இடுகைகள்

செக்ஸ் தவறுகளுக்கு தண்டனை இதுதான்!

படம்
செக்ஸ் தவறுக்கு சிறை உறுதி!  மேலைநாடுகள் மட்டுமல்ல இந்தியாவிலும் சினிமா, பத்திரிகை வட்டாரங்களை #மீ டூ குற்றச்சாட்டுகள் உலுக்கி வருகின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சிறைதண்டனை உண்டு என்பதால் ஜொள்ளு விடும் ஆண்களே கவனம்! 1997 ஆம் ஆண்டு விசாகா விதிகளின் படி பணியிடங்களுக்கான பாலியல் அத்துமீறல்களை உச்சநீதிமன்றம் வரையறுத்தது. டிசம்பர் 2013 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களை தடுப்பது, தண்டிப்பது, இழப்பீடு ஆகியவற்றுக்கான விதிமுறைகள்(கூடுதலாக பிரிவு 354) வகுக்கப்பட்டு சட்டம் வெளியானது. பெண்களை கை, கால்களால் தொடுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, வலுக்கட்டாயமான பாலுறவுக்கு நிர்பந்தம், இவை சொற்களால் பாலுறவுக்கு கட்டாயப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்தான். பாலியல்புகார் எழும்போது பத்து பேர் கொண்ட ஊழியர்களின் குழு, அமைக்கப்பட்டு இதனை விசாரிக்கலாம். இதில் 4 பேர் கட்டாயம் பெண் உறுப்பினர்களாக இருப்பது அவசியம். பெண்களை பாலியல்ரீதியில் தீண்டுவதற்கு குற்றவியல் சட்டம் 2013 படி, 1-5 ஆண்டுகளும், பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து விநியோகிப்பதற்கு சட்டம்

வேலை+ கரன்சி ஆசையால் வீழ்ந்த இளைஞர்!

படம்
சூழ்ச்சியால் சரிந்த அறிவியலாளர்!  நாக்பூரில் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய நிஷாந்த் அகர்வால், பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியங்களை கொடுத்த விவகாரத்தில் கைதாகியுள்ளார். ஃபேஸ்புக்கில் துறுதுறுப்பாக சுற்றித்திரிந்த நிஷாந்த் அகர்வால், பெண்களின் பெயர்களிலான மூன்று போலி ஐடிகளின் காதல் வார்த்தைகளை நம்பி தேசியபாதுகாப்பு ரகசியங்களை அவர்களுக்கு கூறியதாக போலீஸ் அவரை கைதுசெய்து சிறையிலடைத்துள்ளது. இதே பெண்களின் ஐடி டிரிக் மூலம்தான் சில மாதங்களுக்கு முன்னர் பிஎஸ்எஃப் படைவீரர் அச்சுதானந்த் மிஸ்‌ராவை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மயக்கி, ராணுவ ரகசியங்களை பெற்றது வெளியிட்டது அரசுக்கு தெரியவர, உடனே நொய்டாவிலிருந்த அச்சுதானந்தை காவல்துறை கைது செய்தது. “பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்ட பெண்களின் பெயரிலான ஐடிகளில், நிஷாந்துக்கு அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு வலை விரித்து அவரை வீழ்த்தியுள்ளனர்” என்கிறார் காவல்துறை அதிகாரியொருவர். ஐஐடி ரூர்க்கியில் கல்வி கற்ற நிஷாந்த் அகர்வால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால்(DRDO) 2017-18

ஐபோனில் மக்கள் பணம் உள்ளது!

படம்
ஐபோன் வளர்ச்சி! ஐபோனில் தொடுதிரை, இணையம் இல்லாதபோது அதனை எப்படி ஸ்மார்ட்போன் என்று கூறுவீர்கள் என்று கூறும் பொருளாதார ஆலோசகர் மெரினா மசூகாடோ, புதிய கண்டுபிடிப்புகளில் பயன்படும் அரசு பணத்தை யாரும் எழுதுவதில்லை என்கிறார். புதிய கண்டுபிடிப்பில் சமூகத்தின் பங்களிப்பும் உண்டு என்பதே மெரினாவின் வாதம். யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் நிறுவனரும் இயக்குநருமான மெரினாவின் சமூக தொகுப்பிலான கண்டுபிடிப்பு, நிதி ஒதுக்கீடு பல்வேறு மட்ட பொருளாதார நிபுணர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. “ அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசு ஒதுக்கும் நிதி முதலீடுகள், மக்களின் வரிப்பணத்திலிருந்து பிறந்தவை” என்கிறார் ஆடம் ஸ்மித் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாம் டுமிட்ரியு. The Value of Everything எனும் நூலில் கண்டுபிடிப்பின் மதிப்பு, அதிலிருந்து நிறுவனங்கள், தனிநபர் ஈட்டும் லாபம் ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். பொருளின் மதிப்பை விற்றும் வாங்கியும் மறைமுகமாக நடைபெறும் வணிகம் எப்படி ஆபத்தான முதலாளித்துவ கருவியாக மாறுகிறது என்பதை எழுதியுள்ளார். சிலிகன்வேலி எப்படி வால்ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் உள

சகோதரியை தண்டித்த போலீஸ்காரர்!

படம்
சகோதரிக்கு சமநீதி! மிசோரம் மாநிலத்தின் காவல்துறை சூப்பரிடென்ட்டான ராம்தெலங்கிலியானா, கடமையாற்றுவதில் சிங்கம் சூர்யாவைவிட கறாரானவர். பின்னே தன் சொந்த சகோதரி மீது அபராதம் விதித்துள்ளார் என்றால் சும்மாவா? சட்டம் செல்வாக்கு பணம் உள்ளவர்களுக்கு ஏற்ப நெகிழ்ந்துகொடுக்கும் என்பதை ஏற்காமல் செயல்பட்ட ராம்தெலங்கியானா, போக்குவரத்து விதிமீறலை செய்த தங்கைக்கு அபராதம் விதித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். “அஸவில் நகரைப் பொறுத்தவரை கார் உரிமையாளர் காரை வீட்டின் காரேஜில்தான் நிறுத்தவேண்டும். வீட்டின் வெளிப்புறச்சாலையில் நிறுத்தினால் அதற்கு நிச்சயம் அபராதம் உண்டு. என் தங்கை அவளது வீட்டின் முன்புறச்சாலையில் நிறுத்தியிருந்ததை போலீசார் கூற, தயங்காமல் அபராதம் விதித்தோம்” என புன்சிரிப்புடன் கூறுகிறார் ராம்தெலங்கியானா. இருமாதங்களுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வு தற்போது இணையமெங்கும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

அசத்தலான கார் திருடி!

படம்
அசத்தல் திருடி! ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண், டாக்ஸி ஒன்றை தன் நண்பர்கள் குழு உதவியுடன் துப்பாக்கி முனையில் அதிரடியாக கடத்தினார். அப்புறம் என்னாச்சு? டெல்லியின் லஜ்பத் நகர் போலீசுக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரை இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கடத்தியதாக புகார் வந்தது. டெல்லியின் பாலம் – டேராடூன் ரூட்டில் பயணிக்கும்போது கார் கடத்தப்பட்டதை அறிந்த போலீசார், அசத்தல் திருடியான கஜாலாவை அரஸ்ட் செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து ஆண்நண்பர் வான்ஸ் சர்மாவுடன் வாழும் சப்னாவுக்கு அதிரடி சாகசங்கள், ஆச்சரியங்கள் அதிகம் பிடிக்கும். “என் குடும்பத்தினர் என்னை பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்பதற்காகவே காரை திருடினேன்” என்று விநோத பதில் சொல்லி போலீசை அயர வைத்துள்ளார். கடத்தல் சம்பவ தினத்தன்று கஜாலாவின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள காரில் சென்று இறங்கி ஊராரை ஆச்சரியப்படுத்தவேண்டுமென நினைத்த கஜாலாவின் பேராசை அவரையும் அவரது தோழி காஜல் மற்றும் வான்ஸ் சர்மாவையும் சிறையில் தள்ளியுள்ளது. அபேஸ் செய்யப்பட்ட கார், மற்றும் வான்ஸ் சர்மா பயன்படுத்திய பைக், பிஸ்டல் ஆகியவற்றையும் ப

கற்பனைத்திறன் கட்டுப்பாடுகளை உடைக்க உதவியது!

முத்தாரம் Mini உங்களை பிறர் குறைத்து மதிப்பிடும்போது என்ன நினைப்பீர்கள்? அமெரிக்காவின் சென்ட்ரல் ஃபால்ஸ் பகுதி தொடங்கி என்னைக் குறித்த அரைகுறை மதிப்பீடுகளை கண்டு வருகிறேன். நாடகத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்படுவது, எனக்குள்ள எல்லை என பிறர் என்மீது திணித்த கருத்துக்களை நான் கடந்து செல்ல உதவியது. ஹாலிவுட்டில் நிறைய இனவேறுபாடுகள் உள்ளன. அது பற்றி.. மற்றவர்கள் உங்களை பெட்டிக்குள் அடைக்கும் வரை மௌனமாக இருக்காமல் பேசவேண்டும் என்று என் கணவர் கூறுவார். இன்று கருப்பினத்தவர்கள் சினிமா தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றின் முக்கியமான இடத்தில் நம் மனதிலுள்ள சக்தியை ஒவ்வொருவரும் உணரும் இடம் இது. நடிப்பு என்ற எல்லையைக் கடந்து குழந்தைகள் நூலான Corduroy Takes a Bow வை எழுதியிருக்கிறீர்கள். எப்படி? கதையில் வரும் துருதுரு கரடியின் இயல்பிலிருந்த நானும் சிறுவயதில் அதேபோல் தண்டிக்கப்பட்டுள்ளேன். இரவு கதை சொல்லும்போது என்னையும் அக்கதையில் சேர்க்கமுடியுமா? என என் மகள் கேட்டதற்காகவே நான் குழந்தைகள் நூலை எழுதினேன்.   -வயோலா டேவிஸ், ஆங்கில திரைப்பட நடிகை

டிஜிட்டல் நூலகம் வேண்டுமா?

படம்
டெக் புதுசு! Anker Soundcore Spirit Pro சிலிகான், பிளாஸ்டிக் பெரும்பாகம் உள்ளதால் எடை குறைவு. சைஸ் பெரியது போல தோன்றினாலும் காந்தத்தின் உதவியால் கீழே விழாமல் எளிதாக இணைகிறது. 10 மணிநேர பேட்டரி சக்தியுடன் கச்சிதமான மூன்று பட்டன் லேஅவுட்டால் ஒலி, அழைப்பு ஆகியவற்றை எளிதாக செய்யலாம். நல்ல ஒலியில் வியர்வை எதிர்க்கும் டெக் நுட்பத்துடன் கொடுக்கும் காசுக்கு மதிப்பான பொருள். ரூ.3,701 Kobo Clara HD Ebook  14 ஃபைல் பார்மெட், 11 ஃபாண்டுகள், 40 ஃபாண்ட் ஸ்டைல்கள் என கோபோ கிளாரா ஈர்க்கிறது. வைஃபையுடன் இணைத்தால் 8 ஜிபி மெமரி மூலம் 6 ஆயிரம் நூல்களை தரவிறக்கி சேமித்து வாசிக்கலாம். நுட்பமான தொடுதிரை, நூல் தகவல்களை துல்லியமாக காட்டுவது என ஈர்த்தாலும் 8 ஜிபியை விரிவாக்க முடியாதது மைனஸ். மற்றபடி தீவிர வாசகர்களுக்கு ஏற்ற டிஜிட்டல் நூலகம் இது. ரூ. 9,550   

மரங்களை அழிக்கும் ஒளி!

படம்
மரங்களை அழிக்கும் ஒளிவிளக்கு! உலகம் முழுக்க திருமணம், திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு மரங்களின் மீது சீரியல் பல்புகளை, ட்யூப்லைட்டுகளை கட்டுவது வழக்கம். ஆனால் இவை மரங்களை மெல்ல அழிக்கிறது என்பதை அறிவீர்களா? பகலில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் தாவரங்கள், மரங்கள் சீரியல் விளக்குகளின் வெப்பம், ஒளி காரணமாக இரவு, பகல் வேறுபாட்டை உணரும் ஆற்றல் இழக்கின்றன. இதற்கு Photoperiodism என்று பெயர். தாவரங்களிலுள்ள பைட்டோகுரோம் அல்லது கிரிப்டோகுரோம் எனும் புரதங்கள் மாறும் காலச்சூழலை உணர்ந்து ஒளிச்சேர்க்கை வழியே உணவு தயாரிக்கின்றன. இடையறாத ஒளியால் இப்புரதங்கள் செயலிழந்து போவதோடு, பறவைகள், பூச்சிகளும் மெல்ல அவ்விடத்தை விட்டு வேறிடம் செல்லும் இக்கட்டு நேர்கிறது. சாலையில் செல்லும்போது மரங்களைச் சுற்றியுள்ள விளக்குகள் வாகன ஓட்டிகளின் கவனத்தையும் குலைத்து விபத்துக்கு காரணமாகின்றன. மேலும் சர்வீஸ் கனெக்‌ஷனுக்கு யூனிட்டிற்கு ரூ.12.10 ரூபாய் கட்டுவதை ஏமாற்றி ரூ.7-8 மட்டுமே கட்டுகின்றனர்.

அமெரிக்காவின் முதல் கருப்பின பெண்!

படம்
சக்தி! லோரெட்டா லின்ச் அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் முதன்மை வழக்குரைஞராக(83 வது அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்த(2015-17) சாதனைக்கு சொந்தக்காரர் லோரெட்டா லின்ச். “கோர்ட்டுக்கு சென்று என் பெயரை ஜூரிகளிடம் அறிமுகப்படுத்தி அமர்ந்த கணம் மறக்கமுடியாது” என்பவர் சட்டம் அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையை உருவாக்கினார். ஆங்கில ஆசிரியரும் நூலகருமான தாயின் நூல்கள் போற்றும் குணத்தால் கிறிஸ்துமஸ் தினத்திலும் புத்தகங்களை பரிசாக கேட்கும் ஆசையுள்ளவராக லோரெட்டா வளர்ந்தார். “கழிவறையைக் கூட கருப்பின பெண்கள் பயன்படுத்தாத அனுமதி கிடைக்காத நிலையில் என் பெற்றோர் அனைத்து மக்களுக்கான உரிமைக்கு போராடுவதில் உறுதியான இருந்தனர். இவர்களின் செயல்பாடே அனைவருக்குமான சமநீதியின் என்னை வலுவானவளாக மாற்றியது” என தீர்க்கமாக பேசுகிறார் லோரெட்டா லின்ச். 1959 ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவின் க்ரீன்ஸ்போரோவில் பிறந்த லோரெட்டா ஹார்வர்டு பல்கலையில் 1980-1984 ஆம் ஆண்டுகளில்   ஆங்கில இலக்கியம், அமெரிக்க இலக்கியம் மற்றும் சட்டக்கல்வியை நிறைவு செய்தவர், நியூயார்க் ரிசர்வ் வங்கியின் சட்ட ஆலோசகராக செயல்பட்டவர். பராக்

ஆம்னிஸ்கின்!

படம்
பொம்மைகளை இயக்கும் Omniskin! ஆம்னிஸ்கின் என்பதை பொம்மைகளை இயக்கும் ரோபோட்டிக் தசை எனலாம். நியூமேட்டிக் ஆக்சுவேட்டர் எனும் முறை இதில் பயன்படுகிறது. ஆற்றலை இயந்திர முறையில் அசைவுகளாக்குகிறது. என்ன பிரயோஜனம், சாதா ரண பொம்மைகளை நீங்கள் ஆம்னிஸ்கின்களை பயன்படுத்தி அதற்கு உயிர்கொடுத்து இயக்கலாம். சாதாரண குதிரை பொம்மை நடக்காது. அதில் ஆம்னி ஸ்கின் கால்களை பொருத்தி நடக்க வைக்கமுடியும். ரோபோவுக்கு மனிதர்களைப் போன்ற இயக்கத்தை அளித்திருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு என்று கூறலாம். உலகெங்கும் தற்போது இம்முறை பிரபலமாகிவருகிறது. 2017 ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்யும் ரோபோவை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். ஆம்னிஸ்கின் என்பது உடற்பயிற்சி செய்வது போன்ற சிக்கலான இயக்கங்களை மனிதர்களைப் போலவே எளிதாக செய்ய உதவுகிறது.   

இன்டர்போல் தலைவரை மடக்கிய சீனா!

படம்
காவல்தலைவர் மீது விசாரணை! பிரான்சில் இன்டர்போல் தலைவரை காணோம் என சில நாட்களுக்கு முன்னர் புகார் கிளம்பியது. தற்போது சீன அரசு ஊழல் புகாரின் பேரில் அவரை விசாரித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “பொது பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் மெங் ஹாங்வெய், தேசிய மேற்பார்வை கமிஷனின் விசாரணையில் உள்ளார். அவர் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என ஊழல் எதிர்ப்பு கமிட்டி கூறியுள்ளது. அவரது மனைவியுடன் பிரான்சிற்கு சென்ற நிலையில் அவர் விசாரணையிலிருப்பதும், அவரின் ராஜினாமா கடிதம் இன்டர்போல் அமைப்புக்கு அனுப்பபட்டிருப்பதும் பல மர்ம யூகங்களை கிளப்பியுள்ளது.   “நான் அவரை பார்க்கமுடியாதோ என பயப்படுகிறேன்” எனும் மெங்கின் மனைவி கிரேசுக்கு கணவர் அண்மையில் கத்தியின் படம் ஒன்றை அனுப்பி வைத்திருப்பதை பிரான்ஸ் ஊடகங்கள் உலகிற்கு அறிவித்துவிட்டன. 2016 ஆம்ஆண்டு 192 நாடுகள் இணைந்துள்ள இன்டர்போலின் தலைமைப்பொறுப்பை மெங் ஹாங்வெய் ஏற்றார். ஊழல் எதிர்ப்பில் சீனா காட்டும் வேகம் பலரையும் மிரட்டி வருகிறது.