தப்பட ரோபாட் யூனிட்டுகளின் எண்ணிக்கை இன்று 35 ஆயிரமாக உலகெங்கும் அதிகரித்துள்ளது . cow CPS எனும் சிஸ்டம் பசுக்களை தினசரி நானோநொடி கூட பிரேக் இன்றி கண்காணித்து அவற்றின் விருப்பத்துடன் பாலை பிழிந்தெடுப்பதாக கூறுகின்றனர் . பசு சாப்பிடுவது , ஓய்வெடுப்பது பால்கொடுக்க தானே முன்வருவது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன .  

வானிலையைக் கணிக்கும் இயலஸ்!

படம்
காற்றை கணிக்கும் இயலஸ் ! ஐரோப்பிய விண்வெளி் மையம் (Esa), பூமியின் பரப்பில் காற்றை கணிக்கும் புற ஊதா லேசர் தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோளை அமைக்க முடிவு செய்தபோது ஆராய்ச்சியாளர்களே அதனை நம்பவில்லை . 2002 ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் பதினாறு ஆண்டுகளைக் கடந்து தற்போது முழுமை பெறும் கட்டத்தை எட்டியுள்ளது .  புற ஊதா லேசர் எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் , திட்டம் பல டெட்லைன்களை தாண்டிவர காரணமாகிவிட்டது . " திட்டத்தில் பலருக்கும் நம்பிக்கையில்லைதான் . ஆனால் நாங்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை " என்கிறார் இத்திட்டத்தின் கண்காணிப்பு திட்ட இயக்குநர் ஜோசெஃப் அஸ்பாச்சர் . பூமிக்கு மேலே 320 கி . மீ உயரத்தில் காற்றின் மூலக்கூறுகளை லேசர் அமைப்பு ஆராய்ந்து தகவல்களை துல்லியமாக அனுப்பும் திட்டமிது . கடல்நீரின் தன்மையை அனிமோமீட்டர் மூலம் ஆராய்ந்து காற்றுசூழலை தற்போது அளவிட்டு வருவது இனி மாறும் . இயலஸ் மூலம் ட்ரோடோஸ்பியர் அடுக்கிலிருந்து ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்குவரையிலான மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யமுடியும் . வரும் ஆகஸ்ட் 21 அன்ற

உடலின் மின்காந்த அலைகள் என்ன செய்யும்?

படம்
வைப்ரேஷன் முக்கியம் பாஸ் ! ஒருவரை வசீகரிப்பதில் மனிதரின் உடலிலிருந்து வரும் மின்காந்த அலைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது என்கிறார் கண்டுபிடிப்பாளர் ஸ்டேன்லி ஜங்லெய்ப் . மனிதர்களின் உடலிலிருந்து வெளிப்படும் ஆராவை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ள ஸ்டேன்லி அதற்கு பேடன்டும் வாங்கிவிட்டார் . " ஒரு இடத்தில் தனியாக ஒருவர் நிற்பதற்கும் கூட்டமாக நிற்பதற்கும் உள்ள வித்தியாசம் , வைப்ரேஷன்தான் " எனும் ஸ்டேன்லி மன அழுத்தத்திற்கு தன்னுடைய கருவி உதவும் என வாதிடுகிறார் . யூத இத்தாலிய பூர்விகம் கொண்ட ஸ்டேன்லி தலைமையிலான குழுவினர் , இன்டெல் நிறுவனத்திற்காக முதன்முதலில் மென்பொருள் மூலம் இயங்கும் ஆடியோ சிந்தஸைசரை உருவாக்கி புகழ்பெற்றனர் . இசையமைப்பாளர் , தத்துவவியலாளராக செயல்படும் ஸ்டேன்லி அருகிலுள்ள மலைக்குன்றை கார்ப்பரேட் சக்திகளிடம் காப்பாற்றவும் தயங்கவில்லை . மனித உடலை ரேடியோவாக கருதும் ஸ்டேன்லி , அதிர்வுகள் மூலம் மன அழுத்த பிரச்னைகளை தீர்க்க முடியும் என தொடர்ச்சியாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் .

அகதிகளை கண்காணிக்க டிஎன்ஏ டெஸ்ட!

படம்
அகதிகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் ! அமெரிக்க நீதிமன்றம் அகதி பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்க காலக்கெடுவை விதித்துள்ளது . அதிபர் ட்ரம்ப் , தனது “zero-tolerance” எனும் குடியுரிமை கொள்கையை அமுல்படுத்தி பெற்றோர்களையும் , குழந்தைகளையும் தனி முகாமில் அடைத்து கடும் விமர்சனங்களை உலகெங்கும் சந்தித்துவருகிறார் . 5-17 வயது வரையிலான குழந்தைகள் , சிறுவர்களை பெற்றோர்களிடம் சேர்க்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது . இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறை (HHS), குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து குடும்பத்துடன் சேர்க்க முடிவெடுத்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அஸார் கூறியுள்ளார் . 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதால் , அவர்களின் பிறப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து பெற்றோருடன் சேர்க்க நீதிமன்றத்தின் காலக்கெடு போதாது என்பது சுகாதாரத்துறை வாதம் . " டிஎன்ஏ டெஸ்ட் என்பது தவறான முடிவு . அரசு குழந்தைகள் குறித்த இத்தகவல்களை சேகரித்து அவர்களை வாழ்க்கை முழுவதும் கண்காணிக்க திட்டமிடுகிறது . பிறந்து இருமாதமான குழந்தைகள் உட்பட அப்

கனடாவின் பெயர் சொல்லும் படைப்புகள்!

படம்
கனடா ஸ்பெஷல் ! CANADIAN MILK CHOCOLATE கிரிஸ்பியாக அடுத்தவர் கையிலிருப்பதை கூட பிடுங்கி தின்னும் ஆசை தோன்றச்செய்வது கனடா மில்க் சாக்லெட் . அமெரிக்கா சாக்லெட் போல கசப்பில் திளைக்காமல் தித்திப்பாகவும் க்ரீம் சுவையிலும் அசத்தும் சுதேசி கனடா சாக்லெட்டுகள் அமெரிக்காவிலும் விற்பனையில் பின்னிபெடலெடுக்கின்றன . BUTTER TARTS சோள சிரப் , சர்க்கரை , வெண்ணெய் கலந்து செய்யப்படும் அருமையான உணவு . பிரான்சிலிருந்து 1600 களிலேயே கனடாவுக்கு வந்துவிட்ட உணவு என்கிறது உணவு சர்வே . கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு உணவான பட்டர் டார்ட்ஸ் கனடா நாட்டு பேக்கரிகளில் கிடைக்கும் நல்லுணவு . MILK BY THE BAG நம்புங்கள் . பாக்கெட்டில் அல்ல ; பிளாஸ்டிக் பேக்கிலுள்ள பாலை வாங்கி தோளில்போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடலாம் . ஒன்டாரியோ , க்யூபெக் , கிழக்கு கனடா ஆகியவற்றில் பால் பேக் மிக பிரபலமானவை . நிறைய பேருக்கு தேவையான பாலை இம்முறையில் பர்சேஸ் செய்யலாம் . RED RIVER CEREAL கோதுமை , கம்பு ஆகியவற்றால் செய்யப்படும் அற்புத சுவைகொண்ட உணவுவகை . 1924 ஆம் ஆண்டிலிருந்து உலகை ஆண்டுவரும

ஆண்களுக்கும் வந்துவிட்டது கருத்தடை மருந்துகள்!

படம்
ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அவசியம் !- பரபரக்கும் புதிய ஆராய்ச்சி எழுபது முதல் எண்பதுவரை இந்தியா முழுக்க குடும்பக்கட்டுப்பாடு காய்ச்சல் வேகமெடுக்க , இதில் ஆண்களைவிட பெண்களே பங்கெடுத்தனர் . ஆனால் முழுமையாக கருத்தடை பயனளித்ததா என்றால் இல்லை என்றே கூறவேண்டும் . அவசரகதியில் பல்வேறு பரிசுப்பொருட்களோடு சாதனைக்காக செய்யப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்களின் பக்கவிளைவுகள் பெண்களின் ஆயுள்வரை துரத்தின . நவீனத்தில் கருத்தடை விஷயத்தில் ஆண்களும் பங்குகொள்ள தொடங்கியுள்ளனர் . நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆண்களுக்கான கருத்தடை சாதனங்கள் ஆணுறை , வாச்டக்டமி உள்ளிட்டவையே . குடும்பக் கட்டுப்பாட்டை தானே ஏற்கும் பெண்களுக்கு காப்பர் டி , கப்கள் டஜன் கணக்கிலான முறைகளை பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகளினால் அவை கருத்தடைக்கான சிறந்தவழியாக உருவாகவில்லை . தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான கருத்தடை சாதனங்களாக மாத்திரைகள் , உடலில் தடவும் ஜெல் மருந்துகள் என 2024 ஆம் ஆண்டில் இச்சந்தையின் மதிப்பு 1 பில்லியனாக எகிறும் என்கிறது Global Market Insights அமைப்பின் ஆ

ராஷ்டிர மொழியாகும் இந்தி!- பிறமொழிகளின் நிலைமை என்ன?

படம்
இந்தியமொழிகளின் வளர்ச்சி ! இந்தியாவிலுள்ள மக்களில் 43.6% பேர் இந்திமொழி பேசுவதாக சென்சஸ் தகவலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் பேசும் மொழியாக 121 மொழிகள் உள்ளன . பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை 96.7% பேர் பேசிவருகின்றனர் . பெங்காலி (8%), மராத்தி (6.9%), தெலுங்கு (6.7%), தமிழ் (5.7%), குஜராத்தி (4.6%) ஆகியவை டாப் 5 மொழிகளாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன . இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆங்கிலமொழியை தங்கள் முதல் மொழியாக கூறியுள்ளனர் . இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர் . மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பிலி , கோண்டி உள்ளிட்ட மொழிகள் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன .