இடுகைகள்

கடவுச்சொல்லில் கோட்டைவிட்ட அமெரிக்கா!

படம்
அணுஆயுதங்களை இயக்க முடியுமா? புதிய தலைமுறையினர் சைபர் அட்டாக் மூலம் அணு ஆயுதங்களை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மிலிட்டரி அமைப்புகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில் ஒருமணிநேரத்தில் இதனை டெக் நுட்பம் தெரிந்தவர் கையகப்படுத்த முடியும். அமெரிக்க ராணுவம் உலகிலேயே அதிக பட்ஜெட்டாக 674 பில்லியன் டாலர்களை ஆயுதங்களை கொள்முதல் செய்யப் பயன்படுத்துகிறது. ஆனால் எங்கே சொதப்பல் தொடங்குகிறது? ஆயுத சிஸ்டங்களை பாஸ்வேர்ட் அமைத்து பாதுகாக்குமிடத்தில்தான் ஹேக்கர்கள் உள்நுழைகின்றனர். 2012-17 வரையிலும் பென்டகனிலுள்ள ஆயுத அமைப்புகளை ஹேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன. சரியான முறையில் பாஸ்வேர்டுகளையும், செய்திகளை என்கிரிப்ஷன் செய்யாமலும் இருந்தால் விரைவிலேயே அமெரிக்காவின் ஆயுதங்களை ரஷ்யர்களோ, சீனர்களோ பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை பொருளாதாரத்திற்கு பரிசு!

படம்
பொருளாதார நோபல்! உலகம் சூழலுக்குகந்த வளர்ச்சியை பெறுவதற்கான திட்டங்களை முன்வைத்த பொருளாதார அறிஞர்கள் வில்லியம் டி நார்டாஸ்(யேல் பல்கலைக்கழகம்), பால் எம் ரோமர்(நியூயார்க் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு பொருளாதார நோபல் வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்குகந்த உலகை உருவாக்கும் விதமாக கார்பன் வரிகளை உருவாக்கி பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் திட்டங்கள் நார்டாஸ் ஸ்பெஷல் தியரி. 1970 ஆம் ஆண்டிலிருந்து வெப்பமயமாதலை அதிகரிக்கும் கரிம எரிபொருட்களை கட்டுப்படுத்தும் வழிகளை ஆய்வு செய்து வந்தவர் பொருளாதார ஆய்வாளர் நார்டாஸ். பரிசு அறிவிக்கப்பட்ட அதேநேரம் ஐ.நாவின் பருவநிலை கமிட்டி நார்டாஸின் கொள்கைகளையொட்டி அறிக்கையொன்றை உருவாக்கியுள்ளது. சந்தையில் உருவாக்கும் கொள்கைகள் கண்டுபிடிப்புகள் தாக்குப்பிடிப்பதற்கான வழிமுறைகளை ரோமர் ஆராய்ந்துள்ளார். “பொருளாதார நோபல் பரிசுக்கு ஐம்பதாவது ஆண்டில் பரிசுகளை பெற்றுள்ளோம். கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சியை தொடங்கினால் நிச்சயம் மாற்றமுண்டு” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் ரோமர்.

விளம்பரமாசுக்கு தீர்வு! - விசுவல் பொல்யூசன் ஒழிக்கும் கண்ணாடி

படம்
விளம்பரங்களை நீக்கும் கண்ணாடி! தினசரி, டிவி, ரேடியோ என விளம்பரங்களை பார்த்தும், கேட்டும் அலுத்துப்போயிருப்பீர்கள். இவை இல்லாமல் தேவையான விஷயங்களை மட்டும் படிக்கும் வாய்ப்பை கண்ணாடி கொடுத்தால் எப்படியிருக்கும்? IRL கண்ணாடிகள் இவ்வாய்ப்பை நமக்கு விரைவில் வழங்கவிருக்கின்றன. 1988 ஆம் ஆண்டு வெளியான They Live என்ற படத்தில் விளம்பரங்கள் நம்மை நுகர்வில் தள்ளுவதை கண்ணாடி அணிந்து உணர்வார் நாயகன் ரோடி பைப்பர். அதே கான்செப்ட்டில் உருவாகியுள்ளது ஐஆர்எல் கண்ணாடிகள். ஆனால் இது டிவி, கம்ப்யூட்டர்களிலுள்ள நிகழ்ச்சிகளை மட்டும் தடுத்து தேவையில்லாத செய்தி திணிப்புகளிலிருந்து நம் மூளையை விடுவிக்கும். இதுதொடர்பாக கொடுத்துள்ள வீடியோவை பார்த்தால் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அல்ல என கேப்ஷன் போட்டு மக்களிடம் கண்ணாடியை கொடுத்து சோதித்திருக்கிறார்கள். இன்னும் சோதனையில் இருந்தாலும் நம்பிக்கைக்குரிய முயற்சி. விலை ரூ. 3,635

மறக்கமுடியாத ஜாலியன் வாலாபாக்!

படம்
ஜாலியன் வாலாபாக்! ரெஜினல் டையர்: பைசாகி எனும் விழாவைக் கொண்டாட கூடிய நிராயுதபாணிகளான இருபதாயிரம் மக்கள் மீது 1650 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய மனிதநேயமற்ற கொடூர அதிகாரி. ஒரு தோட்டா கூட வீணாக கூடாது என்று வீரர்களிடம் கூறியிருந்தது பின்னர் தெரிய வந்தது. ஜெனரல் டையரின் கடமை கண்ணியமிக்க அரச விசுவாசம் வீணாகவில்லை. அறிவிக்கப்படாத அநீதியான துப்பாக்கிச்சூட்டினால் 1300 பேர் பலியாயினர்.  "நூற்றுக்கணக்கான மக்கள் துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கியும் நான்கு வாயில்களை கொண்ட மைதானத்தில் பலரும் இறந்துபோயினர். துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்கள் ரத்தம் குமிழிட சரிய, அவர்களின் உடல்மேல் உடலாக மக்கள் விழுந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனேன்" என்கிறார் அக்காட்சியைக் கண்டவரான  லாலா கிர்தாரி லால்.  இந்தியாவில் நடந்த சம்பரான் போராட்டம், கேடா சத்தியாகிரகம், அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் ஆகியவற்றின் வெற்றியும், இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பரவி வந்த சுதந்திரப்போராட்ட வேகமும் ஆங்கிலேயர்களுக்கு கசப்பைய

சிவாஜி மட்டுமே மன்னர் அல்ல!

படம்
மினி பேட்டி "சிவாஜியைக் கடந்தும் மன்னர்கள் இந்தியாவில் உண்டு"   எழுத்தாளர் மனு எஸ் பிள்ளை டெக்கன் பகுதிகளை எழுதும்போது மன்னர் சிவாஜியை தவிர்க்கமுடியாது இல்லையா? வரலாற்றின் பக்கத்தை பிறருக்கு விடாமல் நிற்கிறார் சிவாஜி. அதற்கு அரசியலும் முக்கியக் காரணம். மிகவும் சிரமப்பட்டால் ஆதில்ஷா, நிஜாம் ஷா ஆகிய ஆட்சியாளர்கள் சிவாஜியின் காலுக்கு கீழே கண்டுபிடிக்கலாம். நான் இவர்களைப்போன்றவர்களை அறியவே எனது நூலின் மூலம் முயற்சிக்கிறேன். என்னை விட பெரிய வரலாற்று ஆய்வாளர்கள் சிவாஜி குறித்த நூல்களை எழுதியுள்ளனர். நான் இத்தனை பேர்களில் சிவாஜி மேலெழ என்ன காரணம் என்று அறிய எனது எழுத்துக்களில் முயன்றிருக்கிறேன். உங்களது ஆராய்ச்சி குறித்து விளக்குங்களேன். பல்வேறு மொழிபெயர்ப்புகள் வழியாக இந்நூலுக்கான தரவுகளை திரட்டு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.  அக்டோபர் 2016 இல் நூலை வெளியிடுவதே எனது திட்டம். ஆனால் தகவல்கள் ஆராய்ச்சிகள் நீண்டதால் காலதாமதம் ஆகிவிட்டது. உங்களது 25 வயதில் Ivory Throne என்ற பெயரில் 700 பக்கங்களுக்கு கேரளாவின் வரலாற்று எழுதினீர்கள். வரலாற்று நூல்களை மட்டும்

ரூல்ஸ் விதித்தால் ஆர்செனிக் விஷம் பதிலடி!

படம்
கொலைகாரர்களின் பூமி! Nannie Doss அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்த நானி தாஸ்(1905-1965), பதினொரு கொலைகள் செய்த குற்றவாளி. சிறுவயதில் தலையில் அடிபட்டு தலைவலி மன அழுத்தங்களால் தவித்தவர், பின்னாளில் தன்னிடம் கண்டிப்பு காட்டிய 4 கணவர்கள், குழந்தைகள் சகோதரிகள் என பாரபட்சம் காட்டாமல் ஆர்சனிக் விஷம் வைத்து கொன்றார். ஏன் மேடம் கொலை செஞ்சீங்க? என போலீஸ் கேட்டபோது சிரிப்பு மட்டுமே அவரிடம் வந்த பதில். Pedro Rodrigues Filho 18 வயதிற்குள் பத்துபேரை கொன்ற பிரேசிலைச் சேர்ந்த பெட்ரோ(1954-), 71-100 எண்ணிக்கையிலான கிரிமினல்களை மட்டும் போட்டுத்தள்ளிய கொஞ்சம் நல்ல கிரிமினல். கொலைகளுக்கிடையில் மரியா ஒலிம்பியா என்ற பெண்ணை காதலித்தார். போதை கேங்கினால் அவள் கொல்லப்பட பெட்ரோ அத்தனை பேரையும் கொன்றார். தற்போது பெட்ரோவுக்கு 128 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Richard Chase அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த ரிச்சர்ட் சேஸ்(1950-80), ஆறு பேரைக் கொன்று ரத்தம் குடித்த டிராகுலா. கொல்பவர்களை கற்பழிப்பதும், உறுப்புகளை சாப்பிடுவதும், ரத்தத்தை குடிப்பதும் சேஸூக்கு பிடித்தமானவை.  

ஃப்ளூ காய்ச்சல் அபாயம்!

படம்
ஃப்ளூகாய்ச்சல் அபாயம்! வளர்ந்த நாடுகளை விட ஏழை நாடுகளில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசிகள் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. குழந்தை பிறந்து ஆறு மாதமாகாமல் காய்ச்சல் தடுப்பூசிகள் பயனளிப்பதில்லை என்பதால் கர்ப்பிணியாக இருக்கும்போதே தடுப்பூசிகளை உடலில் செலுத்துவது நல்லது.  2011 செய்த ஆய்வுப்படி வளரும் நாடுகளில் 28 ஆயிரம் -1,11,500 வரையிலான குழந்தைகளை இன்ப்ளூயன்சா பாதிப்பு கொன்றழித்தது நிரூபணமாகியுள்ளது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இடுவது, தாயைக் காப்பாற்றுவதோடு குழந்தையையும் நோய் பாதிப்பு ஏற்படாமல் காக்கும். ஆண்டுதோறும் 2-30 சதவிகித குழந்தைகளையும், பத்து சதவிகித பெரியவர்களையும் இன்ப்ளூயன்சா பாதிக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியின் விலை அமெரிக்காவில் இருபது டாலர்களுக்கு குறைவாகவும், தென் ஆப்பிரிக்காவில் 5 டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது. உலகெங்கும் ஃப்ளூ காய்ச்சல்களால் நேரும் இறப்புகளின் தோராய அளவு 2,90,000-6,50,000 மாறியுள்ளது.

அறிவியல்துறைகளில் தடுமாறும் பெண்கள் - காரணம் என்ன?

படம்
அறிவியல் உலகில் தடுமாறும் பெண்கள்! அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டோனா ஸ்ட்ரிக்லேண்ட்டுக்கு பின்னர்தான் விக்கிபீடியா பக்கமே உருவாக்கப்பட்டது. இயற்பியல் நோபல் வெல்லும் மூன்றாவது பெண் ஆராய்ச்சியாளர் டோனா. 1985 ஆம் ஆண்டு டோனா செய்த ஆராய்ச்சியை கௌரவித்து விருதளிக்கப்பட்டுள்ளது. லேசர் கதிர்களின் தன்மையை அதிகரிக்கும் ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரிக்லேண்ட் மற்றும் ஜெரார்ட் மௌரூ ஆகியோருக்கு ஒரு மில்லியன் டாலர்கள் இயற்பியல் பரிசுடன் அளிக்கப்பட்டது. இவர்களின் கண்பிடிப்பு துளையிடுவது, வெட்டுவது, அறுவை சிகிச்சை, உற்பத்திதுறை என பலவற்றுக்கும் பயன்படவிருக்கிறது. மௌரூவிற்கு 2005 ஆம் ஆண்டே விக்கிபீடியா பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் டோனாவுக்கு இதிலும் புறக்கணிப்புதான்.  வேரா ரூபின், நெட்டி ஸ்டீவன்ஸ், ஹென்றிட்டா லெவிட், ரோசாலின்ட் ஃபிரான்க்ளின் ஆகிய சில பெண்கள் மட்டுமே அறிவியல் துறையில் முன்னர் புகழடைந்தவர்கள். இவ்வாண்டின் ஜனவரியில் வெளியான Pew ஆராய்ச்சியில் ஸ்டெம் எனும் அறிவியல்துறைகளில் பணியாற்றும் பெண்களில் 50 சதவிகிதப்பேர் பணிகளில் பாலி

வெப்பகதிர்வீச்சு கேமராவை தயாரிக்கும் அமெரிக்கா!

படம்
சூரியப்பார்வை! அமெரிக்க ராணுவ வீரர்கள் இரவுப்பணிகளின்போது சக்தியோடு செயல்படும்படி புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தெர்மல் இமேஜிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை இயற்பியலாளரான கிரிஸ்டன் குர்டன், மின்னணு பொறியியலாளரான சீன் ஹியூ ஆகியோர் உருவாக்கி, கும்மிருட்டிலும் ராணுவ வீரர்கள் துடிப்புடன் செயலாற்ற உதவியுள்ளனர். வெப்பகதிர்வீச்சு கேமிரா மூலம் மனிதர்கள், நிலப்பகுதி, பொருட்களை அடையாளம் காண்கிறது. “30 ஆண்டுகளுக்கு முன்பே புல், மண், மரங்கள் வெப்பக்கதிர்களை வெளியிடுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.” என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் குர்டன். வெப்பக்கதிர்வீச்சு கேமரா சோதனையில் தந்த தீர்வுகளை, மனிதர்களின் முகங்களை கணிக்கும் தொழில்நுட்பத்துடன் இணைத்தபோது அடையாளம் காணும் முயற்சியின் முடிவுகள் சிறப்பாக இருந்தன. “சிறப்பான முடிவுகளை தரும் போலாரிமெட்ரிக் கேமராக்களை உருவாக்குவதே எங்களது நோக்கம். வெப்பக்கதிர்வீச்சு கேமராக்களைவிட இவை சிறப்பான பயன்களை தருகின்றன” என்கிறார் குர்டன். எதிர்காலத்தில் வெப்பக்கதிர்வீச்சு கேமராக்கள் போலாரிமெட்ரிக் வகை கேமராக்களாக மா

பசுமைக்கட்சியின் வியூகம் வெல்லுமா?

படம்
பவேரியாவில் பசுமைக்கட்சி! பவேரியாவின் பசுமைக்கட்சியைச் சேர்ந்த கேத்தரினா ஸ்சூல்ஸ், நாம் சாதாரணமாக பார்க்கும் அரசியல்வாதி கிடையாது. அண்மையில் நடந்த தேர்தலில் 18% வாக்குகளைப் பெற்று கிறிஸ்டியன் சோசியல் யூனியன் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாகி உள்ளது பசுமைக்கட்சி. இடதுசாரிக் கட்சியான பசுமைக்கட்சி, அகதிகளுக்கு உதவுவது, எல்லைகளை திறப்பது என தனக்கேயான கொள்கைகளை மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறது. “பிற கட்சிகள் தினமொரு கொள்கையை பேசுகிறார்கள். எங்களுக்கு லட்சியம் நாங்கள் முன்பே கூறிய விஷயங்களை செயல்படுத்துவதுதான்” என தீர்க்கமாக பேசுகிறார். கேத்தரினா. ஆட்சியைக் காப்பாற்ற ஆளும்கட்சி வலதுசாரிகளுடன் கூட்டணிக்கு முயற்சிக்க, விரக்தியான மக்களின் பார்வை பசுமைக்கட்சி மீது திரும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவுக்கு ஆதரவான பசுமைக்கட்சியின் நிலைப்பாடும், இயற்கையைக் காக்கும் செயல்பாடுகளும், உறுப்பினர்கூட்டங்களும் கட்சியை வலுவாக்கி வருகின்றன.  

பூனைகளை பாதுகாக்கும் இஸ்‌ரேல் சகோதரிகள்!

படம்
பூனைச் சகோதரிகள்! இஸ்‌ரேலின் தாக்குதல்களால் சிதைந்த காசா எல்லைப்புற பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 35 பூனைகளை மரியம், ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகிய மூன்று சகோதரிகள் பாதுகாத்துள்ளனர். மூன்று சகோதரிகளும் அல்ஷாதி அகதிகள் முகாமில் சுற்றித்திரிந்த 35 க்கும் மேற்பட்ட பூனைகளை காப்பகம் அமைத்து உணவு, சிகிச்சை கொடுத்து பராமரித்து வருகின்றனர். “பூனைகள் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறிவிட்டன. பூனைகளை பராமரிப்பதில் எங்களுடைய குடும்பமும் ஆதரவளித்து உதவுகிறது” என்கிறார் மூன்று சகோதரிகளில் இளையவரான மரியம். காசாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான மரியம், ஆசிரியர் வேலைக்கான தேடுதலில் இருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையைக் கடந்த பூனை காரில் அடிபட்டு குற்றுயிராக விழுந்ததைப் பார்த்து காப்பாற்றினார். அன்றிலிருந்து அப்பகுதியில் காயம்பட்ட ஆதரவற்ற பூனைகளை பாதுகாக்க தொடங்கினார் மரியம். இவரின் ஆர்வத்தை மூத்த சகோதரிகளான ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளும் பின்பற்ற பூனைகளின் காப்பகம் மெல்ல உயிர்பெற்றிருக்கிறது. தற்போது பராமரித்து வரும் பூனைகளை