இடுகைகள்

கால் பிராக்சர் ஆயிடுச்சா?

படம்
ஃபிராக்சர் -– பிரேக் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான். எலும்பு முறிவு என்பது ஃபிராக்சரை விட ஆபத்தானது என சிலரும், எலும்பு முறிவில் குறிப்பிட்ட வகைதான் ஃபிராக்சர் என பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இரண்டுமே சொல்லும் அர்த்தம், எலும்பு உடைஞ்சு போச்சு என்பதுதான். “சீரான எலும்பு இயங்கமுடியாமல் உடைந்து போய்விட்டது என்பதுதான் இரண்டு சொற்களுக்குமான அர்த்தம்” என்கிறார் அமெரிக்க எலும்பியல் மருத்துவரான நோயல் ஹென்லே. உடலின் ஓரிடத்தில் வலி தொடர்ச்சியாக எழுந்தால் அதனை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக பாடிபில்டிங் போன்ற அதிக எடைகளை தூக்கும் பயிற்சிகளில் தசைச்சவ்வுகள் கிழிவதும், எலும்புகள் உடைவதும் சகஜம். எலும்பு உடைந்த இடம் வலிப்பதோடு கை வீங்கத்தொடங்குவதை சிகிச்சை எடுக்கவேண்டியதன் முக்கிய அறிகுறி.

நேரு இந்தியாவுக்கு செய்தது என்ன?

படம்
இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து துரதிர்ஷ் நிகழ்வுகளுக்கும் நேரு காரணம் என பாஜக கட்சி குறைகூறிவருகிறது. அப்படி எடுத்துக்கொண்டால் பிற பிரதமர்கள் எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. நேரு, ஐரோப்பிய சிந்தனைகளால் தாக்கம் பெற்றாலும் அதனை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என கவனம் கொண்டிருந்நதவர். அதேசமயம் நாட்டு மக்கள் வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருக்கவும் மெனக்கெட்டார். வல்லரசுகளின் வளர்ச்சியை இந்தியாவில் செயல்படுத்த முயற்சித்தார். பதவியிலிருந்து பதினைந்து ஆண்டுகாலம் ரஷ்யா, அமெரிக்காவின் உதவிகளைப் பெற்று மின்நிலையங்கள், அணு ஆராய்ச்சி, இரும்பு தொழிற்சாலைகள் என பலவற்றையும் உருவாக்கினார்.  சர்தார் படேல் கட்சி தொண்டர்களுக்கு அடையாளம் தெரிந்தாலும் மக்களுக்கு அறிமுகமானவர் அல்ல. மேலும் மக்களிடையே திட்டங்களை விளக்கிப் பேசவும் நேரு சரியானவர் என காந்தி நினைத்தார். படேல் ஒருவகையில் கட்சியை கவனிக்க நேரு நாட்டை பார்த்துக்கொண்டார். தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பற்றி மாநில முதல்வர்களுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி தொடர்பிலேயே இருந்த பிரதமர் இன்றுவர

குழந்தைகளின் மனதை வென்ற கிளாசிக் மிக்கி 90!

படம்
மிக்கி 90! 1928 ஆம் ஆண்டு நவ.28 அன்று ஸ்டீம்போட் வில்லி என்ற திரைப்படத்தில் உலகிற்கு அறிமுகமானது மிக்கிமௌஸ் கதாபாத்திரம். மௌனப்படங்களின் சூப்பர்ஸ்டார் சார்லி சாப்ளின் மிக்கிமௌஸூக்கு இன்ஸ்பிரேஷன். மிக்கிமௌஸ் பெயரை வேடிக்கையாக இருக்கிறது என பரிந்துரைத்தது வால்ட் டிஸ்னியின் மனைவியான லில்லியன். 7 நிமிட அனிமேஷன் படங்களுக்கு 10 ஆயிரம் மிக்கி மௌஸ் படங்களை டிஸ்னி குழு வரைந்தனர். மிக்கி மௌஸை மேம்படுத்திய ஓவியர் பெயர்,   உப் ஐவெக்ஸ். மிக்கி மௌஸூக்கு டொனால்ட் டக், கூஃபி, ஃபெர்டி, மார்டி, மாமா மேக்ஸ்வெல், பிரென்ச் சமையல் கலைஞரான லூயி, சகோதரர் டிக்கர் பெரிய குடும்பமே உண்டு. 1935 ஆம் ஆண்டு பிப்.23 அன்று மிக்கி மௌஸ் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு மாறியது.1955 ஆம் ஆண்டு மிக்கி, டிவிக்கும் தாவி குழந்தைகளின் மனதை கொள்ளை கொண்டது. மிக்கிமௌஸ் – மின்னி இருவருக்கும் திருமணம் ஆனாலும் அவர்களின் உறவை டிஸ்னி அனிமேஷனாக மாற்றவில்லை. காரணம் கேட்டபோது, “அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை அனிமேஷனுக்கு தேவைப்படவில்லை” என பதில் சொன்னார் டிஸ்னி.      

எறும்புகளை லபக்கும் எறும்பு தின்னி!

படம்
எறும்புதின்னிகள் தோராயமாக 2 அடி நீளமுள்ள நாக்கை இரைதேட பயன்படுத்துகிறது. எறும்பு புற்றில் நாக்கை விட்டு துழாவினால் ஒரேமுறையில் 20 ஆயிரம் எறும்புகளை லம்பாக பிடித்து தின்னும். சூழலுக்கேற்ப நிறம் மாற்றும் பச்சோந்தி, அதனை சுற்றுப்புறத்தின் தட்பவெப்பத்திற்கேற்ப மாற்றுகிறது. சிவப்பு, ஆரஞ்சு, நீலம் ஆகிய நிறங்களை பிரதிபலிக்கிறது பச்சோந்தி. தோலினை நிறம் மாற்றும் இம்முறையில் தன் இனத்தினை தொடர்புகொள்கிற விஷயமும் உண்டு. சிறிய பாம்பு கடித்தாலும் உடனே மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது முக்கியம். ஏனெனில் பாம்பு சிறியதானாலும் விஷம் வயதுமுதிர்ந்த பாம்பிலும், சிறிய பாம்பிலும் ஒன்றேதான். நீரில் நீந்த பூனைகளை விட நாய்களே ஏற்றவை. ஐரிஷ் வாட்டர் ஸ்பேனியல், டக் டோலிங் ரெட்ரீவர் ஆகிய நாய்கள் நீச்சலில் சாம்பியன்கள். பூனைகளின் முடி நீர் பட்டால் விரைவில் காயாததும், கால்கள் நீரில் நீந்த ஏற்றபடி இல்லாததும் முக்கிய காரணம். இவ்வாண்டில் நாய்களுக்கு பெருமளவு சூட்டப்பட்ட பெயர்கள் சார்லி, கோகோ, டெய்ஸி.

பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா?-ஏன்?

படம்
பெண்களுக்கு ஆயுசு அதிகம்! நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்படி, உலகளவில் பெண்களுக்கு 5- 7 ஆண்டுகள் ஆயுள் அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கியகாரணம், ஆண்களின் வன்முறை மனோபாவம், கொலை, தற்கொலை, விபத்து, இதயநோய்கள்தான். முக்கியமான காரணம், மரபணுக்கள்தான். ஆண்களின் செல்களிலுள்ள மைட்டோகாண்ட்ரியாவின் வேகம் அதிகம் என்பதால் முதிர்ச்சியடையும் தன்மை ஓப்பீட்டளவில் பெண்களைவிட அதிகம். மேலும் செக்ஸ் குரோசோம்களில் வித்தியாசம் உண்டு. ஆண்களின் எக்ஸ், நோயால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்ககாரணம் அதில் ஒரேயொரு எக்ஸ் குரோமோசோம் இருப்பதுதான். பெண்களில் இரண்டு எக்ஸ் குரோசோம்கள் உண்டு. பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு இதயநோய்கள் வரும். ஆனால் ஆண்களுக்கு இதயநோய்கள் முன்னரே தாக்க, டெஸ்ட்ரோஸ்டோன் ஹார்மோனே காரணம். ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியும்(லிம்போசைட்ஸ்) பெண்களின் உடலை விட வேகமாக முதிர்ச்சியடைந்து இறப்பதால் ஆண்களின் வாழ்நாள் பாதிக்கப்படுகிறது. சிவப்பணுக்களும் ஆண்களுக்கு இம்முறையில் முதிர்ச்சியடைகிறது. பொதுவாக ஆண்களுக்கு வாழ்நாள் குறைய

இயற்பியல் தத்துவங்களை சொன்ன சினிமா!

படம்
இயற்பியல் சினிமா! 2001: A Space Odyssey (1968) இன்றைய விண்வெளி அறிவியல் படங்களுக்கு குரு, இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் அன்றே எடுத்த ஸ்பேஸ் ஒடிசி திரைப்படம்தான். சிஜியில் அக்காலகட்டத்தில் அசத்திய படம், அதற்காக அகாடமி விருதும் வென்றது. எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க்கின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் விண்வெளியில் வியாழன் கோளிற்கு செல்லும் பயணம் குறித்தது.   Gravity (2013) விண்வெளியில் ஆராய்ச்சிமையத்தின் பழுது நீக்கச்சென்ற சான்ட்ரா அங்குள்ள பிரச்னைகளை சமாளித்து எப்படி பூமி மீள்கிறார் என்பதே கதை. ஒலி, ஒளி என பார்வையாளர்களை வசீகரித்த விண்வெளிப்படம் இது. The Theory of Everything (2014) வானியல் தியரிகளுக்கு விளக்கம் சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வை விவரிக்கும் சினிமா. ஸ்டீபனின் முதல் மனைவியின் வாழ்வைச் சொல்லும் கதையில் பல்வேறு இயற்பியல் தியரிகளையும் விளக்கியிருப்பார்கள். The Martian (2015) எழுத்தாளர் ஆன்டி வெய்ர் எழுதிய நாவலை தழுவிய சினிமா. செவ்வாயில் காயம்பட்டு தனிமைப்பட்ட விண்வெளிவீரரின் கதை. அறிவியலை ஓரளவு உண்மையுடன் அணுகிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று

முதல் உலகப்போரை தூண்டிய இளைஞர்!

படம்
உலகப்போரை தூண்டிய இளைஞர் இவர்தான்! 1914 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று செர்பிய தேசியவாதி இளைஞரான கவ்ரில் பிரின்சிபோ, ஆஸ்திரிய –- ஹங்கேரி மன்னரை நோக்கி சுட்ட இரண்டு தோட்டாக்கள், உலகெங்கும் 40 மில்லியன் மக்கள் உயிரிழக்க(ww1) காரணமானது. 1894 ஆம் ஆண்டு போஸ்னியாவிலுள்ள ஆப்ஜாஸ் என்ற நகரில் பிறந்தார் காவ்ரில் பிரின்சிபோ. “நான் போகுமிடங்களில் என்னை பார்ப்பவர்கள் பலவீனமானவன் என சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தனர். ஆனா்ல் நான் பலவீனமானவன் அல்ல” என்று பேசியவர் தம் விவசாய பெற்றோருக்கு தெரியாமல் புரட்சி நண்பர்களிடம் பேசிவந்தார்.  பின்னர் கருப்பு கரங்கள்(1911) என்ற அமைப்பில் இணைந்தபோது, செர்பியா சுதந்திரநாடாக தன்னாட்சி அதிகாரத்தோடு இயங்கவேண்டுமென என்ற இயக்கத்தின் கொள்கையை காவ்ரில் ஆதரித்து செயல்பட்டார். அப்போது ஆஸ்திரியாவின் கை ஓங்குவதை கருப்பு கரங்கள் தீவிரமாக எதிர்த்தது. பயிற்சி பெற்ற ஆட்களை அரசின் ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளில் ஊடுருவச்செய்தது. திறந்தவெளி காரில் வந்த ஆஸ்திரி மன்னர் பிரான்ஸ் ஃபெர்டினான்ட் அவரது மனைவி சோபி இருவருக்கும் ஆளுக்கொரு தோட்டாவை நெஞ்சில் பாய்ச்சினா